Sunday, June 14, 2015

இஞ்சி சுக்கு கடுக்காய்

நெஞ்சை அள்ளும்   இஞ்சி

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து சாப்பிட சர்வரோகமும் ஓடும்.
இஞ்சி லேகியம்

தேவையான பொருள்கள்:

இஞ்சி - 100 கிராம்
வெல்லம் - 200 கிராம்
மிளகு, திப்பிலி, சீரகம், தனியா, ஓமம், ஒவ்வொன்றிலும் - 10 கிராம்
நெய் - தேவையான அளவு.
செய்முறை:
இஞ்சியை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சாறு எடுத்து வடித்து 
வைக்கவும். சிறிது நேரம் கழித்து தெளிந்து இருக்கும். அந்த 
தெளிந்ததை மட்டும் எடுத்து, வெல்லத்தை மண் போக வடிகட்டி சுத்தம் 
செய்து இஞ்சி சாறை கலந்து கெட்டி பாகு வரும் வரை காய்ச்சவும். மற்ற 
பொருள்களை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து பாகில் 
போட்டு நெய் ஊற்றி கிளறவும். தீபாவளி அன்று மட்டும் சாப்பிட 
வேண்டும் என்று இல்லை. வயிறு பொருமலாக இருக்கும்போதும் 
சாப்பிடலாம்.
[2]
இஞ்சி சாறு - 200 கிராம்
வெல்லம் - 200 கிராம்
பாதாம், கசகசா, ஓமம் - தலா - 20 கிராம்
நெய் - தேவையானது
செய்முறை:
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு கல், மண் போக 
சுத்தம் வடித்து, கசகசா, ஓமத்தை வறுத்து பாதாம் பருப்புடன் இஞ்சி 
சாறை சேர்த்து அரைக்கவும். எல்லாவற்றையும் கலந்து அடுப்பில் 
வைத்து கிளறவும். அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும். பதம் 
வந்தவுடன் இறக்கவும்.
தமிழகத்தில் தனிப்பெரும் தெய்வமாம் முருகப்பெருமான் திருப்பெயர் 
கொண்ட மூலிகை இஞ்சி ஒரு சிறந்த இயற்கை மருந்து ..
ஒரு மருத்துவ மூலிகையும் ஆகும்.
இஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி 
எனும் பெயர் தோன்றிற்று
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம்,
எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்புக் கொண்டாட்டம் என்பது காவடி சிந்து 
பாடல்..
விண்டுவி டாமல் முருகன் பதமேவு
விஞ்சையர் போல அனைவரும்
இஞ்சியினால் நலம் பல பெற்லாம்..
பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் 
தடுப்பதுடன் ஆகார குற்றங்களை உண்டாவதைத் தடுத்து உணவுகளை 
எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.
இஞ்சியின் நற்குணங்கள் அனைவரும் அறிந்ததுதான். எனினும், சளி, 
இருமல், அஜீரணம் ஆகியவற்றை இஞ்சி சரி செய்யும் என்பது 
பொதுவான மருத்துவ பயன்கள்.
இஞ்சியின் செயல்பாடு பற்றி பல்கலைக்கழக உணவியல் பிரிவு 


விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி இஞ்சியின் பல்வேறு மருத்துவ குணங்கள் 


