Sunday, February 15, 2015

வைத்திய குறிப்புகள் 1

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-

================================================


இளமைக்கு வழிகள்!யாராவது உங்களை 'அங்கிள்’ என்றோ 'ஆன்ட்டி’ என்றோ கூப்பிட்டால், நீங்கள் வருத்தப்படத் தொடங்குகிறீர்களா? ஆண்டொன்று போனால் வயதொன்று போகும். ஆனாலும் வயதாவதை ஒப்புக்கொள்ளாமல் மனசு மல்லுக்கட்டும். ''சான்ஸே இல்லை, அன்னைக்குப் பார்த்த மாதிரியே நதியா இன்னைக்கும் இருக்காங்க' என்று பெருமூச்சுவிடாத பெண்களோ, ''சரத்குமாருக்கு 60 வயசு ஆச்சாம். எப்படிய்யா உடம்பை மெயின்டெய்ன் பண்றாரு' என்று பொறாமையோடு புலம்பாத ஆண்களோ இருக்கிறார்களா என்ன?
அவர்களுக்காக மூப்பைத் தள்ளிப் போட முத்தான டிப்ஸ்களை அள்ளி வழங்குகிறார் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துக் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் வாழ்வியல்கலை நிபுணருமான டாக்டர் எஸ்.டி.வெங்கடேஸ்வரன்.
1 'ஆன்ட்டி ஏஜிங்’ என்றாலே 'ஆன்டிஆக்ஸிடன்ட்’தான் நினைவுக்கு வரவேண்டும்.  வைட்டமின் ஏ (பீட்டா கரோட்டின்), சி மற்றும் இ, துத்தநாகம், செலினியம் இவை அனைத்தையுமே ஆன்டிஆக்ஸிடன்ட் என்கிறது நவீன அறிவியல். இந்தச் சத்துக்கள் நிரம்பிய காய்கள், பழங்கள், தானியங்களை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் முதுமையை இன்னும் கொஞ்சம் தள்ளிப்போடலாம்.
2 நெல்லிக்காயில்தான் வைட்டமின் சி அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காய், தேனில் ஊறவைத்த சிறு துண்டு இஞ்சியை எடுத்துக்கொள்ளுங்கள்.
3 மிளகு சேர்த்துச் சமைத்த பொன்னாங்கண்ணிக் கீரை கண்களைப் பாதுகாப்பதுடன் மேனியைப் பளபளப்பாக வைத்திருக்கும்.
4மணத்தக்காளிக் கீரை, வயிற்றுப் புண் போக்கி, ஜீரணத்தைச் சீராக்கும். கரிசலாங்கண்ணிக் கீரை, வயதானால் தோலில் தோன்றும் வெண்புள்ளிகள், தேமல் போன்றவற்றைப் போக்கி, மூப்பைக் குறைக்கும்.
5காலையில் வெறும் வயிற்றில் வெண்பூசணிச் சாறு குடிக்கலாம். உடல் எடை மற்றும் உடல் சூட்டைக் குறைக்கும். அசிடிட்டி பிரச்னை போயே போச்சு!  
6 ஆண்களுக்கு வயது அதிகரிக்கும்போது, 'ப்ராஸ்டேட்’ சுரப்பி வீக்கமடையும். அவர்கள், சுரைக்காயை, பூண்டு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், மிகவும் நல்லது.
7 ''மேலே சொன்ன எதையுமே என்னால் வாங்கிச் செய்து சாப்பிட முடியாது'' என்பவர்கள், திரிபலாசூரணம் சாப்பிடலாம். நாட்டுமருந்துக் கடைகளில் கிடைக்கும் இந்த சூரணத்தை முதல் நாள் இரவே ஒரு மண் குவளையில் 2 டீஸ்பூன்  போட்டு, தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும், காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை அருந்த வேண்டும். இது நரையைத் தடுக்கும். மலச்சிக்கல் தீரும். சரும நோய்கள் சரியாகும்.  
8 ஒவ்வொரு வேளை உணவுடனும் ஒரு பச்சை நிறக் காய் அல்லது கனியைக் கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும். மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறக் காய் அல்லது பழத்தைச் சாப்பிடுவது கூடுதல் நலம்.
9 நடுத்தர வயதில், தோல் பராமரிப்புக்குக் கண்டிப்பாக வைட்டமின் இ தேவை. முளைகட்டிய தானியங்கள், பாதம், பிஸ்தா போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வேர்க்கடலை சாப்பிட்டால், இளமை உங்கள் கைவசம்.
10   அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு செலினியம், துத்தநாகம் எளிதில் கிடைத்துவிடும். சைவம் சாப்பிடுபவர்கள் அதற்கு மாற்றாக எள் மற்றும் கொட்டைப் பருப்பு வகைகளைச் சேர்த்துக்கொள்ளலாம்.  
11 வெற்றிலையில் குரோமியம் மிக அதிக அளவில் உள்ளது. தினமும் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட வேண்டும். இளமையைத் தக்கவைப்பதுடன், சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
12 சுத்திகரிக்கப்படாத நல்லெண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் கடுகு எண்ணெய் மட்டுமே நல்லது. மற்ற எண்ணெய்களுக்கு கூடிய விரைவில் குட்பை சொல்லுங்கள்.
13 காலையில் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டாம். தினமும், ஒரு மணி நேரத்துக்கு ஒரு டம்ளர் என்ற அளவில் குடித்தாலே போதுமானது.
14 முகம் கழுவியதும் அல்லது குளித்ததும் டவல் அல்லது கைக்குட்டையால், மேலிருந்து கீழ்நோக்கி அழுந்தத் துடைக்கக் கூடாது. வயது ஏற ஏற, நம் சருமம் தளர ஆரம்பிக்கிறது. அதை, நாமும் அழுத்தினால், சீக்கிரமே முகம் தொங்கிவிடும். எப்போதுமே, முகம் கழுவிய பின் ஒற்றி எடுப்பதுதான் சிறந்தது. இல்லையெனில், அப்படியே விட்டுவிடலாம்.
15   குளிக்கும்போது, சோப்பைக் கைகளில் தேய்த்துக்கொண்டு, அந்த நுரையை உடல், முகம், கை, கால்களில் கீழிருந்து மேல்நோக்கித் தடவ வேண்டும். சோப்புக்குப் பதில் கடலைமாவு, பயத்தமாவு போட்டால், இன்னும் நல்லது. இவற்றில் எண்ணெய்த்தன்மை இருப்பதால், முகத்தில் வறட்சி நீங்கி, பளபளப்பு கிடைக்கும்.
16 வாரம் ஒருமுறை நல்லெண்ணெய்க் குளியல் அவசியம். தலைக்கு சீயக்காய்த்தூள் உபயோகிப்பதும், வயோதிகத்தைத் தள்ளிப்போடும் செயல்தான். வறட்சி, பொடுகு போன்ற பிரச்னைகளால் முடி உதிராது. நரையும் ஏற்படாது.
17 செம்பருத்தி இலை அல்லது பூவை அரைத்து, கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வறட்சி நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.
18  கண்களைச் சுற்றிக் கருவளையம் இருக்கிறதா? உருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். நாளடைவில் கருமை குறையும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்கள் இருந்தால் போதும். கண்களைச் சுற்றி எந்த க்ரீமையும் தேய்ப்பது கூடவே கூடாது. அழகு அல்லது சிவப்பு நிறத்துக்காக 'ஃபேர்னெஸ் க்ரீம்’களை வாங்கிப் பூசுபவர்களுக்கு, தோல் சுருக்கம் அதிகமாகும் அபாயம் இருக்கிறது.
19   தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். அதில், முதல் இடம் பிராணாயாமத்துக்குத் தான்.  ஹார்மோன் செயல்பாடுகளைச் சீராக்க, பிராணாயாமத்தைவிடச் சிறந்த மருத்துவம் இல்லை.
20 தகுந்த ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுச் செய்யும் நாடிசுத்தி பிராணாயாமம், சீத்காரி மற்றும் சீதளி போன்ற பிராணாயாமப் பயிற்சிகள், மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்றம் போன்றவற்றுக்கு நல்ல மருந்து.
21 உடல் 'ரிலாக்ஸேஷனு’க்கு சவாசனம், மக்ராசனம் போன்ற யோகப் பயிற்சிகள் மிகச் சிறந்தவை. அலுவலகத்திலிருந்து வந்ததும், கை, கால்களைத் தளர்த்தி, சவாசனத்தில் படுத்து எழுந்தால், அழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் தியானம் இளமையைத் தக்கவைக்கும்.
22 யோகாசனம் செய்ய முடியாதவர்கள், நீச்சல் பயிற்சி அல்லது நடைப்பயிற்சியாவது செய்ய வேண்டும். அந்தப் பயிற்சியை, 'கடனே’ என்று செய்யாமல் ரசித்து, அனுபவித்துச் செய்தால் பலன் இன்னும் அதிகம்.
23 இஸ்லாமியர்கள் தொழுகையின்போது கால்களை மடக்கி அமரும் நிலைதான் வஜ்ராசனம். 'வஜ்ரம்’ என்றால் வைரம் என்று பொருள். வைரம் பாய்ந்த கட்டையாக நம் உடலை வைத்திருக்க, வஜ்ராசனத்தை விடச் சிறந்த பயிற்சி இல்லை. சாதாரணமாக வீட்டில் அமரும்போதும், வீட்டில் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதும், நாளிதழ் வாசிக்கும்போதும், வஜ்ராசனத்தில் இருக்கலாம். தினசரி 15 நிமிடங்கள் இருந்தால் போதும்.
24 வீட்டில் இடம் இருந்தால், பூச்செடிகள் வளர்க்கலாம். அந்த நறுமணம்கூட மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துதான்.
25 புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை மெல்லுதல் போன்ற பழக்கங்களை விட்டுவிட்டால், இளமை உங்களை விட்டு எங்கே போகப்போகிறது?
இனி 'இளமை ’தான்!
----------------------------------------------------
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு படும் காயங்கள் விரைவில் ஆறிட

