1. சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக்
கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக
வளரும்.
2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி
நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும்
அடர்த்தியாகவும் வளரும்.
3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம்.
விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட
சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய்
சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.
5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து
தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி
அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து
சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர
ஆரம்பிக்கும்.
7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன்
தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில்
இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி
கருமையாய் செழித்து வளரும் .
8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி
இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய்
வளரும்.
9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து
நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும்
. இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த
இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.
10. மருதாணி இலையை தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி
வடிகட்டி வைத்துகொள்ளுங்கள் . இதனை தினசரி தலைக்குத்
தடவிவர செம்பட்டை மாறி முடி கருமையாகும்.
11. வெந்தயத்தை தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து தலையில்
தேய்த்து, அரைமணிநேரம் வைத்திருந்து குளித்துவிடுங்கள் .
அடிக்கடி பயன்படுத்திவர ,முடி வளரும், முடி கொட்டுதல் நீங்கும் .
12. 1 ஸ்பூன் இஞ்சி சாற்றில் சிறிது தேன் கலந்து
அதிகாலையில் சாப்பிட்டுவர, பித்த நரை, மற்றும் இளநரை
மறையும்.
13. பாதாம் எண்ணெய்யினால் தினசரி தலையில் வேர்க்காலில்
(scalp) குறைந்தது 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவர முடி வளர்ச்சி
அதிகமாகும் .
14. வேப்பிலையை தண்ணீர்லிட்டு கொதிக்க வைத்து அந்த நீரில்
தலையைக் கழுவி வர முடி வளர்ச்சி அடர்த்தியாகும்.
15. பச்சைக் காய்கறிகளை நிறைய சாப்பிடுவதும் பால், பழங்கள்,
முளைக்கட்டிய தானியங்கள், வெண்ணெய், கோதுமை
உணவுகள், சோயாபீன்ஸ், பருப்பு வகைகளை நிறைய
உணவாகக் கொள்வதும் முடியை நன்கு வளர்த்திட ஏதுவாகும்.
16. முடி நன்கு வளர முடி சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல்
இருக்க, இயற்கை முறை ஷாம்புகளையே (natural shampoo)
உபயோகியுங்கள்.
17. தலைமுடியை நெல்லிக்காய் பொடி அல்லது சிகைக்காய்
கொண்டு மசாஜ் செய்து அலசி வாருங்கள். முடி வளர்ச்சி
உண்டாகும்.
18. அடிக்கடி ஆயில் மசாஜ், முடியின் வேர்க்காலுக்கு (scalp)
செய்து வாருங்கள்.
19. மஹா பிருங்கராஜ தைலம்’ அல்லது ‘நெல்லிக்காய் தைலம்
இவைகளைக் கொண்டு தலைமுடிக்கு மசாஜ் செய்திட, முடி
தாராளமாக வளரும்.
20. உடம்பில் மலச்சிக்கல் உண்டானால், உடல் உஷ்ணம்
அதிகமாகி, உடம்பில் பித்தம் அதிகரித்து, தலைமுடி கொட்ட
ஆரம்பித்துவிடும். எனவே மலசிக்கல் இல்லாமல் பார்த்துக்
கொள்ளவேண்டும்.
21. தினசரி செய்துவரும் எளிய உடற்பயிற்சியும் தலைமுடி வளர
துணை செய்யும்.
22. கீரைசூப், காய்கறி சூப், கேரட் சாறு இவைகளை அடிக்கடி
சாப்பிடுவர தலைமுடி நன்கு வளரும்.
23. கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின்
வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய்
வளரும்.
24. தேங்காய் எண்ணெய்யுடன் சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து
தலையில் மசாஜ் செய்துவர, முடி நன்கு வளரும்.
25. பெருஞ்சீரகத்தை(சோம்பு) விழுதாய் அரைத்து, வாரம்
மூன்றுமுறை தலையில் தேய்த்துக் குளித்துவர, முடி
கருமையாய் வளரும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
1. தலை முடி வளர:
அரை லிட்டர் நல்லெண்ணெய்யை காய்ச்சி இறக்கி அதில் ஒரு
கைப்பிடி
கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைக்கவும். இந்த
எண்ணெயை
எண்ணெயை
அடிக்கடி தலையில் தேய்த்துக் குளித்து வரவும். தலையில்
தேய்க்கு
தேய்க்கு
முன் இலேசாக சூடு படுத்தித் தேய்க்கவும்.
தலை குளிக்கப் போகுமுன் பாதாம் எண்ணெயுடன் தேங்காய்
எண்ணெயை சம அளவில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி
நேரம் ஊற வைத்து தலை குளிக்கவும். இது முடி கொட்டுவதையும்
நிறுத்தும்.
ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை குளித்து
வரவும்.
அரை ஸ்பூன் விளக்கெண்ணெய், அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
கலந்து குழைத்து தடவி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
5. பாத வெடிப்பு:
தொடர்ந்து கடுகெண்ணெயைத் தடவி வந்தால் சரியாகி விடும்.
6. தலையில் ஏற்படும் வழுக்கை, சொட்டை முதலியவை நீங்க:
தாமரைஇலைகளைப் பறித்து சாறெடுத்துக்கொள்ளவும். அதற்கு
சமமான அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சவும். நீர்ப்பசை நீங்கி
தைலம் மேலே மிதக்கத் தொடங்கியதும் ஆறவிட்டு பத்திரப்படுத்தவும்.
இதை தினமும் தடவி வந்தால் வழுக்கை மறைந்து முடி நன்கு வளரும்.
தேவையான பொருள்கள்:
பாசிப்பயிறு- 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள்- 100 கிராம்
கசகசா- 10 கிராம்
உலர்ந்த ரோஜா மொட்டு- 5 கிராம்
பூலாங்கிழங்கு- 5 கிராம்
எலுமிச்சை இலை, வேப்பிலை, துளசி இலை மூன்றும் 2 கிராம்.
மொத்தமாக அரைத்து சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் சிறிது எடுத்து தயிரில் கலந்து முகம் கழுத்தில் தடவி வந்தால்
மாசு மருவற்ற முகம் கிடைப்பதுடன் நிறமும் நாளடைவில் சிவக்க
ஆரம்பிக்கும். இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாவரும்
உபயோகிக்கலாம்.
கூந்தல் பளபளப்பிற்கு ?
அழகு மட்டுமின்றி ஆரோக்கியத்தின் அடையாளமாக விளங்குவது
கூந்தல். அளவுக்கு அதிகமான மனஉளைச்சல், உடலில்
சத்துக்குறைவினாலும் கூந்தல் உதிர்வது வாடிக்கை.
ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் தத்தமது தலைமுடியின் மீது
அனைவரும் தனி அக்கறை செலுத்துவது வழக்கம்.
கரு கரு வென கூந்தல் செழித்து வளர வேண்டும் என்பதற்காக
என்னென்னவோ செய்து பார்த்து ஏமாற்றமடைந்தவர்கள் பலர் உண்டு.
முட்டை, பயறுவகைகள், வைட்டமின் சி, இரும்புச்சத்துள்ள
உணவுகளை உட்கொள்வதன் மூலம் தலைமுடியை ஆரோக்கியமாக
பராமறிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூந்தல் பளபளப்பிற்கு
தலையில் தடவுவதற்கு எத்தனையோ விதம் விதமான ஹேர்
ஆயில்கள் இன்று விற்பனை செய்யப்படுகின்றன. இவை தலைமுடியின்
ஆயுளைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுத்தமான
நல்லெண்ணெய்யும் சுத்தமான தேங்காய் எண்ணெய்யும் தவிர வேறு
எதையும் தலையில் படவிடக் கூடாது.
தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப்
பொலிவும் குறையும். அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை
கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில்
உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு
முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை
கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும்.
சிறிது சாதம் வடித்த கஞ்சியில் ஷாம்பூவை ஊற்றி கலந்து தலையில்
தேய்த்து குளித்துப் பாருங்கள் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி
கூந்தல் பட்டுப் போல் பளபளக்கும். கூந்தல் பளபளப்புடன் இருக்க
வாரம் ஒரு முறை ஆலிவ் எண்ணெயைக் கொதிக்க வைத்துத்
தலையில் நன்றாகத் தேய்க்க வேண்டும். சுத்தமான ஆலிவ் எண்ணெய்
மருந்துக் கடைகளில் கிடைக்கும்.
இளநரை நீங்கி முடி கருப்பாக
நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம
அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக்
குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும்
தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய
தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும்
குளிக்க வேண்டும்.
சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப்
பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி
வந்தாலும் குணம் தெரியும்.
சிறிது கருவேப்பிலையை எடுத்து காலையில் தினமும் வெறும்
வயிற்றில் சாப்பிட்டு வரவும். மருதாணி செம்பருத்தி கருவேப்பிலை
மூன்றையும் சம அளவில் எடுத்து மையாக அரைத்து தலையில்
தேய்த்து குளித்து வந்தால் நரைமுடி கருப்பாகி விடும்
பேன், பொடுகு தொல்லை நீங்க
வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற
வைக்க வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக
அலசிவிடவும். இதனால் பேன் தொல்லை குறையும்.
துளசி இலையை நன்றாக மையாக அரைத்து தலையில் தடவி சிறிது
நேரம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் தலையை
கழுவினால் பேன் செத்து உதிர்ந்து விடும் தலைமுடியும் நன்றாக
வளரும்.
