Monday, March 30, 2015

முருங்கை Moringa

முருங்கைக் கீரையின் மருத்துவ குணம்

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும், முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய உள்ளன.

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. 

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும். 

மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்றுவலி குணமடைய, சிறிதளவு முருங்கைக்கீரையுடன் சிறிதளவு சீரகம் சேர்த்து இடித்து ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் ஐந்து நாட்கள் சாப்பிடவேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுவலி குணமாகும். பச்சைக் கீரைகளில் எவ்வளவோ எண்ணிலடங்கா பயன்கள் இருக்கின்றன. நாம்தான் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. கீரை வகைகளை உணவோடு சேர்க்கச் சொல்லி சும்மாவா சொன்னார்கள் நம் மூதாதையர்கள்.

முருங்கைக் கீரை சாப்பிட்டால் பெறும் பயன்கள்: 

முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ குணம் கொண்டது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும்.வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மந்தம், உட்சூடு, கண்நோய், பித்தமூர்ச்சை இவற்றை நீக்கும் குணம் படைத்தது முருங்கைக் கீரை. 

இது ஒரு சத்துள்ள காய். உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதன் சுபாவம் சூடு. ஆதலால் சூட்டு உடம்புக்கு ஆகாது. இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்து கட்டி' என்ற 

பெயரும் இருக்கிறது. கோழையை அகற்றும். முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும். இதை நெய் சேர்த்தோ அல்லது புளி சேர்த்தோ சமைப்பது நலம்.

முருங்கைப் பட்டையை நீர்விட்டு அரைத்து வீக்கங் களுக்கும் வாயு தங்கிய இடங்களுக்கும் போடலாம். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கும். அதே வேளையில் சிறுநீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப் படும். தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்த விஷத்துக்கும் நரம்புக் கோளாறுக்கும் இது நல்ல மருந்து. கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் 

முருங்கைக் காய் கை கண்ட மருந்து. 

முருங்கைக் காயை வேக வைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். முருங்கைக் காய் சாம்பார் எல்லோருக்கும் பிடித்த மானதே. இந்த சாம்பார் சுவையானதாக மட்டும் இருந்து விடாமல் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கை காயை உணவாக உபயோகித்தால், ரத்தமும் சிறுநீரும் சுத்தி அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. 


முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது. முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம். 

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை. முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும். முருங்கை இலை சாறுடன் பால் கலந்து குழந்தைகளுக்கு தந்தால்,இரத்த சுத்தியும்,எலும்புகளையும் வலுப்படுத்தும். இதில் கர்ப்பிணிகளுக்கு தேவையான கால்சியம், அயன், வைட்டமின் உள்ளது.

கர்ப்பையின் மந்தத் தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்பட்த்தும்.இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்சளி,சயம் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது. முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது. 


முருங்கை இலைச்சாற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும். முருக்கைகாய் இருதயத்தை வலுப்படுத்துவதுடன்,இருதய நோய்களை போக்கி இரத்தவிருத்தி தாதுவிரித்திசெய்யும். முருங்கை இலை சாறுடன் தேனும், ஒரு கோப்பை இளநீரும் கலந்து பருக மஞ்சகாமாலை, குடலில்ஏற்படும் திருகுவலு, வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.

விதையில் இருந்து என்னை தயாரித்து வாயுப்பிடிப்பு,மூட்டுவலி களில் பயன் படுத்தலாம் முருக்கைவேரில் இருந்து சாறெடுத்து பாலுடன் சேர்த்துப பருகிவர காசநோய் ,கீழ்வாயு, முதுகுவலி குணப்படும்.

வைட்டமின்கள்: 

முருங்கை இலை 100கிராமில் 92 கலோரி உள்ளது. 

ஈரபதம்-75.9% 

புரதம்-6.7% 

கொழுப்பு-1.7% 

தாதுக்கள்-2.3% 

இழைப்பண்டம்-0.9% 

கார்போஹைட்ரேட்கள்-12.5% 

தாதுக்கள்,வைட்டமின்கள், 

கால்சியம்-440 மி,கி 

பாஸ்பரஸ்- 70மி.கி 

அயன்- 7 மி.கி 

வைட்டமின் சி 220 மி.கி 

வைட்மின் பி காம்ப்ளக்ஸ் சிறிய அளவில்.

