Tuesday, June 14, 2016

அனுபவ வைத்தியம்

ॐ வணக்கம் 

அனுபவ வைத்தியம்:

"பெண்களுக்கு மலட்டுதன்மை நீங்கி குழந்தைபேறு உண்டாக அனுபவ வைத்தியம்"

அசொகப்பட்டை ,மலைவேம்பு இலை ,நாயுருவி வேர் ,அரசன்கொழுந்து சம அளவு பொடி செய்து காலை மாலை கால் தேக்கரண்டி அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கர்ப்பபையிலுள்ள அனைத்து குற்றங்களும் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்.

நன்றி வர்மக்கலை ஆசான் எஸ்.கோபாலகிருஷ்ணன்  9894285755.*****************************
1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி 

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு 

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.. 
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.


கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பில்லி வஞ்சனை தீர்க்கும்
        பிரம்ம முனி சூரணம்.

அனைத்து சகோதரர்களுக்
கும் ஆத்ம நமஸ்காரம்.

   சீரகம்  35 கிராம்
அதிமதுரம்  35 கிராம்
சிறுநாகப்பூ  35 கிராம்
கருஞ்சீரகம் 35 கிராம்
லவங்கப்பூ    35 கிராம்
சதகுப்பை     35 கிராம்
கொத்தமல்லி விதை 210 கிராம்
சீனிக் கற்கண்டு  420 சிராம்.

  எல்லாச் சரக்குகளையும்
லேசாக வறுத்து இடித்து
சூரணமாக்கி அத்துடன்
கற்கண்டுத் தூளையும் சேர்த்து 
பத்திரப்படுத்தவும்.

   காலை, மாலை, இருவேளை
சாப்பிடும் முன்பு ஐந்து விரலால் அள்ளும் அளவு
எடுத்து சுடுதண்ணீரில்
சாப்பிட்டு வரவும்.

   பயன்கள்:-  உடம்பு திடமா
கும். குலையெரிவு நெஞ்சு
எரிச்சல் குணமாகி நெஞ்சு
திடப்படும். சிரசு சமபந்தப்
பட்ட தலைவலி காதுவலி
கண்நோய் அனைத்தும்
மற்றும் ஞாபகசக்தி குறைவு
குணமாகி அறிவாற்றல்
பெருகும்.பித்தம் சம்பந்தப்
பட்ட அனைத்தும் தீரும்.
கண் பிரகாசமாகும்.நல்ல
தூக்கம் உண்டாகும்.தீராத
புழுக் கிருமிகள் அழியும்.
இடுப்பு வலி கல்லடைப்பு
தீரும்.வாய் கோணல்  வாய்
குளறுதல் தீரும்.காதுவலி
முதல் இடையில் ஏற்பட்ட
காது கேளாமை நோய் தீரும்
சளி இருமலோடு சேத்துமம்
அனைத்தும் தீரும். தொண்டை புண்  கண்டமாலை உடம்பு
முழுவதும் நீர் சம்பந்தப்பட்ட
நோய் தீரும்.

   இந்த மருந்து சாப்பிட்டவர்
களுக்கு மேற்கண்ட நோய்கள்
குணமாவதோடு   ஏவல்
பில்லி  வஞ்சனை போன்ற

தீயசக்திகளும் விலகும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும் கருஞ்சீரகம்#
மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றாலோ, பி.சி.ஓ.டி எனும் சினைப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியைத் தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துச் சாப்பிட்டுவர, பிரச்னை சரியாகும்.

கர்ப்பப்பை அழுக்குகளை நீக்கும். குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

கருஞ்சீரகம் உடலில் ஏற்படும் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மழைக் காலம் மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கும். சீரகத்தில் இருந்து தைமோக்யூனோன் (Thymoquinone) எனும் வேதிப்பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. இது, செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றுக்கு மருந்து தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது
+++++++++++++++++++++++++++++++++++++
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!

2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.

4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.

6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.

8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.

10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.

11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

வேப்பம் பட்டை, கடுக்காய், கோரைக் கிழங்கு, நிலவேம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு பாதியளவு வரும் வரை சுண்டக்காய்ச்சி அதனுடன் தேன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தலைவலி குறையும்.

உடற்சூட்டை தணிப்பவை

பச்சைப்பயிறு, மோர், உளுந்தவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம் நாவற்பழம், கோவைக்காய், இளநீர்

ருசியின்மையைப் போக்குபவை

புதினா, மல்லி, கறிவேப்பிலை, நெல்லிக்காய், எலுமிச்சை, மாவடு, திராட்சை, வெல்லம், கருப்பட்டி, மிளகு, நெற்பொறி

சிவப்பணு உற்பத்திக்கு

புடலைங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம் கேழ்வரகு,பசலைக்கீரை

மருந்தை முறிக்கும் உணவுகள்

அகத்தி, பாகற்காய், வேப்பிலை, நெய், கடலைப்பருப்பு, கொத்தவரை, எருமைப்பால் . சோம்பு, வெள்ளரிக்காய்

விஷத்தை நீக்கும் உணவுகள்

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், காயம்

பித்தம் தணிப்பவை

சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைவற்றல் செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை
+++++++++++++++++++++++++++++++++
* சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

* அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

* விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

* கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

* சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

* நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

* வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

* பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

* புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.

* பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

* கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.


* முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
++++++++++++++++++++++++++++++++++++
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் ஜாதிக்காயை பொடியாக்கி வைத்துக் கொண்டு ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை போட்டு கலக்கிக் குடித்தால், சில நிமிடங்களில் தூக்கம் வந்து விடும். சூடான நீரில் குளித்தாலும் நல்ல தூக்கம் வரும்.

சிலருக்கு கிழங்கு வகைகளை சாப்பிட்டாலோ, அல்லது வேறு ஏதாவது சாப்பிட்டாலோ வாயுத்தொல்லை வந்து அங்கங்கே பிடித்துக் கொள்ளும். மூச்சு விடக் கூட சிரமப்படுவார்கள். அதற்கு வேப்பம்பூவை உலர்த்தி, வெந்நீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் வாயுத்தொல்லையே வராது.
++++++++++++++++++++++++++++++++++
வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!!!
1)சோடா
இதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.


2)தக்காளி
தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.

3)மாத்திரைகள்
எப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.

4)ஆல்கஹால்
பொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.

5)காரமான உணவுகள்
காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.

6)காபி
காபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

7)டீ
காபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.
8)தயிர்
தயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
9)வாழைப்பழம்
வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.
10)சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
பித்தப்பை கல், சிறுநீரகம் கோளாறு நீங்க 

படிகாரம் - 250 கிராம்
வெடியுப்பு - 150 கிராம்
வெங்காரம் - 100 கிராம்

உப்புகளை சுத்தி செய்து
மண் சட்டியில் அடியில் படிகாரம் அதன் மேல் வெடியுப்பு அதன் மேல் வெங்காரம் இம்முறையில் அடுப்பில் ஏற்றவும். சிறிது நேரத்தில் உருகி பூத்துவிடும். நன்றாக பூத்தபிறகு கல்வத்தில் நெகிழ அரைத்து புட்டியில் அடைக்கவும்.

அளவு : 1/2 கிராம் இரண்டு வேளை

அனுபானம் : நீராகாரம், பால், முல்லங்கி சாறு, இளநீா்
+++++++++++++++++++++++++++++++

பூண்டு 50கி வெந்தயம் 50கி, கருப்பு உளுந்து 50கி, மூன்றையும் அரைத்து அரை லிட்டர் பாலில் வேகவைத்து வற்றும் சமயத்தில் பனங்கற்கண்டை சேர்க்க வேண்டும், இந்த கஞ்சியை சாப்பிட இரத்த சோகை நீங்கி உடல் வலுபெறும் ,மாதம் இரு முறை சாப்பிட்டால் போதும் 

மேலும் இந்த கஞ்சியுடன் ஏலக்காய் கிராம்பு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்களின் வீரிய குறைவு, மலச்சிக்கல், சிறு நீர் எரிச்சல் சரியாகும்.

++++++++++++++++++++++++++++++++

செரிமானமின்மை புளித்த ஏப்பம் ,குமட்டல், பசிஇன்மை, இதற்கு எளிமையான மருந்து இஞ்சி.

            100 கிராம் இஞ்சியைத் தோல்சீவி மெல்லியதாக நறுக்கவும். அதை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் போட்டு இஞ்சி நனையும் வரை எலும்பிச்சை சாறு விடவும். சிறிது உப்பு போட்டுக் கிளறி வெயிலில்  வைக்கவும் .(இந்துப்பு சேர்த்தால்கஊடுதல் நலம் ) சாறு சுண்டி உலர்ந்ததும் நன்கு காயவைதுப் பத்திரப் படுத்தவும்.
                மேற்படி தொந்தரவு ஏற்படும் போது சிறிது வாயில் அடக்கிக்  கொள்ள நல்ல நிவாரணம் கிடைக்கும் .

+++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாதம்-பித்தம்- கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன .வாதம் அதிகரித்தால் உடல் வலி- பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு ,வாந்தி, தூக்கம் இன்மை , கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு .

            இந்த மூன்றையுமே கட்டுப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம்
  பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய் ,காயம் ,உளுந்தம்  பருப்பு வறுத்து வைத்துப் புளி,உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும்.இது இட்லி,தோசை,மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி -சாதத்தில் பிசைந்து எண்ணெய்  விட்டு சாப்பிடலாம் .

        வாய்வு-பித்தம்-கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது.இதனை வாரம்  ஒருமுறை சாபிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும்.எனவேதான் பண்டைய நாளில் அப்பளம்  செய்யும்  போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள் .உணவே மருந்து என்று உண்டார்கள் வென்றார்கள்.

 மழைக்காலம் முடிந்து பனிக்காலம் ஆரம்பிக்கும் தருணம்.இந்த பருவ நிலை மாற்றத்தின் பொது அதிகம் தாக்கும் நோய் வயிற்றுப்போக்கு .இதைக் காலரா என்றும் சொல்வதுண்டு.

