+++++++++++++++++++++++++++
எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால்
வெற்றிலைக் கொடி பூக்ககாது, காய்க்காது. உண்ணக்கூடிய
வெறும் இலை மட்டும் தான் விடும். அதனால் அது வெற்று
இலை ஆயிற்று.
இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு வெற்றிலையில் 'A' டு 'Z' எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆக்டிவிட்டி போன்ற 'டங்க் ட்விஸ்டர்கள்' இருக்கிறதென்று மருந்துகடை அன்னாச்சி நாக்கை சுழற்றினார். வெற்றிலை பாக்குடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிட்டால் நீண்ட நேரம் நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும். வெற்றிலையுடன் சுன்னாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்ஷியம் உடலில் சேரும். வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும். தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம். வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது. சளி இருமல் போன்றவற்றிர்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள். வெற்றிலையையும் மிளகையும் சேர்த்து தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள். வெற்றிலை பாக்கு சுன்னாம்புக் கலவை ஆண்மையின் உந்துதலுக்கு நல்லது. கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்து கொடுத்து சந்தோஷப்படுத்துவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அதனால் தான் சிறு வயது பிள்ளைகள் வெற்றிலை போட்டால் மாடு முட்டும் என்று பயமுறுத்துவார்கள். ஏதோ அடல்ஸ் ஒன்லி இலை போல கைவைக்க விடமாட்டார்கள். வாழைப்பழமும் வெற்றிலையும் ஆண்மைக்கு நல்ல தென்பதாலேயே கல்யாணம் மற்றும் சுபகாரியங்களுக்கும் ஒருவருக்கொருவர் வெற்றிலைபாக்கு பழம் கொடுத்து பரிமாரிக்கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டிற்கு வரும் பிற பெண்களுக்கு வழியனுப்பும்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். அதாவது இதனால் எனக்கு கிடைத்த இன்பத்தை நீயும் உன் வீட்டில் அனுபவி என்பது பெண்களுக்குள்ளான சிம்பாலிக் 'கோட் வேர்ட்'. ஏனெனில் கணவன் மனைவி உறவு எந்தளவிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறதோ அந்தளவிற்கு குடும்பம் பலப்படும். அதனால் வெற்றிலை பாக்கு பழம் இல்லாத சுபகாரியங்களும் நற்காரிய பரிமாற்றங்களும் நம் சமூகத்தில் பார்க்கவே முடியாது. நமக்கு குடும்பமே கோவில் அல்லவா! கொசுறு: அந்த காலத்து ராஜாக்களெல்லாம் இப்படி பக்குவமாக வெற்றிலையை மடித்து கொடுப்பதர்கே சம்பளத்திற்கு ஆள் வைத்திருந்தார்களாம். சம்பளத்தில் வெற்றிலையும் அடங்குமாம்
++++++++++++++++++++++++++++
40 - வயதிற்கு மேல் மதிய உணவிற்குப் பின் வெற்றிலை, பாக்கு
சேர்தது உண்ணுதல் மிகவும் அவசியம் ஆகும்*
ஏனென்றால் இந்த வயதிற்குப் பிறகு₹ செரிமான சக்திகள்
குறைய தொடங்கும்.
நாம் உண்ணும் உணவு முறையாக செரிக்கப் பட்டு சத்துக்கள்
உடலில் முழுமை யாய் சேருவதற்கும், உடலின் அனைத்து
எலும்புகளுக்கு தேவையான சுண்ணாம்பு [Calcium] சத்தை சமன்
செய்யவும் வெற்றிலை, பாக்கு போடுதல் மிகவும் தேவை யாகும்.
வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8%
கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம்,
கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி
உள்ளது.கலோரி அளவு 44.
தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும்
வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol)
என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும்.
நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.
வெற்றிலை,பாக்கு,சுண்ணாம்பு சேர்த்து உண்ணும் போது
முதலில் வாயில் ஊறும் உமிழ்நீர் நஞ்சாகும் இதனை
உமிழ்ந்துவிட [துப்பி விட]வேண்டும். இரண்டாவது மெல்லும்
போது ஊறும் உமிழ்நீர் அதிக பித்தமாகும். இதனையும் உமிழ்ந்து
விட வேண்டும்.மூன்றாவது மெல்லும் போது வாயில் ஊறும்
உமிழ்நீர் அமிர்தமாகும். இதனை மட்டும் விழுங்க வேண்டும்.
நான்காவது ஊறும் உமிழ்நீர் அதிக இனிப்பாக இருக்கும் இதனை
விழுங்கலாம்.இதன் பிறகு ஊறும் உமிழ்நீரை விழுங்கக்கூடாது
அதனால் மந்தம்,பித்தம்,பாண்டு போன்ற நோய் உண்டாகும்.
வெற்றிலை பயன்கள்!
*வெற்றிலையைத் தணலில் வாட்டிச் சாறு பிழிந்து
அதனுடன் சம அளவு இஞ்சிச் சாறு
கலந்து தினமும் குடித்துவர நாள்பட்ட
நுரையீரல் நோய்கள் குணமாகும்.
*கம்மாறு வெற்றிலைச் சாறுடன் வெந்நீர் கலந்து கொடுக்க
வயிறு உப்புசம், மந்தம், தலைவலி, வயிற்றுவலி குணமாகும்.
*பத்து வெற்றிலைகளைச் சிறிதாக நறுக்கி, ஒரு டீஸ்பூன்
பொடித்த மிளகு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு அரை
டம்ளர் அளவுக்கு சுண்டக் காய்ச்சி இரண்டு அல்லது மூன்று
முறை குடித்துவர உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை நீங்கும்.
*சிறிது வெற்றிலைச் சாறுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து
தினமும் அருந்திவர, நரம்புகள் பலப்படும்
++++++++++++++++++++++++++++++++++++++++++
தாம்பூல ரகசியம் - 'வெற்றி' இலை!
வெற்றிலை பாக்குகளைக் கூட்டி குறைத்து சாப்பிடும்போது
பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
* மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்... காலையில் பாக்கு
அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும்
மெல்லவேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்கி, இரண்டு முதல் நான்கு
முறை பேதியாகலாம்.
* பசியே இல்லாதவர்கள் மதிய உணவுக்குப் பிறகு, சுண்ணாம்பு சிறிது
அதிகமாகவும், வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நன்றாகப்
பசி எடுக்கும்.
* வாய்ப்புண், வயிற்றுப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள்,
மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு
குறைவாகவும் மெல்லலாம்.
ஒரு கவுளி வெற்றிலை என்பது நூறு வெற்றிலை. ஒரு கட்டு என்பது
ஆயிரம் வெற்றிலை
No comments:
Post a Comment