Thursday, February 26, 2015

வாய்ப்புண்

சாப்பிட முடியாமல் திணற வைக்கும் வாய்ப்புண்
வாய்ப்புண் ஏற்பட்டால் சரியாக சாப்பிட முடியாது, சூடான பொருட்களை எடுத்துக்கொள்ள இயலாமல் சிரமத்திற்குள்ளாகுவோம்.
வெறும் வாய்ப்புண்தானே என்று அலட்சியப்படுத்தினால் அது வாய் புற்றுநோயாக கூட மாறலாம்.
வாய்ப்புண்களின் சுற்றளவு ஒரு மில்லி மீற்றரில் இருந்து அதிகபட்சம் 10 மில்லி மீற்றர் வரை மட்டுமே இருக்கும்.
சிறிய வாய்ப்புண்கள் ஓரிரு நாட்களில் ஆறிவிடும். பெரிய புண்கள் அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் ஆறிவிடும்.
சாதாரண வாய்ப்புண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில், சிறுகுழியாக காணப்படும். சிலருக்கு சாம்பல் கலந்த வெள்ளை நிறமாக இருக்கும்.
ஹெர்பஸ் வைரஸ் தாக்குதலால் வரும் வாய்ப்புண்கள், முதலில் கொப்புளமாக ஏற்பட்டு, பிறகு உடைந்து சாதாரண வாய்ப்புண்ணாக மாறும்.
பொதுவாக வாய்ப்புண் கன்னத்தின் உள்பக்க ஓரங்களிலும், உதட்டின் உள்பக்கமும் வரும்.
ஒரு வாரத்துக்கு மேல் வாயில் இருக்கும் புண்கள் ஆறாமல் இருந்தால் மருத்துவரிடம் பரிசோதிப்பது நல்லது. வேறு நோய் தாக்குதலால் கூட வாய்ப்புண்கள் ஆறாமல் இருக்கலாம்.
சில பேருக்கு பற்கள் கூர்மையாக இருக்கும். இவர்கள் சாப்பிடும் போது தெரியாமல் உள் உதட்டை கடித்துவிடுவார்கள்.
இதனால் கூட வாய்ப்புண்கள் உருவாகி சில நாட்கள் நீடிக்கும். உடலில் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுச்சத்துகள் குறைந்தாலும், வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் ஃபோலிக் அமிலம் போதுமான அளவில் இல்லாவிட்டாலும், சரியான நேரத்துக்கு சாப்பிடாதவர்களுக்கும் கூட வாயில் புண் உருவாகும்.
வாய்ப்புண் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
1. மவுத்வாஷ் பயன்படுத்தி வாய் கொப்புளிக்க வேண்டும்.
2. சூடான, காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
3. வைட்டமின் குறைபாட்டால் வாய்ப்புண் வந்திருந்தால் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்.
4. புண்களில் வலி ஏற்பட்டால் அதற்குரிய ஆயின்மென்ட்டை புண்ணில் தடவலாம்.
5. ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இரும்புச்சத்து, தாதுச்சத்துகள் அதிகமுள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
6. புகையிலைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
7. மதுப்பழக்கம் இருந்தால் நிறுத்திவிட வேண்டும்.
8. சரியான நேரத்துக்கு உணவு சாப்பிட வேண்டும்.
9. வேலையினால் ஏற்படும் மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்ற மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபடலாம்.
வாய்ப்புண் நீங்க சில மருத்துவ குறிப்புகள்...
வாய் புண்களுக்கு சிறந்த மருந்து மணத்தக்காளி கீரை, பல இலைகளை வாயில் போட்டு 'கொதப்ப' வேண்டும் பிறகு கொப்பளிக்க வேண்டும். இதை 2-3 தடவை செய்தாலே போதும்.கத்தகாம்பு (Uncaria gambier) நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாயில் போட்டு மென்று உமிழ்ந்தால், வாய்ப்புண் குணமாகும்.
த்ரிபாலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) வினால் வாய்கொப்பளிப்பது சிறந்தது. தேங்காய் பாலால் வாய் கொப்பளிப்பது. எள்ளை பொடியாக்கி, தேனும், நெய்யும் சேர்த்து வாயில் போட்டு சிறிது நேரம் வைத்திருப்பது. அதிமதுரம் அல்லது மஞ்சளை பாலில் போட்டு காயச்சி குடிக்கலாம்.
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 செம்பருத்தி பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
அகத்தி இலையை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறிவிடும்.
மொளவாத்தக்காளி கீரையை வனைக்கி வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும் .
வெள்ளாட்டு பாலினை காலையில் வெறும் வயிற்றீல் குடித்து வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமடையும் .
காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.
நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.
புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும்.
நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும்.
தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.
இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.
ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.
கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.
துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும்.
வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.

'சாப்பிட முடியாமல் திணற வைக்கும் வாய்ப்புண்

வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

அகத்தி இலையை அவித்த தண்ணீர் பருகினால் வாய்ப்புண் ஆறிவிடும்.

மொளவாத்தக்காளி கீரையை வனைக்கி வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும் .

வெள்ளாட்டு பாலினை காலையில் வெறும் வயிற்றீல் குடித்து வந்தால் வாய்ப்புண் விரைவில் குணமடையும் .

காலையில் வெறும் வயிற்றில் சிறு துண்டு மஞ்சள் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப் புண் இருப்பின் குணமடையும். தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் தொற்று ஏற்படாது என்கின்றனர்.

நன்கு பழுத்த தக்காளியை கூழாக்கி அதை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம் அல்லது வெறும் தக்காளியை நன்றாக மென்று சாப்பிடலாம்.

புதினா இலைச் சாற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். எரிச்சல், வலி குணமாகும். எலுமிச்சை தோலை நன்கு அரைத்து வாய்ப்புண் உள்ள இடத்தில் பூசலாம் நிவாரணம் கிடைக்கும். 

நெல்லிக்காயை விதை நீக்கிவிட்டு பேஸ்ட் போல அரைக்கவும். அதை வாய்ப்புண் உள்ள இடத்தில் அப்ளை செய்ய வாய்ப்புண் குணமாகும். 

தேங்காயை அரைத்து பால் எடுத்து ஒருநாளைக்கு மூன்று முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாய்ப்புண் சரியாகும்.

இரண்டு கப் தண்ணீரை கொதிக்கவைக்க வைத்து அதில் வெந்தய செடியின் இலைகளை போட்டு ஊறவைக்கவேண்டும். 10 நிமிடம் கழித்து வெந்தைய இலைகளை எடுத்து போட்டுவிட்டு அந்த தண்ணீரில் வாய்க்கொப்பளிக்க வேண்டும். தினசரி சாப்பிட்ட உடன் இதை செய்து வர வாய்ப்புண் குணமாகும்.

ஒரு சில துளசி இலைகளை பறித்து கழுவிய பின் வாயில் போட்டு நன்கு மெல்லவும். அதன் சாறு வாய்ப்புண் உள்ள பகுதிகளில் படவேண்டும். துளசி இலைகளை முழுவதுமாக மென்று அப்படி விழுங்கிவிடவேண்டும். சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்புண் எரிச்சல் குணமாகும்.

கொய்யா இலையை பறித்து மென்று சாற்றினை விழுங்கவேண்டும். தினசரி மூன்று முறை இதுபோல செய்ய சில தினங்களில் வாய்ப்புண் குணமாகும்.

துவர்ப்பு தன்மை கொண்ட வாழைப்பூ வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும். வாழைப்பூவை வேக வைத்து சூப் வைத்து குடிக்கலாம். இதனால் வாய்ப்புண் சரியாகும். வயிற்றில் ஜீரணக் கோளாறு ஏற்பட்டாலும் நிவாரணம் கிடைக்கும். 

வாழைப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிடலாம் இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்தாகும்.'
================================================

நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் அல்சர் வரும்!

