ராகி பக்கோடா
- ராகி மாவு - 250 கிராம்
- வேர்க்கடலை - 100 கிராம்
- பொட்டுக்கடலை - 100 கிராம்
- பெரிய வெங்காயம் - 4
- கறிவேப்பிலை - 5 இனுக்கு
- மல்லித் தழை - கால் கட்டு
- வரமிளகாய் - 5
- சீரகம் - 3 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - பொரிப்பதற்கு
பெரிய வெங்காயம், மல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வரமிளகாய், பாதி அளவு பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இவை அனைத்தையும் ராகி மாவில் கலந்து கொள்ளவும்.
வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
ராகி கலவையோடு வேர்க்கடலை கலந்து கெட்டியாக பிசையவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உதிரி உதிரியாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுவையான ராகி வேர்க்கடலை பக்கோடா தயார்.
No comments:
Post a Comment