இத்தனை பயன் உள்ள முருங்கைகீரையை சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாக்கவும்.

+++++++++++++++++++++++++++++++++++++


முருங்கைக்காய்...!!

முடிந்த அளவில் முருங்கைக்காயை வாங்கி, சாம்பார், வறுவல், கூட்டு என்று செய்து சுவைத்து, அதன் ருசியுடன், ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

வலிமையான எலும்புகள் :-
முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதிலும் இதனை ஜூஸாகவோ அல்லது பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தும் :-
முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஆன்டி-பயாடிக் ஏஜென்ட்டாகவும் செயல்படும். அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப் அல்லது ஜூஸ் போட்டு குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.

இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் :-
முருங்கைக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்ட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும்.

சுவாச பிரச்சனைகளை குணமாக்கும் :-
உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வாருங்கள். இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கர்ப்பிணிகளுக்கு நல்லது :-
கர்ப்பிணிகள் முருங்கையை உணவில் சேர்த்து வந்தால், பிரசவம் எளிதாக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாக நடைபெறும். இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் முகிகிய காரணம். மேலம் இதனை பெண்கள் பிரசவத்திற்கு பின் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

நோய்த்தொற்றுகள் :-
முருங்கைக்காயின் இலைகள் மற்றும் பூக்களில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளது. இவை தொண்டை மற்றும் சருமத்தில் ஏற்பட்ட நோய்த்தொற்றுக்களைத் தடுக்கும். மேலும் இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால், இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, ப்ரீ-ராடிக்கல்களால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

செரிமானத்திற்கு உதவும் :-
முருங்கைக்காய் மற்றும் இலைகளில், செரிமானத்திற்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் தான் செரிமான மண்டலத்தில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பை உடைத்து எளிதாக வெளியேற்றும்.

பாலியல் ஆரோக்கியம் :-
முருங்கைக்காயில் ஜிங்க் அதிகம் உள்ளது. இதனை உட்கொண்டால், பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்துத்தள்ளல் போன்றவற்றை குணப்படுத்தி, விந்தணுவின் தரத்தை அதிகரிக்கும்.
----------------------------------------------------------------------
ஏழைகளின் சத்துக்கூடம் முருங்கைக்காய்! முருங்கை மரத்தின் இலை, பூ, காய், விதை என எல்லாமே பயன்படக்கூடியவை. சத்துமிக்கவை. அதனால்தான் வறட்சியைத் தாங்கக்கூடிய மரம் என்பதால் ஆப்பிரிக்காவிலும் தெற்கு ஆசியாவிலும் முருங்கை, ஏழைகளின் உணவில் முக்கிய இடம் வகிக்கின்றது. இதில் கவனிக்கத்தக்க ஒன்று, ஆப்பிரிக்க கண்டத்திலும் ஆசியாவிலும் முருங்கா, முருங்கை என்ற சொற்களாலேயே இது சுட்டப்படுகிறது. இதன் உயிரியல் பெயர் முருங்கா ஓலிஃபேரா. பெளத்த இலக்கண நூலான வீரசோழியம் முருங்கா என்னும் சிங்களச் சொல்லிலிருந்து முருங்கை எனும் சொல் தமிழில் வந்திருப்பதாக சொல்கிறது.
முருங்கைக்காயில் உள்ள முக்கிய சத்துக்கள்
100கிராம் முருங்கைக்காயில் 88.20 கிராம் நீர்ச்சத்து உள்ளது. வறட்சியான பகுதிகளில், அதிக அளவு நீர் தேவைப்படாமல் வளரும் முருங்கையில் அதிகளவு நீர்ச்சத்து பொதிந்துள்ளதை அறிந்துதான் மனிதர்கள் அதை பயன்படுத்த ஆரம்பித்திருக்கக்கூடும். அடுத்து இந்தக் காயில் கார்போஹைட்ரேட் 8.53 கி, புரதம் 2.10கி, நார்ச்சத்து 3.2கி ,கொழுப்பு 0.20 கி அளவில் உள்ளன. இவை தவிர கால்சியம், இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ்,சோடியம், ஜின்க், மக்னீஷியம் போன்ற தனிம சத்துக்களும் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி காம்பளக்ஸ் போன்ற வைட்டமின் சத்துக்களும் அடங்கியுள்ளன.
தமிழர் சமையலில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முருங்கைக்காய் இடம் பிடித்திருக்கின்றது. பழந்தமிழ் இலக்கியங்களில் இந்தக் காய் பற்றிய குறிப்புகள் ஏதும் இல்லை என்பதால் இலக்கிய குறிப்புகளின்படி முருங்கை இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்திருக்கலாம் தற்காலிக முடிவுக்கு வரலாம். எங்கிருந்து வந்திருந்தாலும் முருங்கையில் உள்ள சத்துக்களை குறைத்து மதிப்பிட முடியாது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++