100 மில்லி தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் 
பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் 
வைக்கவும்
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய 
துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .இப்போது பாட்டிலில் 
எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக 
உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் 
ஆற்றிடும் தன்மை வாய்ந்தது
இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக 
மட்டும் உபயோகப்படுத்தவும் .
குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் 
வைக்கவும்
Baskar Jayaraman's photo.






---------------------------------------------------
ஓமவள்ளி சட்னி
கடாயில் சிறிது நெய் விட்டு ஜீரகம் ஓம வள்ளி இலைகளை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே கடாயில் சிறிது வெங்காயம், தக்காளி , பச்சை மிளகாய் வதக்கி, ஆற வைத்து, இரண்டையும் ஒன்றாக கலந்து அரைக்கவும்.

-------------------------------------------------------------------------------


1) பொன்மேனி தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.
2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு
பிரம்மதண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.
3) வயிற்றுவலி போக்கும் நறுவலி
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.
4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.
5) தலைபாரம் நீக்கும் கிராம்பு
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.
6) காயத்துக்கு காட்டாமணக்கு
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.
7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.
[You must be registered and logged in to see this image.]குழந்தையை காப்பான் கரிப்பான்
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.
9) கடலையும் அடிதடியும்
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.
10) மயக்கத்துக்கு ஏலம்
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.
11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு
நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.
12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட
பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும்
குறையும்.
13) மயிர்கறுக்க மருதோன்றி
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.
14) வாந்தி நீக்கும் நெல்லி
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து
இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.
15) படர்தாமரைக்கு
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில்
வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
17) மலச்சிக்கலுக்கு
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1
குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு
படுக்கவும். நன்றாக மலம் இளகும்.
18) மூலம் அகல
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.
19) முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை
பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.
22) தாய்ப்பால் சுரக்க கீரை
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால்
வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள்
செய்ய பால் சுரக்கும்.
23) அரையாப்பு தீர
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.
24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.
25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை
இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம்
வெளியேறும்.
26) பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
27) இருமலுக்கு தேனூறல்
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.
28) வெள்ளை தீர்க்கும் புங்கன்
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.
29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.
30) துத்தி டீ
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.
31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.
32) நீர்த்துவார எரிவு தீர
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.
33) அஜீரண பேதிக்கு
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.
34) உடல் இளைத்தவருக்கு
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்

35) இரத்த கடுப்புக்கு
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.
36) வெளுத்த மயிர் கறுக்க
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.
37) தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
38) வண்டுகடிக்கு
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவுஎடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில்சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.
39) சூட்டுக்குத் தைலம்
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி
வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகிவந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
40) கிருமிகள் விழ
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில்
மைபோலரைத்து சுண்டைகாயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்ககிருமிகள் வந்துவிடும்.
41) மூலம் தீர்க்கும் ஆவாரை
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்துஉலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம்தீரும்.
42) மூலத்திற்கு வேது
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.
43) ஈளை தீர்க்கும் இம்பூரல்
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.
44) கைநடுக்கம் தீர
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.
45) இருமல் தீர
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.
46) காதில் சீழ் வருதல் தீர
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.
47) தொண்டை புண்ணிற்கு
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.
48) தலைவலிக்கு
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.
49) சீதபேதிக்கு
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.
50) யானைக்கால் வீக்கம் வடிய
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.
51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.
52) புண்கள் ஆற
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.
53) முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
54) கட்டிகள் உடைய
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.
55) அண்ட வாத கட்டு
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.
56) கண் பூ குணமாக
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.
57) இரத்த மூத்திரத்திற்கு
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.
58) இரத்த மூலம் குணமாக
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.
59) அசீரணம் குணமாக
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.
60) வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
61) தேக ஊறலுக்கு
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.
62) சூட்டிருமலுக்கு
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த
கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.
63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.
64) நீர்க்கடுப்பு எரிவு தீர
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்
65) சகல விஷத்திற்கும் நசியம்
குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித்
துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.
66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க சூரணம்
கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.
67) பால் உண்டாக
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.
68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக்
கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து
வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.
69) உடல் வலுவுண்டாக
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில்
எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து
பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.
70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.
71) தேமல் மறைய
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.
72) வாயு கலைய
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.
73) பாலுண்ணி மறைய
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து
சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு
வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.
74) தொண்டை நோய்க்கு
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.
75) பெளத்திரம் நீங்க
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.
76) தீச்சுட்ட புண்களுக்கு
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில்
பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட
தீச்சுட்டபுண் ஆறிவிடும்.
77) தேக பலமுண்டாக
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.
78) படைகளுக்கு
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.
79) கண்ணோய் தீர
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்ணோய் தீரும்.
80) கற்றாழை நாற்றத்திற்கு
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.
81) சேற்று புண்ணிற்கு
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.
82) நகச்சுற்று குணமாக
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.
83) முகப்பரு குணமாக
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.
84) புழுவெட்டு குணமாக
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.
85) பொடுகு குணமாக
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.
86) தழும்பு மறைய
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.
87) முறித்த எலும்புகள் கூட
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.
88) பால் சுரக்க
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.
89) தண்ணீர் தெளிய
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.
90) கண் நீர் கோர்த்தல் தணிய
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவரகண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.
91) புகையிலை நஞ்சுக்கு
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.
92) குடிவெறியின் பற்று நீங்க
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.
93) நீரிழிவு நீங்க
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.
94) பெரும்பாடு தணிய
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.
95) நரம்பு தளர்ச்சி நீங்க
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து,
வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.
96) வீக்கத்திற்கு ஒற்றடம்
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.
97) மூட்டுப் பூச்சிகள் அகல
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் மயங்கி இறக்கும்.
நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து
நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
--------------------------------------------------------------------------------
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
--------------------------------------------------------------------------------
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
--------------------------------------------------------------------------------
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
--------------------------------------------------------------------------------
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
--------------------------------------------------------------------------------
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
--------------------------------------------------------------------------------
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
--------------------------------------------------------------------------------
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து
சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு
உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
--------------------------------------------------------------------------------
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக்
காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு
விரைவில் நீங்கும்.
--------------------------
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்


(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். 

இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)
------------------------------------------------------------------------------------


1. இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.
2. சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.
3. வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.

4. காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.

5. உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.

6. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

7.மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

8. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
9. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
10. கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.
11.தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்.
12. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.
13. மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.
14. சுக்கை நீர் விட்டு அரைத்து கொதிக்கவைத்து மூட்டுகளில் தவ மூட்டுவலி குறையும்.
15. துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.
16. பிடிகருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்
----------------------------------



"மரு" (Skin Tag) உதிர... 


இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். 

இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். 

அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை...

அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும்.

இதனை மரு மீது பூசவும்.

மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும்.

இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும்.


------------------------------------------------------------

இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.
இதோ கால அட்ட வணை:

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

---------------------

இரத்தத்தை சுத்தமாக்க 

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்போம்.

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகிறது. இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.

இதற்கடுத்தது இரத்த அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாபிட்டால் இரத்த அழுத்தம் சீராகும். இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாபிட்டு வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.

இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும். விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்
-------------------------------------------------------------
வாழைப்பழம் மற்றும் கேரட் மாஸ்க்:
இந்த இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இவை மிகுந்த அற்புதங்களை செய்யும் பழங்களாகும். தோலை திடப்படுத்தவும் சுருக்கங்களை குறைக்கவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இவ்விரண்டு பழங்களிலும் உள்ளன. தலா ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு கேரட் வைத்து இவற்றின் பசையை தயாரித்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.
ரோஸ் வாட்டர்:
சருமத்தில் நிறைய அழுக்குகள் மற்றும் கழிவுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவையும் சுருக்கங்களை உருவாக்கக் கூடும். தூங்கப் போகும் முன் ரோஸ் வாட்டரால் முகத்தை சுத்தம் செய்வது அழுக்குகளை நீக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள், வீக்கங்களை குறைத்து புதிய சருமத்தை உருவாக்கும். ஒரு பஞ்சு உருண்டை கொண்டு ரோஸ் வாட்டரில் நனைத்து, வட்ட வடிவில் முகத்தில் தடவ வேண்டும். இத்தகைய வட்ட அழுத்தங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கில் மிகச்சிறந்த ப்ளீச் செய்யும் சக்தியும், வயதை குறைவாகக் காட்டும் சக்தியும் உண்டு. தினமும் ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பையும், சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் நீக்க முடியும். உருளைக்கிழங்கை மாஸ்க் ஆகவும் பயன்படுத்த முடியும். ஒரு கிழங்கை மசித்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு முகத்தில் போட்டதும் 5-10 நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண முடியும்.
தயிர் மாஸ்க்:
தயிரில் உள்ள வைட்டமின்கள் திசுக்களை சரி செய்து அதை மீண்டும் கட்டி எழுப்பும். தயிரை தினமும் உண்பதும் சருமத்திற்கு மிகுந்த நன்மையை தரும். தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவினால் அது முகத்திற்கு பொலிவூட்டி சுருக்கங்களை குறைக்கின்றது. இதை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும். இத்தகைய வீட்டிலேயே செய்யக் கூடிய அழகு சாதன பொருட்களை கொண்டு செய்யப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தி அழகான மாற்றத்தை காணுங்கள்!

------------------------------------------------------------------------


சருமத்தை பளபளப்பாக்கும் பீட்ருட் ஃபேஸ் பேக்

ரத்தத்தைச் சுத்திகரித்து, சருமத்துக்கு நிறத்தையும் பளபளப்பையும் தரும் அழகு இளவரசி பீட்ரூட்! இந்த பீட்ரூட் விழுது உங்கள் முகத்தைப் பளபளப்பாக்கி, பொலிவூட்டும் பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விழுது 1 டீஸ்பூன்,
பார்லி பவுடர்-1 டீஸ்பூன்,
லெமன் ஜுஸ் – அரை டீஸ்பூன்
சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். டீன் ஏஜில் பஞ்சைவிடவும் மென்மையாக இருந்த உங்கள் கைகள் பாத்திரம் தேய்ந்து, துணி துவைத்து சொரசொரவென ஆகிவிட்டனவா? கவலை வேண்டாம். இந்த பீட்ரூட் சிகிச்சையை செய்து வாருங்கள்.
பீட்ரூட் விழுது 1 டேபிள் ஸ்பூனுடன்,
தேன்-1 டீஸ்பூன்,
கிளிசரின்-2 துளி
கலந்து கொள்ளுங்கள். இதை கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாகும்.
------------------------------------------------------------------------------------------
சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
ஆரோக்கிய வாழ்விற்கு சில டிப்ஸ்
தினமும் காலை 5.00- 5.30 மணிக்குள் செய்ய வேண்டியது:
கண் கழுவுதல்:
ஒரு சுத்தமான பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் எடுத்து இடுப்பு அளவு உயரமுள்ள மேடையில் வைத்துக்கொள்ளவும். பிறகு முகத்தை வெறும் தண்ணீரால் 3 முறை முகம் கழுவி ஒரு டவலால் முகத்தை துடைத்துக் கொள்ளவும். முகத்தை டப்பில் உள்ள தண்ணீரால் நனைக்கவும். (கண்ணின் வெளிப்புறம் நனையும் வரை நாக்கை வெளியே நீட்டி கண்களை நன்கு திறந்து கொண்டு நனைக்கவும்.) அப்பொழுது நம் உதடுகள், நாக்கு, மூக்கு, கண் ஆகியவை மட்டும் நனையும்( காது வரை நனைய வேண்டியதில்லை) மனதிற்குள் 10 வரை எண்ணவும்.
பிறகு தலையை டப்பிளிருந்து வெளியே எடுக்கவும். இவ்வாறு 10 முறை செய்தபின் ஒரு டவலால் முகத்தைத் துடைத்து கொள்ளவும். இதே போல் இரவு உணவுக்கு 7மணிக்கு பின்பும் (படுப்பதற்கு 10 நிமிடம் முன்பாகவும் செய்யவும்.)
பயன்கள்:
தலைவலி, சைனஸ், சளி, நெஞ்சு சளியினால் வலி, உடற்சோர்வு, தொண்டைக்கட்டு, கண் எரிச்சல், உடல் வலி, உடல் உள் உறுப்புகளில் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
தினமும் உலர்திராட்சை:
தினமும் இரவு ஒரு டம்ளர் கொதிக்க வைத்த தண்ணீரில் 1015 கருப்பு உலர் திராட்சையைப் போட்டு மூடி வைக்கவும். அதிகாலையில் கண் கழுவுதல் பயிற்சி செய்த பின் உலர் திராட்சையை வடிகட்டி தண்ணீரை வேறு ஒரு டம்ளரில் பிடிக்கவும். அனைத்து திராட்சை பழங்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நசுக்கி 515 சொட்டு தேன் (சுகர் உள்ளவர்கள் 5சொட்டு தேன் போதுமானது…) கலந்து ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடவும். 5 நிமிடங்களுக்கு பின் வடிகட்டிய தண்ணீர் குடித்து அதன்பின் 15 நிமிடங்கள் கழித்து அரைலிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
பயன்கள்:
ரத்தத்தை சுத்திகரித்து உடல் கழிவுகளை வெளியேற்றி, ரத்த சோகை, புத்துணர்ச்சிக்கும் உதவும்.
இரவு உணவை முடித்து அரைமணிநேரத்திற்கு பின்:
பேரீச்சம் பழம் 4+ மஞ்சள் நிற வாழைப்பழம் 2 மற்றும் தண்ணீர் 2 தம்ளர் எடுத்துக்கொள்ளவும். காலை உணவுக்கு 8 மணிக்கு முன் பேரீச்சம் பழம் 2+ மஞ்சள் நிற வாழைப்பழம் 2 மற்றும் தண்ணீர் 2 தம்ளர் எடுத்துக்கொள்ளவும்
--------------------------------------------------------------------------------------

