மனிதனை இயற்கையின் ஓர் ஒப்பற்ற படைப்பு எனலாம். மனித உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் தன்மையும், நோய்களைத் தானே குணமாக்கிக் கொள்ளும் சிறப்பும் கொண்டது. நம் உடலில் உள்ள ஓர் அற்புதமான ஜீவசக்தி எல்லாச் செயல்பாடுகளையும் இம்மி தவறாத கணிப்புடன் இயங்கச் செய்து உடலை எப்போதும் சமநிலையில் வைத்திருக்கிறது. இந்த ஜீவசக்தி நம் உடலின் சிறந்த ஒரு பாதுகாப்பு அரணாகவும், நோயை எதிர்த்துப் போரிடும் பாதுகாவலனாகவும் திகழ்கிறது. இதற்குச் சில எடுத்துக்காட்டுகளைப் பார்போம்.
நமது கண்ணில் தூசி விழுந்து விடுகிறது. உடனே கண்ணில் நீர் சுரக்க ஆரம்பித்து அந்த தூசி வெளியேறி விடுகிறது. அளவுக்கு அதிகமாகவோ, உடலுக்குத் தேவையற்ற ஒன்றையோ விழுங்கி விடுகிறோம். உடலின் பாதுகாவலனான இந்த ஜீவசக்தி உடனே செயல்பட்டு குமட்டலையும், வாந்தியையும் உண்டாக்கி, தீங்கு விளைவிக்கக் கூடிய உணவுப் பொருட்களை வெளியேற்றி விடுகிறது.
தவறான உணவு முறைகளாலும், பழக்க வழக்கங்களினாலும் இந்த ஜீவசக்தி செயலிழந்து போகும் தன்மையுடையது. உடலின் ஒரே பாதுகாப்பு அரண் செயலிழந்து விடுவதால் பல நோய்கள் உடலில் குடிபுக ஆரம்பிக்கின்றன. ஆகவே இந்த ஜீவசக்தியின் வலு விழந்த தன்மையே நோயாகிறது. இதற்கு மூலகாரணம் உடலில் இருந்து வெளியேறாது தேங்கிக்கிடக்கும் கழிவுப் பொருட்களும் அதனால் உருவாகிய நச்சுப் பொருட்களுமாகும்.
இந்தத் தேவையற்ற கழிவுகளின் தன்மை யைப் பொறுத்தும், அவைதேங்கி நிற்கும் உறுப்பைப் பொறுத்தும் நோயின் தன்மை மாறுகிறது. நச்சுப் பொருட்கள் முழங்கால் கணுக்கால் போன்ற இடங்களில் தேங்கினால் அது கீல்வாதம் எனப்படுகிறது. அடிவயிற்றுப் பகுதியில் கழிவு நீர் அதிகமாகச் சேருமாயின்அது மகோதரம் என்னும் பெருவயிறு நோயாகிறது. நுரையீரலில் சளி மற்றும் நீர் அதிகமானால், அது இருமலாகவோ, இளைப்பு நோயாகவோ உருவாகிறது. இவ்வாறு உடலின் பல பாகங்களில் தேங்கிக்கிடக்கும் கழிவு மற்றும் நச்சுப் பொருட் களை வெளியேற்றி விட்டால், ஜீவசக்தி வலுப் பெற்று உடல் நலம் பெறுகிறது.
நோய்க்குக் காரணம் உடலில் தேங்கி யிருக்கும் தேவையற்ற கழிவுகளும் நச்சுப் பொருளுமே காரணமென்றால் நுண்கிருமிகளால் தான் நோய்கள் தோன்றுகின்றன என்றும் அவற்றை அழித்தால்தான் நோய்கள் குணமாகும் என்று அறிவியலாளர் கூறுகின்றனரே. இது எவ்வாறு சாத்தியமாகும்? இதுவொரு நியாயமான சந்தேகம். எத்தனையோ வகையான நுண்கிருமிகள் (வைரஸ்) நம் உடலுக்கு உள்ளும் வெளியிலும் காற்றிலும் நீரிலும், ஏன் இந்தப் பூமி எங்கும் நிறைந்திருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் கிருமிகள்தான். காற்று மண்டலம் முழுவதும் நுண்கிருமிகள்தான். இது முற்றிலும் உண்மைதான். ஆனால் இவைகள் தான் நோய்களுக்குக் காரணம் என்று சொல்வதுதான் தவறு. அது எப்படி என்று பார்ப்போம்.
