தேங்காய்
‘தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல. மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட’ என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல அத்தியாவசியச் சத்துகள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் வழங்கக்கூடியது. வைட்டமின்கள், தாதுக்கள் மிகுதியாக கிடைப்பதால் முழு உணவாகவே தேங்காயைச் சாப்பிடலாம்.
மனிதனுக்கு அழகும், ஆரோக்கியமும் தரும் உணவு தேங்காய். அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கண்டிப்பாக தேங்காய் சாப்பிட வேண்டும். தேங்காயில் கொழுப்பு சத்து, புரதம், தாது, டன்டனிக் அமிலம், வைட்டமின் இ மற்றும் நீர்ச் சத்தும் உள்ளது. சராசரியாக 400 கிராம் உள்ள தேங்காயைச் சாப்பிட்டு தண்ணீர் பருகினால், இறைச்சி உண்பதற்கு நிகரான ஆற்றல் கிடைக்கும். அதாவது அன்றைய தினத்திற்கு உடலுக்குத் தேவையான தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் ஆற்றலை உடலுக்கு வழங்கிவிடும். அதிக அளவில் கொழுப்புச்சத்தும், புரதச்சத்தும் தேங்காயில் நிறைந்துள்ளன.
100 கிராம் தேங்காய் பருப்பு 354 கலோரிகள் ஆற்றல் வழங்கக்கூடியது. மற்ற பருப்பு, கொட்டை வகைகளைவிட அதிக அளவில் பூரிதமாகும் கொழுப்புகளைக் கொண்டுள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான அனைத்து சத்துகளும் தேங்காயில் அடங்கி உள்ளது. நீரிழிவுக்கு தேங்காய் மிகவும் பயன் தரக் கூடியது.
சத்துகள் என்ன?: புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
மருத்துவ குணங்கள்: தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. தேங்காய்ப் பால் நஞ்சு முறிவாகவும் பயன்படுத்தப்படுகிறது.
எளிதில் ஜீரணமாகும்: தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப் புண்கள்: தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
கொழுப்பை குறைக்கும்: உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய அமிலங்கள் தேங்காயில் போதிய அளவு உள்ளன. வைரஸ் மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாகவும் இந்த அமிலங்கள் உள்ளன. தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
ஆண்மைப் பெருக்கி: முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் உள்ள வைட்டமின் இ, முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது. குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்தில், இயற்கையாக தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொண்டால் உடலை போஷிக்கும். உடல் இளைப்பு, பலவீனம் போன்றவற்றுக்கும் மருந்தாகிறது. நிமோனியா போன்ற சுவாச மண்டல கோளாறுகளில் தேங்காய் எண்ணெய் மருந்தாக பயன்படுகிறது. ஆராய்ச்சிகள், தேங்காய் எண்ணெய் அதிக உடல் பருமனையும், அதிக அளவு கொலஸ்ட்ராலையும் ஏற்படுத்துவதில்லை என்று தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதிக உடல் எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தேங்காய் எண்ணெயை அளவாக எடுத்துக்கொள்ளலாம். அளவாக உபயோகித்தால் தேங்காய் எண்ணெயின் பலன்களைப் பெறலாம்.

No comments:
Post a Comment