Wednesday, March 4, 2015

பூசணி

பூசணிக்காய்:
பூசணிக்காயில் மருத்துவக்குணங்கள் அதிகம் உள்ளதால் சித்தம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
தேவையான பொருள்கள்:
பூசணிக்காய் – 3.500 கிராம்
நெய் – 500 கிராம்
கற்கண்டு – 70 கிராம்
திப்பிலி – 70 கிராம்
சுக்கு – 70 கிராம்
சீரகம் – 70 கிராம்
இலவங்கப்பட்டை – 20 கிராம்
ஏலரிசி- 20 கிராம்
பச்சிலை – 20 கிராம்
மிளகு – 20 கிராம்
தனியா – 20 கிராம்
செய்முறை:
பூசணிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.
பின் மிக்சியில் நன்கு அரைத்து நீரை வடிகட்டி கொள்ள வேண்டும். நீரையும், பூசணி சக்கையையும் தனித்தனியே பிரித்துக்கொள்ள வேண்டும்.
பின் பூசணி சக்கையை 500 கிராம் நெய்யில் மொறமொறப்பாகும்படி வறுத்து எடுக்க வேண்டும்.
நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
பூசணிக்காய் பிழிந்த சாற்றில்  கல்கண்டு சேர்த்து பாகுபாதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். இதனுடன் பூசணிக்காய் தூளை சேர்த்து கிண்ட வேண்டும்.
நன்கு சேர்த்து கிண்டியபின் திப்பிலி, சுக்கு, சீரகம், இலவங்கப்பட்டை, ஏலரிசிஆகியவற்றுடன் பச்சிலை, தனியா, மிளகு ஆகியவற்றின் பொடியை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் நெய்யையும் இதனுடன் சேர்த்து எல்லா பொருள்களும் ஒன்றாக சேரும்படி  மீண்டும் கிண்ட வேண்டும்.
இதனை தினமும் காலையில் 10 கிராம் அளவு எடுத்து இரண்டு அல்லது நான்கு வேளை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் குணமாகும்.
மருத்துவக்குணங்கள்:
பூசணிக்காய் லேகியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த பித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதயநோய் மற்றும் இருமல் ஆகியவை குணமாகும்.
மேலும் மஞ்சள் காமாலை, இரத்த சோகை,  எலும்புருக்கி, அஸ்தி வெட்டை , பிரமேகம் ஆகியவற்றை குணமாக்கும் மற்றும் உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஆகும்.
குறிப்பு:

மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் இவற்றை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இவற்றை அதிகம் சாப்பிட்டால் பித்தத்தை அதிகப்படுத்தி நெஞ்செரிப்பு ஏற்படும். வயிற்றில் புளிப்பு ஏற்பட்டு வயிற்று வலி வயிற்றுபோக்கு  ஏற்படும்.

வெள்ளைப் பூசணி
சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வெள்ளைப் பூசணி
உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே.
ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து.

‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும்.
பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது.
கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது.
100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைட்ரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது.

No comments:

Post a Comment