Tuesday, June 2, 2015

மோர் / தயிர்

கிராமத்து மண்வாசனை கமழ, பாரம்பரியக் கறவை மாடுகளின் பாலிலிருந்து அறிவியல் நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்ட மோரின் சுவையையும் மருத்துவக் குணங்களையும் சிலாகித்து வாழ்த்திய மரபு நம்முடையது. இயற்கையின் கொடையான மோருக்கு ஈடுகொடுக்க வணிகப் பானங்களால் முடியாது. பசுவின் உயிர்ச் சத்துகளுள் ஒன்றான மோர், வேனிற் காலத்தில் உண்டாகும் வெப்பத்தைக் குறைப்பதோடு பல ஆரோக்கியப் பலன்களையும் தருகிறது.

குறுந்தொகையில்…

“முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்….தீம்புளிப்பாகர்…” என்ற குறுந்தொகை பாடல் புளித்த தயிரைக் கொண்டு, புளி சேர்க்காத இனிமையான தீம்புளிப்பாகர் (மோர்க் குழம்பு) செய்து தலைவனுக்குத் தலைவி கொடுத்து மகிழ்வித்ததாகக் குறிப்பிடுகிறது. மோரானது பானமாக மட்டுமன்றி, பண்டைய காலம் முதல் சமையலிலும் முக்கிய இடம்பெற்று உடலைச் சீராக்கியுள்ளது. நமது வாழ்வோடு பயணித்த மோரின் சிறப்புகளைப் பார்ப்போம்:

செரிமானப் பாதை சீராக🐂

உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு – குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.

மருந்தாகும்மோர்🐄

கலோரிகள் நிறைந்த செயற்கை பானங்களுக்கு நடுவில், கலோரிகள் குறைந்த மோரானது உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து. மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும். கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது. தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும். வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறுமாம்
++++++++++++++++++++++++++++++++++++++++
தயிர், என்ன வெல்லாம் செய்யலாம்..?

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.
5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.
6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.
7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.
8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.
9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.
10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.
11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.
12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.
13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.
15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.
16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.
17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.
18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.
19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
20. தயிருடன் + வெல்லம்  / நாட்டுசர்க்கரை  சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

21. கடைசியாக தயிர் வடை
------------------------------------------------------------------------

மோரின் நன்மைகள்
தயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். ‘இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்’ என இதை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். அன்றைய காலங்களில் வீடுகளில் வெயிலில் களைத்து வருபவர்களுக்கும் இல்லத்தினருக்கும் விருந்தினர்களுக்கும் அன்புடன் மோர் தருவது வழக்கம். இப்போது குளிர்பானங்கள் அருந்துவதே நாகரிகம் என்று மோர் அருந்தும் வழக்கம் குறைந்து விட்டது. எத்தனை வண்ணங்களில் குளிர்பானங்கள் சந்தையில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? எந்தப் பக்க விளைவுகளும் தராத, அதிக நன்மைகள் உடலிற்கு வழங்கவல்ல மோரினால் கிடைக்கும் நன்மைகளை அறிந்து கொள்வோம். கோடையின் உஷ்ணத்தைத் தணிக்கவும் நோய் நொடிகளின்றி வாழவும் மோரைப் பருகுவோம், ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
நீர் மோர் செய்யும் முறை:
தேவையானவை:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
வெந்தயம்- 4(விரும்புவர்கள் சேர்க்கலாம்)
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம், தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றிப் பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
மோரினால் கிட்டும் நன்மைகள்:
1. தயிரை விடச் சிறந்தது மோர். எளிதில் ஜீரணமாகக் கூடியது.
2.உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
3. பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
4.மூல நோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
5. வயிற்றுப்போக்கு, அஜீரணக் கோளாறுகளுக்கெல்லாம் மோர் சிறந்த மருந்து.
6. மோர் குடித்தால் உடனே பசி எடுக்கும்.
7. வெயிலால் உடம்பு சூடாகி சிறுநீர் பாதையில் எரிச்சல் உண்டானால் அதற்கும் மருந்து இதுதான்.
8. நீர்க்கடுப்பைப் போக்கும் அருமருந்து, ரத்தசோகைக்கும் மோர் நல்லது!
9. நம்மை அறியாமல் சாப்பிடும் மோசமான உணவுப் பொருட்கள் மூலம் உடலில் சேரும் விஷத்தை அகற்றும் வல்லமைகூட மோருக்கு உண்டு!
10. பால், மோ‌ர், பழ‌ச்சாறுக‌ள் அ‌ளி‌ப்பது குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் வள‌ர்‌ச்‌சி‌க்கு ந‌ன்மை அ‌ளி‌க்கு‌ம்.
11. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு இரண்டு விதங்கள்: ஒன்று சாதாரணமானது, மற்றது கிருமியால் ஏற்படுவது.
12. வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஆகு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு ஒரு நாளைக்கு 4 முறை மோர் கொடுக்கலாம். மோரை அ‌ப்படியே அ‌ளி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌க்‌கு‌ம் எ‌ன்று பய‌ப்படு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள், ‌சி‌றிய வாண‌லி‌யி‌ல் த‌யிரை லேசாக கொ‌தி‌க்க வை‌த்து ‌சி‌றிது ம‌ஞ்ச‌ள் தூ‌ள் கல‌ந்து சாத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து கொடு‌த்து வரலா‌ம்.
13.காமாலை நோயைச் சாந்தப்படுத்தும். எந்த விதமான பேதியையும் கட்டுப்படுத்தும்.
14.எளிதில் செய்து விடக் கூடிய மோரைக் குடும்பத்திலுள்ள அனைவரும் பருகிப் பயன் பெற வேண்டும்.
சரும‌த்‌தி‌ற்கு உக‌ந்த மோ‌ர்:
1. முக‌த்‌தி‌ல் த‌யி‌ர், பா‌ல் ஏடு தே‌ய்‌த்து வருவது தெ‌ரியு‌ம். சரும‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் ப‌ல்வேறு ‌நோ‌ய்களு‌க்கு மோ‌ர் ‌சிற‌ந்த மரு‌ந்தாக உ‌ள்ளது.
2. சரும‌த்‌தி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌தியை மோ‌ரி‌ல் நனை‌த்த து‌ணியை‌க் க‌ட்டு‌ப் போ‌ட்டு வருவத‌ன் மூல‌ம் சரும பா‌தி‌ப்பு ‌விரை‌வி‌ல் குணமடைவதை‌க் காணலா‌ம்.
3. தோல் வீக்க நோ‌ய்‌க்கு மோ‌‌‌ர் க‌ட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.
குறிப்புகள்:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்குத்‌ தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
ஆனால், சளி தொந்தரவு, தொண்டை எரிச்சல், இருமல் போன்ற உபாதைகள் இருக்கும்போது மோர் சாப்பிடக்கூடாது. மோர் சாதமும் கூடாது.
நன்றி: காயத்ரி

