Wednesday, May 20, 2015

வயிற்றுவலி

-----------------------------------------
நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையும்
பானை போன்று வயிறு வீக்கி உள்ளதா? அதைக் குறைக்க தினமும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து வருகிறீர்களா? அப்படியெனில் தினமும் உடற்பயிற்சி செய்து வருதோடு, இரவில் படுக்கும் முன் ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தூங்கினால், தொப்பை விரைவில் குறையுமாம். ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்... அதிலும் இஞ்சி, கொத்தமல்லி, எலுமிச்சை மற்றும் பல பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஜூஸை குடித்துவிட்டு இரவில் தூங்கினால், சீக்கிரம் தொப்பை குறைவதைக் காணலாம். ஏனெனில் இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களில் உள்ள சக்தி வாய்ந்த மருத்து குணங்களால், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் விரைவில் கரையுமாம். பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க... சரி, இப்போது தொப்பையைக் குறைக்க உதவும் அந்த பானத்தையும், அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களின் மருத்துவ குணங்களையும் காணலாம்

வெள்ளரிக்காய் தொப்பையைக் குறைக்க வேண்டுமெனில் வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். ஏனெனில் இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. அதிலும் ஒரு முழு வெள்ளரிக்காயில் 45 கலோரிகள் தான் உள்ளது. எனவே இதனை சாப்பிடுவதில் எவ்வித பிரச்சனையும் நேராது

கொத்தமல்லி கொத்தமல்லியில் கலோரிகள் குறைவாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடலை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்ளும்

எலுமிச்சை எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட், கொழுப்புக்கள் உடலில் சேராமல் தடுப்பதோடு, தேங்கியுள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றிவிடும்

இஞ்சி இஞ்சி உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, மலச்சிக்கலைத் தடுத்து, கொழுப்புக்களை கரையும். எனவே உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்து வந்தால், அதில் உள்ள பொருள், கொழுப்புக்களை விரைவில் கரைத்து, தொப்பையைக் குறைக்க உதவும்.
கற்றாழை ஜூஸ் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், ப்ரீ ராடிக்கல்களின் வளர்ச்சியைக் குறைத்து, உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி, ஆற்றலை அதிகரித்து, தேங்கியுள்ள கொழுப்புக்களை கரையச் செய்யும்.

ஜூஸ் செய்முறை வெள்ளரிக்காய் - 1 கொத்தமல்லி - 1 கட்டு எலுமிச்சை - 1 துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் - 1/2 டம்ளர் மேற்கூறிய பொருட்களை சாறு எடுத்து, தினமும் இரவில் படுக்கும் முன் குடித்து வந்தால், தொப்பை குறைவதை நன்கு காணலாம்












-----------------------------------------------
Vikatan EMagazine's photo.
வயிறு .. அதுக்குள்ள கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, 
பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை, கர்ப்பப்பை/
விந்துபை/சினைப்பை' ன்னு அவ்வளவு உறுப்புகள் இருக்கு...
வயிறு வலிக்குதுன்னு சொன்னா எந்த உறுப்புல பிரச்சனைன்னு 
புரிஞ்சிக்கிறது ஒரு டாக்டர்க்கே கஷ்டம்... 
வயிறை மேலிருந்து கீழ் மூன்று பகுதியாவும் இடமிருந்து வலமாக 
மூன்று பகுதியாவும் பிரிச்சிக்கலாம் அப்படியே படுக்க வைச்சு கோடு 
கிழிச்சா மொத்தம் 9 பகுதிகள்.
அதாவது மேல், நடு(தொப்புள் ஏரியா) மற்றும் அடி பகுதி, இடது, 
நடு(தொப்புள் ஏரியா) மற்றும் வலது பகுதி... ஓகே வா??
மேல்வயிறு வலது மூலையில வலிச்சா.. ஈரலில் பிரச்சனை.. 
பித்தப்பை கல்.
மேல்வயிறு இடது மூலை மற்றும் நடுவில் வலித்தால் அல்சர்.
நடுவயிறு வலது மற்றும் இடது மூலையில் வலி வித் நீர்கடுப்பு 
இருந்தால் கிட்னி ஸ்டோன்.
நடுவயிறு நடுவில் (தொப்புளை சுற்றி) வலித்தால் ஃபூட் பாய்சன்.
அடிவயிறு வலது மூலை - அப்பன்டிசைடிஸ்,
அடி வயிறு நடுவில், சிறுனீர் பை வீக்கம், கர்ப்பப்பை பிரச்சனைகள்,
அடிவயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம்.
ஓரளவாவது புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்... என்ன 
பிரச்சனைன்னு தெரிஞ்சிட்டு டாக்டரை பாருங்க.

