Friday, August 5, 2016

மலர்களின் மருத்துவ குணங்கள்

மலர்களின் மருத்துவ குணங்கள்:

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வுவை அதிகமாக்கும்.
செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.
செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.
அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.
வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூ, சூட்டை நீக்கும்.
இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.
புளியம்பூ: மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.
மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.
வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.
பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.
முள்முருக்கம்பூ: சூதக கட்டு (மாத விலக்கு தடை) நீங்கும்.
வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும். விந்து விருத்தியாகும்.
தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்.
குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாகும்
மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும்.
பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.
மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.
மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.
புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.
பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.
பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்
சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்
கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.
காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.
தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.
கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.
செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின் உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும்.
களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.
அலா஢ப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.
அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது. ஜீரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.
இலுப்பைப் பூ: ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.
கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.
குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.
சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.
சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.
தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.
வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.
தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.
நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.
முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.
வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.
வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும். வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.
வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

No comments:

Post a Comment