Tuesday, February 10, 2015

வர்மக் கலை

வர்மக் கலை

வர்மக் கலை
சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.
அகத்தியர் அருளிய வர்மக் கலை நூல்கள்
ஒடிவுமுறிவுசாரி
வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார்.உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார்.இவை “படு வர்மம்”,”தொடு வர்மம்”,”தட்டு வர்மம்”,”நோக்கு வர்மம்”
உடம்பிலுள்ள முக்கியமான வர்மப் புள்ளிகள்,
  1. தலைப் பகுதியில் 37 முக்கியமான வர்மப் புள்ளிக்களும்,
  2. நெஞ்சுப் பகுதியில் 13 வர்மப் புள்ளிகளும்,3. உடலின் முன் பகுதியில் 15 வர்மப் புள்ளிகளும்,4.முதுகுப் பகுதியில் 10 வர்மப் புள்ளிகளும்,5. கைகளின் முன் பக்கத்தில்                              9 வர்மப் புள்ளிகளும்,6. கைகளின் பின் பக்கத்தில் 8 வர்மப் புள்ளிகளும்,7. கால்களின் முன்பக்கம் 19 வர்மப் புள்ளிகளும்,8. கால்களின் பின்பக்கம் 13வர்மப் புள்ளிகளும்,9. கீழ்முதுகுப் பகுதியில் 8 வர்மப் புள்ளிகளும்
சித்தர்கள் வளர்த்த வர்மம் எனும் அறிவியல்
உடலில் உள்ள பல சத்திகளை – அவற்றின் இயக்க நுட்பங்களை மக்களுக்கு எளிய முறையில் விள்க்கிச் சென்றவர்கள் நம் முன்னோர்கள். அந்த நுட்பங்களின் அடிப்படையில் உருவானது தான் அழுத்தும் முறை சிகிச்சைகள்.சில ஆண்டுகளுக்கும் முன் தேவேந்திர ஓரா என்பவர் எழுதிய HEALTH IN YOUR HANDபுத்தகத்தை படித்தேன். அதில் அழுத்த முறை சிகிச்சை பற்றிய சில பகுதிகள் சிறப்பாக இருப்பதை உணர்ந்து பயின்றேன். அழுத்த முறை சிகிச்சை பற்றிய அறிவு எளிய முறையில், நோய் அறிவதற்கும், அறிந்த நோயைத் தீர்ப்பதற்க்கும் உதவியது. எனது புரிதல் படி அதை தொடர்ந்து பயன் படுத்தியதில் சில நுட்பங்களை அறிய முடிந்த்து. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.அந்த படத்தில் உள்ளபடி,
  1. மூளை (BRAIN)        2. மூளை நரம்புகள் (mental nerves)        3. பிட்யூட்டரி (Pituitary gland)        4. பீனியல் (pineal gland)        5. தலை (head nerves)        6. தொண்டை(throat)        7. கழுத்துப் பகுதி (neck)        8. தைராய்டு சுரப்பிகள் (thyroid glands)        9. முதுகெலும்பு (spine)      10. மூலம் (piles)      11. புரஸ்த கோளங்கள் (prostate glands)      12. ஆண் பிறப்புறுப்புகள் (penis)      13. பெண் பிறப்புறுப்ப (vagina)      14. கர்ப்ப பை (uterus)      15. விதைப் பை, சிணை (testicles , ovaries)      16. நிண நீர் சுரப்பிகள் (lymph glands)      17. இடுப்பு, முழங்கால்கள் (hip, elbows)      18. சிறுநீர் பை (urinary bladder)      19. சிறு குடல் (Small Intestine)      20. பெருங்குடல் (Large Intestine/colon)      21. குடல் வால் (appendicitis)      22. பித்தப் பை (gall bladeer)      23. கல்லீரல் (liver)      24. தோள் பகுதி (shoulder)      25. கணையம் (pancreas)      26. சிறு நீரகங்கள் (kidney)       27. வயிறு (stomach)      28. அட்ரீனல் சுரப்பி (adrenal)      29. உதர விதாணம் (solar plexus)      30. நுரையீரல் (lungs)      31. காதுகள் (ear)      32. சக்தி தூண்டல் (energy)      33. காது நரம்புகள் (ear narves)      34. குளிர்ச்சி (cold)      35. கண்கள் (eyes)      36. இதயம் (heart)      37. மண்ணீரல் (spleen)      38. தைமஸ் சுரப்பிகள். (thymus glands)இப்புள்ளிகளை மிக மென்மையாக அழுத்தித் தொடும் போது அவ்விடத்தில் வலி தோன்றுவது அந்த குறிப்பிட்ட பகுதியில்- உறுப்பில் உள்ள நலக் குறைவை காட்டுகிறது.இந்த உறுப்புகளில் ஏதேனும் ஒன்றில் எந்தவிதமான துன்பங்கள்-நலக் குறைபாடுகள் இருப்பினும் அதற்கான சத்திப் புள்ளியை மிக மென்மையாகச் சில வினாடிகள் தொடுவதன் மூலம் அத் துன்பத்தை நீக்கிக் கொள்ள முடியும். குறைபாட்டின் தன்மையைப் பொறுத்து உடனடியாகவோ, சில நாட்களிலோ உடல் நலம் முழுமையாக கிடைக்கும்.