-------------------------

வயிற்றுவலி வேதனை தீர எளிய சிகிச்சை முறைகள்

Simple treatment of abdominal pain

மனித உடலில் பெரும் பகுதியாக இருப்பது வயிறு. நெஞ்சில் இருந்து இடுப்புக்கு இடைபட்ட பகுதிதான் வயிறு. இந்த வயிறு பகுதியில்தான் நாம் உண்ணும்  உணவு, பருகும் நீர்,  இவற்றை செரிமானம் செய்யக்கூடிய  இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்ற ஜீரண மண்டல  உறுப்புகள் அடங்கியுள்ளது.
வயிற்று பகுதியில் பல்வேறு காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டு வலி ஏற்படுகிறது. இந்த வயிற்று வலி வேதனை என்பது தாங்க முடியாதது. இதற்கு வயது  வித்தியாசம் எல்லாம் கிடையது. இந்த வயிற்று வலிக்கான காரணம் என்ன? இதை தவிர்ப்பது எப்படி, இதற்கான சிகிச்சைகள் என்ன? அதுபற்றிய விவரங்கள்: வயிற்றில் குடல்புண், கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது, செரிமான குறைபாடு, நச்சுணவு, இரைப்பைப் புண், இரைப்பை அழற்சி, குடல் புழுத்தொல்லை,  குடல் அழற்சி, குடல் வால்  அழற்சி, குடல் அடைப்பு, மாதவிடாய், மலச்சிக்கல், சிறுநீரக அழற்சி, சிறுநீரகக் கற்கள், பித்தப்பை அழற்சி, பித்தப்பைக் கற்கள்  போன்ற பல்வேறு காரணங்களால் வயிற்றுவலி ஏற்படலம்.
வயிற்றில் உள்ள பல உறுப்புகளில் எது பாதித்தாலும் வலி வரலாம்.

குறிப்பாக நெஞ்சு எரிச்சல் தொடர்பான பிரச்னை, பித்தப்பை கற்கள், பித்தக் குழாய் கற்கள்,  தொடர் கணைய  அழற்சி, சிறுகுடல் சுருக்கம், பெருங்குடல் அழற்சி மற்றும் வயிற்றில் ஏற்படும் புற்று நோயோடு, முன் சிறு குடலில் ஏற்படும் புண்ணும்  (அல்சர்) வயிற்று வலிக்கு ஒரு காரணமாகும். உணவுக்குழாய் மற்றும் இரைப்பை இணையும் இடத்தில் உள்ள வால்வில் ஏற்படும் பிரச்னையால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. சில சமயங்களில் வயிற்று வலியோடு நெஞ்சு எரிச்சலும் இருக்கும். அத்துடன் மன உளைச்சல் மற்றும் அதிகமான காரம் சாப்பிடுவதால் வயிற்று வலி ஏற்படும். உணவு சாப்பிட்ட பிறகு வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டால், அதற்கு முக்கியமான காரணம் பித்தப்பை கற்களாகும். அதேபோல் அடி வயிற்றில் வலி  ஏற்பட்டால் குடல் பிரச்னை  குறிப்பாக சுருக்கம் மற்றும் புற்றுக்கட்டியாக இருக்கக்கூடும். பசி இல்லாத தன்மை மற்றும் மாதக்கணக்கில் நீடிக்கும் வயிற்று வலிக்கு காரணம் புற்று நோயாக இருக்கக்கூடும். இதனால் மலத்தில் ரத்தம் மற்றும் வயிற்றுப்  பெருக்கம் போன்ற பல  பிரச்னைகள் ஏற்படலாம்.

அல்சர் உள்ள நோயாளிக்கு அதிகமாக பசி எடுக்கும். இவர்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு வயிற்று வலி குறையும். அதிகமான கவலை, மன உளைச்சல், உணர்ச்சி வேகமான செயல்பாடுகள் போன்ற காரணங்களால் வயிற்றில் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலங்களின்  தாக்கத்தால்தான்  பெரும்பாலும் வயிற்றில் புண் உண்டாகிறது. இதனால் பசி குறைதல், வயிற்றில் வலி, செரிமானம் குறைதல் போன்றவை ஏற்படுகிறது.

அறிகுறி: வலதுபுறத்தில் வலி ஏற்பட்டால், சிறுநீரகத்தில் கல், அப்பென்டிக்ஸ் அல்லது அல்சர் போன்றவை இருக்கலாம். அதுவே இடதுபுறத்தில் வலி ஏற்பட்டால்,  குடலில் புண் (அதிக  வலி இருந்தால் குடல் புற்றுநோய்), குழாய்களில் ஏதேனும் சதை வளர்ச்சி, வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் என்பதற்கான அறிகுறி  ஆகும். மலச்சிக்கலும் வயிற்றுவலியை உண்டாக்கும். அதிலும் எப்போது குடலின் இயக்கம் சரியாக இயங்காமல், மிகவும் வலுவற்று இருக்கிறதோ, அப்போது  அடிவயிற்றில் கடுமையான வலி  ஏற்படும். ஏனெனில், அந்த நேரத்தில் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேறாமல், சரியான அழுத்தமின்றி உடலிலேயே  தங்கிவிடுகின்றன. உடலில் வாயு அதிகமாக உள்ளதோ, அப்போது வயிற்றில் ஒருவித வீக்கம் ஏற்படுவது போல் இருப்பதோடு, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குவது போல்  இருக்கும். இதற்கு உண்மைய £ன காரணம், வயிற்றில் புண் இருக்கிறது என்பதாகும். அதனால்தான் வயிற்றில் வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு  போன்றவை ஏற்படுகிறது. காரமான உணவு, செரிமானமின்மை மற்றும் வாயுத்தொல்லை போன்றவை வயிற்றில் புண்களை ஏற்படுத்தி, வலியை உண்டாக்குகின்றன.

