Tuesday, June 16, 2015

கத்தரிக் காய்

கத்தரி மேல் காதல் கொண்டேன் 
                                       
  


 

கத்தரியில் தான்
எத்தனை வகைகள்
 
ஊதா நிறத்தில் ஒன்று கரு
நீல நிறத்தில் ஒன்று
பச்சை நிறத்தில் ஒன்று
நாமம் போட்டெதென வெள்ளைக் கோடுகள் கொண்ட ஒன்று
முள் கொண்ட பாவாடையுடன் ஒன்று
முட்டை போல் ஒன்று
ஒல்லியாய் ஒன்று
குண்டாய் ஒன்று
இன்னும் உண்டு பல வகைகள் 
விரல்கள் எந்தன் போதாது
எண்ணிட அவை

 கத்தரிக் காய் காதலன் நான்
இத்தரையில் இல்லை அதற் கீடு என்பேன்

சுவையான காய் ஒன்று சொல் என்றால்
அவை யடக்கம் ஏது மின்றியே
கத்தரிக் காயெனக் கத்துவேன்
 
வகை வகையாய்ச் செய்திடலாம்
வாய்க்கு ருசியாய் கத்தரிக் காயதை
உருளையொடு வெங்காயம் சேர்த்து
மொறு மொறுவென வதக்கிய கரி
 
கிராம்புடன் லவங்கப் பட்டை ஏலமெனக் கூட்டி
ரச வாங்கியெனும் குழம் பொன்று
நாவில் ரசம் ஊறிடச் செய்யுமது
 
சிறு துண்டுகளாக்கிக் கத்தரிக் காயை
வெங்காயத்தொடு சேர்த்து செய்திடும் கூட்டொன்று
பெயர் அதற்கே கொத்ஸ் ஸென்று
உண்டிட அதைத் தோசையுடன் எண்ணத்தில்
இராது உண்ட தோசைதன் எண்ணிக்கை
 
குண்டாய் சுறைப் பிஞ்சளவில் ஒரு கத்தரி
துண்டாய் ஆக்கிடாது முழுசாய்
வாட்டிடல் வேண்டு மதை நெருப்பிலே
 
உளுத்தம் பருப்பு கடலைப் பருப்புடனே
வத்த மிள்காய் ஒன்றும் சேர்த்து
எண்ணையில் வறுத் தெடுத்து
நெருப்பில் சுட்ட கத்தரியொடு செர்த்துப் பிசைந்தே
உண்டிட அமிர்தமாகு மது
உண்டிடலா மதை
அன்னமொடு சேர்த்தோ
அன்றித் தயிருடன் சேர்த்தோ
 
நிலக் கடலை பருப்பு சேர்தே
செய்திடுவார் கூட்டொன்று
நிலவினிலே சஞ்சரிப்பேன் உண்டிட அதை
கத்தரிப் பிரேமி நான்
 
வேண்டுமா கத்தரியில்
வட இந்தியா வகைகள்
இருக்கிறதே பைங்கன் பர்த்தாவும்
பகரா பைங்கனும்
 
எப்படி உண்டாலும் கத்தரிக் காயதை
உள்ளம் குளிர்வேன்
கத்தரிக் காய் காதலன் நான்
 
நான் மட்டுந் தானா கத்தரிக் காய் காதலன்
இத்தரையில் உள்ளார்
எத்தனையோ பேர் என் போல்
தமிழுலகு புகழ் அவ்வையும்
அன்றோ ஓர் கத்தரிப் பிரேமி
அன்றே பாடினாள் அவள்
வழுதுணங்காயின் (கத்தரியின்)
மகிமை தனை
 
ஒளவைக்கு அளித்திட்டான் விருந்து
ஆயிரம் ஆண்டுகள் முன்பு
ஏழை விவசாயி
வழுதுணங்காய் பொரியல் செய்தே
விருந்துண்ட ஒளவை பாடினாள்
அன் றதன் புகழை
வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் சற்றே
முமுறெனப் புளித்த மோரும்-தரமுடனே
புல்வேளூர்ப் பூதன் பரிந்தளித்த உணவு
எல்லா உலகும் பெறும் என்று
 
ANBUDAN
<>KSR<>

No comments:

Post a Comment