Saturday, July 11, 2015

தென்னை தேங்காய் cocanut

தேங்காய் தண்ணீர் மருத்துவம்,,
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள்.இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?
இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?
அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...சரி,இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.
1 நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2 தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்
3 சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.மேலும் தேங்காய் தண்ணீர்உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4 செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது.இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
5 எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
6 உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
7 தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8 நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
9 கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்
++++++++++++++++++++++++++++++++கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்தேங்காயில் உள்ள “ஃபேட்டி ஆசிட்” (Fatty Acid) உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.தேங்காயில், தேங்காய் எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம். உடலுக்கு ஆகாது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் தேங்காயைத் தொடக்கூடாது” என்ற பிரசாரத்துக்கு இந்த ஆய்வு பெரும் சவால் விடுத்துள்ளது.
அதேவேளையில் பூலோகத்தின் கற்பக விருட்சம் என்று சொல்லி தென்னையையும் அதன் முத்தான தேங்காயையும் சித்த மருத்தவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் காலம் காலமாகப் போற்றி வருகின்றன.
தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது இளநீரில் உள்ள புரதச் சத்து.
சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகளில் தென் னையின் பயன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தென்னையின் வேரிலிருந்து குருத்து வரை எல்லாப் பாகங்களிலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடப்பதாகச் சொல்கிறது சித்த மருத்துவம்.
தேங்காய், தேங்காய் எண்ணெய் உடல் நலத்துக்குக் கேடு என்ற பிரசாரம் தேங்காய் எண்ணெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் அவதூறு என்கிறார்கள் நமது பாரம்பரிய மருத்துவர்கள். தேங்காய், தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. விருந்து, விழாக்கள், பண்டிகைகள், சடங்குகள் என எல்லா இடத்திலும் தேங்காய்க்கு முதல் மரியாதைதான்.
தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.
தேங்காய் உள்பட தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் பொருள்களில் உள்ள மருத்துவக் குணங்கள் குறித்து ஓர் அலசல் :
ஆண்மையைப் பெருக்கும் கொப்பரை. தேங்காயில் உள்ள சத்துக்கள் என்ன?
புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?
தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.
மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
தைலங்கள்:
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.
எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.
பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.
வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.
தேங்காய் அல்லது தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்த்தால் அது உடலில் உள்ள கொழுப்பைக் குறைப்பது எப்படி?
மீடியம் செயின் ஃபேட்டி (Medium Chain Fatty Acid) ஆசிட் தேங்காயில் அதிகமாக உள்ளது. உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளன. இதனால் தேங்காய் எண்ணெய் உரிய அளவு தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும் என்று அண்மைக் கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன.
வைரஸ் எதிர்ப்பு: தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. தேங்காயில் உள்ள மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வைரல் லோடைக் குறைக்கிறது. தேங்காயில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. இதன் மூலம் சக்தியை அதிகப்படுத்துகிறது.
ஆண்மைப் பெருக்கி : முற்றிய தேங்காய் ஆண்மைப் பெருக்கியாகப் பயன்படுகிறது. அதில் வைட்டமின் இ முதுமையைத் தடுக்கிறது. தைராய்டு சுரப்பின் செயல்பாட்டை ஊக்கப்படுத்துகிறது.
குழந்தை சிவப்பு நிறமாக..... குழந்தைகள் நல்ல நிறமாக பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூ சாப்பிடுவது வழக்கம். அதுபோல் குழந்தை நல்ல நிறமாகப் பிறக்க தேங்காய்ப் பூவை சாறாக்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.
இளநீரின் மருத்துவக் குணங்கள் என்ன?
மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.
இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் தென்னம் பூ
வயிற்று கோளாறுகளை சரிசெய்யும் தென்னம் பூ

தென்னையின் பூ சிறுநீரை பெருக்கும். உடலின் வெப்பத்தை அகற்றும் தன்மை கொண்டது. மேலும் இது உடலை வலிமையுடையதாக்கும். இளம் தென்னங்குருத்தை தின்று வந்தால் சளி நீங்கும். 