                இது மிகவும் கொடுமையான வியாதி.நீர்சத்து இழப்பால் பெரும் பதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை. முற்றிய புளிமரத்துப்  பட்டையை  நாலு விரக்கடை அளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடிவிடவும்.சூடு ஆறியபின் திறந்தால் சாம்பலாக இருக்கும்.அதை தேனில் குழைத்து மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம்.குழந்தைகளுக்கு இரண்டுசிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம் .

            அதன் கூடவே உப்பு -சர்க்கரை `கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்சத்து இழப்பு சமன் செய்யப்படும் .

  அகத்தீ எனப்படும் உட்கட்டைத் தணிப்பதால் இதற்கு அகத்தீ என்ற காரணப்பெயர். இதைப் வொரியல் கூட்டு - சூப் செய்து சாப்பிட வயிற்று வலி வாய்ப்புண் குணமடையும்.
  
      அக்கி எனப்படும் சிரங்கு வந்தால் அகத்திக்கீரையை அரைத்து அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பூசி வர அக்கித் தானே காய்ந்து உதிர்ந்து விடும்.

      இதன் சாறும் தேங்காய் எண்ணையும் சம அளவு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத்தடவிவர கூந்தல் செழித்து வளரும். குறிப்பாக இளநரை மறையும். மூளை உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு மண்டையில் ஏற்படும் கொதிப்பு அதன் காரணமாக ஏற்படும் ரத்த அழுத்தம் குறையும்.

      இது அதிக சத்து உள்ளது. எனவே தான் ஏகாதசி அன்று பட்டினி கண் விழிப்பு செய்து மறுநாள் பாரணை செய்து விரதம் முடிக்கும் போது கட்டாயமாக அகத்திக்கீரையும் நெல்லிக்காயும் உணவில் சேர்ப்பது வழக்கம். பட்டினி கிடந்தகுடலின் உஷ்ணத்தைத் தணிக்கவும் முதல் நாள் பட்டினியால் ஏற்பட்ட சத்து இழப்புகளை ஈடுகட்டவும் இந்த ஏற்பாட்டினை நம் முன்னோர் கடை பிடித்தனர்.

சூடு
         டம்பில் சூடு அதிகம் ஏற்பட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல் வேக்காளம் என அடுக்கடுக்கான பிரச்சனைகள் குறிப்பாக மூளையை அதிகம் பயன்படுத்தும் அலுவல் இருப்பவர்களுக்கு இந்தத் தொல்லை அதிகம் இதற்கு அற்புத நிவாரணி மணத்தக்காளி.
  
      இந்தக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில் பானம் செய்து சாப்பிட விரைவில் நிவாரணம் கிட்டும். கீரையை வெற்றிலைப் பாக்குபோல் வெறும் வாயில் குதப்ப வாய்ப்புண் தீரும். கூட்டு செய்யலாம், இதன் காயை வற்றல் செய்து சாப்பிட இதய வலி குறையும், இந்த வற்றல் மிளகாய் இரண்டையும் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து பாட்டிலில் வைத்துக்கொண்டு சாதத்தில் எண்ணை விட்டுக் கலந்து சாப்பிட வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலி குறையும். இதைப் பூண்டு சேர்த்துக் குழம்பு செய்து சாப்பிட நல்ல செரிமாணம் ஏற்படும். பசியைத் தூண்டும். குறிப்பாக மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை இந்தக் கீரையை சாப்பிடக் கொடுத்தால் மூளைச் சூடு குறைந்து படிப்பில் நல்ல தெளிவு ஏற்படும்.

 சளி பிடித்தால் சனியன் பிடித்ததுபோல என்பது பழமொழி. அதுவும் நெஞ்சுச் சளி என்றால் மிகவும் தொல்லை, இருமல், சுசாசிப்பதில் சிரமம் கூடவே மலச்சிக்கல்.

      இதற்கு அற்புத நிவாரணி ஆடு தொடா இல்லை - ஆடு தொடா இலைக்கு வாசிகா என்று வடமொழியில் பெயர். சித்தமருத்துவத்தில் தெற்குத்தனி இடம் உண்டு. வாசாவா வாசகாகிஷ்டம் போன்ற மருந்துகளின் மூலப்பொருள் ஆடாதோடை தான்.

         இதன் துளிர் சிறிது எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேன் சேர்த்து அருந்தி வர சளி தொல்லை நீங்கும். இதன் வேரை இடித்து சலித்து வைத்துக் கொண்டு சிறிதளவு எடுத்துத் தேன்விட்டுக் குழைத்துச் சாப்பிட துரித நிவாரணம் கிட்டும், சிறுவர் முதல் முதியவர் வரை தேனைச் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரிக்காம்ப்ளக்ஸ் அதாவது டி.வி.யின் ஆரம்பநிலை. இதற்கும் ஆடு தொடா இலை - வேர் அத்தனையும் சிறந்த மருந்து ஆகும்.
  
      நோய்க்கு ஏற்ப ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம். நிச்சயம் குணம் கிட்டும்.

 காய்ச்சல் வந்தபின் இருமல் வருவது வழக்கம். காய்ச்சல் வரும்முன்னே இருமல் வரும் பின்னே என்று புதுமொழி கூறலாம். இருமும் போது சிறுநீர்க் கசிவு ஏற்படுதித் தர்ம சங்கட நிலை. இதற்கு நிவாரணம் மா இலை. முக்கனியில் மூத்த கனி தரும் மாவிலைக் கொழுந்து 10 அல்லது 15 எடுத்துக் கிள்ளிப் போட்டு 1/2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். 1/4 லிட்டராக சுண்டியவுடன் அந்த நீரில் தேன் சேர்த்து மூன்று வேளை பருகவும். இப்படி மூன்று நாட்கள் அருந்திவர நல்ல குணம் கிடைக்கும். குழந்தைகளும் சாப்பிடலாம்.

      தேள் கொட்டினால் கொட்டிய இடத்தில் மாங்காய்ப் பாலை வைத்துத் தேய்க்க உடன் வலி நீங்கும். மாம்பூவை சேகரித்து உலர வைத்து தலையில் சாம்பிராணி போடுவது போல் புகையை விட்டால் கொசு வராது.

        மாவிலை நல்ல கிருமி நாசினி. எனவேதான் நாள் கிழமை திருவிழாப் பந்தல்களில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம். அத்துடன் புனித நீர்த் தெளிக்கும் சடங்குகளிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் மாவிலைப் பயன்படுத்துகிறோம். மாமரத்து சுள்ளிகளை யாகங்களில் பயன்படுத்துவது சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகவே.

         இந்த விஞ்ஞான உண்மைகளை மெய்ஞ்ஞானத்துடன் கலந்த நம் முன்னோர் எத்தனை சிறந்த அறிஞர்கள்


 நூறு கிராம் இஞ்சியை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கவும், அத்துடன் பத்து கிராம் இந்துப்பு சேர்த்து கலக்கவும். அதன்மீது நான்கு எலுமிச்சம் பழத்தைப்  பிழிந்து வெயிலில் வைக்கவும். நீர் சுண்டி ஊறுகாய் பதத்தில் வந்ததும் பாட்டிலில் பத்திரப்படுத்தி சிறிது சாப்பிட பித்தம் காரணமாக ஏற்படும் உபாதைகள் குறையும்.

உடல் சூடு, கண் எரிச்சல், வயிற்றில் வலி என பல வெட்கை நோய்கள். இதைக் கட்டுப்படுத்துவது சோற்றுக் கற்றாழை.
      இதைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் களிக்க மூளையில் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது நீராகாரத்திலோ கலந்து உள்ளுக்கு சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும். இதை இரண்டாகக் கீறி உள்ளே வெந்தயத்தைத் தூவி இறுக்கமாகக் கட்டி வைக்க வேண்டும். மூன்றாம் நாள் வெந்தயம் முளைத்து விடும். அதை உலர வைத்து தேங்காய் எண்ணெயில் ஊற வைத்துத் தலைக்குத் தடவி வர கூந்தல் செழித்து வளரும்.

மஞ்சட்காமாலை     கீழா நெல்லி    இது சிறிய செடி வகை நெல்லி இலை போன்ற அமைப்பு. இலையின் அடியில் சிறிய நெல்லிக்காய் போன்ற காய்கள் இருக்கும். இந்த செடியை வேரோடு எடுத்து அரைத்துப் பசும்பால் விட்டு கரைந்து சாப்பிட நல்ல குணம் கிடைக்கும்.  இதை அரைத்துத் தலைக்குத் தேய்த்துக் குளிக்க மூளை குளிர்ச்சி அடையும். இதன் சாற்றை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தடவி வர செழித்து அடர்ந்து வளரும்.

இரட்டை இலைகளுடன் கூடிய கத்துச் செடி வகை இது. மஞ்சள் நிறப் பூக்கள் நள்ளிரவில் பூக்கும். அதாவது இருள் ஆட்சி செய்யும் நள்ளிரவில். எனவே இதற்கு இருவாட்சி என்னும் காரணப் பெயர்-இது மருவி 'திருவாட்சி' என்று அழைக்கப்படுகிறது. இதன் பூக்கள் இறைவனுக்கு உகந்தது.

         இதன் இலையை வதக்கி அத்துடன் உப்பு - புளி - காயம் - உளுத்தம் பருப்பு வறுத்து சேர்த்துத் துவையல் அரைத்து சோற்றில் கலந்து சாப்பிட்டு வர செரிமானம் ஏற்படும் - சிறு குழந்தைகளுக்கு மேற்படி இலையுடன் ஓமம் சேர்த்துச்சாறு காய்ச்சி வைத்துக் குடிக்க நல்ல நிவாரணம் கிட்டும்.

இதய நோயை எளிதில் கட்டுப்படுத்தும் எளிய மருந்து 'செம்பருத்தி'. இந்தப் பூவை பாலில் இட்டுக் காய்ச்சி அருந்திவர இதய நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கிடைக்கும்போது சேகரித்து உலர்த்தியும் உபயோகிக்கலாம்.

         இதன் இலையை அரைத்து தலைக்குத் தேய்த்துவர மூளை குளிர்ச்சி அடையும். முடி செழித்து வளரும். பூக்களைத் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வரக் கூடுதல் நன்மை கிடைக்கும்.