வெப்பத்தைத் தணிக்கும் வெட்டிவேர்

கொளுத்தும் கத்தரி வெயிலில் இருந்து தப்பிக்க, குளிர்ச்சியான ஆகாரங்களை பயன்படுத்துவது அவசியம். அந்த வகையில் மண் பானை தண்ணீர் உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தண்ணீரில் வெட்டி வேரை சேர்க்கும் போது கிருமிகள் அழிந்து நீர் சுத்தமாகும். நல்ல மணம் கிடைக்கும். உடல் சூட்டை குறைக்கும் தன்மை வெட்டி வேருக்கு உண்டு.

கோடைகாலத்தில் நீர் கடுப்பு, தேக எரிச்சல், வயிற்றுக் கடுப்பு, போன்றவற்றால் அவதிப் படுபவர்கள் வெட்டிவேரை சுத்தம் செய்து உலர்த்திப் பொடிசெய்து கொண்டு அதனுடன் பெருஞ்சீரகம் பொடி செர்த்து சம அளவு எடுத்து வெந்நீரில் 200 மி.கி. அருந்தினால் தீர்வு கிடைக்கும்..முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, நல்ல மருந்தாக இருக்கிறது இந்த வெட்டிவேர் விழுது...
காய்ச்சல் மற்றும்வயிற்றில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும். நாவறட்சி, தாகம் நீக்குவதுடன் மன மகிழ்ச்சி உண்டாகும். வாந்தி பேதிக்கும் இது நல்ல மருந்தாகும். மேலும் சளி தொந்தரவு ஏற்படாமல் இந்த வேர் பாதுகாக்கும். வெட்டிவேர் கவலையை நீக்கி மனதை அமைதிப்படுத்தும், மன அழுத்தத்தை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. வெட்டிவேரில் தயாரிக்கப்படும் எண்ணெய் முக அழகை கூட்டுவதோடு தோலில் ஏற்படும் காயங்களை குணப்படுத்துகிறது.
நீண்ட நாட்களாக ஆறாமல் வடுக்கள் இருப்பின் அவற்றின் மேல் வெட்டிவேர் எண்ணெய் தடவி வந்தால் தழும்பு மறைந்து விடும். இதன் எண்ணெய்யை உடல் முழுவதும் தடவினால் உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி பாதுகாக்கிறது. வெட்டிவேரின் எண்ணெய் பாலுணர்வு செய்யும் மூளையின் லிபிடோ பகுதிகளை தூண்டுகிறது. மஜாஜ் செய்வதற்கு வெட்டிவேரின் எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். நமது உடலில் உள்ள போதை நீக்க பணிகளை செய்து நிணநீர்க்குரிய வடிகாலை தூண்டுகிறது.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் வெட்டிவேரின் பவுடரை பயன்படுத்துங்கள். இதை தொடர்ந்து செய்தால் முகத்தில் எண்ணெய் வழியாது. முகம் கூடுதல் அழகுடன் காணப்படும். வெட்டிவேரை வாங்கி பயன்படுத்துங்க ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் சிறந்தது.
-------------------------------------------------------------------
மெலிந்தவர் பருமனாக சித்த மருத்துவம்!!
உடலில் உஷ்ணம் மிகுந்து இருப்பதாலும்,உடலுக்குத் தேவையான புரத சத்துக்கள் கிடைக்காததாலும்,உடல் மெலிந்து இருப்பதற்கு காரணங்களாகும்.
சித்த மருத்துவ முறைகளில் இளைத்த உடல் பருக்கவும்,
பருத்த உடல் இளைக்கவும் ஏராளமான முறைகள் உண்டு.

இளைத்தவனுக்கு எள்ளு,
கொழுத்தவனுக்கு கொள்ளு

என்பது மருத்துவ பழமொழியாகும்.இதன் விளக்கம் என்ன வென்றால் உடலில் சதைப்பிடிப்பு இல்லாமால் மெலிந்து இருப்பவர்கள் தினமும் இரவில் ஒரு கைபிடி அளவு எள்ளு எடுத்து சிறிது,சிறிதாக வாயிலிட்டு நன்கு மென்று தின்று ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.இது போல் 40 -தினங்கள் தொடர்ந்து உண்டு வரவும்.

மேலும் காலையில் வெறும் வயிற்றில் வெண்ணை ஒரு எலுமிச்சை அளவு உண்ணவும்.இதுவும் 40 -நாள் தொடர்ந்து உண்ணவும்.

தேறாத பிள்ளையையும் தேற்றி வைக்குமாம்
தேற்றான் கொட்டை லேகியம்.

இதுவும் ஒரு மருத்துவ பழமொழிதான்.அதாவது உடல் இளைத்து மெலிந்து இருக்கும் இளம் வயது பிள்ளைகளை உடல் பருக்க இந்த "தேற்றான் கொட்டை லேகியம்" உதவும்.சாப்பிடும் உணவுகளின் சத்துக்களை முழுமையாய் உடலில் சேர்க்க இந்த லேகியம் உதவும்.

சித்தா மெடிக்கல் கடைகளில் இந்த லேகியம் கிடைக்கும்.வாங்கி தினமும் காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு டீஸ்பூன் உண்டு ஒரு தம்ளர் பால் சாப்பிடவும்.
----------------------------------------------------------------
இயற்கை மருத்துவம் :-
******************************

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாகவாழ ஓர்
""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர்
""பப்பாளி பழம்.""

12) நீரிழிவு நோயை குணமாக்கும்
"" முள்ளங்கி.""

13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""துளசி.""

16) மார்பு சளி நீங்கும்
""சுண்டைக்காய்.""

17) சளி, ஆஸ்துமாவுக்கு
""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.

24) மார்புசளி, இருமலை குணமாக்கும்
""தூதுவளை""

25) முகம் அழகுபெற
""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும்
“வாழைத்தண்டு”.

