தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால்
பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்
நெல்லிக்காயின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான்
தெரிய வேண்டுமென்பதில்லை. மேலும் நெல்லிக்காயை எந்த
வடிவில் எடுத்தால், அது கொடுக்கும் நன்மைகளுக்கு மட்டும்
அளவே இல்லை. அதில் பலருக்கும் நெல்லிக்காய் ஜூஸ்,
நெல்லிக்காய் பொடி பற்றி தெரியும். ஆனால் நெல்லிக்காய்
பாக்கு குறித்து தெரியுமா?
ஆம், நெல்லிக்காய் பாக்கு என்பது வெயிலில் உலர்த்தியது. இந்த
ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய்
பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு
கிடைக்கும்.
கர்ப்ப கால குமட்டல் :-
கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவானது தான்.
இத்தகைய குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த
நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன்
சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.
செரிமானம் :-
செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள்,
கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு
உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று
விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.
நெஞ்செரிச்சல் :-
அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உட்கொண்டால்
நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும். நீங்கள்
அம்மாதிரியான பிரச்சனை கொண்டவராயின், உணவு
உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை
உட்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் சீராக
நடைபெறுவதோடு, செரிமான பிரச்சனையால் ஏற்படும்
குமட்டல் அல்லது வாந்தியில் இருந்து நிவாரணம் தரும்.
வயிற்று வலி :-
நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்
பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள
டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து
உடனடி நிவாரணம் தரும்.
வாய் துர்நாற்றம் :-
உங்கள் வாய் கப்பு அடிக்குமா? அதைத் தடுக்க ஒரு துண்டு
உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள்.
இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள்,
பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும்,
துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.
நோயெதிர்ப்பு சக்தி:-
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-
ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும்
தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு
வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின்
தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.
நெல்லி பாக்கு தயாரிப்பது எப்படி?
1/2 கப் நெல்லிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 1/2
டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை ஒரு
தட்டில் வைத்து, வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்தி, பின்
காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்
+++++++++++++++++++++++++++++++++++++++
நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்
ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.
பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.
இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.
ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.
நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.

+++++++++++++++++++++
கண்நோய்களை விரட்டும் நெல்லிக்காய்
தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானது தான் நெல்லிமரம் என்று கூறப்படுகிறது. இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாம். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது.
தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வட நாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும். பல மருத்துவக் குணங்கள் இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள்.
தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய் செய்யவும், சிறியதை ஆயுர்வேத மருந்துகள், லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்றுநோய்கள் அண்டாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும். நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும்.
கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான்
பயன்படுத்துகிறார்கள்.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.

--------------------------------------------------------------
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய்,
1.25 கிலோ வெல்லம்,
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். மருத்துவ பயன்கள்: வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
No comments:
Post a Comment