Sunday, May 31, 2015

வைத்திய குறிப்புகள் 2

வைத்திய குறிப்புகள் 2

ஐந்தாறு துளசி இலைகளோடு ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை நன்கு வறுத்துப் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆற வைத்து நெஞ்சில் தடவினால் சளி குணமாகும்.
நெல்லிக்காய் இடித்துச் சாறு பிழிந்து, தேன் சேர்த்துச் சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து, அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் ஆகிய மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
மஞ்சளை தணலில் இட்டு, சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண் ஆறும்.
பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும்.
அத்துடன் ஆறாத வயிற்றுப்புண்ணும் நீங்கும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடித்தால் வயிற்று வலி நீங்கும்.
செம்பருத்தி இலைகளை பொடியாக்கி, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும்.
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
எலுமிச்சம்பழச்சாறு, தேனில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பித்தவெடிப்பு
1.கிளிஞ்சல் சுண்ணாம்பையும் கொஞ்சம் விளக்கெண்ணையையும் சின்ன சட்டியிலே போட்டுச் சுட வைத்து இளஞ்சூட்டில் பித்தவெடிப்பில் தடவினால் வழு வழுப்பாகும் .
2. தேன்மெழுகை இளஞ்சூட்டில் இளக்கிப் பித்தவெடிப்பில் தடவி வரவும்

• ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு 
கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும்.
• உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் 
போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன் தேனுடன் கலந்து குடித்து 
வந்தால் போதும்.


• அவரை இலையை அரைத்து தினமும் காலையில் முகத்தில் தடவி 
வந்தால், முகத்தில் இருக்கும் தழும்புகள், முகப்பருக்கள் நீங்கிவிடும்.
• பால் கலக்காத தேநீரில் தேன் விட்டுக் குடித்தால் தொண்டைக்கட்டு 
சரியாகும்.
• சுக்கைத் தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் 
குறையும்.
• மூட்டு வலியா? தேங்காய் எண்ணெய் - எலுமிச்சைச் சாறை 
கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் 
கிடைக்கும்.
• துளசி இலை போட்ட நீரை தினசரி குடித்து வந்தால் ஞாபகமறதி நீங்கி 
மூளை பலம் பெறும்.
• மிளகுத் தூளுடன் நெய், வெல்லம் கலந்து உருண்டையாக்கி 
சாப்பிட்டுவர தொண்டைப்புண் குணமாகும்.
• வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து 
வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி 
நீங்கும்.
• பொடித்த படிகாரத்தை தூள் செய்து அதைக் கொண்டு வாரம் மூன்று 
முறை பல் தேய்த்து வந்தால் பற்களின் கறை, இரத்தம் வடிதல், வாய் 
துர்நாற்றம் நீங்குவதோடு பல் ஈறுக்கும் வலு கொடுக்கும்.
• வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல 
வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் 
வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது.
• உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், தினசரி ஒரு ஸ்பூன் தேன் 
சாப்பிட்டு வந்தால் உடம்பு பலம் பெறும்.
• வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். தினமும் 
காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் தேனை விட்டுச் 
சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.
• அஜீரணத்திற்கு இரண்டு ஸ்பூன் கருவேப்பிலைச்சாறை ஒரு டம்ளர் 
மோரில் கலந்து குடித்தால் அஜீரணம் நீங்கும்.
• அதிக தலைவலி இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 
மூடிக் கொதிக்க வைத்து இறக்கி இரண்டு ஸ்பூன் காபி பவுடர் போட்டு 
ஆவி பிடித்தால் தலைவலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மருதாணி [HENNA]
இயற்கை நமக்கு கொடுத்த அற்புதமான கொடையில் மருதாணியும் 
ஒன்று. என்னற்ற பயன்கள் ஒவ்வொரு செடிக்கும் ஒரு பயன் உள்ளது 
அதில் மருதாணி மிக முக்கியமானது ஆகும்.

மருதாணி இலையை வெறும் அழகுக்காக பெண்கள் 

கைககளில்வைக்கிறார்கள் என்று கருதினால் அது மிகப்பெரிய 
தவறாகும்.மருதாணி இலையை கைகளில் வைப்பதால் பல்வேறு 
பயன்களை பெண்கள் பெறுகிறார்கள்.
...
இன்று பெண்கள் கைகளுக்கு பல கெமிக்கல்கள் கலந்த சாயத்தை 

பூசுகின்றனர் அதனால் உடல் நலத்திற்கு கேடு தான். 10ஆண்டுகளுக்கு 

முன்பு அதிகம் பெண்கள் கைகளில் பூசுவது மருதாணியாகத்தான் 

இருக்கம் இன்றும் பூசுகின்றனர் ஆனால் கெமிக்கல் 

தடவப்பட்டதைத்தான் அதிகம் பூசுகின்றனர்.