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்..
-------------

இரத்தம் விருத்தியடைய :
கேரட் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும். இதனால் சருமம் பொலிவாக இருக்கும்
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

வாரத்திற்கு 2-3 முறை ஒரு டம்ளர் முட்டைகோஸ் ஜூஸை குடித்து வந்தால், உடலில் உள்ள இரத்தமானது சுத்தமாகும்.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

வாரத்திற்கு இரண்டு முறை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வேப்பிலையை தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு, அந்த நீரை பருகி வந்தால், உடலில் உள்ள நச்சுக்கள் மட்டுமின்றி, கிருமிகளும் அழிந்துவிடும்.

விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
-----------------------------------------------------------------
ஜாதிக்காயின் மருத்துவ குணங்கள்:-
ஜாதிக்காய் என்பது ஒரு காரமான, சூடான மற்றும் இனிப்பு சுவை கொண்ட மசாலா பொருளாகும். இது உங்களுடைய சாப்பாட்டிற்கு சுவை, மணத்தை மட்டும் கொடுப்பதில்லை அதோடு உடல் நலத்திற்கு பல வழிகளில் ஊட்டத்தையும் அளிக்கிறது.

* ஜாதிக்காயில் உள்ள எண்ணெய் மூட்டு வலி குணமாக உதவுகிறது. வலி, வீக்கம் உள்ள இடத்தில் இந்த எண்ணெயை தடவினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

* ஜாதிக்காயில் அதிக அளவு பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் மாங்கனீசு உள்ளது. இது நம்முடைய உடலிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

* ஜாதிக்காயை தூளாக்கி அதனுடன் தண்ணீர் அல்லது தேன் கலந்து பேஸ்டாக செய்து கொள்ள வேண்டும். இதை முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். இந்த பேஸ்டை தொடர்ந்து உபயோகித்து வந்தால் உங்கள் சருமம் தூய்மையாகவும், பருக்கள் மறைந்தும், நிறம் அதிகரித்தும் காணப்படும்.

* பற்களை பாதுகாக்க இது மிகவும் உதவுகிறது. இதில் பாக்டீரியாவை எதிர்க்கும் சக்தி உள்ளது. அதனால் இது பற்பசைகளில் ஒரு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் பல்வலிக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது.

* ஜாதிக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஒரு மருத்துவ பொருளாக பயன்படுகிறது.
----------------------------------------------------------


1. சினைப்பை நீர்க்கட்டிகள் உருவாக காரணம் என்ன?
பெண்களின் கருத்தரிப்பு பிரச்னைக்கு, சினைப்பை நீர்க்கட்டிகள் 30 சதவீதம் காரணமாகின்றன. உணவுப் பழக்கவழக்கம், சிறுவயது முதலே தரப்படும் அதிகமான ஊட்டச்சத்து, துரித உணவுகள், வாழ்வியல் மாற்றங்கள், வேலைப்பளு, மன அழுத்தம், பரம்பரை நோய், மரபணு குறைபாடு இவைகளே சினைப்பை நீர்க்கட்டிகளின் பெற்றோர்.
2. ஒழுங்கற்ற உணவுமுறை சினைப்பை கட்டிகளுக்கு காரணமாகுமா?
ஒழுங்கற்ற உணவுமுறை, ஹார்மோன் சுரப்பில் சிக்கலை உண்டாக்கி, சினைப்பை நீர்க்கட்டிகளை உருவாக்கும். இக்கட்டிகள் உருவாகிவிட்டால், ஆண் இன ஹார்மோன்கள் மிக அதிகமாக சுரக்கும். அதிலும் ‘டெஸ்டோஸ்டிரான்’ மிக அதிகமாக சுரக்கும். இதன் காரணமாக சினைமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளிவருவது முற்றிலும் தடைபடும்.
3. நீரிழிவு நோய்க்கும் சினைப்பை கட்டிகளுக்கும் தொடர்புண்டா?
நிச்சயம் உண்டு. பெற்றோரில் யாரேனும் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் பட்சத்தில், அது டைப் 1, டைப் 2 எதுவாக இருந்தாலும், அவர்களின் பெண்ணுக்கு சர்க்கரை நோய்த் தாக்கத்துடன் இத்தகைய நீர்க்கட்டிகளின் தாக்கமும் இருக்கும். பிறப்பிலேயே, அவர்களுக்கு இன்சுலினுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி அமையப் பெற்றிருப்பதும் இதற்கு ஒரு காரணம்!
4. சினைப்பை கட்டிகளோடு, கருவும் உருவாகிவிட்டால் ஆபத்தா?
நிச்சயம் ஆபத்துதான்! கரு உருவாவதற்கு கரு முட்டைகள் அவசியம். ஆனால், கரு வளர்வதற்கு ஏற்ற இடம் கர்ப்பப்பை மட்டுமே! நெல்லிக்காய் அளவில் இருக்கும் சினைப்பையால் கரு வளர்ச்சியின் அழுத்தத்தை தாங்க முடியாது. ஒரு மாத கருவோ அல்லது இரு மாத கருவோ சினைப்பையில் இருந்து வெடித்துவிட்டால், தாய் உயிருக்கே ஆபத்து.
5. சினைப்பை கட்டிகள் எப்படி உருவாகிறது?
கர்ப்பப்பையின் வலது, இடது பக்கங்களில் நெல்லிக்காய் அளவில் முட்டை உற்பத்தி செய்யும் பகுதிதான் சினைப்பை. மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில் இருந்து, இந்த சினைப்பை பகுதியில் நீர்க்கட்டிகள் உற்பத்தியாகும். இரண்டாவது வாரத்தில், இவைகள் வெடித்து, கருமுட்டையை வெளியேற்றும். இம்முட்டைகள் கருக்குழாய் வழியாக கர்ப்பப்பையை அடையும். சில சமயங்களில், ஹார்மோன் சுரப்பிகளின் வேறுபாட்டால், இந்த நீர்க்கட்டி வெடிக்காமல் 25 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து விடும்.
6. சினைப்பை கட்டிகளுக்கான சிகிச்சை முறைகள்?
15 வயது முதல் 25 வயது திருமணம் ஆகாத பெண் வரை ஹார்மோன் சிகிச்சை; குழந்தைப்பேறு இல்லாதவருக்கு நீர்க்கட்டி உடைந்து போக மருந்துகள்; குழந்தைகள் பெற்ற பெண் என்றால் மாதவிடாய் சீராக நடைபெற மாத்திரைகள் அல்லது கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சைகள்; கட்டிகளை நீக்க வேண்டும் என்றால், நுண்துளை அறுவை சிகிச்சை!
7. சினைப்பையில் கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள்?
அபூர்வமாக பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வரும் அல்லது மாதவிடாய் சில மாதங்களுக்கு வராமலே இருக்கும். உடல் பருத்து விடும். முகத்தில் ரோமங்கள் முளைக்கும். தோலின் நிறம் மாறும். உடலில் பல்வேறு இடங்களில் கருமை அதிகரிக்கும். ஆண்தன்மை ஏற்படும்.
8. சினைப்பை நீர்க்கட்டி மலச்சிக்கலை உண்டாக்குமா?
சில கட்டிகள் 35 செ.மீ.,க்கும் மேல் வளர்ந்து, வயிறு முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால், அருகருகே இருக்கும் மற்ற உறுப்புகளை இக்கட்டி அழுத்தும். இதன்மூலம் சிறுநீர் கழிக்கும்போதும், மலம் கழிக்கும்போதும் பிரச்னைகள் உருவாகும்.
9. அதீத மகப்பேறு இடைவெளி நீர்க்கட்டிகளுக்கு ஆதாரமா?
முதலில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் குழந்தை பிறக்கும்போது சினைப்பை நீர்க்கட்டி இல்லை. ஆனால், இரண்டாவது குழந்தைக்கான இடைவெளியில் சினைப்பை நீர்க்கட்டிக்கான தாக்கம் இருந்தால், கண்டிப்பாக இரண்டாவது குழந்தைக்கான வாய்ப்பு தள்ளிப்போகும்.
10. சினைப்பை நீர்க்கட்டிகள் வராமல் தடுக்கும் முறைகள்?
அதிக அளவு எடை உள்ளவராக இருந்தால் எடை குறைக்க வேண்டும். நாள் தவறாத உடற்பயிற்சியும், உணவுக்கட்டுப்பாடும் அவசியம். அதிக கொழுப்பு மிக்க பால் பொருட்கள், சாக்லெட், ஐஸ்கிரீம், ஆட்டிறைச்சி, எண்ணெய் பலகாரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------
பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உற்பத்தியாகிறன. ஆகவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் முதன்மையானது குடலானது சுத்தமாகும். அதற்கு தண்ணீர் குடித்தவுடன், சிறிது நேரத்திலேயே மலம் கழிக்கக்கூடும். இப்படி தினமும் தவறாமல் மலம் கழித்தாலேயே, உடலில் உள்ள கழிவுகளானவை முற்றிலும் வெளியேறிவிடும்.

