பசியை தூண்டும் இருமல் போக்கும்:
மாதுளம் மொட்டுக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி பொடி செய்து அதனை வேளைக்கு ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீருடன் பருகினால் இருமல் நீங்கிவிடும். மாதுளம் பூவை லேசாக தட்டி சாறு எடுக்கவும். அதனுடன் சம அளவு அருகம்புல் சாறு கலந்து மூன்று வேளை குடித்து வர உடனடி பலன் கிடைக்கும்.
தொண்டை ரணம்:
மாதுளம் பூக்களை மைய அரைத்து அத்துடன் இரண்டு மடங்கு நீர் விட்டுக் காய்ச்சவும். கொதி வந்ததும், இறக்கி வடிகட்டி அத்துடன் சிறிது தேன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் வாயில் ஊற்றிக் கொப்பளித்து தொண்டைக்குள் மெதுவாக விழுங்கவேண்டும். இதனால் தொண்டைகரகரப்பு, தொண்டையில் ரணம் போன்றவை குணமடையும்.
தாதுபலம்:
தினமும் காலையில் நான்கு மாதுளம் பூக்களை மென்று தின்று பால் குடித்து வர ரத்தம் சுத்தமடையும். மாதுளம் பூவை பசும் பாலில் வேகவைத்து சிறிது தேன் கலந்து அருந்தினால் நரம்புகள் வலிமை பெறும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். தாதுபலம் பெறும்.
ரத்த மூலம்:
மாதுளம் பூக்களைச் சேகரித்து வெயிலில் காயவைத்து, வேலம் பிசின் 30 கிராம் எடுத்து வெயிலில் காயவைத்து இரண்டையும் உரலில் போட்டு இடித்து மாவு சல்லடையில் சலித்து வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டியளவு தூளுடன் அதே அளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். ஐந்து மாதுளம் பூக்களை அம்மியில் வைத்து மைய அரைத்து அரை டம்ளர் எருமைத் தயிரில் கலந்து காலை ஒருவேளை மட்டும் தொடர்ந்து ஐந்து நாட்கள் குடித்து வர சீத பேதி குணமடையும்
மிக சிறப்பான ஒரு பழம்!!
அண்மைக் காலமாக பல ஆராட்சிகளின்
முடிவில் மாதுளம் பழத்தை பயன் படுத்தி
பழச்சாறுகளை தயாரிப்பதும்
சருமத்திற்கு பூசக் கூடிய பல வகையான
களிம்புகளை(கிறீம்) யும் தயாரித்து
வருகின்றனர்.அத்தோடு உணவுகளோடு
சேர்த்து உண்ணக் கூடிய (சலாட்)
வகையாகவும் பயன்படுத்தி பலர் பயன்களை
பெறுகின்றனர்........
மாதுளம் பழத்தில் இரும்பு சர்க்கரை தாது
உப்புக்கள் விற்றமின்கள் நிறையவே
அடங்கியிருக்கிறது...
இனிப்பு புளிப்பு துவர்ப்பு சுவைகளையும்
கொண்டிருக்கிறது.....
செரிமான திறன் குறைந்தவர்கள் வறட்சியான
இருமல் இருப்பவர்கள்
மூக்கால் இரத்தம் கொட்டுபவர்கள்
மாதுளம் பழ தோலை மை போல அரைத்து
எலுமிச்சம் சானு கலந்து
உண்டு வந்தால் சிறந்த பலன் கிடைக்கும் ....
வயிற்றுப் போக்கையும் விரைவில் கட்டுப்
படுத்தும்.
மாதுளங்கோதை அவித்து குடித்தால்
வயிற்று வலி நீங்கும்.
மாதுளம் பழத்தை ஆண்மையின்
அடையாளமாகவும் பேரறிவின் குறியீடாகவும்
கருதப்படுகிறது .
யூதர்கள் பொதுவாக ஒரு பழத்தில் 630 முத்துக்கள்
என்றும் ஒவ்வொரு முத்துக்களும்
ஆசிர்வதிக்கப்பட்டது எனவும் கருதுகிறார்கள் ...
திருக்குரானில் சொர்க்கத்தின் பழம் எனவும்
வர்ணிக்கப்படுகின்றது......!!
இந்துக்கள் வழிபாட்டுக்கும் அபிஷேகம் பண்ணவும்
மாதுளம் பழம்
பயன்படுகிறது....
அபிராமி அந்தாதியிலே "ஒரு பாடலில் இடை
வரியாக மாதுளம் பூ நிறத்தாளை" என அம்மனை
வர்ணிக்கப்படுகிறது .....
இப்படியாக மாதுளம் பழத்தோடு
அரிய தகவல்கள் ஏராளமாகஇருக்கின்றன ..
இளமையோடும் அழகோடும் இருக்க மாதுளம்
பழம் சாப்பிடுங்க.....!!
குடம் நிறைய முத்து அது எது?
சின்ன வயதிலே இந்த விடுகதையை
கேட்டு யோசித்ததும் ஞாபகத்துக்கு
வருகிறது
உகர்ந்தவை என்றாலும் மாதுளம் பழம்
மூலம்,மது பழக்கத்தை மாற்றும் மாதுளம்பழம் !!!!