Murungai Kai and Lord Muruga – Origin of Drumstick 


Murungai Kai, Moringa Oleifera or Drumstick, is associated with Lord Muruga. It is the vegetable of Muruga, son of Shiva. Muruga is also known as Skanda, Shanmugham, Subrahmanya and Kartikeya. He is the commander of the army of devas. He is also the most handsome god and associated with virility.

The widespread belief is that Murungai Kai was given to all living beings on earth by Muruga. The vegetable gets its name from Murugan and Kai. Kai means vegetable. It is the vegetable that appeared from the hand of Muruga.

Drumstick has numerous medicinal uses. It is believed that Murungai Kai helps in strengthening of the sexual organs.
++++++++++++++++++++++++++++
Health Benefits Of The Drumstick Plant (Sahjan)

Drumstick plant or Moringa oleifera also known as Sahjan in Hindi is a very common vegetable in India. But most of us are unaware about the amazing health benefits of this plant. It is known all over the world for its nutritious leafy-greens, flower buds, and mineral-rich green fruit pods.

NUTRITIONAL FACTS

-Moringa greens (leaves) are an excellent source of protein. 100 g of fresh raw leaves contain 9.8 g of protein.

-Fresh pods and seeds are rich in oleic acid and vitamin C.

-It is and one of the richest source of  vitamin A.

-The greens as well as pods also contain good amounts of many vital B-complex vitamins such as folates, vitamin B6 (pyridoxine), thiamine (vitamin B-1),   riboflavin, pantothenic acid, and niacin.

-The greens (leaves) are one of the finest sources of minerals like calcium, iron, copper, manganese, zinc, selenium, and magnesium.

HEALTH BENEFITS

Here are some of the surprising  health benefits of this plant:

1 . Regulates Blood Sugar Levels

Drumstick contains 18 amino acids which helps in treating many diseases. One important use is its anti-diabetic property. The methanol extract of leaves of Moringa oleifera was evaluated for its anti- diabetic efficacy. Use it in your regular vegetable soups to gain its benefits.

2 . Relieves Joint Pains

Charaka has also mentioned it as a plant source for oil. Due to its medicinal benefits and analgesic effects, Moringa is the primary ingredient in many Ayurvedic pain relief oils.

3 . Boosts Memory And Concentration

The presence of glutamic acid in drumsticks helps to prevent ammonia intoxication. It is also an active neurotransmitter substance which in turns helps your memory and learning capabilities. Add drumstick to your dals so that the necessary nutrients flow into the dal while boiling.

4 . Improves Fertility

Moringa can also prove beneficial in improving fertility. Recent research suggests that regular use of moringa is known to boost the sperm count and improve the quality of sperm in males. It also acts as a neurotransmitter and is involved in hormone production. Use moringa leaves in your mint or coriander chutney and add some garlic for the flavor.

5 . Helps Clear Acne

Moringa is known for its purifying properties. The moringa leaf extract and oil can treat severe acne. The oil purifies the skin and helps to rejuvenate it. Moringa can be had with your regular vegetables as a simple gravy dish cooked with mustard sauce.

6 . Promotes Tissue Growth 

Moringa is beneficial for infants and adults alike. It contains Histidine which is used to form histamine a neurological compound released during allergic responses.  It is used for growth and for the repair of tissue.

7 . Kills Intestinal Worms

The flowers of moringa help to get rid of any worms that may be present in the intestine. You can make delicious pakoras with the drumstick flowers and enjoy with any sauce of your choice.

8 . Aids In Healthy Pregnancy

The drumsticks are packed with proteins, vitamins, minerals, anti- oxidants and all these nutrients that are vital for the growing baby.


In Sanskrit, this plant is known as Shobhanjana which means a very auspicious tree. So, go ahead and add this vegetable in your dietary regimen and reap the countless health benefits that it has to offer.


No comments:

Post a Comment