'மோரின் நன்மைகள்

பி.கு: படத்திலிருப்பது இந்த மோர் இல்ல. ஹ ஹ ஹா!'

+++++++++++++++++++++++++++++++++
‘இந்திரனுக்குக் கூட கிடைக்காத அற்புதம்’ என்கிறது ஆயுர்வேதம் இதை.
ஆதிகாலத்தில் நம்மவர் தயிர் சாப்பிடுவது குறைவு. ஆனால் மோர் நிறையக் குடிப்பர். சித்தர் தேரையர் கூறுகிறார் தண்ணீரைவிட மனிதர் மோர் கூடுதலாகக் குடிக்க வேண்டுமென்று. மோர் குடித்தால் உடற்சூடு தணிக்கப்பட்டு மேலும் அதிலள்ள உடலக்குத் தேவையான நுண்ணுயிர்கள் (friendly bacteria) எமக்குப் பல நன்மைகளைச் செய்கின்றன.

மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது.
மூலநோய்க்கு மோர் பிரமாதமான மருந்து.
உடல் எடையைக் குறைக்கவல்லது, உணவு உண்ட பின் ஒரு குவளை நீர்மோர் பருகினால் உண்ட உணவுகள் விரைவில் சீரணமாகி உடலைச் சீராக வைக்கும்.
பெண்களின் மாதவிலக்குக் காலங்களில் உண்டாகும் போக்கைக் கட்டுப்படுத்தவும் வயிற்றுவலியைக் குறைக்கவும் வெந்தயம் சேர்த்த நீர்மோர் உதவும்.
தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.
தேவையான பொருள்கள்:
தயிர் – ஒரு கப்
தண்ணீர் – 3 கப்
இஞ்சி – சிறு துண்டு
கறிவேப்பிலை – 4,5 இலை
கொத்தமல்லி – சிறிது
பச்சை மிளகாய் – 1/2
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
விரும்பினால்..
வெள்ளரி – 1 துண்டு
கேரட் – 1 துண்டு
மாங்காய் – 1 துண்டு
செய்முறை:
புளிக்காத தயிரை நன்கு கடைந்து, 2 கப் தண்னீர் சேர்த்துக்கொள்ளவும்.
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்த மல்லி, பச்சை மிளகாய், வெள்ளரி, கேரட், மாங்காய் எல்லாவற்றையு ம் மிக்ஸியில் அரைத்து அத்துடன் மீதம் இருக்கும் ஒரு கப் தண்ணீரை ச் சேர்த்து நன்கு டீ வடி கட்டியில் வடிகட்டவும்.
வடிகட்டிய நீரையும் மோரோடு சேர்த்துக் கொள்ளவும்.
மேலே உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கலக்கவும்.
மாங்காய் இல்லாவிடில், தேவைப் பட்டால் சிறிது எலுமிச்சம் பழச் சாறும் சேர்த்துக் கொள்ளலாம்.
* பொதுவாக எல்லா வேலைகளுக்கும் அம்மி ஆட்டுரல் என்று பழைய பொருள்க ளை நாடினாலும், தயிர் கடைவதில் மட்டும் மத்தை விட மிக்ஸி மிக மிகச் சுவையான மோரைக் கொடுக்கும்.
* வெயில் காலத்தில் இதைத் தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொ ண்டால் மதிய வேளைகளில் தேவைப்படும் பொழுதெல்லாம் எடு த்துக் குடிக்கலாம். ஆடை நீக்கிய தயிர் அல்லது வெண்னை எடுத்த மோர் என்றால் நலம்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.

No comments:

Post a Comment