         கைப்பிடி அளவு ஊறவைத்தப் புழுங்கல் அரிசி, மேற்படி இலை பிடி, அளவு, உப்பு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிடல் குடல் உஷ்ணம் தணிந்து மலச்சிக்கல் தீரும்.

குடற்புண், இரைப்பைப்புண் என்று மருத்துவரிடம் ஓடும் நிலை. இது குழந்தைகள் - பெரியோர் -முதியோர் என எல்லாத் தரப்பினரையும் ஆட்டும்விக்கும் நோய். இதற்கு அற்புத நிவாரணி வாழைப்பூ.

         இதைப் பருப்புடன் சேர்த்துப் பொரியல், கூட்டு அல்லது துவையல் என அடிக்கடி சாப்பிட்டு வர வயிற்றுப் புண்ணைத் தவிர்க்கலாம். வாழைப்பூவின் உள் மொட்டைக் குழந்தைகளுக்கு பாட்டிகள் பச்சையாக உண்ணக் கொடுப்பது வழக்கம். குழந்தைகளும் அதனை விரும்பிச் சாப்பிடுவர். தற்போது இந்தப் பழக்கங்களைக் கைவிட்டதால வந்த விளைவே மேற்படி நோய்கள்.

        இதை இடித்துச் சாறு எடுத்துச் சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நோய்கள் மட்டுப்படும்

வயிற்றுப்போக்கு. இதைக் காலரா என்றும் சொல்வது உண்டு.
  
      இது மிகவும் கொடுமையான வியாதி. நீர்ச்சத்து இழப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கு எளிமையான மருந்து. அதே சமயம் துரித நிவாரணம் தருவது புளியம்பட்டை, முற்றிய புளியமரத்துப் பட்டையை நாலு விரற்கடை அளவு வெட்டி எடுத்து அடுப்பில் போட்டு நன்கு எரிக்கவும். தணலாக மாறியபின் அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு மூடி விடவும். சூடு ஆறிய பின் திறந்தால் சாம்பலாக இருக்கும். அதை தேனில் குழைத்து முதல் மூன்று வேளை சாப்பிட நன்கு குணம் தெரியும். ஒரு வயது குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு இரண்டு சிட்டிகை மருந்தை சிறிது தேனும் வெந்நீரும் கலந்து சங்கால் புகட்டலாம்.

         அதன் கூடவே உப்பு - சர்க்கரை (சீனி) கலந்த வெந்நீரை அடிக்கடிக் கொடுத்து வர நீர்ச்சத்து இழப்பு சமன் செய்யப்படும்.

கடுக்காய் கஷாயம் அல்லது பொடியை இரவு சாப்பிட்டால் காலையில் எளிதாக கழிவுகள் வெளியேறும். குடல் சுத்தமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும். கடுக்காயை இழைத்துப் பற்றுப் போட சேற்றுப்புண் குணமாகும். இதை தேங்காய் எண்ணெய் சேர்த்துத் காய்ச்சித் தலைக்குத் தடவி வர முடி உதிர்தல் குறையும்.

நெல்லிக்காயில் சத்து அதிகம். எனவேதான் ஏழைகளின் ஆப்பிள் என்று இதற்குப் பெயர். நெல்லிக்காய் லேகியம் மிகச் சிறந்த மருந்து. இது காயகல்ய மூலியை. அதாவது எவ்வளவு நாட்கள் ஆனாலும் இதன் குணம் மாறாது.
      இதனை வற்றலாகக் செய்து வைத்துக் கொண்டு தேவைப்படும் போது கருப்பட்டி தேன் விட்டு லேகியமாகக் கிளறி சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிடலாம். ஊறுகாய் துவையல், பச்சடி செய்து சாப்பிடலாம். நெல்லிவற்றலும் மஞ்சலும் சேர்த்து சூடு செய்து நெஞ்சு முகம் கழுத்தில் பற்றுப் போடசளி, சைனஸ், மூச்சுத் திணறல் குணமாகும். இந்த வற்றலை ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர சூடு நீங்கி கூந்தல் செழித்து வளரும். தலையில் அழுக்கு பொடுகு பேன் நீங்கும்.

நமது உடலில் வலிவு குன்றும் போது ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கைக் குறைந்து வெள்ளையணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனை ஆங்கிலத்தில் ஈசனோபீலியோ என்று கூறுவார்கள்.

         இதன் காரணமாக சளித் தொந்தரவு, அடிக்கடி சுரம் என்று வாட்டி வதைக்கும். உடல் அசதி, சோர்வு என தொடரும் தொல்லைகள். இதற்கு எளிமையான மருந்து வேளைப்பூ, இலை, மற்றும் விதை. இது செடி ரகம் உச்சியில் மெல்லி வெண்ணிற இதழ்கள் கொண்ட பூக்கள் பயத்தங்காய் போன்ற காய்கள், ஐந்து இதழ்களுடன் கூடிய இலைகள்.

      இந்தப் பூக்களை வெற்றிலையில் வைத்துத் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல குணம் கிடைக்கும். இதன் இலைகளை வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.இதன் விதைகளை மிளகாயுடன் வறுத்து உப்பு சேர்த்துப் பொடித்து சோற்றில் கலந்து சாப்பிட நல்ல பசி எடுக்கும்.

        சிறுகுழந்தைகளுக்குப் பூவைக் கஷாயம் வைத்துக் கொடுக்க நல்ல பலன் கிட்டும்.

விஷக்கடிக்கு மிளகு மந்திரித்துக் கொடுப்பது என்ற வழக்கம் ஏற்பட்டது.

         மிளகை அரைத்துச் சூடு செய்து பற்றுப் போடத் தலைவி - மூட்டு வலி நீங்கும். மிளகையும் ஜீனியையும் கருக்கிக் கஷாயம் வைத்து சாப்பிட உடல் வலியுடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மிளகை ஊசியில் கோர்த்து விளக்கில் காட்டி அந்தப் புகையை மூக்கில் இழுக்க மண்டையில் நீர்க்கட்டு (சைனஸ்) நீங்கும். மிளகைப் பசும்பால் விட்டு அரைத்து சூடு செய்து தலையில் தேய்த்து தலைமுழுகி வர தூக்கமின்மை, மனஅழுத்தம், தலைபாரம், உற்சாகமின்மை அகலும்.

         எனவேதான் துக்க வீட்டில் மூன்றாம் நாள் அன்று ரத்த சம்மந்தம் உடைய நெருங்கிய உறவுகள் மிளகுப்பால் தேய்த்துத் தலை முழுக வேண்டும் என்று சம்பிரதாயம் ஏற்படுத்தினர் நம் முன்னோர். அத்துடன் மிளகுப் பொடி - மிளகு ரசம், மிளகுக் குழம்பு செய்து சாப்பிட உடல்நலம் சிறக்கும்.

வாத நாராயணன்  இந்தக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வாதநோய் முற்றிலும் குணமாகும். மேலும் வீக்கம் இருந்தால் இந்த இலையை வெந்நீரில் இட்டு நன்கு கொதித்த பின் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும். இந்த இலையை வதக்கியும் ஒத்தடம் கொடுக்கலாம். இலையை அரைத்து சூடு செய்தும் பற்றுப்போடலாம்.

 வாதம்-பித்தம்-கபம் என்ற மூன்று குணங்களே நமது உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வாதம் அதிகரித்தால் உடல் வலி - பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு பசியின்மை, வாந்தி, தூக்கம் இன்மை, கபம் அதிகரித்தால் சளித்தொந்தரவு.

         இந்த மூன்றையுமே கட்டிப்பாட்டில் வைக்கும் அற்புத மூலிகை பிரண்டை. இளம் பிரண்டையை நன்கு வதக்கி, அத்துடன் மிளகாய், காயம், உளுத்தம் பருப்பு வறுத்து வைத்துப் புளி, உப்பு சேர்த்துத் துவையல் அரைக்கவும். இது இட்லி, தோசை, மோர் சாதம் ஆகியவற்றுக்கு சிறந்த கூட்டணி - சாதத்தில் பிசைந்து எண்ணெய் விட்டு சாப்பிடலாம்.

         வாய்வு - பித்தம் - கபம் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத மூலிகை இது. இதனை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். எனவேதான் பண்டைய நாளில் அப்பளம் செய்யும்போது பிரண்டைச் சாறு சேர்த்துச் செய்தார்கள். உணவே மருந்து என்று உண்டார்கள். வென்றார்கள்.

         வாதம் - பித்தம் - கபம் மூன்றும் நம் உடல் நிலையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்போது உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது.

         பித்தம் அதிகரிக்கும்போது உடல் நலக்குறைவு ஏற்படும். வாய்க்குமட்டல், தலை சுற்றல், பசி, ருசியின்மை - தூக்கமின்மை ஆகியவை ஏற்படும். இதைக் கட்டுப்படுத்தும் அற்புத நிவாரணி வேப்பம்பூ. இதைக் கோடைக்காலத்தில் சேகரித்துக் காயவைத்துப் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை வறுத்துப் புளி மிளகாய் உப்பு சிறிது வெல்லம் சேர்த்துத் துவையல் செய்து சிறிது வாயில் அடக்கிக் கொண்டால் நல்ல குணம் கிடைக்கும். வெந்தய ரசம் வைக்கும் போது வெங்காயத்திற்குப் பதிலாக வேப்பம்பூவைச் சேர்த்து ரசம் வைக்கலாம்.


 முழங்கால் முழுங்கைகளில் அடிக்கடி வலி ஏற்படும், நீட்டவோ மடக்கவோ, அதிக சிரமம்-வலி உயிர்போகும். எந்தந்த தைலம் தேய்த்தாலும் சிறிது நேரம் தான் கேட்கும் பின் முன்னிலையிலும் அதிகமான வலி. இதற்கு முடக்கற்றான் நல்ல மருந்து. முடக்குவாதம் போக்கும் மூலி இது. எனவே முடக்கு அற்றான் என்ற காரணப்பெயர்.

         இந்த இலையை கைப்பிடி அளவு 4 மிளகாய் வற்றல் சிறிது உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சிறிது அனைத்தையும் வறுத்து உப்பு, புளி சேர்த்து சாப்பிட்டுவர வலி நீக்கும்.