தண்ணீரானது உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும்.

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்ஸிஜனை கொண்டிருப்பதால், உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

பெரும்பாலானோருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பதால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அத்தகையவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து தலைவலியானது குறையும்.

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதால் தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.
------------------------------------------------------------------


உடலை பாதுகாக்க சில டிப்ஸ் :-
நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான். 
சோற்றுக்கற்றாழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.
தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது. 
பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.

சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.

சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.

கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும். காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும்.

புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும். 

சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது. 

துளசி இலையை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கும்.
================================================
விசிறி பற்றி தகவல்
பனை விசிறி:
சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப 
நோய்களைப் போக்கும்.

மயில் தொகை விசிறி:

அறிவை வளர்க்கும், தலை சுற்றலை போக்கும், 

விக்கல் மற்றும் வயிறு வலி நீங்கும்.


வெட்டிவேர் விசிறி:

தேக எரிச்சல், நீர் வேட்கை நீங்கும், மன 

ஊக்கத்தைக் கொடுக்கும்.
==============================================
கல்லீரல் நோய்கள் குணமாக பாட்டி வைத்தியம்:-
பொன்னாங்கண்ணிக் கீரையைக் கடைந்தோ அல்லது சூப்பாகவோ 
செய்து சாப்பிட்டால் கல்லீரல் சார்ந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
ருப்புக் கீரை, கீழாநெல்லி இரண்டையும் சம அளவு எடுத்து, சிறிது 
மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.


கறிவேப்பிலை, நாவல் மர இலை, கீழாநெல்லி மூன்றையும் விழுதாக 

அரைத்து பாலில் கலக்கிச் சாப்பிட்டு வந்தால், கல்லீரல் சார்ந்த 

பாதிப்புக்கள் குணமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் 

கல்லீரல் வீக்கம், இரத்த சோகை போன்ற குறைபாடுகள் சரியாகும்.

முள்ளங்கிக் கீரை சாறுடன் வெல்லம் கலந்து சாப்பிட்டால் கல்லீரல் 

நோய்கள் குணமாகும்.

காசினிக் கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் 

சாப்பிட்டால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

கைப்பிடி அளவு சுக்காங் கீரையை எடுத்து அதில் சீரகம் (20), சின்ன 

வெங்காயம் (1) சிறிது எலுமிச்சைச் சாறு ஆகியவற்றைச் சேர்த்து 

அரைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்புக்கள், மஞ்சள் 

காமாலை போன்றை குணமாகும்.
=====================================
வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் :-
++++++++++++++++++++++++++++++
காட்டில் ஒரு தாத்தா நடந்துகொண்டு இருந்தார். ஒரு நல்லபாம்பு அவரை கொத்தியது. 2 நிமிடம் கழித்து பார்த்தால் அந்த பாம்பு சுருண்டு இறந்துவிட்டது. தாத்தாவிர்க்கோ பாம்பு கடித்தது வலித்ததே தவிர வேறு எதுவும் தெரியவில்லை. ஆச்சரியம் அடைந்த தாத்தா யோசித்தபோது சிறிய வயதிலிருந்து வேப்பிலை கொழுந்து தினமும் சாப்பிட்ட காரணத்தினால் பாம்பின் விஷம் உடம்பில் ஏற முடியாமல், தன் உடம்பில் இருக்கும் வேப்பிலையின் சத்து பாம்பை கொன்றது.
இரண்டே இரண்டு வேப்பிலை கொழுந்து சாப்பிட்டால் தினமும் ஏராளமான பயன்கள் இருக்கின்றன.
வயிற்றுப்பூச்சி, கண் பிரெச்சனைகள், சர்க்கரை வியாதி, பல் வலி, மலேரியா, மலச்சிக்கல், ரத்தத்தில் இருக்கும் அசுத்தங்கள் போன்ற பல்வேறு வகையான தொல்லைகளிலிருந்து நிவாரணம் தரும்.
========================================================
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்:-
நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும். சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்
==================================================
பொக்கிஷ குறிப்புகள்...
உடல் சூடு நீங்க கஸ்தூரி மஞ்சள் பொடியில் சிறிது உப்பு கலந்து தேங்காய் எண்ணெயுடன் குழைத்து உடலில் தேய்த்து 15 நிமிஷம் ஊறியபின் குளித்தால் சருமம் புது பொலிவுடன் இருக்கும். உடல் அரிப்பு நீங்கும். இம்மாதிரி குளிக்கும்போது சோப்புக்கு பதிலாக பயத்தம் மாவு அல்லது கடலைமாவு தேய்த்து குளிக்கலாம்.
மோரில் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து வாய் கொப்பளித்தால் வாய்நாற்றம் நீங்கும்.
சிலருக்கு உள்ளங்காலில் எரிச்சல் இருக்கும்! அவர்கள் இரவில் படுக்கப் போகுமுன் உச்சந்தலையிலும் உள்ளங்காலிலும் சிறிது விளக்கெண்ணையை அழுந்த தேய்த்தால், உடல் சூடு நீங்கி கால் எரிச்சலும் நீங்கும்.
வயிறு உப்புசமாக இருந்தால் கொஞ்சம் மோரில் பெருங்காயம் கலந்து குடித்தால் வாயு நீங்கி உடனடி நிவாரணம் கிடைக்கும்.
காலில் முள் குத்தி பாதி முள் தங்கி விட்டால், எருக்கம் பாலை அந்த இடத்தில் பிழிய முள் தானாக வெளியேறிவிடும்.
ருத்திராட்ச கொட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் அந்த நீரால் வாய் கொப்பளித்தால் வாய் வெடிப்பு குணமாகும்.
சருமநோய் உள்ளவர்கள் முந்திரி பழம் சாப்பிடக் கூடாது. பிரச்சனை மேலும் அதிகமாகும்.
அரச மரத்தின் அடிமரப் பாலை பாதத்தில் தடவி வந்தால் சீக்கிரமே பித்த வெடிப்பு மறைந்து கால் அழகாகும்.
சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காதது மாதிரி உணர்வார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் அரை டம்ளர் வெந்நீர் குடித்தால் போதும். தாகம் சட்டென்று நிற்கும்.
கீழாநெல்லி இலையை அரைத்து பசும் பாலுடன் கலந்து சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். ஆனால் அச்சமயத்தில் புளியல்லாத பத்திய சமையல் சாப்பிட வேண்டும்.
தாமரை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும்.
அகத்தி கீரைக்கு குளுமை சக்தியுண்டு. ஏகாதசி பட்டினி இருந்த மறுநாள் அகத்தி கீரையும், நெல்லிமுள்ளி பச்சடியும் சாப்பிட்டால் உடல் குற்றாலத்தில் குளித்த மாதிரி குளுகுளுவென்றாகி விடும்.
அகத்தி கீரை பித்தம் தணிக்கும். ரத்த கொதிப்பையும் கட்டுப்படுத்தும். மேலும் அகத்திக் கீரையை பச்சையாகவே மென்று தின்றால் வாய்ப்புண் குணமாகும்.
சிறு குழந்தைகளுக்கு வேப்பங் கொழுந்து சாப்பிடக் கொடுத்தால் வயிற்றுப் பூச்சிகளை அடித்துக் கொண்டு வந்து விடும். ஆனால் குழந்தைகள் லேசில் சாப்பிடுமா? அதற்கு ஒரு வழி... வேப்பங் கொழுந்தை அம்மியில் வைத்து மையாக அரைத்து உருண்டையாக்கி கொள்ளுங்கள். சுண்டைக் காயளவு உருண்டையை குழந்தைகளின் அடிநாக்கில் வைத்து, கூடவே ஒரு பெரிய ஸ்பூன் தயிரையும் ஊற்றவும் கசப்பு தெரியாமல் விழுங்கி விடுவார்கள்.
வாழைத்தண்டை வட்டமாக நறுக்கி, எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து ஆண்கள் தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் தோன்றாது.
சிலருக்கு எண்னை தேய்த்து குளிக்கப் பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து ஷாம்ப்பூ போட்டு குளித்தால் உடல் குளுமை அடையும். எண்ணை தேய்த்து குளித்த பலன் கிடைக்கும்.
பள்ளிப் பிள்ளைகளுக்கு தலையில் பேன், பொடுகு தொல்லைகள் சகஜம். அதற்கான நிவாரணி, ஒரு பிடி கருந்துளசியுடன் மூன்று பிடி வேப்பிலையும் துளி உப்பும் சேர்த்து மையாக அரைத்து தலையில் பூசி அரைமணி ஊற விடுங்கள். பிறகு செம்பருத்தி இலையை கசக்கி அதன் சாறுடன் சீயக்காய் கலந்து தலையில் தேய்த்து அலசவும். இரண்டொரு முறை இம்மாதிரி செய்து வந்தால் பேன், பொடுகு போயே போச்!
மதியம் ஒரு பிடி கொண்டை கடலை சுண்டல், அல்லது முழு உளுந்து அல்லது மொச்சை கொட்டை சுண்டல் சாப்பிடுவது நீரிழிவுக்காரர்களுக்கு ரொம்ப நல்லது. தினம் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயப் பொடி சிறிதளவு சாப்பிடுவதும் நல்லது. கசப்பு தெரியாமலிருக்க ஒரு கரண்டி தயிர் குடிக்கவும்.
உணவு உண்டு மூன்று மணிநேரத்துக்கு நொறுக்கு தீனிகள் எதுவும் சாப்பிடாமல் இருப்பது வயிற்றுக்கு நல்லது.
வெள்ளரிக்காயை துருவி பிழிந்து அதன் ஜலத்தை குடித்தால் நீர்க்கடுப்பு நீங்கும். குறிப்பாக கோடை காலத்தில் அடிக்கடி குடிக்க வேண்டும். சிறந்த பலனளிக்கும்.
====================================================

