இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
+++++++++++++++++++++++++++++++++
கற்றாழைப் பச்சடி
+++++++++++++++++++++++++++++++++
கற்றாழைப் பச்சடி
தேவையானவை:
கற்றாழை 1 மடல் (பெரியது)
அச்சு வெல்லம் 2
காய்ந்த மிளகாய் 2
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிதளவு
அச்சு வெல்லம் 2
காய்ந்த மிளகாய் 2
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிதளவு
செய்முறை:
கற்றாழையைத் தோல் சீவி, தண்ணீரில் நன்றாக அலசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அச்சு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வைக்கவும். வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, நறுக்கி வைத்துள்ள கற்றாழைத் துண்டுகளைச் சேர்க்கவும். வெந்ததும் வெல்லக் கரைசலைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும். சுண்டக் காய்ச்சி இறக்கவும். இது உடலுக்கு வலுவூட்டி, இளமையைத் தக்கவைக்கும் உணவு.
கற்றாழைப் பச்சடியை பிரெட், சப்பாத்தி இவற்றுடன் ஜாம் போன்று சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
நன்றி: திருமதி. ராஜபுஷ்பா
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை
மருந்து ...!!
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும்
ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து
பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு
இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு
உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை
கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம்
இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால்
அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி
விடும்.
அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும்,
உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண்
முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு
எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில்
நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr
ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக
பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து
குணமடைந்துள்ளனர்.www.facebook.com/puradsifm
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும்
சோற்று கற்றாழை ஆகும் .
**சோற்று கற்றாழை 400 கிராம்
**சுத்தமான தேன் 500 கிராம்
**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
------------------------
------------------------
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி
கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான
துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக
கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும்
whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க
வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்
----------------------------------------------
----------------------------------------------
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை
பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து
வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண
வேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும்.
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம்
கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத
இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது
சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்.....
சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.
ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.
அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!
அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.
உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.
எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!
அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.
ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!
முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும் எளிமையான முறையைப் பார்ப்போம்!.....
இது சோற்றுக் கற்றாழை .......
வெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்.....
அது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட நிலையில்.....
சிறு சிறு கீற்றுக்களாக்குதல்.....
மேல்தோல் நீக்கப்படுதல்......
குழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும்.
நீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....
அதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....
கசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்!....
No comments:
Post a Comment