🌺இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை 🌺
இசை மூலம் நம் முன்னோர்கள் சில அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அகத்தியர் பாடியே ஒரு மலையை உருக வைத்தாராம். பேரரசர் அக்பர் அவையில் இருந்த சங்கீதச் சக்கரவர்த்தியான தான்சேன் என்ற இசைக்கலைஞர் “தீபக்” என்ற ராகத்தைப் பாடி அணைந்த விளக்குகளை மீண்டும் எரிய வைத்தாராம்.
நம் நோய் தீர்க்கும் சில ராகங்களையும், அந்த ராகத்தில் அமைந்த திரைப் பாடல்களையும், இந்த ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்டால் தீரும் நோய்களைப் பற்றியும் இங்கே இனி காணலாம்.
அதிகாலையில் கேட்க வேண்டிய ராகம் –
பூபாளம்
* பாடல் : சலங்கயிட்டால் ஒரு மாது
படம் : மைதிலி என்னைக் காதலி
* பாடல் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
படம் : முள்ளும் மலரும்
அந்தி மாலையில் கேட்கவேண்டிய ராகம் –
மலையமாருதம், சக்கரவாகம்
* பாடல் : கண்மணி நீ வர காத்திருந்தேன் – மலையமருதம்
படம் : தென்றலே என்னைத் தொடு
* பாடல் : நீ பாதி நான் பாதி கண்ணே – சக்கரவாகம்
படம் : கேளடி கண்மணி
* பாடல் : பூப்பூக்கும் மாசம் தை மாசம் – மலையமாருதம்
படம் : வருசம் 16
* பாடல் : உள்ளத்தில் நல்ல உள்ளம – சக்கரவாகம்
படம் : கர்ணன்
* பாடல் : ஓராறு முகமும் ஈராறு கரமும்
படம் : டி.எம்.எஸ். பக்திப் பாடல்கள்
* பாடல் : நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு
படம் : தியாகம்
சிறுநீரகப் பிரச்சனை தீரவும், மழை வேண்டியும்-
அமிர்தவர்ஷினி
*பாடல்: தூங்காத விழிகள் ரெண்டு.
படம் : அக்னி நட்சத்திரம்
கடின மனம் இளக கல்நெஞ்சம் கரைய –
அரிகாம் போதி
*பாடல்: கண்ணுக்கு மை அழகு
படம் : புதிய முகம்
*பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்
படம் : புதிய பறவை
*பாடல்: ஒரே பாடல் உன்னை அழைக்கும்
படம் : எங்கிருந்தோ வந்தாள்.
*பாடல்: பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்
படம் : வருசம் பதினாறு.
மனதை வாட்டும் பல துன்பங்களின் தாக்கம் குறைந்து அமைதி ஏற்பட – ஆனந்த பைரவி, ஸ்ரீ ரஞ்சனி, கமாஸ், நாயகி,சகானா, நீலாம்பரி
*பாடல்: நாதம் எழுந்ததடி – ஸ்ரீ ரஞ்சனி
படம் : கோபுர வாசலிலே
*பாடல்: வசந்த காலங்கள் இசைந்து – ஸ்ரீ ரஞ்சனி
படம் : ரயில் பயணங்களில்
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு – ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: கற்பகவள்ளி நின் பொற்பாதங்கள் – ஆனந்த பைரவி
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்.
*பாடல்: வரம் தந்த சாமிக்கு சுகமான லாலி – நீலாம்பரி
படம் : சிப்பிக்குள் முத்து.
*பாடல்: பூவே இளைய பூவே – நீலாம்பரி
படம் : கோழி கூவுது
*பாடல்: சித்திரம் பேசுதடி என் சிந்தை – கமாஸ்
படம் : சபாஷ் மீனா
மனம் சார்ந்த பிரச்சனை தீர –
அம்சத்வனி, பீம்பிளாஸ்
*பாடல் : காலம் மாறலாம் நம் காதல் – அம்சத்வனி
படம் : வாழ்க்கை
*பாடல்: சிந்து நதிக்கரையோரம் அந்தி நேரம் – பீம்பிளாஸ்
படம் : நல்லதொரு குடும்பம்
*பாடல்: தொகை இளமயில் ஆடி வருகுது – அம்சத்வனி
படம் : பயணங்கள் முடிவதில்லை
*பாடல்: வா…வா…வா… கண்ணா வா – அம்சத்வனி
படம் : வேலைக்காரன்
*பாடல்: இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை – பீம்பிளாஸ்
படம் : திருவிளையாடல்
*பாடல்: பன்னிரு விழிகளிலே பணிவுடன்
படம் : சீர்காழி கோவிந்தராசன் பக்திப்பாடல்கள்
*பாடல்: அழகென்ற சொல்லுக்கு முருகா
படம் : டி.எம்.எஸ். பக்திப்பாடல்கள்
*பாடல்: வாராய் நீ வாராய்
படம் : மந்திரி குமாரி
இதய நோய் தீர கேட்க வேண்டிய ராகம் –
சந்திரக கூன்ஸ்
நீரிழிவு நோய் தீர கேட்க வேண்டிய ராகம் –
பகாடி,ஜகன் மோகினி
பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய ராகம்-
அடான
*பாடல்: யார் தருவார் இந்த அரியாசனம் – அடான
படம் : சரஸ்வதி சபதம்
*பாடல்: வருகிறார் உனைத் தேடி – அடான
படம் : அம்பிகாபதி
மனதை வசீகரிக்க, மயக்க –
ஆனந்த பைரவி , உசேனி, கரகரப்பிரியா
*பாடல் : தானா வந்த சந்தனமே – கரகரப்பிரியா
படம் : ஊருவிட்டு ஊரு வந்து
*பாடல் : கம்பன் எங்கே போனான் – கரகரப்பிரியா
படம் : ஜாதிமல்லி
*பாடல்: மெட்டுப்போடு மெட்டுப்போடு –ஆனந்த பைரவி
படம் : டூயட்
*பாடல்: சங்கீதஸ்வரங்கள் ஏழே கணக்கா – கரகரப்பிரியா
படம் : அழகன்
*பாடல்: மாதவிப் பொன் மயிலாள் – கரகரப்பிரியா
படம் : இருமலர்கள்
சோகத்தை சுகமாக்க –
முகாரி , நாதநாமக்கிரியா
*பாடல்: கனவு கண்டேன் நான் – முகாரி
படம் : பூம்புகார்
*பாடல்: சொல்லடி அபிராமி
படம் : ஆதிபராசக்தி
பாடல்: எந்தன் பொன் வண்ணமே அன்பு
படம் : நான் வாழவைப்பேன்
பாம்புகளை அடக்குவதற்கு –
அசாவேரி ராகம்
வாயுத்தொல்லை தீர –
ஜெயஜெயந்தி ராகம்
வயிற்றுவலி தீர –
நாஜீவதாரா
எந்த நேரத்தில் என்ன பாட்டு கேட்க வேண்டும் ?
திருவெண்காடு டி.தண்டபாணி தேசிகர் எந்த நேரத்தில் என்ன ராகத்தில் அமைந்த பாடல்களைக் கேட்கலாம் என்று ஒரு வரையறை கூறுகிறார்.
நேரம்
ராகம்
5-6 மணி (காலை நேரம்)
பூபாளம்
6-7 மணிக்கு
பிலஹரி
7-8 மணிக்கு
தன்யாசி
8-10 மணிக்கு
ஆரபி, சாவேரி
10-11 மணிக்கு
மத்யமாவதி
11-12 மணிக்கு
மனிரங்கு
12-1 மணி (மதிய நேரம்)
ஸ்ரீராகம்
1-2 மணிக்கு
மாண்டு
2-3 மணிக்கு
பைரவி, கரகரப்பிரியா
3-4 மணிக்கு
கல்யாணி, யமுனா கல்யாணி
4-5 மணிக்கு (மாலை நேரம்)
காம்போதி, மோகனம், ஆனந்த பைரவி, நீலாம்பரி, பியாகடை, மலையமாருதம்
No comments:
Post a Comment