பசியின்மை, குடல் பூச்சிகள் !!!
❖ குழந்தைகள் குடல் பகுதியில் அழுக்குகள் மற்றும் குடல் புழுக்கள் அதிகம் இருந்தால் குழந்தைகள் உடல் மெலிந்து காணப்படும். பசி எடுக்காது. ஆசன வாயிலில் குடைச்சல் அதிகம் இருக்கும். அதற்கு குப்பைமேனி வேர் 10 எடுத்து நன்கு சுத்தமாக தண்ணீரில் கழுவி, 2 டம்ளர் தண்ணீரில் போட்டு 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு வடிகட்டி தண்ணீரை குழந்தைகள் குடித்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் செத்து மலம் கழிக்கும் போது வெள்ளையாக வெளியே வந்து விடும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.
❖ பெரியவர்கள் : 30 குப்பைமேனி 3 டம்ளர் தண்ணீரில் கலந்து 1/2 டம்ளர் அளவுக்கு நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு தெளிந்த நீரை குடிக்கவும். வருடம் ஒருமுறை குடித்தால் போதுமானது.
No comments:
Post a Comment