வயிற்று வலியை தவிர்க்க

*  ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை விட, சிறு சிறு இடைவெளிகளில் உணவுகளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி ஏற்படாது.
* உண்ணும் உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இதனால் விரைவில் உணவு செரிமானம் அடைவதோடு, உடல் எடையும் குறையும். வேகமாக  சாப்பிட்டால் உடலில் உள்ள  செயல்பாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, வலி ஏற்படும்.
* உணவை சரியான அளவில் சாப்பிட்டு, அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
முதலுதவி
* வயிற்று வலி ஏற்பட்டால் தகுந்த மாத்திரைகளை உட்கொள்ளலாம். வயிற்றுப்புண், மாதவிடாய் உட்பட எல்லா வயிற்று வலிகளுக்கும் பொதுவான முதலுதவி  இது. இந்த மாத்திரை  கிடைக்காவிட்டால், ஒரு கண்ணாடி பாட்டிலில் வெந்நீரை நிரப்பிக்கொண்டு, அதை ஒரு துணியால் சுற்றிக்கொண்டு, வயிற்றில் ஒத்தடம்  தரலாம்.
* மேல் வயிற்றில் வலி உண்டானால், அது இரைப்பைப் புண் அல்லது இரைப்பை அழற்சி காரணமாக இருக்கலாம். இதற்கு அமில நீர்ப்பு மருந்து (எ.கா.  ஜெலுசில், டைஜீன்) அல்லது  அமில எதிர்ப்பு மாத்திரைகளில் (எ.கா. ரேபிபிரசோல், பேன்டபுரசோல்) பயன்படுத்தலாம்.
* மலச்சிக்கல் காரணமாக வயிறு வலித்தால், வயிற்றுவலி மாத்திரையுடன், மலமிளக்கி மாத்திரை (எ.கா. பர்கோளக்ஸ்) ஒன்றை இரவில் சாப்பிட்டுக்  கொள்ளலாம்.
* இரவு நேரத்தில் மட்டும் வயிற்றுவலி வந்தால் அதற்கு குடல்புழு காரணமாகும். இதற்கு குடல்புழு மாத்திரை (எ.கா. அல்பண்டசோல்) சாப்பிடலாம்.
* சிறுநீர் கடுப்புடன் அடிவயிறு அல்லது கீழ்முதுகு வலித்தால், சிறுநீரகக்கல் காரணமாக இருக்கும். இதற்கு வயிற்றுவலி மாத்திரையுடன், 200 மி.லி. தண்ணீரில்  2 கரண்டி ‘சிட்ரால்கா  சிரப்‘ கலந்து குடிக்கலாம். குளிர்ச்சியான பானங்கள் மற்றும் பழரசங்களைக் குடிக்கலாம்.
* இரைப்பை அழற்சி அல்லது செரிமானக்குறைபாடு இருந்தால், வயிற்று வலியுடன் புளித்த ஏப்பம், குமட்டல், வாந்தி, வயிறு உப்புசம் இருக்கும். இதற்கு இளநீர்  அருந்தலாம். ‘எலெ க்ட்ரால்‘ பவுடர், புளிப்பில்லாத மோர், குளிர்ந்த குடிநீர் அல்லது குளிர்ச்சியான பானங்களை அருந்தலாம்.
* வாயு சேர்ந்து வயிறு வலித்தால், ‘சைமத்திக்கோன்‘, ‘சார்க்கோல்‘ மாத்திரைகளில் ஒன்றை சாப்பிடலாம்.



கோடைக்கால வயிற்று வலி 

கோடைக்காலங்களில் பலருக்கு வயிற்று வலி பிரச்னை சற்று அதிகமாக காணப்படும். இவர்கள் கோடைக்காலத்தில் கசப்பு சுவை கொண்ட பொருட்களைக்  குறைவாகவும், கார்ப்பு சுவை  கொண்ட பொருட்களை கொஞ்சம் கூடுதலாகவும் சாப்பிடலாம். பாசிப்பருப்பை வேகவைத்து சுமார் 30 நிமிடங்களுக்குப் பின், சுத்தம் செய்யப்பட்ட அரிசியை போட்டு வேக வைத்து அதில் சிறிய துண்டுகளாக வெட்டிய தாமரை  தண்டை சேர்த்து கஞ்சி  காய்ச்ச வேண்டும்.

இதை மிதமான சூட்டில் சாப்பிட்டு வந்தால் உடலின் வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை ஏற்படுத்தும். வயிற்று  வலி பிரச்னையில் இருந்தும் தப்பிக்கலாம். இளநீர் போன்ற உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்

No comments:

Post a Comment