Sunday, May 24, 2015

பூ மருத்துவம்

ஆவாரம்பூ நீர்:

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற 

பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை 

அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே 

கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, 

குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் 

தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு 

காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து 

தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் 

கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.


கரிசாலை நீர்:

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச 

நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் 

கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை 

நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக 

கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி 

காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.


செம்பருத்தி நீர்:

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் 

மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. 

இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், 

கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது.


காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் 

அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் 

பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி 

இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், 

மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் 

காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி 

சேர்த்துக் கொள்ளவும்.


நன்னாரி நீர்:


“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் 

மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் 

நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி 

வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய 

கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு 

சேர்த்து உபயோகிக்கவும்.


துளசி நீர்:

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா 

நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் 

குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான 

பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி 

வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து,தேவை 

யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி 

காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் 

குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த 

துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.



++++++++++++

இன்சுலின் சுரக்க ‘வாழைப்பூ’!!

வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் 

தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் 

பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. 

வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு 

வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.

அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை 

ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, 

வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து 

சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். 

வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:

வாழைப்பூ

* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு 

தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் 

கட்டுப்பாட்டில் இருக்கும்.

* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.

* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.

* மூலநோய் கட்டுக்குள் வரும்.

* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் 

வயிற்றுவலி நீங்கும்.

* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.

* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. 

வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு 

நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்

===========================

“வணக்கம் பாட்டி, எப்படி இருக்கீங்க?” என்று பாட்டியின் குடிலுக்குள் மெதுவாக நுழைந்தேன்; மஞ்சள் நிற மலர்கள் பரத்திக் கிடக்க ஏதோ கை மருந்து செய்துகொண்டிருந்தவள் “நேக்கென்னடா குறைச்சல்?! நன்னா இருக்கேன். ஆமா… நீ ஏன் டல்லா இருக்க? சுகர் கிகர் வந்திருக்கான்னு போய் செக் பண்ணு போ!” என்றாள் கிண்டலாக. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும். “அப்படியெல்லாம் ஒண்ணும் வராது பாட்டி, நீங்க வேற சும்மா பயமுறுத்தாதீங்க! இப்போதான் எனக்கு கொஞ்சம் டவுட் வர்றது” என்றேன். உண்மையில் எனக்கும் கொஞ்சம் டவுட் இருக்கத்தான் இருந்தது. “பயப்படாதேடா…! இந்த ஆவாரம் பூ இருக்குதில்ல?!” என்று அவள் இழுத்துப் பேச, நான் இடைமறித்து “எது இதுவா?” என பரத்திப் போடப்பட்டிருந்த அந்த பூக்களைக் காட்டிக் கேட்டேன். “ஆமா… இதுதான் ஆவாரம் பூ. “நீரிழிவு” நோய்க்கு ஆவாரம் பூ ஒரு வரப்பிரசாதம்னு சொல்லலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய பாத எரிச்சல், மதமதப்பு, மூட்டுவலி, அதிக தாகம், நரம்பு தளர்ச்சி, சிறுநீரக கோளாறுனு இப்படி எல்லாத்துக்கும் ஆவாரம் பூ (கஷாயம்) குடிநீர் ஒரு சூப்பர் மருந்துடா. ஆவாரம் பூவோட பச்சைப்பயறு சேத்து அரைச்சு உடம்பு மேல பூசி குளிக்கலாம். இதனால தோல் நமைச்சல் தீரும். அப்புறம்… ஆவாரம் பூவோட கருப்பட்டி சேத்து மணப்பாகு செஞ்சு குடிச்சா ஆண்குறி எரிச்சல், சொப்பனஸ்கலிதம், வெள்ளைப்படுதல், மூத்திர ரோகம் குணமாகும். ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி எல்லாத்திலயும் மருத்துவ குணம் இருக்கு.” இப்படி, ஆவாரம்பூ பத்தி உமையாள் பாட்டி ஆதி முதல் அந்தம் வரை வெளுத்து கட்ட, அவளது பட்டறிவைக் கண்டு வியந்தபடி பார்த்திருந்தேன். தொடர்ந்து பேசிய பாட்டி ஆவாரை பத்தி பேசி சங்க காலம் வரைக்கும் சென்றுவிட்டாள். ‘ஆவிரை’ னு அந்தக் காலத்தில சொன்னத இந்த காலத்தில ஆவாரம்பூன்னு சொல்றாங்க. தைப்பொங்கல் அன்னிக்கு காப்புக் கட்டுவதுக்கும், மாட்டுப்பொங்கல் அன்னிக்கு மாடுங்களுக்கு மாலை கட்டுறதுக்கும், வீடிகளுக்குத் தோரணம் கட்டுறதுக்கும் ஆவாரம்பூவ இப்போ பயன்படுத்துறாங்க. சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போ மட்டும் பயன்படுத்துற பூவா மாறிருச்சு.” பாட்டியின் வைத்தியத்தை வரும் நாட்களில் தொடர்ந்து கேட்போம்! சிறப்பு குறிப்பு இந்த ஆவாரைத் தாவரத்தில் Sennapicrin என்னும் Cardiac glucoside உள்ளது. ஆவாரை உடலிலுள்ள இன்சுலின் சுரக்கும் தன்மையை அதிகரிக்கிறது

Read more at : ஆவாரம் பூவில் இத்தனை இருக்குதா?! 

--------------------------

வியர்வையை போக்கும் சங்குப்பூ

When swollen nerikkattikal cankuppu a tablespoon of the leaf, take a teaspoon mixed up having to sweat inciccaru

காக்காட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் காய்ச்சி 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும். வேரைப் பாலில் அரைத்து சுண்டை அளவு காலை மாலை பாலில் சாப்பிட்டு வந்தால் மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

வெள்ளை காக்காட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லி இலை, அருகம்புல் ஒரு கை பிடியுடன் 5 அல்லது 6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து தயிரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட வெள்ளை படுதல் தீரும். கருங்காக்காட்டான் வேரை பாலில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும். நெய்யில் வறுத்து விதைச் சூரணத்தை வெந்நீருடன் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கான இழுப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.

விதைத்தூள் 50 கிராம், பூ 50 கிராம், சுக்குத்தூள் 25 கிராம் கலந்து தினம் 1 வேளை 3 கிராம் சாப்பிட்டு வர மலப்போக்கு பெருகி, யானைக்கால் வீக்கம் மெல்லக்குறையும். மேலும் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் குறையும். நாள் பட்ட கப நோய்களுக்கு காகட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து 24 கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் குணமாகும். காக்காட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த ஊறல் குடி நீரை 30 மி.லி. முதல் 60 மி.லி. வரை அருந்தி வந்தால் சிறுநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.

No comments:

Post a Comment