இரத்த மூலம் தீரும். தென்னம் பூவை இடித்து சாறு பிழிந்து 150 மிலியுடன் அதே அளவு எலுமிச்சை சாறு பிழிந்து கொடுத்து வந்தால் ரத்தபேதி, சீதபேதி, வயிற்றுக்கடுப்பு, நீர்ச்சுருக்கு தீரும். தென்னம்பூ ஒரு பிடியை வாயிலிட்டு மென்று தின்றுவர வெள்ளைபடுதல், உட்காய்ச்சல், ரத்தவாந்தி, உடல் கொப்புளம் ஆகியவை தீரும். 

வெடிக்காத தென்னம் பாளையில் உள்ள பிஞ்சுகளை பசும்பால் விட்டு அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து காய்ச்சிய பாலில் கலக்கி காலை மாலை 48 நாட்கள் கொடுக்க நரம்புத்தளர்ச்சி, விரைவாதம், தாதுநீர்த்து போயிருப்பது போன்றவை நீங்கி உடல் பலமாகும். இளந் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை (சுமார் 100 மிலி) நாள்தோறும் காலையில் குடித்து வர மிகையாக சிறுநீர் கழிவது, மதுமேகம்(சர்க்கரை), வயிற்றுக்கடுப்பு, மூலம் குணமாகும். 

முற்றிய தேங்காயை துருவி விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டில் வர விதை வீக்கம் கரையும். மார்பகத்தில் கட்டி வந்தால் பால் சுரப்பு நின்று விடும். தென்னம் பூவை மென்று சாப்பிட்டு வந்தால் வெள்ளைபடுதல் நோய் குறையும்


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேங்காயில் இருக்கு அழகும் ஆரோக்கியமும் !
கல்பனா தேவி  சித்த மருத்துவர்
மருதமலை முருகன்  வேளாண் விஞ்ஞானி
‘பூலோகக் கற்பக விருட்சம்’ தென்னை மரத்துக்கு இன்னொரு பெயர்... தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மகத்துவமானது. தேங்காய் என்றால் சமையலுக்குத் தேங்காய்ப்பூ, தலைக்குத் தேய்க்க, தேங்காய் எண்ணெய் என இரண்டே உபயோகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், தென்னையின் ஒவ்வொரு பகுதியும் அழகுக்கும் ஆரோக்கியத்துக்கும் பயன்படக்கூடியது.
தென்னம் பூ (பூம்பாலை)
தென்னை மரத்தின் பூ, சாப்பிடத்  துவர்ப்பாக இருக்கும். அதிக ரத்தப்போக்கு இருக்கும் பெண்கள், காலையில் வெறும் வயிற்றில் தென்னம் பூவைச் சாப்பிட்டு, உடனே பால் குடித்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, காலை உணவைச் சாப்பிடலாம்.  மாதவிலக்கு ஆகும் சமயத்தில், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால், அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும். மேலும், கர்ப்பப்பை பிரச்னைகளைச் சரிப்படுத்தும்.
வெயில் காலத்தில் ஏற்படும் கடுப்புக் கழிச்சல் எனப்படும் வயிற்று வலி. இதனால், சிலருக்கு மலம் கழிக்கும்போது, ரத்தம்கூட வரலாம். இதற்குத் தீர்வாக, தென்னம் பூச்சாறு, தயிர் - தலா 100 மி.லி, அரை எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து குடித்தால், வயிற்று வலி குறைந்து, மலம் கழிப்பது சுலபமாகும். ரத்தம் வெளியேறுவதும் நிற்கும். 

தென்னம் பூ, களர்ச்சிக்காய், நெருஞ்சி முள் ஆகியவற்றை 20 கிராம் அளவுக்குச் சம அளவில் எடுத்து, 100 மி.லி ஆட்டுப் பாலில் வேகவைத்து, உலர்த்திப் பொடியாக்கி, 48 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டுவர, விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறும்பை
முதிராமல் உதிரும் தேங்காய்க்குக்  குறும்பை என்று பெயர். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், நெஞ்சு எரிச்சல்,  தீப்புண்ணுக்கு, குறும்பை நல்ல மருந்து. விஷம் குடித்ததால்  குடல் மற்றும் வயிற்றுப் பகுதியில்  ரணமாகியிருப்பவர்கள், அதிக மருந்து உட்கொண்டு வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள்,  அதிக மது குடித்து குடல் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது குறும்பையைத்தான்.

குறும்பையைச் சின்ன சின்னதாக நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவைத்து, அது கால் லிட்டர் தண்ணீராகச் சுண்டிய பின், வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடிக்க வேண்டும்.

குருத்து
இளநீரை வெட்டும் போது வெள்ளைப் பகுதியாக சிறிது தடிமனாக இருப்பதுதான் குருத்து. இளம் தென்னங் குருத்தில் அதிகப் பலன்கள் உள்ளன. இது துவர்ப்புச் சுவையைத் தரும். வெள்ளைப் பகுதியை (குருத்து) நறுக்கி, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்கவிட்டு,  கால் லிட்டர் தண்ணீராக மாறிய பின் குடிக்கலாம். வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் வரை குடித்துவர, மூலம், ரத்த மூலம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.


இளநீர்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டும் ஒரே அளவு என்பதால், அவசர காலத்தில் குளுக்கோஸுக்குப் பதிலாக, இளநீரையே சிலசமயம் நேரடியாக  ரத்த நாளத்தில் ஏற்றுவார்கள். அவ்வளவு மருத்துவப் பயன்கொண்டது. இளநீரை வெறும் வயிற்றில் குடிக்கவே கூடாது. அப்படிக் குடித்தால், இரண்டு நாட்கள் வரை வயிறு உப்பசமாக, மந்தமாக இருக்கும். காலை உணவு அல்லது மதிய உணவு முடிந்து, இரண்டு மணி நேரம் கழித்த பிறகே, குடிக்க வேண்டும்.
முற்றாத இளநீரைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். நீர்க்கடுப்புப் பிரச்னை இருந்தால், வெட்டிய இளநீரில் இரண்டு கிராம் சீரகத்தைப் போட்டு, ஒரு மணி நேரம் கழித்து சீரகம் கலந்த இளநீரைக் குடிக்கலாம்.
சீரகம், சிறுபயிறு தலா இரண்டு கிராம் எடுத்து, இளநீரில் ஆறு மணி நேரம் ஊறவைத்துக் குடிக்க வேண்டும். ஊறிய சீரகம் மற்றும் சிறுபயிறை நன்கு மென்று சாப்பிடலாம். தீவிரமான நீர்க்கடுப்பு, நெஞ்சு எரிச்சல், வயிற்று எரிச்சல், சிறுநீர் கழிக்காமல் இருத்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்னைகள் குணமாகும்.
தேங்காய்ப் பால்
வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாக, அரை மூடி தேங்காயிலிருந்து எடுத்த பாலில், சோம்பு கால் ஸ்பூன் கலந்து, குடிக்க வேண்டும்.  வண்டு, பூரான், அட்டைப் பூச்சிக் கடிக்கு வலியைப் போக்க, தேங்காய்ப் பாலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்கலாம். பூச்சி கடித்த இடங்கள், ஜலதோஷத்தினால் மூக்கில் ஏற்படும் புண்களுக்கு தேங்காய்ப் பாலில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க ரணம் குணமாகும். அட்டைப் பூச்சிக்கடியின் மேல் தேங்காய்ப் பாலுடன், சுண்ணாம்பை சேர்த்து வைக்கலாம்.
தேங்காய்
தேங்காய்த் துருவல் 1/2 மூடி, பனங்கல்கண்டு 2 ஸ்பூன், 3 துளி நெய் கலந்து வாணலியில் வறுக்க, பாகு சேர்த்த பர்பி போல மாறும். அதை,  மிதமான சூட்டில் குழந்தைகளுக்குக் கொடுக்க, சளி, இருமல் நீங்கிவிடும். மலம் மூலமாகச் சளி வெளியேறும். இதைச் சாப்பிட்ட பின், தண்ணீர் குடிக்கக் கூடாது. பெரியவர்கள், இதோடு சிறிது சுக்குப் பொடி சேர்த்துச் சாப்பிட்டால், சளி, இருமல் தொல்லை நீங்கும்.
தேங்காய் அழகுப் பலன்கள்
தாவர எண்ணெய்களில் தேங்காயில்தான் கிளிசரின் அளவு (13.5) அதிகம். கொப்பரையிலிருந்தும் தேங்காய்ப் பாலிலிருந்தும் என இருமுறைகளில் தேங்காய் எண்ணெய் எடுக்கலாம். தேங்காய் பாலிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய் சருமத்திற்கு மிகவும் நல்லது.
தேங்காய்த் துருவலை அடுப்பில்வைத்து வதக்கினால், எண்ணெய் போல மிதக்கும், அவற்றை அப்படியே எடுத்து, மெல்லிய வெள்ளைத் துணியில் வைத்து, அம்மைத் தழும்புகள் இருக்கும் இடத்தில் தொடர்ந்து ஒற்றி எடுக்க, அம்மைத் தழும்புகள், கரும்புள்ளிகள் மறையும்.
ஒரு முழுத் தேங்காயிலிருந்து எடுக்கப்பட்ட பாலை, அடுப்பில் வைத்துக் காய்ச்ச, அது எண்ணெயாக மாறும். அதைக் கரும்புள்ளிகள், அம்மைத் தழும்புகள், தீப்புண், வெட்டுக் காயங்கள், சொறி, சிரங்கு ஆகியவற்றில் மேல் பூசிவர, காயங்கள் தழும்புகள் மறைந்து அழகான சருமம் கிடைக்கும். பூஞ்சைத் தொற்றால் ஏற்படும் படர்தாமரைக்குக்கூட, இந்த எண்ணெயைப் பூசலாம். 
தலையிலும் சருமத்திலும் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு, செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன் ஐந்து வெப்பாலை இலைகளைப் போட்டு மூன்று நாட்கள் வெயிலில்வைத்து, தலையிலும், சருமத்திலும் தடவினால், பொடுகு குணமாகும். உடல் முழுவதும் மசாஜ் செய்ய குழந்தைகளுக்குச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையே சிறந்தது.
சிரட்டை (தேங்காய் ஓடு) மூலமாகத் தயாரிக்கும் கான்சன்ட்ரேடட் எண்ணெயை, சித்த மருந்துக் கடைகளில் வாங்கி, அனைத்து சருமப் பிரச்னைகளுக்கும் தடவலாம். 
தேங்காய், இளநீர், தென்னம் பூ போன்ற தென்னை மரங்களின் மூலம் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ‘நாரிகேளாஞ்சனம்’ என்ற மையை, குறைந்த அளவில் எடுத்து, கண் மையாகப் பூசிவரலாம். இதனால், கண் வலி, கண் புரை, கண் தொற்று, கண் நோய்கள், பார்வைத் திறன் குறைதல் போன்றவை வராது. மாதவிலக்கு சமயங்களிலும், கருவுற்றபோதும், எண்ணெய் குளியல் எடுத்த அன்றும் இந்த மையைப் பூசக் கூடாது.

-----------------------------------------------------------------------------------------------

coconut-oil-01
Coconut oil is called as ‘the healthiest oil on earth’ and there are facts to prove this. In fact, Ayurvedic medicine had recognized coconut oil to be beneficial as much as 4000 years ago and has incorporated it for its medicinal values. After extensive research, it has been scientifically proven that coconut oil brings about several benefits such as skin care, weight loss, maintaining proper cholesterol levels, hair care, maintaining digestion and metabolism, increasing immunity, etc.
People hesitate to use coconut oil due to their fear that it is an artery clogging fat oil. An anti-tropical and anti-saturated fat oil campaign particularly in the 1980s is responsible for this notion. Fats are divided into three categories depending on their molecular chain length as short chain, medium chain and long chain fatty acids. Health benefits are observed from short chain and medium chain fatty acids. Coconut oil contains a lot of medium chain triglycerides.
Coconut oil also contains capric acid, caprylic acid and lauric acid. Lauric acid in particular is extremely beneficial and is found in mother’s milk. It destroys harmful viruses and bacteria, thus improving immunity. Lauric acid is a component critical to the building of a baby’s immune system. Added to this, coconut oil has several antioxidant, antibacterial, antifungal and antimicrobial properties. This explains how coconut oil improves the immune system of a human being. Coconut oil is also reported to be beneficial for internal organs such as the kidneys and the heart. The most benefited organ is undoubtedly the liver. Medium chain fatty acids assist in maintaining liver health and minimizing free radical formation.

Coconut oil contains an abundance of minerals, vitamins, fiber and other nutrients. Over ninety percent of the oil is made of saturated fats. The best part is that these fats are naturally occurring fats. Artificially created fats are produced through the process of hydrogenation and this is harmful for the human body. As a matter of fact, there was a study conducted to see the effect of the saturated fats in coconuts on the human body. In this study, it was found that people inhabiting the South Pacific Islands follow a diet containing a high amount of coconut and they do not suffer from any clogged arteries. In fact, their cardiovascular systems were found to be in excellent condition.
There are many profound benefits of adding coconut oil to one’s diet.
Coconut oil stimulates the metabolism of a person and causes better functioning of the thyroid. It also removes stress that would affect the pancreas.
Since this oil contains medium range fatty acids and some short range fatty acids as well, it can help in keeping off additional weight. In a study, it was reported that including coconut oil in a person’s regular diet leads to losing belly fat.
The lauric acid concentration in coconut oil is as high as fifty percent. This prevents high blood pressure and high cholesterol levels. Coconut oil does not lead to an increase in the LDL levels.
Incidence of injuries to the arteries is also reduced and as a result, atherosclerosis is prevented.
The saturated fats found in coconut oil prevent the growth of parasites and fungi responsible for indigestion and other complicated problems such as irritable bowel syndrome.
Studies have shown that coconut oil is best for cooking. On heating, oils such as soy oil, corn oil, sunflower oil, canola oil and safflower oil produce trans-fats and toxins. Coconut oil is found to be stable in the high temperatures produced during cooking.
Coconut oil has several advantages even when applied on the skin.
When applied on a dry scalp, it prevents the growth of dandruff. In countries such as India, it is used as a conditioner and massaged on the head. Coconut oil, when massaged on the face and body, delay skin sagging and wrinkle formation.
Problems such as eczema, dry flaky skin, dermatitis and psoriasis can be cured by regular application of coconut oil.
Coconut oil is often the main ingredient of several soaps, shampoos, lotions and creams.
In fact, coconut oil can be applied on cuts and other wounds. In such situations, coconut oil forms a shield and prevents the entry of viruses, bacteria and dust on the wounded area. This is a very critical function and aids in repairing the damaged tissues.
Among other oils coconut oil is considered to be light, sweet and nourishing as well as soothing and calming for the skin and nerves.
Coconut is slimy and heavy by nature. The taste and the after taste are sweet. As per Ayurvedic view, it assists in balancing body systems distortion caused by aggravation of the Vata and Pitta doshas. Thus coconut is regarded to be extremely useful in curing related ailments.
Ideal for Weight Loss
Coconut oil promotes metabolism. Coconut oil contains medium and short range fatty acids that can be easily digested. It is highly beneficial for women to lose waist circumference and abdomen fat. The coconut fats can be digested easily and also converted into energy.
Nutritional Diet Supplement
Coconut oil improves the ability of the body to utilize efficiently the blood sugar. This reduces having blood sugar. In fact, coconut oil has many antioxidants and so resists oxidation. This makes this oil completely saturated, which means it does not oxidize fats into toxins and can tolerate high heat while cooking.
Boon for Hair
Coconut oil is ideal as hair care and can cure hair maladies such as dandruff, hair fall and damaged hair. It has naturally calming and cooling properties and so is highly beneficial for hair conditioning, hair growth and toning. It also repairs dry and damaged hair, so that it combats dandruff and helps in hair growth.
Healing Property
Coconut oil when applied on wounds prevents entry of virus, bacteria and dust. It speeds up the healing process. It has the property to decrease inflammation, heal wounds and burns of the skin, besides repairing the damaged tissue and cooling by nature
+++++++++++++++++++++++++++++
coconuts are one of the wonder foods on earth that amply provides for all human needs.  They can even save your life!
 
Few people (even fewer doctors) understand how important the coconut is to stabilizing blood sugar; lowering cholesterol; healing; hydration; and even replacing blood plasma in an emergency.
Click here to join World Malayali Club

Referred to as kalpa vriksha(Sanskrit for "the tree that supplies all that is needed to live") in ancient India, the coconut palm has been recognized as a top immune booster, antifungal,antibiotic,antiviral and antibacterialremedy for thousands of years all over the world.  Yet, it has only been recently that modern researchers have begun to fully discover the massive health benefits this amazing fruit seed offers. 
To give just one example of coconuts' live-saving properties, they were used extensively in the Pacific during World War II.  Since blood plasma supplies were scarce, it was very common for medics to siphon pure coconut water from young coconuts to be used as emergency plasma transfusions for soldiers who were injured.  Since coconut water is nearly identical to human blood, it was suitable for people of all blood types.

Because of its strong antioxidant properties, the coconut can be used to:
==> Lower cholesterol
==> Improve digestion
==> Ward off wrinkles
==> Stabilize glucose levels
==> Fight off viruses
==> Build cells
==> Regulate hormones
==> Increase thyroid production
==> Lose weight
==> Increase metabolism
==> Fight infections
==> Stave off memory loss
==> Kill bacteria
==> And more!


Considered one of the most treasured foods of all time, coconut products -- including coconut flesh, coconut water, coconut oil, and coconut cream -- each deliver superb health benefits.
 
Coconut oil, for instance, is considered the best and safest oil to use for cooking -- even superior to extra virgin olive oil when it comes to giving the body what it needs for optimum health.  Unlike other fats and oils that we  typically use for cooking and baking, coconut oil does not form polymerized oils or dangerous trans fatty acids in our bodies, which can raise our cholesterol levels; clog our arteries and even make our skin sag and wrinkle.  Plus, this ultra-safe oil can give your body important antioxidants that can help build stronger cells and improve your overall health and well being.

Here are a few ways that you can use coconut products to stave off disease and to recapture the look and feeling of youth:

Coconut Water - The coconut is a natural water filter.  It takes almost 9 months for a coconut to filter every quart of water stored within its shell.  This makes the resulting coconut water completely pure and sterile, which is one reason why it can be used for blood transfusions.
Another benefit of coconut water is the fact that it has the highest concentration of electrolytes than anything else found in nature. This makes it an excellent source of hydration.

Coconut Oil - In addition to being superior for cooking and baking, coconut oil also makes a superb topical oil that can help to naturally rid the skin of dangerous toxins.  It also gives the skin the perfect mix of hydration and antioxidants that it needs to stay healthy, smooth and younger-looking longer.

Another great benefit of coconut oil is in protecting your teeth from the bacteria that can cause cavities and disease.  Simply rubbing a little fresh coconut oil on your gums and teeth can keep them stronger and healthier than virtually any other dental treatment.

Most people don't realize that coconut oil can actually help you lose weight!  Yes, simply changing your cooking oil from the unsaturated fat variety to coconut oil can help you lose those extra pounds.  Here's why:  Unsaturated fats found in canola, corn and other vegetables oils, as well as margarine  suppress the metabolism, which makes it harder to lose weight -- and easier to gain it.  Over time, this metabolism suppression may result in 20-30 pounds of excess weight that your body cannot get rid of.  Coconut oil, on the other hand, helps to increase thyroid function and boost your metabolism -- 2 important components to shedding unwanted pounds.


Coconut Cream - The best skin treatment product one can use to achieve flawless skin may quite possibly be coconut cream.  Unlike traditional skin creams which can actually introduce fats and oils to the skin that will break it down over time, making it look older, creams derived from the coconut can actually replenish the skin, giving it a more youthful and healthy glow than most other skin care products on the market. 


When it comes to buying coconut products, coconuts are notall created equal.  Wild coconuts are always best, but can be hard to obtain if you don't live in a tropical country.  Whether you are using this wonder food to boost your immune system; increase your metabolism or fight wrinkles, using products from young coconuts will help you reap the most benefit. 



Young coconuts contain the purest unsaturated fat, compared to the fat found in the more mature varieties.  This is why they offer the most rejuvenation properties for the body's tissues.  But how can you tell how old a coconut is?  Young coconuts are usually green in color and oddly shaped.  The brown hairy ones are mature coconuts, and while they offer a lot of healthy benefits, they aren't nearly as good for you as younger varieties. 

The best place to find young fresh coconuts is, of course, in the markets of the tropics, so be sure to seek them out if you travel to those areas.  Coconut-producing regions export coconuts all over the world, however, so it's relatively easy to find coconuts at your local health food store or Asian grocer

No comments:

Post a Comment