* வாழைப்பூ சாப்பிட்டால் இரத்தத்தில் காணப்படும் அதிக அளவு சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும்.
* பெண்கள் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வயிற்று வலி ஆகியவற்றை போக்கும்.
* வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும்.
இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலக்கடுப்பு, சீதபேதி, மலச்சிக்கல், வாய்ப்புண், செரியாமை, இரத்த மூலம் போன்ற நோய்களை கட்டுப்படுத்தும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு வேக வைத்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு விந்துவை விருத்தி செய்யும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது.
* வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்.
1. தினமும் வாழை இலையில் உணவு சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம், இளைப்பு போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.
2. வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இதை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் குடல் புண், ரத்தபேதி, மூலநோய், பெண்களுக்கு மாத விடாய் வயிற்றுவலி ஆகியவை குணமாகும்.
3. வாழை தண்டுசாறுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே இதை நீர் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனைகுறைக்கும் இதை உலர்த்திபொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாவதுடன்கல்லீரல் வலுப்பெறும்.
4. வாழை பிஞ்சு, காயினால் ரத்த மூலம், ரத்தக்கடுப்பு, வயிற்றுப்புண் நீரழிவு நோய்நீங்குவதுடன் உமிழ்நீர் அதிகம் சுரத்தல், உடல்வெப்பம், இருமல் தணியும்.
5. அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வராது. உடல் தோல் பளபளப்பாகும். பெண்களுக்கு மாத விலக்கு சீராகும். அறிவு விருத்தியாகும். இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும். வாழை பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்சுலின் சுரக்க வாழைப்பூ:
வாழை முழுவதுமாக மனிதர்களுக்கு பயன்படக்கூடியது. வாழை யின் தண்டு, பூ, காய், பழம், இலை, நார், பட்டை எல்லாவற்றை யும் நாம் பயன்படுத்துகிறோம். பெரும்பாலானவற்றில் அதிக சத்து இருக்கிறது. வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம். மொந்தன் வாழைப்பூ, நாட்டு வாழைப்பூ, ரஸ்தாளி வாழைப்பூ ஆகியவை ரொம்பவும் துவர்க்காது.
அவை அதிக சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியத்திற்கும் அவை ஏற்றதாக இருப்பதால்தான் வாழைப்பூ பொரியல், வாழைப்பூ வடை, வாழைப்பூ அடை, வாழைப்பூ தோசை என்று பல விதங்களில் தயாரித்து சுவைக்கிறோம். வாழைப்பூ குருத்தை பச்சையாகவே சாப்பிடலாம். வாழைப்பூவில் இருக்கும் மருந்துவ குணங்கள்:
* வாழைப்பூ சாப்பிட்டால் கணையம் வலிமை பெற்று உடலுக்கு தேவையான இன்சுலினை சுரக்கும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.
* பெண்களுக்கு மாதவிடாய் சீராகும்.
* உடல் சூடு குறையும். குடல் புண் ஆறும்.
* மூலநோய் கட்டுக்குள் வரும்.
* வாழைப்பூவில் உப்பு போட்டு அவித்து அதன் சாறை குடித்தால் வயிற்றுவலி நீங்கும்.
* ஆண்களுக்கு தாது விருத்தி அடையும்.
* மலட்டுத்தன்மையை போக்கும் சக்தி வாழைப்பூவில் இருக்கிறது. வாழைப்பூவை வாழையில் இருந்து முறித்து எடுத்த இரண்டு நாட்களுக்குள் சாப்பிடவேண்டும்
--------------------------------------------------------------------------
குடல் புண்களை ஆற்றும் வாழைப்பூ :-
வாழையின் மருத்துவப் பயன்கள்: ஒரு சாதாரண அளவுடைய வாழைப் பழத்தில் 95 கலோரி சத்தும் வைட்டமின் `சி' சத்தும் நிறைந்துள்ளது. இது உடலுக்கு உடனடியாகப் புத்துணர்வு தருவதோடு எளிதில் செரிமானமாகக் கூடியது. கொழுப்புச் சத்தோ உப்புச் சத்தோ இல்லாதது.