நிரூபிக்கப்பட்டவை. உடல் எரிச்சல், வயிற்றுப் புண் ஆகியவற்றை 


ஆற்றும் ஆற்றலும் இஞ்சிக்கு உள்ளதை சமீபத்தில் எலிகளிடம் 


நடத்திய சோதனையில் அறிவித்தனர்.
உணவில் சேர்த்து கொதிக்க வைக்கப்படும் இஞ்சியால் உடல் 
வலிகளைக் குறைக்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இஞ்சியை பச்சையாக உணவில் சேர்த்து சிலருக்கு 11 நாட்கள் 
அளித்தும். இன்னொரு குழுவினருக்கு கொதிக்க வைத்த இஞ்சியை 
அதே 11 நாட்கள் கொடுத்தும். அதன் பிறகு நடத்திய சோதனையில் 
சூடுபடுத்தப்பட்ட இஞ்சியை உணவில் சேர்த்தவர்களது உடல் 
வலிகளுக்கு நிவாரணம் கிடைத்தது தெரிய வந்ததாம்..
குறிப்பாக கடினமான வேலை செய்பவர்கள், உடற்பயிற்சி 
மேற்கொள்பவர்களுக்கு ஏற்படும் தசை வலிகளை இஞ்சி குறைப்பது 
ஆய்வில் உறுதியானது. தினமும் உணவில் இஞ்சி சேர்த்துக் 
கொள்வோருக்கு உடல் வலிகளை 25 சதவீதம் குறைக்க முடியும் 
என்கிறது ஆய்வு..
இஞ்சி வியர்வை, உமிழ்நீர் பெருக்கியாகவும், பசி தூண்டியாகவும், 
வயிற்றில் வெப்பம் பெருக்கி, வாயு வெளியேற்றியாகவும் 
பயன்படுகிறது.
இதன் வேறு பெயர்கள்: இஞ்சம், வெந்தோன்றி, கொத்தான்.
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை 


இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து 


அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் 


குணமாகும். இஞ்சியை சமையலுடன் சேர்த்துக் கொண்டால் அண்ட 


வாயுவை அண்டவிடாமல் விரட்டலாம்.
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து 
இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு 
நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் 
இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, 
கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.
200 கிராம் இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி 200 கிராம் 
தேனில் ஊறப்போட்டு 4 நாள்கள் கழித்து தினம் காலையில் ஓரிரு 
துண்டுகள் வெறும் வயிற்றில் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர 
உடன் பிணி நீங்கிப் பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நெஞ்சு வலியும், 
மனத்திடமும் பெற்று முகம் பொலிவும், அழகும் பெறும்.
இஞ்சி முரப்பா சாப்பிட்டு வர வயிற்று மந்தம், வாந்தி, புளி ஏப்பம், 
மார்புச்சளி, இரைப்பு, உடல் கோளாறு நீங்கும்
--------------------------------------------------
"இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் 

உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. 

*இஞ்சிக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. மேலும் 

இது குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. 

மேலும் இது கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. 

*மலச்சிக்கல், வயிற்றுவலி, ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிதளவு உப்பு 

சேர்த்து குடித்தால் குணமாகும். 

*பசி எடுக்காதவர்கள் இஞ்சியுடன் கொத்தமல்லி சேர்த்து துவையல் 

அறைத்து சாப்பிடு வந்தால் நன்கு பசி எடுக்கும்.
*ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் விரைவில் 

குணமாகும்.
*பித்தம் அதிகமாகி தலைசுற்றல் ஏற்படுவதுண்டு அதற்கு சுக்குத் தூளை 

தேனில் கலந்து சாப்பிடு வந்தால் குணமாகும்.
இவ்வளவு மருத்துவ குணம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில் 

சேர்த்து கொண்டால் உடல் உபாதைகள் வராது.
----------------------------------------------------------------------------------------

"கலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு 
மாலையில் கடுக்காய் மண்டலம் 
கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி 
நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே"
சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். ஆனால் இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடைய முடியும்.
சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங் களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.
நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப் பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.
எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.
வாதம் - காற்று - 1,மாத்திரை அளவு.
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு.
இது நாடியின் அளவுகளாகும் இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம்.இந்த நாடி அளவுகளை கூடவோ குறை யவோ அல்லாமல் சமன் படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.
வாதம் - காற்று - 1, மாத்திரை அளவு -- சுக்கு. 
பித்தம் - நெருப்பு - 1/2,மாத்திரை அளவு -- இஞ்சி.
கபம் - நீர் - 1/4-மாத்திரை அளவு -- கடுக்காய்.
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை. அடுத்து ,
சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும் , நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.
சுக்குக்கு புற நஞ்சு - கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும் ,கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.


சுக்கு சுத்தி ;
தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.


கடுக்காய் சுத்தி ;
கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.


இஞ்சி சுத்தி ;
இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும் இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும் இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும் .
இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.


உண்ணும் முறை :
காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்)எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். 

இது பித்தத்தை சமன் செய்யும்.
மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.
இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெண்ணீ ரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.
இதன்படி ஒரு மண்டலம் உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.


பழமொழி :


கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்.
ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.


சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை 
சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை





No comments:

Post a Comment