நெல்லைக் குத்தினால் உடலைப் போஷிக் கும் சத்தான அவல் கிடைக்கும். அவலை உணவாக்கி இந்த உடலின் ஆயுளை நீட்டலாம். அதேபோல் நம் மனமென்னும் நெல்லைக் குத்தி சீராக்கினால், நம்முள் சிவலயம் உண்டாகி, ஆத்ம மேம்பாட்டிற்கான உன்னத வழி நமக்குள் உருவாகும் மனம் ஒரு முரண்டு பிடிக்கும் குரங்கு. "செய்யாதே' என்றால் செய்யத் துடிக்கும்; "சாப்பிடு' என்றால், "பசியில்லை' என்று சொல்லும்; "உட்காரு' என்றால், "பரவாயில்லை நிற்கிறேன்' என்று சொல்லும். இப்படி சஞ்சலமும் சபலமும் கொண்ட மனதை அந்த சிவபெருமானாலேயே கடைத்தேற்ற முடியும்.
மாதுளையில் வீற்றிருக்கும் மகேசனே! உம் கருணையினால் மனமதைச் செம்மையாக்கி செழிப்பாய் வாழ முனைகிறோம் ஐயனே! உம் அருள்பெற்ற மாணிக்க வாசகரைப்போல் உம்மையே நினைக்கும் மனதை எமக்கும் தாரும் ஐயா!
கீழ்வேளூர் சிவத்தலத்தில் வீற்றிருக்கும் சிவனே! உம் திருவடி சரணமே இப்பிறவி யின் பயனாம்! பெருமான் உறைந்த மாதுளையை மருந்தாக்கி மக்கள் பிணி தீர்க்க முனைகிறோம் இறைவா!
விடாத இருமல் தீர...
உலர்ந்த மாதுளம்பூ மொட்டு, சுக்கு, சித்தரத்தை, அதிமதுரம், காய்ந்த திராட்சை, தனியா ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து வடிகட்டவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து காலை- மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் எப்பேர்ப் பட்ட இருமலும் தீரும். சிலருக்கு குடற்புண் உண்டாகி, அதனால் தொண்டைக்கட்டு, இருமல் உண்டாகும். மேற்கண்ட கஷாயம் இப்பிரச்சினைக்கும் நல் மருந்தாய் அமையும்.
வயிற்றுப்போக்கை நிறுத்த...
ஒரு மாதுளம்பிஞ்சு, அதிவிடயம், கோரைக் கிழங்கு, விளாம்பழ ஓடு, சுண்டைக்காய், கசகசா, மாம்பருப்பு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரைத்து, கட்டித் தயிரில் நெல்லிக்காய் அளவு கலந்து சாப்பிட எப்பேர்ப்பட்ட வயிற்றுப்போக்கும் நொடியில் விலகும்.
மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் தீர...
மாதுளம்பூ, மாசிக்காய், அருகம்புல் ஆகிய மூன்றையும் வகைக்கு பத்து கிராம் எடுத்து கஷாயமிட்டு, பாதியாகச் சுண்டச் செய்து சாப்பிட, மூக்கிலிருந்து அடிக்கடி உண்டாகும் ரத்தப்போக்கு சரியாகும்.
பற்களைப் பற்றிய வியாதிகள் தீர...
மாதுளை துளிர், மாதுளம் மொட்டு, மாதுளம்பூ, மாதுளம்பிஞ்சு, மாதுளை ஓடு, ஆலம்பட்டை, அரசம்பட்டை, மருதம்பட்டை, கருவேலம்பட்டை, மாசிக்காய், கடுக்காய், இந்துப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேகரித்து தூள் செய்து, இத்துடன் 20 கிராம் அளவு பச்சைக் கற்பூரத்தையும் தூள் செய்து கலந்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பற்பொடியில் பல்துலக்கி வர முக வசீகரம் உண்டாகும். மேலும் பல்வலி, பல்கூச்சம், பல்ஈறுகளில் ரத்தம் வடிதல், ஈறுவீக்கம், ஈறுஅரிப்பு, பல் அசைவு, சொத்தைப்பல் போன்ற பற்களைப் பற்றிய அனைத்து வியாதிகளும் தீரும். மேலும் நாக்கில் உண்டாகும் புண், நாசியில் உண்டாகும் புண், தொண்டைப்புண் போன்றவையும் இப்பற் பொடியால் தீரும்.
ரத்த பேதி நீங்க...
மாதுளம்பூ, அத்தி, துத்தி, ஆவாரம்பூ, பிரண்டை, பொடுதலை, வில்வம், வில்வ ஓடு, மாதுளை ஓடு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் அளவு சேர்த்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை ஐந்து கிராம் அளவு காலை மாலை இருவேளையும் சாப்பிட்டு வர, ரத்தபேதி மற்றும் ரத்த மூலம் குணமாகும். மேலும் ஆசனவாய்ப் பகுதியில் உண்டாகும். புண், அரிப்பு, தடிப்பு, வெடிப்பு போன்ற குறைபாடுகளும் முழுமையாய் நீங்கும்.