மருதாணியின் பயன்கள்
மருதாணி இலையை அரைத்து கைககளுக்கு வைத்து வர, உடல்வெப்பம் 
தணியும்.
சிலருக்கு மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும்.இதற்கு 
மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே 7அல்லது 8 நொச்சி 
இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும்வராமல் 
பாதுகாக்கலாம். ஆனால் இந்த பயன்கள் எல்லாம் தற்போது கடைகளில் 
கிடைக்கும் மருதாணி கோன்களில் கிடைக்கவாய்ப்பே இல்லை 
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும்.இதற்கு 
நல்ல கை மருத்துவம் உள்ளது.
மருதாணி இலையுடன் சிறிது குளியல் சோப்பைச் சேர்த்துஅரைத்து பூசி 
வர விரைவில் கருந்தேமல் மறையும்.
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை 
அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல 
மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி 
அழகூட்டுவார்கள்.
தோல் நோய்
தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை 
அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் 
நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் 
வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள்
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை 
அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து 

அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் 

அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர
இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு 
வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் 
போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து 
சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் 
போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் 
தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
தூக்கமின்மை
தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் 
தளர்ச்சியை உண்டாக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, 
தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் 
தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை 
உண்டாக்கும்.
கால் ஆணி
உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது 
வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து, ஆணிஉள்ள இடத்தில் 
தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில்குணமாகும்.
படைகள்
கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, 
கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 
501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் 
கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு 
கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் 
பயன்படுத்தலாம்.

இளநரையை போக்கும் மருதாணி
இன்றைய இளைஞர்களுக்கு உள்ள ஒருசில பிரச்னைகளில் 
இளநரையும் 
ஒன்று. இதற்கு மருதாணியைக் கொண்டு இயற்கை முறையில் 
எளிதாகத் தீர்வு காணலாம்.
மருதாணி இலை அரைத்து அதன் விழுதை ஒரு கப்பில் எடுத்து 
வைத்துக் 
கொள்ளவும். அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு, 2 ஸ்பூன் தேங்காய் 
எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெல்லி முல்லி பொடி ஆகியவற்றை, ஒரு 
கப் தயிருடன் கலந்து கொள்ளுங்கள்.இந்த கலவையை இரவு முழுவதும் 
ஒரு பாத்திரத்தில் மூடி வைத்துவிட வேண்டும். பின்னர், இதனை 
காலையில் எழுந்து தலை முடியில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
சுமார் ஒன்று முதல் ஒன்றரை மணி நேரம் வரை காய வைத்துவிட்டு, 
பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு 
ஒருமுறை செய்து வந்தால், தலையில் உள்ள இளநரை மறைந்துவிடும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?
நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் 
உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் 
தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் 
படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு 
என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு 
என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் 
உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
மலச்சிக்கல்:-
செம்பருத்தி(Hibiscus) இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை 

சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி:-

மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி 

குணமாகும்.

பித்த வெடிப்பு:-

கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில்(Olive Oil) காய்ச்சி பூசி

வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு:-
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து

சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு

உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்:-
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும்

சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய்

குணமாகும்.
தேமல்:-
வெள்ளை பூண்டை(Garlic) வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும்

தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்:-
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன்

சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்:-
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில்

கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில்

குணமாகும்.
மூக்கடைப்பு:-
ஒரு துண்டு சுக்கை(Dry Ginger) தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு

சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர

மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்:-
எலுமிச்சம் பழசாறு(Lemon Juice), தேன்(Honey) கலந்து குடிக்க வரட்டு

இருமல் குணமாகும்
++++++++++++++++++++++++++++++++++++++++
திப்பிலி = திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோது இல்லாதது. 

குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், 

பித்தம், கோழை மூன்றறுக்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றினுள் 

கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. 

