Tuesday, May 5, 2015

மலச்சிக்கலுக்கான சூரணம்

மலச்சிக்கலுக்கான சூரணம்
தேவையானப் பொருள்கள்:
நிலாவாரை (நல்ல இலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்) – 
50 கிராம்
கடுக்காய் தோல் – 45 கிராம்
தான்றிக்காய் தோல் – 40 கிராம்
சோம்பு – 35 கிராம்
அதிமதுரம் – 25 கிராம்
காகு விதை – 5 கிராம்
காசினி விதை – 5 கிராம்
ரோஜாப் பூவிதழ் – 3 கிராம்
சீரகம் – 5 கிராம்
திராட்சை – 5 கிராம்
உப்பு- போதுமான அளவு

செய்யும் முறை:

முதலில் நிலவாரையை வெயிலில் உலர்த்தி தனியே இடித்து தூள் 
செய்து வடிகட்ட வேண்டும். பின் அதனை வாதுமை நெய் அல்லது 
பசுநெய் சேர்த்து நெய் பசையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள 
வேண்டும். பின் கடுக்காய் தோலையும் இடித்து நெய்யுடன் கலந்து 
நெய்பசையுடன் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதைபோல் திராட்சை மற்றும் உப்பைத் தவிர மற்றவைகளையும் 
அவ்வாறே செய்ய வேண்டும். இப்போது இடித்து தூள் செய்யப்பட்ட 
சூரணத்துடன் திராட்சையையும், உப்பையும் சேர்த்து கலக்க வேண்டும்.
அளவு: 1 முதல் 2 வராகன் எடை ( 1 வராகன் = 4.2 கிராம் )
இதனை தூங்குமுன் உட்கொண்டு சிறிது வெந்நீர் பருக வேண்டும்.

மறுநாள் காலையிலும் அதே அளவு உட்கொண்டால் ஆமக்கட்டு, 
மலக்கட்டு ஆகியவை தெரிந்து உடல் நலமுடன் இருக்கும். ஆனால் 
தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல் பிரச்‌சனையையும் இவை குணப்படுத்தும். மலச்சிக்கல் தீர 
வேண்டுமெனில் உடல் வலிமைக்கு தகுந்தபடி இரண்டு அல்லது நான்கு 
வராகன் எடை கொண்ட இந்த சூரணத்துடன் சர்க்கரையை கலந்து 
உட்கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
மேலும் வாயுக்கட்டு, நுண்பழுக்கள் ஆகியவற்றை குணமாக்கும்.
இவை இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கு அதிகம் பயன்படுகிறது.
மருத்துணவு:
மிளகு, நீர், இறைச்சி சூப், கத்தரிப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றை 
நேரத்திற்கு தகுந்தபடி கூடுதலாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள 
வேண்டும்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த “சூரணத்தை” நாம் அனைவரும் 
பயன்படுத்தி நோயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றி கொண்டு 
வாழ்வில் வளம் பெறுவோம்.

