தலைவலியை குணப்படுத்த எளிய வழிகள்!!!
தலைவலி பல காரணங்களால் ஏற்படுகிறது. இந்த ஒரு காரணத்தினால் தான் தலைவலி ஏற்படுகிறது என்று யாராலும் கூற இயலாது. மன அழுத்தம், ஹார்மோன்கள் மாற்றம் என பல காரணங்களைக் கொண்டு வரக்கூடிய தலைவலியானது அடுத்தநாட்கள் வரையும் நீட்டிக்கும் வாய்ப்பும் உள்ளது.. இவ்வாறு ஏற்படக்கூடிய தலைவலியை எளிய முறையில் தீர்க்கும் சில வழிகளை பார்க்கலாம்.
பூசணி விதைகள்
பூசணி விதையில் அதிகளவு மெக்னீசியம் சல்பேட் கொண்டிருப்பதால் அனைத்து வகையான தலைவலியையும் குறைக்கும் சிறந்த மருந்து என ஆய்வுகளில் தெரிவித்துள்ளனர்
இஞ்சி தேநீர்
உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது என மதிப்பிடக்கூடியதில் ஒன்று இஞ்சி தேநீர். இது அழற்சி, தலைவலியிலிருந்து நிவாரணம் தரும் சிறந்த மருந்தாகும். தேநீர் செய்யும் போது கொதிக்கும் நீரில் இஞ்சியை சேர்த்து தேநீர் தயாரித்து பருகினால் தலைவலியை போக்கலாம்.

அக்கு சிகிச்சை
ஒரு குறிப்பிட்ட வயதுடையோர்க்கு ஏற்படும் தலைவலிக்கு அக்கு சிகிச்சையை பயன்படுத்தி தலைவலியை போக்கலாம். அதாவது கழுத்து பிடரியில் உள்ள நாடிகளை அழுத்தி சிகிச்சை செய்து பார்க்கலாம்.

லாவண்டர் எண்ணெய்
ஆய்வுகளின் படி லாவண்டர் எண்ணெய்யை தலைவலிக்கும் போது நுகர்ந்தால் தலைவலி குணமாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இசையை கேட்கலாம்

2001ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தலைவலி ஏற்படும் போது அதை போக்குவதற்கு மென்மையான இசையை கேட்டகலாம் என்று கூறப்படுகிறது..
ஐஸ்பேக்
மிகவும் எளிய முறையில் தலைவலியை போக்க ஐஸ் பேக்கை நெற்றியில் வைத்து வைத்து எடுப்பதன் மூலம் தலைவலியை குறைக்கலாம்.

நடைப்பயிற்சி
ஒரு பத்து நிமிடம் விறுவிறுப்பான நடைப்பயிற்சி செய்தால் இயற்கையில் ஏற்படக்கூடிய வலி, மன அழுத்தம் ஆகியவற்றுடன் போராடி தலைவலியை குறைக்கும் பண்புகளை கொண்டுள்ளது.

தியானம்
தலைவலி ஏற்படும் போது கண்களை மூடி அமைதியாக ஒரு மூலையில் அமர்ந்து கவனத்தை ஒருநிலைப்படுத்தி, நிதானமாக சுவாசித்தவாறு தியானம் செய்து தலைவலியை போக்கலாம்.

சூடான குளியல்
ஷவரில் நின்று வெதுவெதுப்பான தண்ணீரில் தலையை வைத்து குளித்தால் தலைவலி காணமல் போகும்

No comments:
Post a Comment