வாழைப்பூ உணவாகவும், மருந்தாகவும் பயன் தரக் கூடியது. வாழைப் பூவில் விட்டமின்கள், ஃப்ளேவனாய்ட்ஸ் , புரோட்டீன் (புரதம்)கள் நிறைந்துள்ளது. பரம்பரை மருத்துவத்தில் ஆஸ்துமா நோயைப் போக்கவும், நெஞ்சுச் சளியைப் போக்கவும் (பிராங்க்கைடிஸ்) மலச்சிக்கலை (கான்டிபேஷன்) தணிக்கவும்,
குடல் புண்களை ஆற்றவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாதவிலக்கு நேரத்தில் அடிவயிற்றையும் இடுப்பையும் கடுமையாக வலிக்கச் செய்து துன்பம் தருகின்ற (மென்ஃட்ருவல் கிராம்ப்) நோயைப் போக்க வல்லது. வாழைப்பூவினின்று எடுக்கப்படும் சத்தில் (எக்ஸ்ராக்ட்) உடலின் திசுக்களை அழிவிலிருந்து காப்பதும், நச்சுக்களைத் தடுப்பதும் ஆன உற்சாகப் பொருள் நிறைந்துள்ளது. (ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ்).
வாழைப்பூவில் பேச்சிலஸ் செரியஸ் எக்னேசியா காலி, மலேரியாவைப் பரப்பும் ப்ளாஸ்மோடியம் பால்சிபாரம் ஆகிய நோய்க் கிருமிகளைத் தடுக்கும் வல்லமை உள்ளது
நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக் கொள்ளும்பூ, வாழைப்பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில்சேர்த்துக்கொள்ள வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக்குணமுள்ள வையே. வாழைப்பூவின் துவர்ப்புச்சுவை நாம் அறிந்த விஷயம்.
அந்தத் துவர்ப்பை போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக்கசக்கிப் பிழிந்து எடுத்து விடுகிறார்கள்.துவர்ப்பு இருந்தால் சுவைஇருக்காது என்பது அவர்களின் எண்ணம்.
ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடலுக்கு வைட்ட மின் 'பி' கிடைக்கிறது. பலவியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன.
தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்வாழைப்பூவைச் சுத்தம் செய்து,
சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டுவந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினை சரக்கச் செய்யும், சர்க்கரை நோயும்கட்டுப்படும். மலம் கழிக்கும் போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால்பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில்குணமாகும்.
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால்உடல் சூடு குறையும். சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். அவர்கள்வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரைஇளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு ஏற்படும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளேஇருக்கும்
வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச்சாறு பிழிந்து சிறிது மிளகுதூள் சேர்த்துக் கொதிக்கவைத்து, அதனுடன் பணங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும்.வெள்ளைப் படுதலால் பெண்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச்சாறு பிழிந்து சிறிது மிளகுதூள் சேர்த்துக் கொதிக்கவைத்து, அதனுடன் பணங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்றுவலி, சூதக வலி குறையும்.வெள்ளைப் படுதலால் பெண்கள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது.
அவர்கள் வாழைப்பூவை ரசம் வைத்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை, கால் எரிச்சலால்அவதிப் படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை, கால்எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும். வறட்டு இருமல்உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் அருந்தி வந்தால் இருமல் நீங்கும்.
வாரம் இருமுறை வாழைப்பூ ரசம் அருந்தி வந்தால் தாது விருத்தி அடையும், சிலர் குழந்தையின்மையால்மனவேதனைக்கு ஆளாவார்கள். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மையைப்போக்கும். இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை கொஞ்சம் தேடிப்பார்த்துசமைய லில் சேர்த்துச் சாப்பிடலாம்!
வாழை_இலை சாப்பாடு ஏன்?
வாழை இலை ஒரு நல்ல நச்சு முறிப்பான். சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும் அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும், வாழை இலை ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு, பாதிப்பின் தன்மையை குறைக்கச் செய்துவிடும். மேலும் வாழை இலையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம் உள்பட பல வகையான சத்துக்கள் நாம் உண்ணும் உணவுடன் கலந்து விடுகின்றன.
சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்?
சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது. சாப்பிடும் பொழுது காலைத்தொங்க வைத்து அமர்வதனால் ரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாகச் செல்கிறது. எனவே ஜீரணம் தாமதமாகிறது. காலை மடக்கி சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பிட, சாப்பிட, சாப்பாடு ஜீரணமாகிவிடும். ஏனென்றால் கீழே ரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
No comments:
Post a Comment