----------------------------------------------------------------

ஒவ்வொரு மருத்துவரிடத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய ஒரு மருந்து.எந்த துறையைச் சார்ந்த மருத்துவர்களாக இருந்தாலும் சரி இம்மருந்து எல்லோருக்கும் பயன்படும் .எல்லா மக்களுக்கும் பயன்படும். .இதை எல்லோரும் மிகஎளிதில் தயாரித்து பயன்படுத்தலாம்.இதனால் மிகப்பெரிய வியாதிகள் எல்லாம் கூட எளிதில் குணமடைவதை நீங்கள் காண்பீர்கள் . அனுபவித்து பலன்கண்டது .மறக்காமல் உங்கள் அனுபவங்களை இங்கு பதிவிடுங்கள் .காத்திருக்கின்றேன்...
நிலவாகைச் சூரணம் ;-
--------------------------------
நலமான சூரணமொன்று சொல்லக் கேளு
நன்றான நிலவாகைச் சுக்குங் கூட்டி
மிலமாக மிளகு வாய் விளங்கவோமம்
பேரான வகைக்கு வொரு பலமே தூக்கி
சிவமாக ரவிமுகத்தி லுலரப்போட்டுச்
சிதறாம லிடித்துச் சூரணந்தான் செய்து
நலமாக சர்க்கரைதான் சமனாய் கூட்டித்
தவறாம லிருநேரங் கொண்டாற் கேளே
கேளப்பா வாயுவென்ற தெல்லாம் போகும்
கெடிதான பித்தமெல்லாங் கீழ்நோக்கி போகும்
வாளப்பா வுஷ்ண நோயெல்லாந் தீரும்
வளமான பொரும லோடு விம்மல் தீரும்
நாளப்பா சேத்தும நோயெல்லாந் தீரும்
நலமான விக்கலொடு வாந்தி தீரும்
தாளப்பா வுடம்பெரிவு சுவாசகாசந்
தவறுண்டு போகுமடா சாற்றக் கேளே
சாற்றுகிறே னீரருகல் மலபந்தங்கள்
தளராத வயிறு விம்மலிருமல் தீரும்
தேற்றுகிறேன் குன்மமெட்டு மகோதரங்கள்
தெளிவான வாயுவெல்லாந் தீருந்தீரும்
ஆற்றுகிறேன் கெர்ப்பவலி கெர்ப்ப ரோகம்
ஆச்சரியம் புழுக்களெல்லா மகன்றுபோகும்
சாற்றுகிறேன் வெந்நீரிற் கொண்டாயானால்
கலங்காதே வயிற்றிலுள்ள வியாதிபோமே.
விளக்கம்;-நிலவாகை பொடி என்று நாட்டுமருந்து கடைகளில் கேட்டால் கொடுப்பார்கள் .(குறிப்பு ; நிலாவரை சூரணத்தை வாங்காதீர்கள் ) .நிலாவரைப்பொடி ,சுக்கு ,மிளகு ,வாய்விளங்கம்,ஓமம் , என்ற இந்த 5 கடைச் சரக்குகளும் ,ஒவ்வொன்றும் 35 கிராம் எடுத்துகொள்ளுங்கள் .இவற்றை முறையாக சுத்தி செய்தபின்னர் ,எல்லாவற்றையும் ஒன்றாகக் கூட்டிய பின்பு கிடைக்கும் மொத்த எடைக்குச் சமமாக நாட்டுசர்க்கரை கலந்து வஸ்திரகாயம் செய்துவைத்துக் கொள்ளவும் .தினமும் காலை ,மாலை ஆகிய இரு வேலைகள் உணவுக்குப் பின்பு வெந்நீரில் உட்கொள்ள வேண்டும் .
தீரும் வியாதிகள் ;-
------------------------------ வாயு பிரச்சினைகள்,பித்தநோய்கள்,உஷ்ண நோய்கள் ,வயிற்றுப்பொருமல் விம்மல் ,கப ரோகங்கள்,விக்கல் ,வாந்தி ,மூச்சு திணறல் ,உடல்எரிச்சல்,மலச்சிக்கல்,வாயிற்று உப்புசம்,இருமல் ,வயிற்றுவலி,மகோதரம்,பெண்களின் கருப்பை சார்ந்த ரோகங்கள்,மாதவிடாய் காலத்தில் ஏற்ப்படுகின்ற அடிவயிற்றுவலி, போன்ற அனைத்து வியாதிகளும் தீரும் . இம்மருந்து தலைகுமேலேரும் பித்தத்தை கீழே தள்ளும் .பித்த ரோகங்கள் தலைபகுதியைத் தாக்கும்.பித்தம் என்பது அக்னி ,அக்னியின் தன்மை மேல்நோக்கி எரியக்கூடியது எனவே ,எனவே,பித்த ரோகங்கள் நம் உடலின் மேற்பகுதியான சிரசைத் தாக்குகின்றது .acupunctureல் உள்ள ,liver FIRE BLAZING UPWARDS,மற்றும் LIVER HEAT,போன்ற அறிகுறிகளுக்கு நன்றாக வேலை செய்யும் .MIND CLARITY ஏற்படும் .மேலும் ,அனைத்து வகையான மலச்சிக்கலையும் மிக எளிதாக தீர்க்கும் .சிறுநீர் நன்கு இறங்கும் .மலஜலம் தடையின்றி போனாலே ஒருவரின் எந்த ஒரு வியாதியும் தன்னிலைக்கு வந்துவிடும் . ,ABDOMINAL RUMBLING,BURNING SENSATION ALL OVER THE BODY, DYSMENORRHOEA, ASCITES,(ACCUMULATION OF WATER IN THE ABDOMEN) HICCUP,VOMITING,ALL KINDS OF GASTRIC DISORDERS,HEAT DISEASE,CONSTIPATION,BREATHING DIFFICULTIES,COUGH,COLD DISORDERS AND ALL KINDS OF STOMACH PAIN.(IN ACUPUNCTURE POINT OF VIEW ,THERE ARE NINE KINDS OF HEART PAIN ,THIS ABOVE SAID SIDDHA MEDICINE IS HIGHLY EFFICIENCY TO PREVENT SUCH KIND OF PAIN , PLEASE DON'T GET CONFUSE WITH REAL HEART ATTACK. REAL HEART ATTACK IS ENTIRELY DIFFERENT).


No comments:

Post a Comment