வாந்தியை நிறுத்த...
கர்ப்ப காலத்தில் உண்டாகும் வாந்தியை நிறுத்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல. வாந்தியை நொடிப்பொழுதில் நிறுத்தும் சக்தி மாதுளைக்கு மட்டுமே உண்டு. சித்த மருத்துவ மருந்துக்கடைகளில் கிடைக்கும், "மாதுளை மணப்பாகு' என்ற மருந்தினை வாங்கி, மணிக்கு ஒருமுறை கொடுத்து வாருங்கள். ஐந்தாறுமுறை கொடுத்தபின் வாந்தி வருவது நின்றுவிடும். கடைகளில் வாங்க இயலாதபட்சத்தில் இங்கே குறிப்பிட்டபடி உங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
மாதுளைச் சாறு, நெல்லிச் சாறு, ஆரஞ்சுச் சாறு ஆகியவற்றை வகைக்கு 100 மி.லி. எடுத்து ஒன்றாக்கி, 300 மி.லி. தேனுடன் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயாய் எரிக்கவும் சாறுசுண்டி பாகுபதம் வரும்பொழுது எடுத்து பத்திரப்படுத்தவும். எளிய முறையில் செய்யப் படும் இம்மாதுளை மணப்பாகு கடுமையான வாந்தியை நிறுத்தும் வல்லமை கொண்டது.
விக்கலை நிறுத்த அற்புதமான வழி...
மதுப் பழக்கத்தினால் கல்லீரலைக் கெடுத் துக் கொண்ட அன்பர்களுக்கு, அவர்களையும் வாழ்விக்கும் பொருட்டு அரிய மருந்தொன்று சொல்கிறேன். தீவிர மதுப்பழக்கம் உடையோ ருக்கு, கல்லீரல் கெட்டு ரத்த மாறுபாடுகள் உண்டாகி விக்கல் நோய் உண்டாகும். விக்கல் நோயை முற்றாகக் குணப்படுத்தும் வல்லமை மாதுளைக்கு உண்டென்பதை அடித்துச் சொல்லலாம்.
மாதுளம் பிஞ்சு, மாதுளம்பூ, வறுத்த சீரகம், கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, மஞ்சள் ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதனை விக்கல் கண்டபோது தேனில் குழைத்து சாப்பிட விக்கல் உடனே நிற்கும். மேலும் அடிக்கடி விக்கல் நோயால் அவதிப்படு பவர்களும், குடியிலிருந்து மீள நினைக்கும் அன்பர்களும் இதனைத் தொடர்ந்து பயன் படுத்தலாம். கல்லீரல் சார்ந்த பிற நோய்களான கல்லீரல் வீக்கம் மற்றும் சுருக்கம், கல்லீரலில் உண்டாகும் புண், கட்டி, சீழ்க்கட்டி, பித்தப் பையில் உண்டாகும் புண், கட்டி, கற்கள் போன்றவற்றையும் அதிசயமாய் குணப் படுத்தும். இம்மருந்தினை, எம்பெருமான் ஈசனை சரணடைந்து சாப்பிடுங்கள்; சகலமும் பெறுவீர்கள்.
மன உளைச்சலுக்கு மாதுளையே மாமருந்து...
சமீபத்திய மேலைநாட்டு ஆய்வறிக்கை, "மாதுளம்பழச் சாறை மனநோயால் பாதிக் கப்பட்டவர்கள், ரத்த அழுத்த இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறப்பான பலனைப் பெறலாம்' என்று தெரிவிக்கிறது.
ஆண்மைக் குறைவு நீங்க...
மாதுளை ஓடு, ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி, அக்கிரகாரம், பூனைக்காலி விதைப்பருப்பு ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். இதனை காலை- மாலை இருவேளையும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர, நீர்த்துப் போன சுக்கிலம் கட்டியாகி, போக உணர்வு விருப்பம் போல் நீடிக்கும்.
உயிரணுக்கள் பெருக...
மாதுளை ஓடு, நெருஞ்சில், கோரைக்கிழங்கு ஆகிய மூன்றையும் ஒன்றிரண்டாய் சிதைத்து, பசும் பாலில் போட்டு வேக வைத்துக் காய வைக்கவும். நன்கு காய்ந்தபின் நன்றாகத் தூள் செய்து கொள்ளவும். இதனை காலை- மதியம்- இரவு என மூன்று வேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வர, உயிரணுக்கள் கோடிக் கணக்கில் பெருகும். வளமையான உயிரணுக்கள் வலுவான நிலையில் உண்டாகும். உங்கள் வீட்டில் ஈசன் அருளால், மழலைச்சத்தம் வெகுசீக்கிரமாய் கேட்கும். குறிப் பெடுத்துக் களைத்துவிடாமல், மருந்து செய்யும் வேலையை மகேசனை வேண்டி ஆரம்பியுங்கள்!
சித்தமருத்துவர் அருண்சின்னையா @ http://nakkheeran.in/
சித்தமருத்துவர் அருண்சின்னையா @ http://nakkheeran.in/
No comments:
Post a Comment