50 கிராம் உப்பு கலக்காத வேப்பம்பூவுடன் 100 கிராம் தேங்காய்
எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு
ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத்
தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.
அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு
முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி
விடும். வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில்
தடவி ஊறிய பின் குளிக்கலாம்.
தலை முடி செழித்து வளர
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல
போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து
வளரும். தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற
வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை
இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும். பின்னர் முடி
செழித்து வளரும்.
முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தடவி சிறிது நேரம் கழித்துக்
கழுவி விடவேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை செய்து வந்தால்
செம்பட்டை மறையும்.
ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில்
கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்
--------------------------------------------------------------------
நரைமுடிக்கு 'குட்-பை'
உண்மை உய்யட்டும்! அன்பு பெருகட்டும்!!
மலரட்டும் மெய்நெறி உலகம்
மலரட்டும் மெய்நெறி உலகம்
நரைமுடிக்கு 'குட்-பை' சொல்ல 5 நல்ல இயற்கை வழிகள்!!
நரைமுடி வருவதால் மக்கள் கவலைப்படுவது வழக்கம். ஆனால், மிகவும் அதிகமாகக் கவலைப்பட்டால் நம் தலையில் நரைமுடி தோன்றும் என்பதும் உண்மை தான். ஆணோ, பெண்ணோ... இளம் வயதில் நரை வந்துவிட்டால், அவர்கள் ரொம்பவே வருத்தப்படுவார்கள். நரைமுடி அவர்களுக்கு வயதான தோற்றத்தைக் கொடுப்பதால், அவர்கள் மிகவும் நொந்து போயிருப்பார்கள்.
நரையை மறைப்பதற்கு மக்கள் டை அடிப்பது இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பவுடர் மற்றும் திரவ நிலைகளில் நிறைய கம்பெனிகள் டை தயாரித்து வருகின்றன. அது மட்டுமல்ல, தற்போது பலப்பல வண்ணங்களிலும் நமக்கு இந்த சாயம் கிடைக்கிறது. ஆனாலும் அத்தகைய சாயங்களில் அம்மோனியா உள்ளிட்ட பல ரசாயனங்கள் கலந்திருப்பதால், முடி மற்றும் சருமம் ஆகியவற்றின் ஆரோக்கியம் பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. முடிகள் உதிரவும், சருமங்களில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இதற்கு சரியான மாற்று வழி, ரசாயனங்கள் கலக்காத இயற்கையான முறையில் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட சாயங்களை நாடுவதுதான். முடிந்தால், அவற்றை நாம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். நரை முடிகளுக்கான சில இயற்கை தீர்வுகள் குறித்து பார்க்கலாம். ஏற்கனவே இவை நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் முயற்சித்திருக்கவே மாட்டோம். உடனே முயற்சி செய்து பாருங்கள்; பலன் நிச்சயம்!
தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை :-
தேங்காய் எண்ணெயுடன் சிறிது கறிவேப்பிலையைச் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதைக் குளிரச் செய்து, முடிகளில் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சுமார் அரைமணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பின்னர் மிதமான சுடுநீரில் ஷாம்பு கொண்டு கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். நரை முடியை மறைக்கும் திறன் கறிவேப்பிலையில் உள்ளது.
நெல்லிக்காய் :-
நெல்லிக்காயிலும் நரைமுடியை மறைக்கும் பண்பு காணப்படுகிறது. நெல்லிக்காயைச் சிறுசிறு துண்டுகளாக வெட்டி, நிழலில் நன்றாகக் காய வைக்கவும். பின், சுத்தமான தேங்காய் எண்ணெயில் அதைச் சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின்னர் அது குளிர்ந்ததும் தலையில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். தினமும் காலையில் நெல்லிக்காய் ஊற வைத்த நீரில் தலைமுடியைக் கழுவி வருவதும் நல்லது.
மோர், கறிவேப்பிலை :-
கறிவேப்பிலை கலந்த மோரைத் தலைமுடியில் தேய்த்து, அரைமணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மெதுவாக மசாஜ் செய்து, தண்ணீரில் கழுவினால் சில நாட்களிலேயே நரை ஓடிப் போகும்.
நல்லெண்ணெய் மற்றும் கேரட் விதை எண்ணெய் :-
நரை வராமல் தடுப்பதற்கு, சிறிது கேரட் விதை எண்ணெயுடன் 4 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து தலையில் மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். சிறிது நேரம் கழித்து, ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும்.
எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய், நெல்லிக்காய் :-
இந்த மூன்றும் கலந்த கலவையைத் தயாரித்து 3 நாட்களுக்கு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். அந்தக் கலவையை தலைமுடியில் நன்றாக மசாஜ் செய்து, அரை மணிநேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர், ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நரைமுடிக்கு 'குட்-பை' சொல்லிவிடலாம்.
No comments:
Post a Comment