Wednesday, March 4, 2015

கம்பு கொழுக்கட்டை

கம்பு கொழுக்கட்டை
தேவையானவை:
கம்பு -150 கிராம்.
பாசி பருப்பு -75 கிராம்.
ஒரு சிறிய தேங்காய் மூடி -துருவியது .
கருப்பட்டித்தூள் -125 கிராம்.
ஏலக்காய் -4
செய்முறை
கம்பு தானியத்தை மூழ்குமளவு தண்ணீரில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியவுடன், கைகளால் நன்கு அலசி தண்ணீரை வடிக்கவும். கம்பு தானியத்தில் உள்ள உமி நீங்கும் வரை ( மூன்று அல்லது நான்கு முறை) தண்ணீர் விட்டு அலசவும். தண்ணீரை வடித்த பின், கம்பு தானியத்தை சிறிது நேரம் உலற விடவும். நன்கு உலர்ந்த பின், வாணலியில் போட்டு வறுக்கவும். கம்பு லேசாக சிவக்க துவங்கும். ஒன்றிரண்டு கம்பு பொறிய ஆரம்பிக்கும். அப்போது வறுப்பதை நிறுத்தி, ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஆற விடவும்.
பாசி பருப்பை சிவக்கும் வரை வறுக்கவும். வறுத்த பாசி பருப்பையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.
ஏலக்காயை லேசாக வறுக்கவும்.
வறுத்த கம்பு, பாசி பருப்பு, ஏலக்காய் மூன்றையும் மிக்சியில் போட்டு நன்கு அறைக்கவும்.
அறைத்த மாவுடன் தேங்காய் துருவல், கருப்பட்டித்தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். பத்து நிமிடம் கழித்து மாவை உருண்டைகளாக பிடிக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கருப்பட்டித்தூள் கலந்து பத்து நிமிட நேரத்தில் கருப்பட்டித்தூளிலிருந்து நீர் கசிய துவங்கும். இந்த நீரே உருண்டையாக பிடிக்க போதுமானது.
பிடித்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து, பத்து பதினைந்து நிமிட நேரம் நீராவியில் வேக விடவும்.
சுவையான, ஆரோக்கியமான கம்பு கொழுக்கட்டை தயார்.

No comments:

Post a Comment