Sunday, May 31, 2015

பித்தப்பை / Gallbladder

பித்தப்பை கற்களுக்கு தீர்வு!
[ நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள். பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100ல் 10பேருக்கே மருந்து குணமளிக்கிறது.
தற்போது 'லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை' நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.]
பித்தப்பை என்றால் என்ன?
பித்தப்பை என்பது நமது உடலில் கல்லீரலில் ஒரு பகுதியுடன் இணைந்திருக்கும். பித்தப்பை என்பது நமது உடலில் பேரிக்காய் வடிவம் போன்று காணப்படும் ஒரு உறுப்பு. இது கல்லீரலின் ஒரு பகுதியுடன் இணைந்து இருக்கும். 7 முதல் 12 செ.மீ. நீளம் இருக்கும். அதன் கொள்ளளவு 50 மி.மீ. இதன் மற்றொரு பகுதி வயிற்றுடன் இணைந்து இருக்கும். நாம் ஒவ்வொரு முறை உணவு உட்கொள்ளும்போதும் அதில் உள்ள கொழுப்பு சத்து, கால்சியம், தண்ர், பித்தநீர், உருவாகிற போது பித்தப்பை செயல்படுகிறது. இது கல்லீரலில் இருந்து ஒரு மணிநேரத்தில் சுரக்கும் 40 மி.லி. பித்தநீரை சேகரிக்கும் பணியை செய்கிறது. இந்த பித்தப் பை நமது உணவு ஜீரணமாவதற்கு பெரிதும் உதவுகிறது. அதாவது, ஒரு வேளை சாப்பிட்டு, அடுத்த வேளை உணவு உண்பதற்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப் பை ஜீரணத்திற்குத் தேவையான ஜீரண நீரை சேமித்து வைக்கும்.
நாம் உணவு உண்டதும், இந்த பித்தப் பை சுருங்குகிறது. இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் குடலுக்குச் சென்று உணவு செரிமானத்திற்கு உதவுகிறது.
அவ்வாறு பித்தப் பை சுருங்கி விரிவடையாமல் நின்று போவதால், பித்தப் பையில் சுரங்கும் ஜீரண நீர் தேங்கி கற்களாக மாறுகிறது.
இந்த பித்தப் பையில் ஏற்படும் கற்களுக்கும், நாம் உணவில் தெரியாமல் சாப்பிட்டுவிடும் கற்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எதனால் உருவாகிறது?
பல்வேறு காரணங்களால் பித்தபையில் கற்கள் உருவாகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் பித்தப்பை கற்கள் வரலாம். பித்தப்பையில் சுரக்கும் உமிழ்நீரில் ஏற்படும் வேதியியல் மாற்றத்திற்கு ஏற்ப கட்டிகள் உருவாகலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பித்தப்பை கற்கள் உருவாகின்றன. இதில் பலவகை உண்டு. உதாரணமாக கொழுப்பு கற்கள், கால்சியம், பித்தநீர் கலந்த கற்கள் ஆகும்.
பெண்களை குறிவைக்கும் பித்தப்பை கற்கள்
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எவருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது பெண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. 10 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேதியியல் மாற்றத்தினால் ஏற்படும் உடல்பருமன், பிறநோய்களுக்கு அதிகமாக சாப்பிடும் மாத்திரைகளாலும், கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதாலும், கிட்னி, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கும் குடல்நோய் உள்ளவர்களுக்கும், டைபாயிடு மற்றும் பலநோய் கிருமிகளால் ஏற்படும் உபாதைகளின் போதும் குடல்புண் தொடர்ச்சியாக இருப்பது, குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் போதும் வரலாம்.
பித்தநீர் சுரப்பதில் குறைபாடு உள்ளவர்கள், கல்லீரல் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோய் உள்ளவர்கள் மற்றும் வேறுசில காரணங்களாலும் பித்தப்பை கல் வர வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்:
வயிற்றில் வலது புறம் கடுமையான வலி, உடல் எடை குறைவு, வாந்தி, காய்ச்சல், சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து காணப்படுதல், மஞ்சள்காமாலை, பசியின்மை, வாய்வு மற்றும் ஜீரண மண்டலத்தில் ஏற்படும் மாற்றம் போன்றவை நோயின் அறிகுறி.
பித்தக் கற்கள் மூன்று வகைப்படும். ஒவ்வொரு வகை கற்களும் ஒவ்வொரு காரணத்தினால் உண்டாகின்றன.
பொதுவாக, உடல் பருமனாக இருப்பது, உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பது, கருத்தடை மாத்திரை அதிகம் உபயோகிப்பது போன்றவற்றாலும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரைவாக உடைவதாலோ, பித்த நீர்ப் பையில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் சேர்வதாலோ பித்தப் பையில் கற்கள் உண்டாகின்றன.
பித்தப் பையில் கற்கள் உண்டான ஒருவருக்கு, வாயுத் தொல்லை ஏற்படுவது, சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பாகத்தில் வலதுபுறம் வலி உண்டாவது, மஞ்சள் காமாலை நோய் தாக்குவது, கடுமையான வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம்.
நிறையப் பேர் பித்தப் பை கல் பிரச்சினை ஏற்பட்டு, சாதாரண வயிற்று வலி என்று நினைத்து மருந்து உட்கொண்டு வருவதால் எந்த பலனும் அளிக்காமல் இறுதியாகத்தான் மருத்துவ பரிசோதனைக்கு வருகிறார்கள்.
சிகிச்சை: பித்தப் பை கற்களை அல்ட்ரா சவுண்ட் சோதனை மூலம் எளிதாகக் கண்டறிய முடியும். அப்படி கண்டறிய முடியாதவர்களுக்கு மட்டுமே சிடி ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் தேவைப்படுகிறது.
பித்தப் பை கற்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சைதான் தீர்வாக உள்ளது. மருந்தினால் குணப்படுத்த முடியும் என்றாலும், 100-ல் 10-பேருக்கே மருந்து குணமளிக்கிறது.
அதிலும் மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாவார்கள். மருந்தை நிறுத்தினால் மீண்டும் பிரச்சினை துவங்கிவிடும். மேலும் மாத்திரைகளினால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே பித்தப் பை கற்களுக்கு அறுவை சிகிச்சையே பூரண குணமளிக்கும்.
அறுவை சிகிச்சை என்றால் வயிற்றுக் கிழித்து செய்யப்படும் சிகிச்சை அல்ல. தற்போது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்ல பலனை அளித்து வருகிறது. வயிற்றைக் கிழிக்காமல், ஒரு சொட்டு ரத்தத்தையும் வீணாக்காமல் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது.
மிக்க நன்றி: Dr. ராஜ்குமார்


No comments:

Post a Comment