பிரண்டைச் சத்துமாவு

தேவையானவை:

நார் நீக்கிய பிரண்டைத் தண்டுகள் – அரை கிலோ, 
புளித்த மோர் – ஒரு லிட்டர்,
கோதுமை – ஒரு கிலோ,
கறுப்பு எள், கறுப்பு உளுந்து – தலா 100 கிராம்.

செய்முறை:
பிரண்டை பச்சையாக இருக்கும்போதே ஒரு லிட்டர் புளித்த மோரில் இரண்டு நாட்கள் ஊறவிடவும். பின்னர் அந்தப் பிரண்டைகளை வெளியே எடுத்து நன்றாகக் காய வைத்து, அதனுடன் மேலே சொன்ன பொருட்களையும் சேர்த்து மிதமாக வறுத்தெடுக்கவும். இப்போது இந்தக் கலவையை எடுத்து மாவாக அரைத்துக் கொண்டால், கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்: உடல் வலி, மூல நோய், ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், நமைச்சல் போன்ற தொல்லைகள் நீங்கும்.


===========================================================

உடல் எடையை குறைக்க தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள்
கைக்குத்தல் அரிசி உடல் எடையை குறைக்க வேண்டுமானால் அரிசியை முழுமையாக தவிர்க்க கூடாது. தினமும் கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை ஒரு கப் அளவாவது உட்கொள்ள வேண்டும். கைக்குத்தல் அரிசி சாதத்தில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. வெள்ளை சாதத்தை காட்டிலும் இதில் க்ளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவே உள்ளது.
காய்கறிகள் உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த இந்திய உணவுகளில் ஒன்று தான் காய்கறிகள். ஆனால் உருளைக்கிழங்கு மற்றும் கத்திரிக்காய்களில் அதிக அளவிலான கலோரிகள் உள்ளதால் அவைகளை தவிர்க்கவும்.
பயறுகள் இவ்வகை உணவுகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள ட்ரை கிளைசரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்க உதவும். இந்த உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளதால், உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் உதவும்.

குளிர்ச்சியான உணவுகள் உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த உணவுகளில் ஒன்று தான் வெள்ளரிக்காய். வயிற்றின் உட்பூச்சிற்கு இது குளிர்ச்சியை அளிக்கும். இதில் நீர்ச்சத்து உள்ளதால் உங்கள் வயிற்றையும் நிரப்பும். உடல் எடை குறைப்பிற்கான சிறந்த காய்கறி இதுவாகும்.

பூண்டு உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க பூண்டு உதவிடும். மேலும் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தொடர்ந்து செயலாக்கவும் இது உதவிடும். உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமானால், உங்கள் உணவுகளில் பூண்டை சேர்த்துக் கொள்ளுங்கள்
=====================================================
அத்திப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:-
அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித 
நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் 
நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி 
சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க 

உணவிற்குப் 

பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை 

குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் 

மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க 

அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க 

வேண்டும்.

அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி 

இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். 

இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், 

சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக 

அளவில் இருக்கிறது.

மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு 

அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர 

வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு 

பிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் 

விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள. சீமை 

அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது
===========================================
காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்?
நாம் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் சூடாக காபியோ அல்லது தேநீரோ தான் அருந்துகிறோம். ஒரு சிலர் காலையில் 2 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார்கள். 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அதை விட சிறந்த முதல் உணவு என்ன தெரியுமா? வெதவெதப்பான தண்ணீரில் கலந்த எலுமிச்சம்பழச் சாறு தான் சிறந்த காலை முதல் உணவு ஆகும். காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு ஏன் அருந்த வேண்டும்? மேலே படியுங்கள்....

காலையில் முதல் உணவாக எலுமிச்சம்பழச் சாறு அருந்துவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஏன் ஆயுர்வேதத்திலும் இது சிறந்த காலை உணவாக சிபாரிசு செய்யப் படுகின்றது. அப்படி என்ன தான் எலுமிச்சம்பழச்சாற்றில் இருக்கிறது என்று பார்ப்போம்.

ஜீரணத்திற்கு பெரிதும் உதவுகிறது.
இரைப்பைக் குடலை தூண்டி சுத்தப்படுத்துகிறது.
கல்லீரலைத் தூண்டி சுத்தப்படுத்துகிறது.
வைட்டமின் C யும், அஸ்கார்பிக் அமிலமும் அதிக அளவில் உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்துகிறது.
காய்ச்சல், மற்றும் ஜலதோஷத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் நம் ஊரில் இது காய்ச்சலையும் ஜலதோஷத்தையும் அதிகபடுத்துவதாக நினைக்கின்றார்கள். அது தவறு.
இரத்தத்திலுள்ள நச்சுக்களை நீக்கி சுத்தப்படுத்துகிறது.
உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
உங்கள் தோல் பள பளக்க உதவுகிறது.
உங்கள் உடலில் pH அளவு சீராக இல்லையென்றால் பலவிதமான நோய்கள் வரும். pH சரியாக இருக்க எலுமிச்சம்பழச்சாறு உதவுகிறது.
இது ஒரு இயற்கையான கிருமி நாசினி.
நோய்க் கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி வாய்ந்தது.
புற்று நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் உள்ளதாக சொல்லுகிறார்கள்.
உடலுக்கு உடனடியாக சக்தியைத் தருகிறது.
வாய் சுகாதாரத்திற்கும் நல்லது.
ஆஸ்துமா நோயாளிகளுக்கும் நல்லது.
ஆகவே தினமும் காலையில் முதல் உணவாக இளஞ்சூட்டில் உள்ள தண்ணீருடன் எலுமிச்சம்பழச்சாற்றைக் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உங்களுக்கு மிகப் பெரிய நன்மைகள் உண்டாகும் என்பது உறுதி.

வேறு விதமாகவும் எலுமிச்சம்பழச்சாற்றைப் பயன்படுத்தலாம். தினசரி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகம் கழுவி வந்தால் முகம் ஜொலிக்கும். தோலில் உள்ள அழுக்குகள் நீங்கும். எலுமிச்சம்பழச் சாற்றை தண்ணீரோடு கலந்து பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்வது நல்லது. முக்கியமாக பெண்களுக்கு நன்மை பயக்கும்.
மலரட்டும் நோயற்ற உலகம்!
=================================
மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-
*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை பொடி :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
*துளசி பொடி :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
*ஆவரம்பூ பொடி :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
*கண்டங்கத்திரி பொடி :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
*ரோஜாபூ பொடி :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
*ஓரிதழ் தாமரை பொடி :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
*ஜாதிக்காய் பொடி :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
*திப்பிலி பொடி :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
*வெந்தய பொடி :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*நிலவாகை பொடி :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
*நாயுருவி பொடி :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
*கறிவேப்பிலை பொடி :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
*வேப்பிலை பொடி :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
*திரிபலா பொடி :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
*அதிமதுரம் பொடி :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
*துத்தி இலை பொடி :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
*செம்பருத்திபூ பொடி :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
*கரிசலாங்கண்ணி பொடி :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
*சிறியாநங்கை பொடி :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
*கீழாநெல்லி பொடி :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
*முடக்கத்தான் பொடி :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
*கோரைகிழங்கு பொடி :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
*குப்பைமேனி பொடி :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
*பொன்னாங்கண்ணி பொடி :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
*முருஙகைவிதை பொடி :- ஆண்மை சக்தி கூடும்.
*லவங்கபட்டை பொடி :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
*வாதநாராயணன் பொடி :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
*பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
*வாழைத்தண்டு பொடி :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
*மணத்தக்காளி பொடி :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
*சித்தரத்தை பொடி :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
*பொடுதலை பொடி :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
*சுக்கு பொடி :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
*ஆடாதொடை பொடி :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
*கருஞ்சீரகப்பொடி :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
*வெட்டி வேர் பொடி :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
*வெள்ளருக்கு பொடி :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
*நன்னாரி பொடி :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
*நெருஞ்சில் பொடி :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
*பிரசவ சாமான் பொடி :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
*கஸ்தூரி மஞ்சள் பொடி :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
*பூலாங்கிழங்கு பொடி :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
*வசம்பு பொடி :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
*சோற்று கற்றாலை பொடி :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
*மருதாணி பொடி :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
*கருவேலம்பட்டை பொடி :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.
++++++++++++++++++++++++++++
அரச மரத்தின் அற்புத சக்தி :
--------------------------------------------------
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.
2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.


நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்:


1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.

2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும், இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.

3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.
4. உடற்பயிற்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ, எது நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.
30. உறவுகளை வளர்க்க அதற்க்கான விதையை தினமும் விதைக்க வேண்டும். விதைப்பதை பொறுத்தே உறவுகளின் வளர்ச்சி இருக்கும்..
========================================

மறந்து போன மருத்துவ உணவுகள்

அற்புத மூலிகை அறுகம்புல்
நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை 
ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன. அதேவேளை அறுகம்புல் 
சாறு காரத்தன்மை உடையது. இது எமது ஆரோக்கியத்திற்கு 
உகந்ததாகும். இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க 
விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது 
அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.

அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், 

பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், 

ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி 

ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை 

நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, 

வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது..


அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் 

பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. 

இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் 

அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் 

அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் 

ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் 

அளிக்கும் டொனிக் ஆகச் செயற்படுகின்றது.

உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்ததோட்ட மண்டலத்தை 

தூய்மைப் படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான 

மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் 

பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம 

உப்புக்கள்

பலவும் உண்டு

காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் 

அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக 

இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் 

உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய

வழியாகும்.

================================================

நம் முன்னோர்கள் பலர் வயதில் சதம் அடித்ததற்கு அவர்களுடைய 
உணவுப் பழக்கமே முக்கியக் காரணம். அவர்கள் உணவையே மருந்தாக 
உட்கொண்டதால்தான் எந்த நோய்நொடியும் இன்றி ஆரோக்கியமாக 
வாழ்ந்தனர்.
மணத்தக்காளித் துவையல்
தேவையானவை: 
மணத்தக்காளிக் கீரை - ஒரு கட்டு, மிளகு - அரை டீஸ்பூன், காய்ந்த 
மிளகாய் - 6, பூண்டு - 4 பல், இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் - ஒரு கீற்று, 
கடலைப் பருப்பு - ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், 
எண்ணெய், 
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
கீரையை நன்றாகச் சுத்தம்செய்து, மஞ்சள்தூள் சேர்த்து வெறும் 
வாணலியில் போட்டு வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, 
காய்ந்ததும் கீரை தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு 
நன்றாக வதக்கவும். வதங்கியதும், கீரையையும் அதில் போட்டு வதக்கி, 
துவையலாக அரைக்கவும். சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிடலாம்.
மருத்துவப் பயன்:
குடல், வாய், நாக்கு, தொண்டையில் ஏற்படும் புண்களுக்கு மிகச்சிறந்த 
நிவாரணி. உடல் மெலிவாக உள்ளவர்களுக்கு ஊட்டம் தரும். குடியால் 
பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சாப்பிட, கொஞ்சம் கொஞ்சமாக 
குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டு எடுக்கும்.

==============================================================


==========================================================

1) சீரகத்தை நல்லெண்ணையில் காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலை பாரம், பித்த மயக்கம் நீங்கும்.
2) வாழைப்பூவை இடித்து சாறு பிழிந்து பசுமோர் கலந்து அருந்திவர வயிற்று வலி தீரும்

3) தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

4) கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

5) தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

6) கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது

No comments:

Post a Comment