நாம் ஒரு நாளைக்கு 21,000 தடவைகள் நுண்கிருமிகள் உள்ள காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அப்படியானால் நாம் எல்லோரும் அல்லவா நோய்வாய்ப்பட வேண்டும்? இல்லையே. அது ஏன்? ஏனெனில் நுண்கிருமிகள் நோய்களை உண்டாக்கும் காரணிகள் அல்ல. அதுமட்டுமல்ல, பல மருத்துவ நிபுணர்கள் தங்களின் ஆய்வின் மூலம் நோய்களுக்கு மூலகாரணம் நுண்கிருமிகள் என்பது தவறு என்று நிரூபித்தும் உள்ளனர். டாக்டர். வாட்கின்ஸ் என்பவர் இளைப்பு நோய் (டி.பி.) பற்றி பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து இரத்தத்தின் மூலம் நோய் அறிதல் என்ற ஓர் ஆய்வு நூலை வெளியிட்டார். அதில் நோய் தோன்றுவதற்கு முன் நுண்கிருமிகள் காணப்படும் என்ற கூற்றுக்கு ஆதாரமே இல்லை என்று அடித்துக் கூறுகிறார். ஜான்ஸம் ரேசர் என்பவர் கனடாவில் புகழ்பெற்ற மருத்துவர். இவர் நுண்கிருமிகள் நோய்களுக்குக் காரணமா? என்ற ஓர் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளார். அதில் நோய் தோன்றிய பின்புதான் கிருமிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன என்பதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளார்.
1941ல் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளரான டாக்டர் ஹண்டர் என்பவரும் மற்றும் சில நிபுணர்களும் சேர்ந்து நுண்கிருமிகள் நோய்க்குக் காரணம் அல்ல என்பதை நேரடியான சோதனைகள் மூலம் நிரூபித்துக்காட்டியுள்ளனர்
இன்னொரு ஆய்வு, இதனை நடத்தியவர் வியன்னா பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவப் பேராசிரியர் டாக்டர் பாடின்காஃபர். இவர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நுண்கிருமிகள் பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஒரு கண்ணாடிக் குவளையில் நீரை ஊற்றினார், பரிசோதனைச் சாலையில் இருந்து கொண்டுவரப்பட்ட இலட்சக்கணக்கான காலராக் கிருமிகளை அந்த நீரில் கலந்தார். மாணவர்கள் எல்லோரும் திகைத்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த நீர் முழுவதையும் மடக்மடக்கென குடித்து விட்டார். பல நாட்கள் கடந்த நிலையிலும் அவர் காலராவால் பாதிக்கப்படவில்லை.
இந்தச் சோதனைகள் மூலம் நமக்கு விளங்கு வது என்ன? நுண்கிருமிகள் ஒரு போதும் நோய்கள் உண்டாகக் காரணமாக அமைவ தில்லை. ஓர் ஆரோக்கியமான உடலினுள் அவை வாழ முடிவதில்லை. ஆனால், கழிவு மற்றும் நச்சுப் பொருட்கள் நிறைந்த ஜீவசக்தி வலு இழந்துள்ள - உடம்பினுள் கிருமிகள் பல்கிப் பெருகுகின்றன. ஆகவே, நோய் உண்டாக அடிப்படையான காரணம் உடலினுள் சேர்ந்துள்ள கழிவு மற்றும் நச்சுப் பொருட்களின் தேக்கமே. இதனால் உண்டான விளைவுதான் நுண்கிருமிகள். எனவே, ஒரு நோயைக் குணமாக்க வேண்டுமென்றால், உடம்பில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றி ஜீவசக்தியை வலுவுள்ளதாக்கவேண்டும்.
இதை விட்டுவிட்டு அந்தக் கிருமிகளைக் கொல்லக்கூடிய மருந்துகளை விழுங்குவதால் உடலில் மேலும் ரசாய கழிவுகள் தேங்குகின்றன. இதனால் மற்றும் ஒரு புதிய முறையில் உடல் [உயிர்-ஜீவசக்தி] அந்த கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கிறது. இப்போது உடலில் முன்பைவிட சற்று கூடுதலான தொந்தரவு தோன்றுகிறது. இப்போதும் பல டெஸ்ட்கள் எடுத்து பார்த்துவிட்டு இதற்கும் ஒரு கிருமிதான் காரணம் ஆனால் அதற்கு வேறு ஒரு புதிய பெயர் என்று மருத்துவம் இன்று பல புதிய நோய்களை உருவாக்கி வருவது வேதனையான விஷயம்.
“ஒரு நோயை குணபடுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் வைத்தியத்தின் மூலம் மேலும் மேலும் மோசமாகிவிடாதீர்கள்” என்பது ஆங்கில மருத்துவத்தின் தந்தை டாக்டர்.ஹிப்போக்ரேட்டிஸ் மருத்துவர்களுக்கு கூறும் அறிவுரைகளில் மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஆங்கில மருத்துவமோ தங்கள் செயல்முறையில் அறியாமலேயே பெரும் தவறிழைத்து கொண்டிருகிறது.
இயற்கை மருத்துவ முறைகளே ஜீவசக்தியை வலுப்பெற செய்யும் என்பதனை நாம் புரியாதவரை இது போன்ற ஏமாற்று வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.
இதற்கு எடுத்துகாட்டு, இன்று டிவி ஐ போட்டாலே சாதாரண பேஸ்ட் முதல்கொண்டு சீப்பு, சோப்பு, பவுடர், ஷாம்பூ, மற்றும் அன்றாடம் நாம் உபயோகிக்கும் பொருட்களை விற்க கூட இந்த கிருமிகள் மிகவும் பேருதவியாக உள்ளது. இவர்களுக்கு முதலீடே பணம் அல்ல கிருமிகள் தான். இன்று சாதாரண பொருட்களை விற்க கூட மருத்துவரின் வெள்ளை கோட்டு இல்லாமல் ஒரு விளம்பரமும் வருவதில்லை. என்று நாம் கிருமிகள் என்பது வெறும் கட்டுக்கதை என்பதனை புரிகின்றோமோ அன்றுதான் நமக்கு உண்மையான உடலின் இயக்கத்தில் நம்பிக்கை வரும். அன்றே உடல் தன்னை தானே குணப்படுத்தும் என்பதில் நம்பிக்கை வரும். அன்று தான் இது போன்ற ஏமாற்று வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அன்று நம்மால் சும்மா இருக்க முடியாது. மற்றவர்களுக்கும் இதனை புரியவைக்க முயற்சிப்போம். அதை தான் நான் செய்துகொண்டுள்ளேன். புரிந்தால் நீங்களும் நிச்சயம் இதைதான் செய்வீர்கள்.
மேலும் கிருமிகள் பற்றிய முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் பற்றி அறிய... கீழ் உள்ள “உடலின் மொழி” என்ற புத்தகத்தில் அத்யாயம் 13 கதை கதையாம் காரணமாம் மற்றும் அத்யாயம் 14 சான்றோர்களும் சான்றுகளும் என்ற இந்த இரு அத்யாயங்களிலும் தெளிவான விளக்கங்கள் உள்ளன. படித்து பிடித்தால் மற்றவர்களுக்கும் கூறுங்கள்.
கீழ் உள்ள லிங்கில் சென்று “உடலின் மொழி” புத்தகத்தை டவுன்லோட் செய்து கொள்ளலாம். நன்றி.
http://rkacu.blogspot.in/
NEW UPDATE :
இவை மற்றும் அல்ல, சில வருடங்கள் முன்பு வரை மருத்துவர்கள் உபயோகித்த syringe மற்றும் ஊசிகள் சுடும் நீரில் போட்டு எடுத்து மீண்டும் உபயோகிக்கும் முறையை கடைபிடித்தார்கள் அப்போது எந்த நோயும் பரவியதாக தெரியவில்லை. இன்று disposable syringes தான் பயன்படுத்தபடுகிறது இதனை மாற்ற இவர்கள் கூறியது ஊசிகள் மூலம் நோய் பரவும் என்று.. ஆனால் இன்றோ அப்படி நோய் பரவாது என்றும் இதே மருத்துவம்தான் கூறுகிறது. இதற்கு இடையில் ஒரு வியாபாரம் நடந்து உள்ளது. பலருக்கும் ஒரே syringe மற்றும் ஊசிகள் பயன்படுத்துவதால் லாபம் வருமா அல்லது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயன்படுத்தினால் லாபம் வருமா...? இந்த வியாபாரத்தில் கூட்டு சேர்ந்த வெளிநாட்டு மருந்து கம்பெனி DISPOVAN, இவர்கள்தான் இன்று அதிக அளவில் disposable syringes தயாரிக்கும் கம்பெனி. மருத்துவம் எப்படி வியாபாரமாக மாறிவருகிறது பாருங்கள்.
இதற்கு மற்றும் ஒரு எடுத்துகாட்டு, சில வருடங்கள் முன்பு வரை ஷேவ் செய்ய உபயோகித்து வந்த Blades இன்று எப்படி மாறி உள்ளது என்று பாருங்கள். நமக்கே தெரியும் சில வருடங்கள் முன்பு வரை ஒரு கத்தி மட்டுமே இருக்கும், அதனை சிறிய கல்லை கொண்டு தீட்டி அதில்தான் அனைவருக்கும் ஷேவ் செய்வார்கள். அப்போது நோய்கள் எவ்வளவு இருந்தது என்றும் இன்றோ அவை எப்படி பெருத்து உள்ளது என்றும் உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஆனால் இன்றோ நாம் உபயோகிக்கும் Single Use Razors தான் தங்கள் ஆதிக்கத்தை கொண்டுள்ளது. இது வர காரணமாக சொல்லப்பட்டதும் இதே கிருமிகள் தான். ஆனால் இன்று மருத்துவம் சொல்கிறது Bladeகள் மூலம் எல்லாம் கிருமிகள் பரவாது என்று. ஆனால் இன்னும் நம் பயம் மாறவில்லை. இடையில் லாபம் அடைந்ததும் ஒரு வெளிநாட்டு கம்பெனி தான் அது இந்தியாவில் இருந்த அனைத்து கம்பெனிகளையும் ஒழித்துவிட்டு இன்று முதல் இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் Gillette.
இவற்றை எல்லாம் பார்த்தால் எந்த ஒரு வெளிநாட்டு பொருளையும் இந்தியாவில் விற்க மருத்துவத்துறை மிக பெரிய பக்கபலமாக இருப்பது கண்கூடாக நிரூபிக்கபடுகிறது. இது போல் மக்கள் கண்களில் இருந்து மறைக்கப்படும் விஷயங்கள் பல பல உள்ளன அவற்றை எல்லாம் மக்கள் கண் முன் வெளிச்சம் போட்டு காட்டுவதே என்ன கடமை.
No comments:
Post a Comment