Sunday, February 15, 2015

வேம்பு / வேப்ப மரம்





+++++++++++++++++++++++++++++++++++++++
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். 



ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. 



சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.



பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். 



அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார் 

தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, 

தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார்;. அப்போது 

சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை 

புனிதமடையச் செய்தது.



அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான 

பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு 

நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று 

வேண்டினாள். 



ஆனால் சிவபெருமான்


என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு 

வந்தது தவறு. எனவே பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் 

பிறப்பாய் என்றார;.



அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் 

போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை 

வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள்.



ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் 

அழைக்கப்படும். 



அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து 

மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார;.



ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப 

மரமாகத் திகழ்கிறாள். 

ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. 



தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக 

உள்ளது. 




நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக 

திகழ்ந்தாள் அந்த மங்கை.

++++++++++++++++++++++++++++++++++++++++
வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் 

நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு 

தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!

வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta 

indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு 

பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி 

வளரும் இயல்புடையது.
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற

மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில்

புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு

தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட

விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்

'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து

பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப்

பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து

தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தார்

புதுச்சேரி சைதன்யா ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமனையின்

தலைமை சித்த மருத்துவர் ஆர்.கல்பனா.
'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக

விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும்

அதிகமான பயன்களைக்கொண்டது.
இலை:
வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக்

கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக

நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து

எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு

உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற

பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம்

கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும்,

வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.


வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் 

சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் 

குணமாகும்.
வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ

வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும்

அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு

ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா

நோய் கட்டுப்படும்.
பூ: வேப்பம்
பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய்,

கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து

சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை,

வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது

செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும்

தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்:
மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும்

தன்மை கொண்டது.


விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் 
செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் 
மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு 
புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும்

எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி

வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.


பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. 
அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் 
நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு 
கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை 
ஆகியன நீங்கும்.
பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் 

உட்கொண்டால், மேகரோகம் குறையும்.

புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். 

இதை 

இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேம்பின் மருத்துவ குணங்கள்: வேம்பு வீக்கம், கட்டிகளைக் 
கரைத்தல்,சிறுநீர் பெருக்குதல், வாதம், மஞ்சள் காமாலை, காய்ச்சல், 
பித்தம், கபம், நீரிழிவு, தோல் வியாதிகள், பூச்சிக் கொல்லியாகவும் பயன் 
படுகிறது. வேம்பு இலையை அரைத்துக் கட்டி வர ஆறாத ரணம், பழுத்து 
உடையாத கட்டி, வீக்கம் தீரும். வேப்பங்கொழுந்து 20 கிராம், 4 கடுக்காய் 
தோல், பிரண்டைச் சாறு விட்டரைத்து அரை அவுன்ஸ் 
விளக்கெண்ணெய் 
கலந்து கொடுக்கக் குடல் பூச்சி வெளியாகும். வேம்பின் பஞ்சாங்கச் 
சூரணம் 10 அரிசி எடை நெய், தேன், வெண்ணெய், பாலில் 2 மண்டலம் 
கொடுக்க எந்த மருந்துலும் கட்டுப் படாத நோய்கள் மதுமேகம், 
என்புருக்கி, இளைப்பு, காசம் ஆகியவை தீரும். உடம்பு கெட்டி படும், நரை 
திரை மாறும்.

வேம்பு இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்துத் தடவி வரப் பொன்னுக்கு 
வீங்கி, பித்த வெடிப்பு, கட்டி, பருவு, அம்மைக் கொப்புளம் ஆகியவை 
குணமாகும். 5 கிராம் உலர்ந்த பழைய வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் 
விட்டு மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் 
தளர்ச்சி நீங்கும். கல்லீரலை நன்கு இயக்குவிக்கும். 3 கிராம் வேப்பம் 
விதையை சிறிது வெல்லம் கூட்டி அரைத்துக் காலை, மாலையாக 40 
நாட்கள் சாப்பிட மூல நோய் தீரும். நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் 
நோய்கள், சூதக சன்னி, நரம்பு இசிவு, குடல் புழுக்கள் தீரும். 50 
ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதிர்ந்த வேம்பின் வேர்ப்பட்டைப் 
பொடியுடன் 
முதிர்ந்த பூவரசம் பட்டைப் பொடி கலந்து 2 கிராம் அளவாகச் சிறிது 
சர்க்கரைக் கூட்டி காலை, மாலை நீண்ட நாட்கள் சாப்பிட்டு வரத் 
தொழுநோய் முதலான அனைத்துத் தோல் நோய்களும் குணமாகும். 
வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு 
விரைவில் மறைந்து விடும்


No comments:

Post a Comment