நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?
நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம்
உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல்
தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப்
படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு
என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு
என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும்உடல்
உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.
---------------------------------------------
காதில் நுழைந்த பூச்சி..!! எடுப்பது எப்படி.......?
காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும்.
தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும்.
பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும்.
ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் இந்தப் பிரச்சினை ஏற்படுவதுண்டு.
ஜாக்கிரதையாகக் கையாளா விட்டல் ஆபரேஷன் வரை போய் முடியும். எனவே மேற்சொன்னவாறு செயல்படவும்

------------------------------------------------------------------------------------
‘‘காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா?
என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?’’ என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு செய்த சீன அக்குபங்சர் மருத்துவர் சூலின், ‘‘காது குத்துதல் அக்குபங்சர் முறையில் கண்களைப் பாதுகாக்கும் முறை. அதுதான் பெண்களின் கண்களைக் காக்கிறது. மேலும் காதுகளுக்கும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் கூட சம்பந்தம் உண்டு. அதனால்தான் கருப்பையில் முழு வளர்ச்சியடைந்த ஒரு குழந்தையின் வடிவம் எப்படி இருக்குமோ, அதே வடிவத்தில் காதுகள் அமைந்திருக்கின்றன’’ என்கிறார்.
தைவான் மருத்துவக் குழுவும் இந்த முடிவை உறுதி செய்துள்ளது. காது குத்திய பெண்களில் 72 சதவீதத்தினருக்கு நிறக்குருடு, கிட்டப்பார்வை ஆகிய கண் நோய்கள் இல்லையாம். மேலும், அவர்கள் மங்கலான வெளிச்சத்தில் கூட பல்வேறு வண்ணங்களை எளிதில் அடையாளம் காண்கிறார்களாம். ஆகவே, காது குத்துங்க
காது வலி தீர்க்க வீட்டில் இருக்கு மருந்து
காது வலி பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான ஒன்று. இந்த காது வலி பெரும்பாலும் சளி பிடிப்பதால் வரும். மேலும் அதிக இரைச்சல் மற்றும் சிலருக்கு தொண்டையில் ஏற்படும் அழற்சி காரணமாகவும் வரலாம். அப்படி காதுவலி வந்தால் உடனே காதுக்குள் எதையாவது போட்டு நுழைக்க கூடாது.
இதனால் காதுக்குள் கிருமித்தொற்று தான் ஏற்படுமே தவிர சரியாகாது. . காது வலி வந்தால்:
தேங்காய் எண்ணெயை சூடேற்றி அதில் சிறிது உப்பு போட்டு மிதமான சூட்டில் காதில் விட்டால் காதில் இருக்கும் புண் ஆறி வலி குறையும்.
தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி அந்த நீரைக்குடித்தால் காது வலி குறையும்.
தாழம்பூவை நெருப்புத் தணலில் காட்டி கசக்கி சாறு பிழிந்து அதில் சில துளிகளை காதில் விட்டால் காது வலி காதில் தோன்றும் கட்டி ஆகியவை குணமாகும்.
கொஞ்சம் நல் லெண்ணெயில் ஒரு கிராம்பை போட்டு சூடு செய்து பின் அந்த எணணெயை வலி உள்ள காதில் விட்டால் விரைவில் வலி
குறையும்.
சுக்கு, மிளகு, பெருங்காயம் ஆகியவைகளை அரைத்து சிறிதளவு நல்லெண்ணெயுடன் காய்ச்சி அந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் காது இரைச்சலும் அகலும்.
கரிசலாங்கண்ணி சாறு, நெல்லிக்காய் சாறு இரண்டையும் பால் மற்றும் அதிமதுரப்பொடி சேர்த்து தைலம் செய்து தலைக்கு தேய்த்து குளித்து வர காது நோய் குணமாகும்.
-------------------------------------------------------------------------------
தொண்டைப்புண், தொண்டைவலிக்கு
1. சாதம் கொதிக்கும் போது மேலாக எடுத்த கொதிகஞ்சியில் பனங்கல்கண்டு., வெண்ணை அல்லது நெய் சேர்த்துச் சூடாகக்குடிக்கவும்.
2. சின்ன வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வதக்கிப் பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிடவும்.
3. தூது வளைக்கீரையை ஆய்ந்து எடுத்து நெய்யில் வதக்கிச் சாப்பிடவும்.
4. சித்தரத்தை, மல்லி, சுக்கு அல்லது இஞ்சி சேர்த்து வரக்காப்பி குடித்தாலும் தொண்டைக்கு நல்லது.
5. மணத்தக்காளிக் கீரையை, அரிசி கழுவின தண்ணீரில் வேகவைத்து அதில் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், சின்னவெங்காயம் அரிந்து சீரகத்துடன் தாளித்து ஊற்றவும் . இது மணத்தக்காளி மண்டி எனப்படும்.
தொண்டைவலிக்கு கைகண்ட மருந்து.
தொண்டைவலிக்கு கைகண்ட மருந்து.
6. நாமக்கட்டியை வெந்நீரில் இழைத்துத் தொண்டையின் வெளிப்புறம் தடவுவது நல்லது.
7. சுடாக்கிய தேங்காய் எண்ணையில் சூடத்தைப்போட்டு அந்த எண்ணையைத் தொண்டையின் வெளிப்புறம் தடவுவதும் உண்டு.
8. தும்பைப்பூவில் பதினைந்து எடுத்து நல்லெண்ணையில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணையை தலையில் அழுத்தித் தடவுவார்கள்.
9. மணத்தக்காளி இலைகளை ஆய்ந்து எடுத்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால் நிச்சயமாக தொண்டைப்புண் ஆறும்.
No comments:
Post a Comment