        இந்த கீரையை கைப்பிடி அளவு 1 டம்ளர் தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

         இந்த கீரையுடன் சுக்கு, பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கொதிக்க வைக்க வைத்து மேல் பூச்சாகவும் உபயோகிக்கலாம்.

       புழுங்கல் அரிசி சிறிது வெந்தயம் முடக்கு அற்றான் இலை அனைத்தையும் முதல் நாள் அரைத்து வைத்து மறுநாள் தோசை வார்க்கலாம்.வாரம் ஒரு முறை முடக்கு அற்றான் இலையை உணவோடு உண்டு வந்தால் முடக்குவாதம் மெல்ல, மெல்ல விலகும்.

தும்பை ஒரு அற்புதமான மருந்து. காலில் முள் தைத்தால் சமயத்தில் அறுவை சிகிச்சை வரை நிலைமை மோசமாவது கண்கூடு. இதற்கு எளிய மருந்து தும்பை.

             10 தும்பை இலைகயை வெற்றிலையில் வைத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். அத்துடன் சுண்ணாம்பில் அவர் அவர் எச்சிலைச் சேர்த்துச் குழப்பி முள் தைத்த வாயில் அப்பவும். வீக்கம் வடிந்து முள் மேலே வந்து விடும். ஆணி விழுந்து இருந்தாலும் மேற்படி முறையில் பிரயோகம் செய்யக் காலப்போக்கில் ஆணி கரைந்துவிடும். கற்பனை அல்ல அனைத்தும் நிஜம்.

        தும்பைச் செடியை வேரோடு பறித்து அரைத்துப் பூசி வர சரும நோய்கள் அகலும். பிடி தும்பைப் பூவை நல்லெண்ணையில் இட்டுக் காய்ச்சித் தலை மூழ்கி வர மண்டைக்கனம் - சைனஸ் அகலும். 

 ஆறாத ரணங்கள்
      கெண்டைக்காலில் முதலில் கொப்புளம் ஏற்படும். பின்னர் புண்ணாகி நீர் வடியும். எவ்வளவு வைத்தியம் செய்தாலும் மீண்டும், மீண்டும் தலைகாட்டும். காலே நிறம் மாறிக் கருத்துவிடும். வில்லங்கமான சரும வியாதி இது. குழந்தைகளுக்கு வந்தால் 'கால்கடுவன்' என்று பெயர். பெரியவர்களுக்கு வந்தால் நரம்புச் சிலந்தி என்று பெயர். இது நீர்பட்ட இடமெல்லாம் பரவும். இதற்கு அற்புத மருத்துவம் காண்போமா?
       சுடுசோற்றில் புளித்தத் தயிர்விட்டுப் பிசைந்து மிதமான சூட்டில் புண்மீது அப்பவும். அதன் மீது பூவரசன் இலையை ஒட்டி நன்கு கட்டவும். மறுநாள் வெந்நீர் ஊற்றிப் புண்ணை நன்கு கழுவவும். மேலே உள்ள அழுக்குகள் நீங்கிப்புண் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதன் மீது நன்கு கனிந்த பப்பாளிப்பழத்தைப் பிசைந்து அப்பவும். அதன் மீது வெற்றிலையை ஒட்டிக்கட்டவும். உள்ளே உள்ள துர்நீர் வடிந்து வீக்கம் குறையும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும். மீண்டும் வராது.

 எலும்பு முறிவு இன்றி நரம்பு பிசகுதல், தசை பிறழ்தல், ரத்தக்கட்டு போன்றமைக்கு எளிமையான மருத்துவம் காண்போமா?

       ஒரு கைப்பிடி அளவு நெல்லை மண்சட்டியில் இட்டு கருகும் வரை வறுக்கவும். பின்பு நைசாகப் பொடிக்கவும். காப்பித்தூள் கலரில் பொடி இருக்கும். சாதம் வடித்த சூடான கஞ்சியில் சிறிது எடுத்து மேற்படிப் பொடியை அதில் கலக்கவும். சேறு பதத்தில் கலந்து மிதமானச் சூட்டில் பற்றுப் போடவும்.

      அரிசி கழுவிய கழுநீரில் புளிய இலை - ஒதியன் இலை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். மறுநாள் அதை சூடு செய்து பற்றுப்போட்டதை நன்கு கழுவவும். மூன்று நாட்களில் நல்ல குணம் தெரியும்.

  நமக்கு, சமயத்தில் சக்திக்கு மீறிய வேலைகளை உள்ள வலுவால் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம். அப்போது கூடுதல் சக்தி வேண்டி பல்வேறு சுரப்பிகளும் அதிக திரவங்களைச் சுரக்கின்றன. வேலை முடிந்ததும், மீதி இருக்கும் திரவங்களால் உடல் சோர்வு, மனச்சோர்வு, கை கால் வலி. அசதி, பசி, ருசியின்மை, எதிலும் பற்றின்றி விரக்தி போன்ற பக்க விளைவுகள் அதாவது நமது உடலில் நெகிழும் தன்மை அதிகரித்து விடுகிறது. இதைத் பொதுவாக "நெகிழ்ச்சி" என்கிறோம். "கண் திருஷ்டி" என்கிறோம். இதற்கு அருமையான மருந்து குப்பைமேனி.

