ஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி
செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம்.
ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் செயல்களை மேற்கொள்கிறது-. நினைவாற்றலை மேம்படுத்தும், செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர் கொழுப்பை குறைக்கிறது. செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.
பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
மாதவிடாய் கோளாறு உள்ள பெண்கள் செம்பருத்திப்பூக்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் பிரச்னைகள் தீருவதோடு கர்ப்ப்ப்பை குறைபாடுகள் சரியாகும். செம்பருத்திப்பூக்களை தலைக்குத் தேய்க்கும் சீயக்காய் பொடியுடன் சேர்த்துப் பயன்படுத்தினால், பொடுகு, முடி உதிர்வு, இளநரை போனாற பிரச்னைகள் சரியாகும். காயவைத்த செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, பயத்தம்பருப்பு, கறிவேப்பிலை அனைத்தையும் பொடியாக்கி சோப்புக்கு பதிலாக தலை முதல் கால் வரை பூசி குளித்து வர, தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்
No comments:
Post a Comment