Monday, June 8, 2015

சமையல் / Cooking




புளியில்லா குழம்பு 
பாசிபறுப்பு 50 கிராம் வேக வைத்தது
(அரைக்கறதுக்கு)
தேங்காய் 4டீஸ்பூன்
சீரகம் வெள்ளைப்பூடு 4 பல்
சிறிய வெங்காயம் 3
இத நல்லா அரச்சுக்கணும்
முருங்கை கீரை... 2 கைப்பிடி
முருங்கை காய் 2
கத்திரிக்காய் 2 கட் பண்ணிக்கங்க
இதெல்லாத்தயும் நல்லா கழுவிட்டு 2 டம்ளர் தண்ணீரில்
ஒரு டீஸ்பூன் வத்தல்பொடி சிறிதளவு மஞ்சள் பொடி
உப்பு கலந்து வேக வைக்கவும்
வெந்ததும் வேக வைத்த பாசிபறுப்ப அதுல கலந்துருங்க
நல்லா கொதிச்சுட்டு இருக்றப்பவே
அரைத்த கலவையை சேருங்க
நல்லா கொதிச்சு இறக்கினதும் கடுகு தாளித்து இறக்கணும்
(ஹெல்த்தி ஃபுட் இரும்பு சத்து நிறைந்தது
சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக சிறந்த குழம்பு)
++++++++++++++++++++++++++++++++++++++++
கற்றாழை ஜூஸ்
தேவையான பொருட்கள்:
சோற்றுக் கற்றாழை - 1 மடல் (பெரியது)
வெல்லம் - ஒரு எலுச்சம் பழ அளவு

செய்முறை:
சோற்றுக் கற்றாழை மடல் மேல் உள்ள தோலை நீக்கி விட்டு உள்ளே ஜெல் போல இருப்பதை எடுத்து நன்றாக கழுவி அதை சிறிய துண்டாக நறுக்கவும்.
வெல்லத்தை பொடி செய்து வைக்கவும்.
நறுக்கிய கற்றாழையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
கடைசியில் வெல்லம் சேர்த்து ஒரு சுற்றி எடுக்கவும்.
அதில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்கி குடிக்கவும்.
குளிர்ச்சியாக வேண்டும் என்றால் சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து குடிக்கலாம்.
இந்த ஜூஸ் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

-----------------------------------------------------------------------------


சிறுபயறு கஞ்சி
தேவையானவை:
பச்சரிசி குருணை/அரிசி...1 ஆழாக்கு
பச்சைப் பயறு/சிறுபயறு ... 1 /2 ஆழாக்கு
சீரகம்......................................1 ` தேக்கரண்டி
கீரை.. எந்தக்கீரையாக இருந்தாலும்...ஒரு கைப்பிடி
தேங்காய்...............................1 /2 மூடி
உப்பு தேவையான அளவு..
நீர்: அரிசி .............................4 :1
செய்முறை:
அரிசியைக் களைந்து கொஞ்ச நேரம் ஊறவிடவும். பச்சைப்பையறை வாணலியில் சிவந்துவிடாமல் லேசாக வறுக்கவும்; கழுவவும். கீரையை ஆய்ந்து கழுவி வைக்கவும். சிறுகீரை/முருங்கைக் கீரை அசத்தலாக இருக்கும். தேங் காயை துருவி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து அரிசியை விட 4 பங்கு நீர் ஊற்றவும். நீர் கொதிக்கும் பொது அதில் அரிசி, பயறு, சீரகம் ,கீரை + உப்பு போட்டு மூடிவிடவும்.
குக்கர் 5 -6 விசில் விடும் வரை காத்திருந்து இறக்கவும். குக்கரில் கேஸ் போனபின் திறந்து துருவிய தேங்காயைப் போட்டு பரிமாறவும். இதற்குத் துணையாக தேங்காய்/ எள் துவையல் சூப்பராய் இருக்கும்.
எளிய சத்தான காலை உணவு. இரவிலும் உண்ணலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். அவசரமாக காலையில் டிபன் தயாரிக்கும் சகோதரிகள் ஒரு மாற்றாக இதனை தயாரிக்கலாம். நேரமும் குறைவு.
நன்றி: பேரா.சோ.மோகனா
சமையலில் செய்யக்கூடாதவை!

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.
* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.
* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.
* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.
* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.
* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.
* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் 
அதிகமாக
 காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.
* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ 
அதிகமாக 
காயக்கூடாது. 
* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.
….செய்ய வேண்டியவை….
* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.
* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.
* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.
* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.
*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.
* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.
* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.
* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.
* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.
*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்

No comments:

Post a Comment