Wednesday, May 18, 2016

ஞானம்

சித்தன் தன்னை ஏன் சித்தன் என்று
கூறுவதில்லை? ஏனெனில் சித்தத்தை
உணரும்போது மௌனமாகிவிடுவர்கள் . ஈசன்
என்ற நினைப்பில் தம்மை முழுமையும்
அர்பணித்து விடுவார்கள்.கடவுளைத்தேடி
எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப்
பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே
பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது
சித்தர் கொள்கை.

வாழ்க்கையில் பல கரடு முரடான பாதைகளை
சந்தித்து வந்த நான். கடவுளை காண
முடியாதா என ஏங்கிக்கொண்டிருக்கும் பல
இதயங்களை போல என் இதயமும் காத்து
இருந்தது என்பது உண்மை. அதிகப் பட்சமாக
அதை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு அனுமதி
இல்லை என்பதே உண்மை.. அவனையே
குருவாக முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும்
போது அவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.அவன்
அருளால் அவன் தாள் வணங்க, அனைத்தும்
அம்சமாக கிடைக்கும்.அதற்காக உங்களின்
நேரத்தை வீணடிக்காதிர்கள் என்பதே என்
கருத்து.
அவன் செயலும் அவனை அன்றி யாரும்
அறியார். இது ஏற்கனவே எழுதப்பட்டதோ
எழுதப்படாததோ என்பது எனக்கு தெரியாது
ஆனால் இதுதான் நிசப்தமான உண்மை.அண்ட
சராசரங்களும் அகில லோகத்தையும்
ஆட்டுவிக்கும் கடவுளுக்கு தெரியாதா நமது
தேடல் என்னவென்று? தேவை என்னவென்று?
அவனை நாடி,அவன் அருளை தேடி, அவன்
பாதம் தொழுவோர்க்குஅன்பே உருவாக அவன்
காட்சி கிடைக்கும்!உங்களுக்கும் குருவருளால்
எல்லாம் சித்திக்க வேண்டுகிறேன்.

ஞானத்தேடலில் இருப்பவர்கள் முடிந்தவரை
அடுத்தவருடன் அரட்டை அடிப்பதை
நிறுத்திவிடுங்கள். உங்கள் எண்ணங்கள்
எல்லாமே இறைவெளியிலேயே லயித்து
இருக்கட்டும். ஞானம் என்பது அவரவர்
மனநிலையை பொறுத்தது எனவே
முடிந்தவரை குண்டலினி தியானம்
கற்றக்கொள்ளுங்கள் இத்தியானம் முடிந்தவரை
உங்களை இப்பிறவியிலேயே ஞானம்
அடையசெய்யும் . இடை இடையே சில
சித்துக்கள் தோன்றும் அதன் பின் செல்லாமல்
இறைவெளி தியானம் என்ற செயலிலேயே
மனத்தை வையுங்கள் வெற்றி நிச்சியம். ஆன்ம
தேடல் உள்ளவர்களுக்கு எனது அறிவுரை
இதுதான். மவுனம் தான் முக்கியம். விந்து
நாசம் செய்யக்கூடாது இது போல் தொடர்ந்து
10 வருடம் இருந்தால் உங்களுக்கு ஞானம்
நிச்சியம்.
ஆத்ம ஞானம் அடையாதமுன் சரீரம் அழிக்கப்படுமானால், திரும்பவும் திரும்பவும் சரீரம் பெற்றே தீர வேண்டும்.  இச்சரீரத்தின் மூலமாக ஒருவன் ஆத்ம ஞானம் அடைய வேண்டும். ஒருவன் இதன் மூலமாக ஆத்ம சாக்ஷாத்காரம் எய்த வேண்டும். அதன் பிறகு இச்சரீரம் எக்கதி அடைந்தாலும் பரவாயில்லை.

No comments:

Post a Comment