Wednesday, May 25, 2016

நலக்குறிப்புகள் 1


"மூலநோயை குணமாக்கும் இலகு வைத்தியம் "

வேப்பமரத்தின் விதைகளைக் கொண்டுவந்து உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து மைபோல் அரைத்து காலை மாலை பாக்களவு வெந்நீரில் 40 நாட்கள் குடித்துவர பூரணமாக குணமாகும், இச்சா பத்தியம்
+++++++++++++++++++++++
பல் துலக்கப் பற்பொடி

சாக் பவுடர் - 1 கிலோ
பொரித்த படிகாரம் - 1 கிலோ
இந்துப்பு - 1/4 கிலோ

இவைகளை தனித்தனியே அரைத்து ஒன்றாக கலந்து புட்டியில் அடைக்கவும். அவ்வளவு தான்.

தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பற்கள் உயிருள்ளவரை பாது காக்கலாம்.
+++++++++++++++++++++++++++++
தூக்கம் வர

தூக்கம் வர மருதாணிப் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்து சாம்பிராணியுடன் கலந்து புகை பிடித்தால் தூக்கம் வரும்.

கசகசாவை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கி 1 கிராம் பொடியை எடுத்து 1 டீஸ்பூன் கற்கண்டுடன் பால் சேர்த்து குடித்து வந்தால் நன்றாக தூக்கம் வரும்.
+++++++++++++++++++++++++
"கற்றாழை நாற்றம்  நீங்குவதற்கு இலகு வைத்தியம்"

ஆவாரை பஞ்சாங்க சூரணம் [இலை,பூ,காய்,பட்டை,வேர்] 300 கிராம் ,கோரைக்கிழங்கு  சூரணம் 50 கிராம் ,கிச்சிலிக்கிழங்கு சூரணம் 50 கிராம் ஒன்றாய் கலந்து வைத்துக்கொண்டு தினந்தோறும் உடம்பிற்குத் தேய்த்து குளித்து வந்தால் கற்றாழை நாற்றம் தீரும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
"மூட்டுவீக்கம் தீருவதற்கு இலகு வைத்தியம்"

சுக்கு 50 கிராம் பெருங்காயம் 50 எடுத்து பசும்பால் விட்டு அரைத்து மூட்டுகளில் பற்று போட்டு வர வலியும் வீக்கமும் தீரும் 
நன்றி 
வர்மக்கலைஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
www.aadhisakthivarmakalai.blogspot.com
www.aadhisakthivarmakalai.com

Varmakalai Gopalakrishnan /facebook
++++++++++++++++++++++++++++++
"பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் வரும் பெரும்பாடு எனும் அதிக ரத்தப்போக்கு தீர அனுபவ வைத்தியம்"

இது கர்ப்பபையில் புண் இருப்பதனால் உண்டாகும் பிணி , அளவுக்கு மீறி ரத்தப்போக்கு ஏற்படும் ,

இதற்கு மருந்து 'வில்வ இலையுடன் சிறிய வெங்காயம் சேர்த்திடித்து சாறு பிழிந்து சம எடை சுத்தமான விளக்கெண்ணை சேர்த்து காய்ச்சி ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு காலை வெறும் வயிற்றில் ஒருதேக்கரண்டி வீதம் தொடர்ந்து ஏழு நாட்கள் சாப்பிட கர்ப்பப்பை புண்கள் ஆறும் ,ரத்தப்போக்கு நிற்கும்
++++++++++++++++++++++++++++
"இரத்த விருத்தியடைய இலகுமுறை வைத்தியம்"

சிறுகீரையை சுத்தம் செய்து  பருப்புடன் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டுவர இரத்தவிருத்தி ஏற்படுவதுடன் உடலும்அழகு பெறும்

கொத்துமல்லி கீரையை பசுமையாக வாங்கி வந்து நறுக்கி நெய்யில் வதக்கி சூடான சாதத்தில் கலந்து சாப்பிட இரும்பு சத்து ஏராளமாக கிடைத்து இரத்த விருத்தி அடையும்.
++++++++++++++++++++++
ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்*!!!

01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!

02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!

03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!

04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!

05. காது மந்தம் போக்கும் தூதுவளை!

06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!

07. பித்த மயக்கம் தீர புளியாரை!

08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!

09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!

10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!

11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!

12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!

13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!

14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!

15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!

16. இளைத்த உடல் பெருக்க மிளகு!

17. பொடுகைப் போக்க தயிரில் குளி!

18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!

19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!

20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!

21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!

22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!

23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!

24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!

25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!

26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!

27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!

28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!

29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!

30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.

"உடலில் நஞ்சை ஏற்றும் ரகசிய வித்தை"

கார்த்திகை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும்போது அதிகாலை வேளையில் வேப்ப மரத்தின் கொழுந்தை ஒரு கைப்பிடி நிறைய எடுத்து நன்றாக மென்று தின்னவும் ,இப்படியே ஆறு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர நமது உடல் நஞ்சாக மாறும் ,நம்மைகண்டதும் விஷ பூச்சிகள் பயந்து ஓடிவிடும் ,பாம்புகூடநம்மைகடித்தாலும் அதுஇறந்து விடும் ,நாம்யாரையும்கடித்துவிட கூடாது ,
[சாப்பிடும் போது பால் சாதம் மட்டும் சாப்பிட்டு பத்தியம் காக்கவேண்டும் ]
கருவூரார் வாத காவியம்
+++++++++++++++++++++++++++++
"நரைமுடி  கருப்பாக மாறுவதற்கு அனுபவமுறை"

கறிவேப்பிலையை  மூன்று கைப்பிடி அளவு எடுத்து அரைத்து அரைலிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணையில்  கலக்கி நன்றாக தைலமாக காய்ச்சி வடித்து வைத்துகொண்டு தினந்தோறும் தலைக்கு தேய்த்துவரவும்.
தாமரை பூவை சிறிதளவு எடுத்து தண்ணீர் விட்டு கசாயம் வைத்து காலை மாலை பருகி வரவும்.
நரை,திரை மாறும்.
நன்றி
வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755
+++++++++++++++++++++++++
சளிக் காய்ச்சல்
புதினா கீரையை நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ டிகாஷன் போல் செய்து சாப்பிட்டால் சளியால் வரும் காய்ச்சல் குணமாகும்.

இருமல், தொண்டை கரகரப்பு
பாலில் பூண்டைப் போட்டு காய்ச்சிக் குடித்தால் இருமல், ஜலதோஷம், தொண்டைக் கரகரப்பு போகும்.

சளி
பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.

டான்சில்
வெள்ளைப் பூண்டு, இஞ்சி சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால் டான்சில் கரையும்.

வயிற்றுப் போக்கு
சிறிது கசகசாவுடன் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து வாயில் போட்டு சாப்பிடவும். இது போல் வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வந்தால் மூன்று நாளில் குணமாகும்.

வாயுக் கோளாறு
மிளகைப் பொடி செய்து பெருங்காய பவுடர் சேர்த்து தினமும் சுடுநீரில் கலந்து ஒரு தேக்கரண்டி சாப்பிட்டால் வாயுக் கோளாறு நீங்கும்.

நெஞ்சு சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.

சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.

பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.

சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.

மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்
++++++++++++++++++++++++++++
1. உடல் சக்தி பெற
இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1 முடி சாப்பிட்டு வர உடல் சக்தி பெறும்.
2. முகப்பொலிவிற்கு
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.
3. முடி உதிர்வதை தவிர்க்க
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.
4. வேர்க்குரு நீங்க
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.
5. இரத்த சோகையை போக்க
பீர்க்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர ரத்த சோகை நீங்கும்.
6. பசி உண்டாக
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
7. சேற்றுபுண் குணமாக
காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.
8. வெட்டுக்காயம் குணமாக
நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசிவர விரைவில் ஆறிவிடும்.
9. பற்கள் உறுதியாக இருக்க
மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.
10. தொண்டை கம்மல் தீர
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.
11. தும்மல் நிற்க
தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.
12. படர்தாமரை போக்க
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
13. வயிற்று வலி நீங்க
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
14. அஜீரணசக்திக்கு
சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சர்க்கரை கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம் நீங்கிவிடும்.
15. அறிவு கூர்மை அடைய
வல்லாரை இலையை உலர்த்தி பொடியாக்கி நெய்யில் கலந்து அருந்தலாம் .
16. சிலந்தி கடிக்கு
தும்பை இலை சாறு எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து. தும்பை இலை சாறு சாப்பிடவும்.
17. வயிற்று நோய் குணமாக
சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட வயிற்று நோய் குணமாகும்.
18. உடல் வலிமை பெற
அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊளை சதை குறையும். உடல் வலிமை பெறும்.
19. சீதள பேதியை குணப்படுத்த
100 மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
20. சுகப்பிரசவம் ஆக
ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.
21. வீக்கம் குறைய
மல்லிகைப்பூவை அரைத்து வீக்கமுள்ள இடங்களில் தடவிவர வீக்கம் குறைந்து குணமாகும்.
22. குடல் புண் ஆற
வில்வபழத்தை பொடி செய்து கால் கிராம் சாப்பிட்டால் விரைவில் பலன் கிடைக்கும்.
23. நரம்பு தளர்ச்சி நீங்க
தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
24. காய்ச்சல் குணமாக
செண்பகப் பூவை காயவைத்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.
25. நாக்கில் புண் ஆற
அகத்தி கீரையை அலசி சுத்தம் செய்து அவித்த அந்த ரசத்தை 3 வேளை சாப்பிட்டால் குணமாகும்.

No comments:

Post a Comment