  2. அ.புரோஸ்டேட் சுரப்பி புற்று நோய் (prostate glands) / அனைத்து சிறுநீரக கொளாறுகள் உள்ளங்கையின் படத்தில் காட்டிய 11 ம் எண் குறிக்கும் இடத்தை மென்மையாகத் தூண்டவும்சிறு பீளை, மற்றும் சிறு நெருஞ்சில் செடிகளை வேருடன் பிடுங்கி நிழலில் காயவைத்துப் பொடியாக்கிக் கொள்க. இரண்டும் சேர்ந்த 100கிராம பொடிக்கு 10 கிராம் மிளகும், 10 கிராம் சீரகமும் பொடி செய்து சேர்த்துக் கொள்ளுங்கள். காலை, மாலை உணவுக்கு முன் 5கிராம் பொடியை 2 குவளை நீரிலிட்டு அரைக்குவளையாக காய்ச்சி வடித்துக் குடிக்க புரஸ்த கோளங்களின் வீக்கம், புண், புற்று நீங்கி சுகமடைவார்கள்.
  3. ஆ. மூலத்துக்கு (piles) படத்தில் 10 ம் எண் குறிக்கும் இடத்தை மென்மையாகத் தூண்டவும்1.  அதிகாலையில், குளிர்ந்த நீரில், நாளும் தலைக்கு குளிக்கும் பழக்கம் வேண்டும்.2.  வாரம் இரண்டுமுறை எண்ணெய் குளியல் தேவை3.  நொறுக்குத் தீனி பழக்கத்தை விட வேண்டும். ( முறுக்கு, பிஸ்கட்) பதிலாக பழங்கள் பயன்படுத்தலாம்.4.  இரவுத் தூக்கம் முக்கியமாக இரவு 9 முதல் 3 மணி வரை ஓய்வெடுத்தல் வேண்டும்5.  புளிப்பு மற்றும் பச்சை மிளகாய், மிளகாய் காரத்தைக் குறைத்துக் கொள்க. மிளகு காரம் சேர்க்கலாம்.6.  காலை, இரவு உணவு 7 மணி முதல் 9 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும்.7. தாகம் இல்லாத போது தண்ணீர் குடிக்க்க கூடாது. தாகத்தின் அளவறிந்து சுவைத்து குடித்தல் நல்லது.8.  கருணைகிழங்கு சேர்த்துக் கொள்ளவும்.9.  உணவில் நெய், நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும்.10. இட்லி, தோசை போன்ற உணவை விட்டுவிட்டு நன்கு மென்று சாப்பிடக் கூடிய வகையில் உணவுகளை பயன்படுத்துக.11. உயிர் ஆற்றலை அழிப்பதையே மருத்துவமாக கொண்ட எதிர்முறைய மருந்துகளை எந்த சூழலிலும் பயன்படுத்தல் நலமன்று.12. பொதுவாக மேற்கண்ட பழக்கங்கள் நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். வந்த நோய்கள் அனைத்தையும் நீக்கி சுகமளிக்கும்.குப்பைமேணி எனும் மூலிகையை ஓர் கைப்பிடி அளவெடுத்து கால் லிட்டர் ஆமணக்கெண்ணெயில் வறுத்து எடுத்தெரிந்து விட்டு அந்த எண்ணையை 1 தேக்கரண்டி அளவு இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சில நாட்களில் மூலம், பவுந்தரம் போன்ற நோய்கள் நீங்கி உடல் நலம் பொறலாம்.
  4.  இ. கர்ப்ப பை கட்டிகளுக்கு – நோய்களுக்கு (uterus)படத்தில் 11 முதல் 16 வரை உள்ள இடங்கள் மற்றும் 37 ஆகிய சத்தி தூண்டும் இடங்களை மென்மையாகத் தூண்டவும்கறிவேப்பிலை, அம்மான் பச்சரிசி, குப்பைமேனி, சிறு செறுபடை, அருகம் புல் இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்க. உடன் மிளகு, சீரகம் 10 ல் 1 பங்கு கலந்து பொடித்துக் கொள்க. இந்த கலவையை தேவையுள்ளவர்கள் மோரில் 1 தேக்கரண்டி கலந்து – அதிகாலை குளித்த பின் குடித்து வர, கர்ப்ப பை சார்ந்த நொயனைத்தும் தீரும்.
  5. ஈ. இதய நோய்கள் அனைத்துக்கும் (for heart) 8,28,30,36 ஆகிய இடங்களை மென்மையாக அழுத்திப்பார்த்து வலியிருப்பின் மிக மென்மையாகத் தூண்டி வந்தாலே போதும்1. செம்பரத்தை2. மருதம்பட்டை3. சீந்தில்4. தாமரை5. முளரி (ரோஜா)6. அமுக்காரா7. விஸ்ணு கரந்தை8. நீர் முள்ளி9. வேம்புஎன பல மூலிகைகள் இதயத்துக்கு வலிவு தரும். மேலே கூறியுள்ள மூலிகைகளில் 1 முதல் 7 வரை எடுத்து முறைப்படி சுத்தம் செய்து பொடியாக்கிக் கொள்க. உடன் அளவுப்படி திரிபலா, திரிகடுகு, அதிமதுரம், சிறு நாகப்பூ, கருவாப்பூ, சிறு மணகம் சேர்த்து செய்யும் சூரணங்கள், லேகியங்கள் இதயத்தை வலுப்படுத்தும்.
  6. உ. குடல் வால் (apandisis) உள்ளங்கையில் உள்ள 21 எண் பகுதியை மென்மையாக சில விணாடிகள் காலையும் மாலையும் தூண்ட வேண்டும்குடல் வால் பகுதியில் கழிவுகள் தேக்கத்தால் தான் இந்த நிலை இதை சரிசெய்ய அனுபவம் உள்ள பெரியோர் வாழைத்தண்டுச் சாற்றுடன் விளக்கெண்ணெய் கல்ந்து குடிக்கச் சொல்வார்கள். நாள் இடைவெளியில் ஒன்றிரண்டு முறை சாப்பிட்டாலே குடல் வாலில் தேங்கியிருந்த கழிவுப் பொருள் நீங்கிப் புண்ணும் ஆறி விடும்

No comments:

Post a Comment