அல்சர்நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்று உங்களுக்கு இத்தனை நாளும் போதிக்கப்பட்டுள்ளது. அல்சர் பெரும்பாலும் நேரா நேரத்திற்குக் கடிகாரத்தைப் பார்த்துச் சாப்பிடுபவர்களுக்கே வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தயிர் சாதமோ அல்லது சாம்பார் சாதமோ எடுத்து வைத்து ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். இப்போது அந்தச் சாதம் கெட்டுப்போய் நாற்றம் எடுக்கும். சில சமயம் புழுக்கள்கூட வந்திருக்கலாம். மீண்டும் அந்தப் பாத்திரதை மூடி அப்படியே வைத்து விடுங்கள். மறுபடியும் ஒரு பத்து பதினைந்து நாட்கள் கழித்துப் பாருங்கள். அந்தக் கெட்டுப்போன சாதம் விஷமாக மாறி, அந்தப் பாத்திரத்தைப் பாதித்து ஓட்டை போட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம் (இதை வீட்டிலேயே சோதித்துப் பாருங்கள்).
இப்போது அல்சர் எப்படி வந்தது என்று உங்களால் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் நினைப்பது போல் நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வரும் என்பதெல்லாம் பொய். பசிக்காமல் நேரத்திற்குச் சாப்பிடும்போதுதான் அல்சரே வருகிறது.
பசித்துச் சாப்பிடும் போதுதான் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. வயிற்றில் நேரத்திற்கு அலாரம் வைத்துக்கொண்டு ஜீரண நீர்கள் சுரப்பதில்லை. அந்தந்த ரேத்திற்கு வருவதற்கு இது ஒன்றும் பேருந்தோ, ரயிலோ அல்ல. என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா, நேரா நேரத்திற்குச் சுரப்பதற்கு அங்கு எந்த விதமான ஏற்பாடும் கிடையாது. மனித உடலானது முற்றிலும் உணர்வுகளால் ஆனது. உணர்வுகளே மனித உடலை வேலை செய்யத் தூண்டுகின்றன, வேலையை முடிக்கவும் தூண்டுகின்றன. செயல்படுத்தவும் வைக்கின்றன. நேரத்திற்கு ஜீரண நீர் சுரந்து விடும். அப்போது வயிற்றில் சாப்பாடு இல்லையென்னறால் அல்சர் புண் வந்துவிடும் என்பது போன்ற காமெடி வேறு எதுவும் இல்லை.
நேரத்திற்குச் சாப்பிடாவிட்டால் அல்சர் வருகிறதென்றால், இந்தியாவில் பெரும்பாலான ஏழை மக்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் அல்சர் வந்திருக்க வேண்டுமே! பெரும்பாலும் அல்சர் வருவது மூன்று வேளையும் நன்கு சாப்பிடுபவர்களுக்கே என்பதைக் கவனியுங்கள்.
நீங்கள் பசிக்காமல் மூன்று வேளையும் சாப்பிடும் போது, ஜீரண நீர்கள் சுரக்காத நிலையில் வயிற்றில் இருக்கும் உணவு அங்கேயே தங்கி, புளித்து, கெட்டு, கெட்ட வாயுக்கள் உருவாகத் துணை புரிகிறது. தினம்தோறும் இதுபோன்ற செயல் தொடர்ந்து நடைபெறும்போது, கெட்டுப் போன உணவு விஷமாக மாறுகிறது. பாத்திரத்தில் வைத்த உணவு எப்படி விஷமாக மாறுகிறதோ…. அப்படி விஷமாக மாறிய உணவு, உங்கள் வயிற்றில் அல்சரை (புண்களை) உருவாக்குகிறது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
ஜீரணம் கெட்டால்தான் அல்சர் வருமே ஒழிய, ஜீரணிப்பதற்கு அங்கு ஒன்றுமே இல்லாத போது அல்சர் வராது. சாப்பிடாமல் இருந்தால் உடல் சோர்வடைந்து, சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அது சம்பந்தமாக நோய்கள் வேண்டுமானால் வரலாம்.
அல்சர் வயிற்றில் மட்டுமல்லாமல், உடலின் எந்தப் பாகத்தில் வேண்டுமானாலும் தோன்றலாம். நாட்பட்டு வெளியேற முடியாமல் தேங்கும் கழிவுகள் அந்த இடத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பாதிக்கப்பட்ட அந்த இடத்தில் புண்கள் உருவாகின்றன. அதையே அல்சர் என்கிறோம். அல்சர் என்ற புண்கள் குணமாக வேண்டுமானால், தேங்கியுள்ள் கழிவுகளை முதலில் வெளியேற்ற வேண்டும். கழிவுகள் வெளியேறாவிட்டால் மீண்டும் மீண்டும் அல்சர் வந்துகொண்டே தான் இருக்கும்.
அல்சர் வந்துவிட்டால் உங்கள் உடலில் கழிவுகளின் தேக்கம் நிறைய உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
Thanks – அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன்
-Regha Health Care