அதனை நீக்குவது திப்பிலி. 
இதன் பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், 

தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், 

நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் 

பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து 

எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய 

அறுபகையும் அகன்று அறும்.
++++++++++++++++++++++±+
1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு 

வந்தாலே, இதய நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். வெறுமனே 

நெல்லிக்காய் சாப்பிட முடியாவிட்டால் நெல்லிக்காயுடன் இஞ்சி சேர்த்து 

அரைத்து, எலுமிச்சைச் சாறு கலந்து... சர்க்கரை, தேவைப்பட்டால் உப்பு 

சேர்த்து, தண்ணீர் கலந்து சாப்பிடலாம். காலையில் டீ குடிப்பதற்குப் 

பதிலாக இந்த ஜூஸை குடிக்கலாம்.

2. வாய்வுக்கோளாறு உள்ளவர்கள் ஒரு முழு பூண்டை தீயில் சுட்டு 

வெந்ததும் சாப்பிட்டு வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். இதே 

பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் உள்ள 

கொழுப்பை கரைப்பதோடு, இதயத்துக்கும் வலுவூட்டும்!

3. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சிறிதளவு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து 

சாப்பிட்டு வந்தால் அடுத்த 5, 10 நிமிடத்தில் ரத்த அழுத்தம் 

கட்டுப்பாட்டில் வரும்.

4.இதயம் பலவீனமாக இருப்பவர்கள் காய்ந்த திராட்சைப்பழத்தை 

பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பிசைந்து வடிகட்டி 

கொஞ்சம் 

கொஞ்சமாக குடித்து வந்தால், நிவாரணம் கிடைக்கும்
+++++++++++++++++++++++±

1. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து 

தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

2. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை 

எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

3. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி 

நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் 

கோளாறுகள், இதய நோய் தீரும்.

4. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு 

தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

5. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி 

வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை 

அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

6. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் 

சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். 

சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

7. புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் 

பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.

8. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் 

கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது
±++++++++±±++++++++++
ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம்,இருதயம் 
செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும் ? பாம்பு கடித்து 5 ம்ணி நேரம் 
ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா ? அவர் மீண்டும் உயிர் பெற 
முடியுமா..?!

==========================================
சித்த வைத்தியத்தால் முடியும்!
==========================================

பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் 

இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை 

இல்லை. பாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் 

துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும் 
கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள அவரின் 
ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும் எண்ணெய் மறு காதில் 
எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க 
காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடப்பில் உயிர் உள்ளது 
என்று அர்த்தம் அதன் பிறகு 
கருஊமத்த இலையை அரைத்து மூக்கில
3 / 5 

சொட்டு விடவும் மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகி 

விடும்.

----------------------------------------------------------------------------------
பதநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டும் கிடைக்கும் ஒரு பானம் தான் 
பதநீர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் 
எண்ணற்றநன்மைகள் நிறைந்துள்ளன.

ஏனெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. மேலும் 

இது கோடையில் தான் அதிக அளவில் கிடைக்கும். எனவே கடைகளில் 

விற்கப்படும் கண்ட ஜூஸ்களை குடிப்பதற்கு பதிலாக, இப்பதநீரை 

வாங்கி குடியுங்கள்.

உடல் உஷ்ணம் :-

கோடையில் விற்கப்படும் பதநீர் குளிர்ச்சியானது. எனவே இப்பதநீரைக் 
குடிப்பதால், உடல் உஷ்ணம் குறையும்.
சோர்வை நீக்கும் :-
கோடையில் அதிகப்படியான வெயிலால் ஏற்படும் சோர்வானது பதநீர் 
குடிப்பதால் நீங்கும்.
மலச்சிக்கல் :-
மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், பதநீரைக் குடித்தால், அதில் உள்ள 
நார்ச்சத்துக்களால் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் நீங்கும். 
மேலும் வயிற்றுப் புண் இருந்தாலும் குணமாகும்.
ஆரோக்கியமான பற்கள் :-
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமைப்படுத்தி, ஈறுகளில் 
இரத்தக்கசிவு ஏற்பட்டாலும் அதனைத் தடுக்கும்.
பித்தம் குறையும் :-
கோடையில் பதநீர் குடித்து வந்தால், அதில் உள்ள இரும்புச்சத்து உடலில் 
உள்ள பித்தத்தைக் குறைத்து, இரத்த சோகையையும் விரட்டும்.
-------------------------------------------------------------------
ஓமவள்ளி சட்னி
கடாயில் சிறிது நெய் விட்டு ஜீரகம் ஓம வள்ளி இலைகளை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் வதக்கி, ஆற வைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைக்கவும்.

No comments:

Post a Comment