         இதன் வேரை நசுக்கி அத்துடன் இரண்டு தேக்கரண்டி சீனியைச் சேர்த்துக் கருக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். அரை டம்ளராக சுண்டியதும் சிறிது தேன் விட்டு மூன்று வேளை அருந்த உடல் பழைய நிலை அடையும்.

         இதன் இலையை மசியல் செய்து சாப்பிட குடற்புண் குணமாகும். இந்த இலையுடன் சிறிது உப்பு பூண்டு சேர்த்து அரைத்துப்பற்றுப் போட சொரி, சிரங்கு, தேமல் குணமாகும்.


 செரிமானக் கோளாறு:
        பசியின்மை - ருசியின்மை - புளித்த ஏப்பம் - நெஞ்செரிச்சல் - வயிற்று உப்புசம். இந்தக் கோளாறுகள் இன்றைய அவசர உலகில் அனைவருக்கும் ஏற்படும் ஒரு வியாதி. இது முற்றினால் வயிற்றுப்புண் (அல்சர்) ஏற்படும்.

      இதற்கு எளிமையான மருந்து சீரகம். சீராக உள் உறுப்புகளைக் காப்பதால் இதற்குச் சீரகம் என்ற காரணப்பெயர்.

        நூறு கிராம சீரகத்தை மண்சட்டியில் காப்பிபொடி நிறம் வரும் வரை நன்கு வறுக்கவும். அதனை நன்கு பொடி செய்து பாட்டிலில் பத்திரப்படுத்தவும். தினமும் மூன்று வேளை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும். நல்ல நிவாரணம் கிடைக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம். சின்னஞ்சிறு குழந்தைகளுக்குத் தேனில் குழைத்துக் கொடுக்கலாம்.

தொண்டையில் சதை வளர்ச்சி:

      தொண்டையில் வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டைக் கரகரப்பு, இருமல், காதுவலி, அடிக்கடி காய்ச்சல் இவை தொண்டையில் சதை வளர்ச்சியின் அறிகுறிகள். இது முற்றினால் (டான்சில்), அறுவை சிகிச்சை வரை சென்றுவிடும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தாக்கும் நோய் இதை நீக்க எளிய சிகிச்சை காண்போமா?

        ஒரு துண்டு பப்பாளிக்காயை அம்மியில் நசுக்கிச் சாறு எடுக்கவும். ஒரு சிறிய கரண்டி அளவு சாறும் அதே அளவு தேனும் கலந்து தொண்டைக்குள் (டான்சில்) தடவி வந்தால் எச்சிலாக ஊற்றித் துர்நீர் வெளியாகி வீக்கம் வடிந்துவிடும் மூன்று நாட்களில் அறுவை சிகிச்சை இன்றியே முற்றிலும் குணமாகிவிடும் இதைக் குழந்தைகளுக்கும் உபயோகிக்கலாம். வாயில் அடிக்கடி ஒரு சொட்டு மேற்படிச் சாற்றை விட்டு மெல்ல விழுங்கச் செய்யலாம்



1.    மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.

2.    ஆஸ்துமா குணமாக வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும்.

3.    வாழைபட்டையை தீயில் காட்டி சூடேற்றி பிழிந்து ஓரிரு துளிகள் விட காதுவலி குணமாகும்.

4.    கடற்சங்கை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது தடவி வர இரண்டு நாளில் பருக்கள் மறையும்.

5.    வண்டு,பூச்சி கடிக்கு வெள்ளைபூண்டை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும்.

6.    புதிய ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.

7.    சப்பாத்தி பூ இலையை கட்டிகள் மீது கட்டி வந்தால் உடைந்த கட்டிகள் குணமாகும்.

8.    தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு வலி குணமாகும்.

9.    அகத்தி கீரை சாறு,அகத்தி கீரை பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர தொடர் தும்மல் நீங்கும்.

10    .மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.





1 comment:


  1. ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
    சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

    சித்த மருத்துவர் அருண் சின்னையா அவர்களின் ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,

    சர்க்கரை, சொரியாசிஸ், மூட்டு வலி, பக்கவாதம், ஆஸ்துமா, உடல் பலவீனம்,
    ஆண்மைக்குறைவு, குழந்தையின்மை, பால்வினைநோய்கள், விறைப்பின்மை
    விந்து முந்துதல், உயிரணுக்கள் குறைபாடு, பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய்கோளாறுகள்
    நீர்க்கட்டி,சினைப்பைக்கட்டி போன்ற பிரச்னைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம்...

    எங்களது சித்த மருந்துகளை வாங்க http://www.drarunchinniah.in/

    தொடர்புக்கு:
    ஆதவன் சித்தாஸ்ரம் வைத்திய சாலை,
    சென்னை - மதுரை - திருச்சி - பாண்டிச்சேரி - கரூர்

    +91.8608400035, +91.8608400041
    Aadhavan Siddha Groups +91.8754473544


    ReplyDelete