அல்சர் என்பது என்ன?
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம். இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம் அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும்.
சிகிச்சை என்ன?
இரைப்பை புண்ணைக் குணப்படுத்த அமில எதிர்ப்பு மருந்துகள் (Antacids), ‘பிபிஐ’ (Proton pump inhibitor) மாத்திரைகள்/ஊசி மருந்துகள் உள்ளன. இவற்றைச் சரியாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உணவுப் பழக்கத்தைச் சரிபடுத்தி கொள்வதன் மூலமும் 90 சதவிகித இரைப்பைப் புண்ணைக் குணப்படுத்திவிடலாம். ஒரு சிலருக்கு மட்டுமே மாத்திரை, மருந்துகள் பலன் தராது. அவர்களுக்கு மட்டும் அறுவைச் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
1. குளிர்ந்த பால் குடிப்பது வலியைக் குறைக்கும். வயிற்றெரிச்சலை போக்கும்.
2. உங்கள் உணவில் நெய் சேர்த்துக் கொள்ளவும். நோயாளிக்கு நெய் ஜீரணமாகவிட்டால் வெந்நீருடன் சேர்த்து கொடுக்கவும்.
3. இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் கொடுத்தால் நல்லது. வாழைப்பழம் அதிக அமிலத்தை சரிப்படுத்தும். மஞ்சள் வாழைப்பழத்தை விட பச்சை வாழைப்பழம் சிறந்தது.
4. நெல்லிக்காய் சாறை சர்க்கரையுடன் சேர்த்து குடிக்க பலனளிக்கும்.
5. வில்வ இலைகள் / பழங்கள் – இவற்றை சேர்த்து கொண்டால் வயிற்றுப்புண்கள் குணமாகும்.
6. 250 கிராம் முட்டைக்கோசை 500 மி.லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியளவு ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கி குளிர வைக்கவும். இதை கேரட் சாறுடன் சேர்த்து பருகினால் அல்சர் குணமடையும்.
7. பாதாம் பால் (தோலுரிக்கப்பட்ட பாதாம் பருப்புகளால் செய்வது) அல்சருக்கு நல்லது.
8. உடைத்த அரிசியை, ஒரு பாகத்திற்கு 14 பாகம் தண்ணீர் சேர்த்து கஞ்சி தயாரிக்கவும். இது அல்சருக்கு நல்லது. பருப்பு, அரிசி தண்ணீர் சேர்த்து பொங்கல் போல் தயாரித்து உட்கொள்ளலாம்.
9. மாதுளம் பழச்சாறு அல்சருக்கும் நல்லது.
10. திரிபாலா சூரணம் (ஒரு தேக்கரண்டி) நெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேன் 1/2 தேக்கரண்டி கலந்து எடுத்துக் கொண்டால் அல்சர் குணமாகும்.
11. கொத்தமல்லி விதைகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாகத்திற்கு 6 பாகம் தண்ணீர் என்ற அளவில் கலந்து கொதிக்க வைக்கவும். இரவு ஊற வைத்து மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும்.
12. உங்களுக்கு அல்சர் இருந்தால் உளுந்து, கொள்ளு, மதுபானங்கள், சிகரெட், கத்திரிக்காய், மசாலா கலந்த காரசாரமான உணவு இவற்றை தவிர்க்கவும்.
13. உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்கவும்.
14. ஒரே வேளையாக அதிகம் உண்பதை தவிர்த்து, இடைவெளி விட்டு சிறிதாக உட்கொள்ளவும்.
-seithyulagam.com

1 comment: