Friday, June 10, 2016

மணத்தக்காளி


Image result for மணத்தக்காளிImage result for மணத்தக்காளிImage result for மணத்தக்காளிImage result for மணத்தக்காளி

மணத்தக்காளி - நலம் தரும் நல்ல கீரை - இயற்கை மருத்துவம் 

மணத்தக்காளி கீரைக்கு மனத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என பல பெயர்களும் உள்ளன.
இதயத்திற்கு வலிமை கொடுக்கும்.மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

 வயிற்று நோய், வயிறு உப்பசம், வாய்வுத் தொல்லை உடையவர்கள் மணத்தக்காளிக்கீரையை சமைத்து உண்டால் நோய்க் கட்டுப்பாட்டுக்குள் வரும்.

கீரையுடன் தேங்காய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் குடல் புண், மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 வயிற்றுநோய், வயிறு பெறுக்கம், வாய்வுத் தொல்லை உடையவர்கள், வாரம் இருமுறை மணத் தக்காளிக் கீரையை சமைத்து உண்டு வர, நோய் கட்டுப்பட்டு குணமாகும்.

 மணத்தக்காளி வற்றல் வாந்தியைப் போக்கி பசியின்மையைப் போக்கும்.கீரைப்பூச்சி என்ற தொல்லை ஏற்பட்டால் மணத்தக்காளி அதனை வெளியேற்றும்.


 மணத்தக்காளிக் கீரை சாப்பிட்டு வந்தால் குடல்புண், நாக்குப்புண், வாய்ப்புண், தொண்டைப்புண், வாய் வேக்காடு, கபம், இருமல், சளி, சலதோசம், மூக்கடைப்பு, தும்மல், காசம், சுவாசகாசம், இரத்தகாசம், இளைப்பிருமல், இரைப்பிருமல், இழுப்பிருமல் என பல நோய்களும் நீங்கும் உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
மணத்தக்காளி வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது. மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய விரை வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.மணத்தக்காளிக்கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வரலாம். 

மலக்கட்டை நீக்கும். நெஞ்சில் கட்டியுள்ள கோழையை அகற்றி வாத ரோகங்களை நீக்கும். மணத்தக்காளி வற்றலுக்கு சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல். இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சோற்றுடன் கலந்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும். ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது. 

நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது. மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூலத்தில் ரத்தம் வருவது நின்றுவிடும். மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும். மணத்தக்காளியிலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும். வெறும் கீரையை உண்டாலே வாய்ப்புண்கள் ஆறும். சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து கீரையை வேக வைத்து உண்டால் புண்கள் சீக்கிரம் ஆறும். குடல் புண்களையும், மணத்தக்காளி ஆற்றும். வாய்ப்புண், நாக்குப்புண், குடல் புண் போன்றவற்றுக்கு மணத்தக்காளி கீரை சிறந்த மருந்தாகும். காய், கீரை இரண்டையும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் சூடு தணியும். உடல் குளிர்ச்சியடையும்.  ஒரு கைப்பிடி அளவு கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்து கஷாயமாக செய்து குடித்தால் சிறுநீர் நன்கு பிரியும். 

நீர்க்கடுப்பு, எரிச்சல் குணமாகும். வாத நோய்கள் குணமாக, மணத்தக்காளி கீரையை உப்பு போட்டு சமைத்து சாப்பிட வேண்டும். கப நோய்களுக்கும் நல்ல மருந்தாகும். கப நோய்கள் தீர, ஒரு கைப்பிடி மணத்தக்காளிக்கீரையை எடுத்து 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் பொடி கலந்து விழுதாக அரைத்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் தணியும். மணத்தக்காளிக்கீரை மலச்சிக்கலை போக்கும்.மணத்தக்காளிப்பழம் கர்ப்பிணிகளுக்கு நல்லது. கருவை வலிமையாக்கும். மணத்தக்காளி இலை, காய், பழம் இவற்றுடன் சேர்த்து இடித்து பிழிந்தெடுத்த சாறு கல்லீரல் வீக்கம், கணைய வீக்கம் ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment