Monday, April 27, 2015

தேன / Honey 1




உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு 

ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். பிறகு 10 தினங்கள் தொடர்ந்து 

செய்து வந்தால் ுடல்புண்கள் ஆறிவிடும். கடுமையான 

வயிற்றுவலி, உள்ளவர்கள் கொதிக்கும் தண்ணீர் ஒரு கப் 

எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேனை கலந்து 

ஆற்றவேண்டும். குடிப்பதற்கு போதுமான அளவு சூட்டுடன் அந்த 
நீரை குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதனால் வயிற்றுவலி, 
நின்றுவிடும், ஜீரணக்கோளாறுகளும் குணமாகும்.


வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல் இருந்தால் உணவுக்கு 

ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீஸ்பூன் தேன் அருந்த 

வேண்டும். தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால் வயிற்றில் 

ஏற்படும் எரிச்சல், இரைச்சல் ஆகியன குணமாகிவிடும். இஞ்சியை 

சிறு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் 

வைத்து சிவக்கும்படி வறுக்கவேண்டும். அதில் ஒரு கப் நீரையும் 

இரண்டு டீஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்சவேண்டும். 

சுண்டக்காய்ந்ததும் இறக்கி வடிகட்டி அருந்த வேண்டும். இப்படி 

இருவேளை அருந்தினால் செரிமானம் ஆகாமையால் 

ஏற்பட்ட பேதி நின்றுவிடும்.

ஒரு டீஸ்பூன் மிளகைத் தூள் செய்து மெல்லிய துணியில் 
சலித்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் தூள் எடுத்து 
அதனுடன் தேன் கலந்து உட்கொள்ளவேண்டும். 
செரிமாக்கோளாறுகளால் ஏற்பட்ட வயிற்றுநோய் குணமாகும். 
அகத்திக்கீரையைக் காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் 
வேகவைக்கவேண்டும். அதை சாறுபிழிந்து எடுத்து அதனுடன்

தேன்

கலந்து அருந்தினால் எல்லாவித வயிற்றுக்கோளாறுகளும் 

குணமாகும்.  
ஆலமரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பால் எடுத்து 

அதில் 1 டீஸ்பூன் தேன் 
கலந்து அருந்த வேண்டும். அருந்தினால் 

வயிற்றிலுள்ள புழுக்கள் 
வெளியேறும், வயிற்றிலுள்ள 

புண்களும் குணமாகும்.

குப்பை மேனி செடியின் வேரை இடித்து கஷாயமாக்க வேண்டும். 
அக்கஷாயத்தில் 30மில்லி எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து 
அருந்தினால் வயிற்று புழுக்கள் வெளியாகும். பத்து கொன்றை 
மரப்பூக்களை 100மில்லி பசும்பாலில் இட்டு காய்ச்சி பூ நன்றாக 
வெந்ததும் வடிகட்டி அதனுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து

அருந்தலாம். 

இதனால் வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுபுண், குடற்புண் 
ஆகியன 

குணமாகும். சீதளபேதியை குணப்படுத்த 100மில்லி 

ஆட்டுபாலை ஒரு 
டீஸ்பூன் தேன் கலந்து அருந்தவேண்டும்.

1 தம்ளர் வெந்நீரில் 1 டீஸ்பூன் தேன் கலந்து பின்பு அதில் அரை 
எலுமிச்சைபழ சாற்றையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் 
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும். நுரையீரலில் சேர்த்துள்ள

சளி 

எல்லாம் கண் காணத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் 
வயிற்றுக்கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும்

எல்லா 

வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் 
நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும் 
அதிகாலையிலும், படுக்கச்செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.

நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா 
இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காயவைக்கவேண்டும். 
பின்பு 1டீஸ்பூன் வீதம் காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு 
இருமல் குணமாகிவிடும். என்றும் இளமையுடன் இருக்கவேண்டுமென 
விரும்புவோர் தினமும் தேனை அருந்த வேண்டும். நாற்பது வயதை 
கடந்தவர்கள் தினனும் தேனை அருந்தலாம். ஒரு டீஸ்பூன் தேனை 
சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் 
திகழும்.

சிலருக்கு கை, கால்கள், விரல்கள், மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும் 
இவர்கள் தினமும் ஒரு தம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து 
சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள். ஒரு மேசைக்கரண்டி 
தேனை இரவில் படுக்கும் போது உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் 
கழிக்கும் நிலை மாறும். நரம்புத்தளர்ச்சிக்குத் தேனைவிட சிறந்தமருந்து 
இல்லை. தேனை துளசி சாறில் கலந்து உபயோகிப்பது சளி தொண்டை 
வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்தொல்லை போன்றவைகளுக்கு 
மிகவும் நல்லது
-----------------------------------------------
தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்?
+++++++++++++++++++++++++++++++++
பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், 

இதயம் பலம் பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால்

நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்

கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் 

குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் 

இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து 

சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். ரோஜாப்பூ குல்கந்தில் தேன்

கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும். தேங்காய்பாலில் தேன்

கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது 

வீக்கம் குறையும்.


சுத்தமான தேனை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

ஒன்று : கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீர் எடுத்துக் 

கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும். அது 

கரையாமல் கலங்காமல் அப்படியேஅடியில் சென்று படிந்தால் 

ஒரிஜினலாம்.

இரண்டு : எவ்வளவு நாள் இருந்தாலும் எறும்பு மொய்க்காதாம்.
மூன்று : ஒரு சிறிய துண்டு நியூஸ் பேப்பரை எடுத்து அதன்மேல் 
இரண்டு சொட்டுத் தேனைவிட்டால் அது பேப்பரின் பின்புறம் 

ஊறி கசியாமல் இருந்தால் சுத்தமான தேனாம்.
நான்கு : பார்ப்பதற்கு தூய செந்நிறமாக இல்லாமல் சற்று 

இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிது தொட்டு நக்கினால் 

தித்திப்பு நாக்கில் நீண்ட 
நேரம் இருக்காது. கூடவே சுவைத்தபின் மஞ்சள், சிவப்பு என்று 

எந்தக் கலரும் நாக்கில் ஒட்டியிருக்காது!

இந்த நான்கு முறையுமே நல்ல தேனைக் கண்டுபிடிக்க 

நடைமுறைக்கு  ஒத்துவரவில்ல என்றால்,
தூய தேனைக் கண்டுபிடிக்க இன்னுமொரு சோதனை முறை:
1. நல்ல மணலில் ஓரிரு சொட்டு தேனைச் சொட்டவும்.
2. ஒரு நிமிடம் காத்திருக்கவும்.
3. குனிந்து தேனை வாயால் ஊதவும்.
தேன் மட்டும் உருண்டோடினால் அது தூய தேனாம்.
மணலின் உள்ளே இறங்கி விடுவது போலி / கலப்படம்!
--------------------------------------------------------------------------
அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்
தேனின் பயன்கள்
மார்க்கெட்டில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருள் தான் தேன் என்றாலும், அது தரமான தேனா என்று பார்த்து வாங்குங்கள். தேனில், வெல்லப்பாகு அல்லது சர்க்கரைப்பாகு அல்லது சில சமயங்களில் தண்ணீர் கலந்தும் கலப்படமான தேன் விற்கப்படுகிறது. கலப்படம் செய்யப்பட்ட தேனில் இயற்கையான மருத்துவக்குணங்கள் இருப்பதில்லை.தேனின் பயன்கள் நமக்கு கிடைக்க வேண்டுமெனில் தேனை வாங்கும் போது கவனமாக இருங்கள்.நல்ல தேனை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், அந்தக் கம்பெனித் தயாரிப்புகளையே தொடர்ந்து வாங்குங்கள்.
சுத்தமான தேனா அல்லது கலப்படம் செய்யப்பட்ட தேனா என்று சோதனை செய்ய ஒரு எளிய வழி, அதனை உறைய வைத்துப் பார்ப்பது ஆகும். அதற்கு வாங்கிய தேனை, வீட்டு குளிர்சாதனப் பெட்டியில் ஃப்ரீசரில் ஒரு மணிநேரம் வைத்திருந்து எடுத்துப் பாருங்கள். சுத்தமான தேன் என்றால், அதே பிசுபிசுப்புடன் பாகு நிலையிலேயே இருக்கும். கலப்படம் செய்யப்பட்ட தேன் என்றால், உறைந்திருக்கும்.
கலப்பட தேனுக்கான அறிகுறிகள்!!!
வீட்டு தேன் பாட்டிலைச் சுற்றி எறும்புகள் மொய்க்கின்றனவா? அப்படியென்றால் அது கலப்படமான தேன். சுத்தமான தேன் எறும்புகளை அண்டவிடாது.
சிறிது நாள் கழித்து தேன் படிகங்களாக அடியில் படிகிறதா? அப்படியென்றால், அது கலப்படமான தேன் ஆகும். ஏனெனில் அதில் சர்க்கரைப்பாகு கலக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்.
இனி தேனின் மருத்துவ குணங்களை பார்ப்போம்.
சிறு சிறு தேன் துளிகள் சருமத்தைப் பராமரிக்கும் பணியினை ஆச்சரியப்படத் தக்க வகையில் செய்யும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதுவரை பருகும் தேநீரில் சர்க்கரைக்கு மாற்றாக தேனைப் பயன்படுத்தியிருப்பீர்கள். இப்போது அழகுப் பராமரிப்பிற்கு தேனைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக தேனானது சருமத்தை மென்மையாக்குவது மட்டுமன்றி, அதனுடைய பாக்டீரியா எதிர்ப்புக் குணமும், ஈரமாக்கும் தன்மையும், சருமத்தின் குறைபாடுகளைப் போக்கி, அதன் இளமைத் தன்மையைப் பேணுகின்றது. மேலும் இந்த தேன் சருமத்திற்கான பராமரிப்பில் மட்டுமின்றி, கூந்தல் பராமரிப்பிற்கான அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது.பண்டைக் காலத்திலிருந்து சிறந்த உணவுப் பொருளாக பயன்படும் தேன் தற்போது, சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்புக்கும் பயன்படுகிறது. மொத்தத்தில் அழகுப் பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக தேன் இருக்கும்.
அழகு பராமரிப்பில் தேனின் பங்கும் பயன்களும்
இப்போது கூந்தல் பராமரிப்பிற்கும், சருமப் பராமரிப்பிற்கும் சில தேன் கலந்த வீட்டுக்குறிப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்திப் பாருங்கள்.
சிக்கலற்ற பட்டுப் போன்ற கூந்தல் வேண்டுமா? அதுவும் குறிப்பாக மழைக்காலங்களில் கூந்தல் எண்ணெய் பசையின்றி பட்டுப்போல மென்மையாக இருக்க வேண்டுமா? அப்படியாயின் இம்முறையைப் பயன்படுத்திப் பாருங்கள்.
ஒரு கிண்ணத்தில், இரண்டு மேசைக்கரண்டி தயிர், இரண்டு முட்டைகள் (வெள்ளைக்கரு மட்டும்), எலுமிச்சைச் சாறு, ஐந்து துளி தேன் ஆகியவை கலந்து கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்துக் கொள்ள வேண்டும். பின் அரை மணிநேரம் கழித்து, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். இதனால் கூந்தலானது பட்டுப்போல மென்மையாகி இருப்பதைக் கவனிப்பீர்கள்.
பளபளப்பான கூந்தலுக்கு
தேனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து கூந்தல் மீது தடவி, சிறிது நேரம் கழித்துத் தண்ணீரில் அலசினால், கூந்தல் பளபளப்புடன் இருப்பதைக் காண முடியும்.
தேவையற்ற முடிகளை நீக்குதல்
முகத்தில் வளர்ந்துள்ள தேவையற்ற முடிகளை நீக்க விரும்பினால், இம்முறையைச் செய்து பாருங்கள். ஒரு கிண்ணத்தில், ஒரு தேக்கரண்டி தேன், ஒரு மேசைக்கரண்டி சர்க்கரை, சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு கரண்டி கொண்டு நன்றாக அடித்துக் கலக்கிப் பசை போலாக்குங்கள். பின் இதனை அப்படியே ஒரு மைக்ரோவேவ் ஓவனில் மூன்று நிமிடங்கள் வைத்து சூடு செய்யுங்கள். பிறகு வெளியே எடுத்து, கை சூடு தாங்கும் பதத்தில் வந்ததும், அதனை முகத்தில் முடி வளர்ந்துள்ள பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். குறிப்பாக முடியானது எந்த திசையை நோக்கி வளர்ந்துள்ளனவோ, அந்தத் திசைகளில் தடவ வேண்டியது முக்கியம். இப்போது ஒரு சுத்தமான பருத்தியால் ஆன துணி ஒன்றை எடுத்துக் கொண்டு, முகத்தில் இக்கலவை தடவிய பகுதியின் மேல் போர்த்தி அழுத்தி எதிர்த்திசையில் இழுங்கள். இப்போது முகத்தில் உள்ள முடிகள் வேரோடு அகற்றப்பட்டுவிடும். இதனால் முகத்தில் நீண்ட காலத்திற்கு முடிகள் வளராமல், முகம் வழவழப்புடன் திகழும்.
மாசு மருவற்ற சருமம் முகத்திலுள்ள சருமம் மாசு மருவின்றித் திகழ வேண்டுமென்று விரும்புகிறீர்களா?
அப்படியெனில் பின்வரும் தேன் ஃபேஸ் மாஸ்க்கை செய்து பாருங்கள். அதற்கு சிறிது தேன், கடலை மாவு, சந்தனம், பன்னீர் ஆகியவற்றைக் கலந்து கெட்டியான பதத்திற்குக் கலந்து கொள்ளுங்கள். பின் இதனைக் கொண்டு முகம் மற்றும் கழுத்தில் மாஸ்க் போல பூசிக் கொள்ளுங்கள். சிறிது நேரம் நன்றாகக் காயவிடுங்கள். நன்கு காய்ந்ததும், முகத்திலிருந்து உரித்தெடுங்கள். இம்மாஸ்க்கானது முகத்திலுள்ள அழுக்குகளை நீக்குவது மட்டுமின்றி, முகத்தை மென்மையாகவும் ஆக்கும். அதிலும் வாரமொரு முறையாவது இதனைச் செய்து வந்தால், நல்ல பலன் தெரியும்.
சருமம் கருமையடைதலைப் போக்க
சூரிய ஒளி அதிகம் படுவதால், சருமம் கருமை அடைகிறதா? அப்படியென்றால் அதற்கு சிறப்பான தீர்வாக தேன் அமையும். தேன், பால் பவுடர், எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் கலந்து கொள்ளுங்கள். பின் அதனை சூரிய ஒளியால் கருமை அடைந்த பகுதிகளில் இக்கலவையைத் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, அதன் பின் தண்ணீர் கொண்டு நன்கு அலசிவிடுங்கள்.
தீப்புண் தழும்புகள் நெருப்பில் சுட்டுக் கொண்டீர்களா?
உடனடியாக தீக்காயத்தின் மீது சிறிது தேனைத் தடவுங்கள். தேனுக்குக் காயத்தினை ஆற்றும் தன்மையும், கிருமிநாசினித் தன்மையும் உண்டு. இதன் காரணமாக தீப்புண் எளிதில் ஆறுவதோடு, தீக்காயத்தால் உண்டாகும் தழும்புகளும் வழக்கத்தை விட குறைவான அளவில் இருக்கும்.
பருக்கள் சிலரது சருமம் எளிதில் பருக்கள் உருவாவதற்கு வசதியானதாக இருக்கும். பருக்கள் நிறைந்த சருமம் உண்மையிலேயே பராமரிப்பதற்கு கடினமானது தான். பருக்களைப் போக்குவதும் கடினமான காரியம் தான். எனவே வீட்டில் உள்ள மசாலா பொருள்களில் ஒன்றான பட்டையையும் சிறிது தேனையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். பின் இதனை பருக்களின் மீது தடவுங்கள். ஒரு இரவு முழுவதும் அப்படியே இருக்க விடுங்கள். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை நன்கு கழுவுங்கள். பருக்களைப் போக்குவதற்கு இது சிறப்பான ஒரு வீட்டு மருத்துவம்.
=============================================

https://www.youtube.com/watch?v=WbMV9qYIXqM
---------------------------------------------------------------------------


Benefits of Honey, Amazing Health and Beauty  



Benefits of Honey : Honey has been used for 10 to 20 million years now. Its consumption rate increases along as more people get aware of the unlimited benefits that can be obtained from it. Honey is composed of glucose and fructose, and minerals such as magnesium, potassium, calcium, sodium chlorine, sulphur, iron and phosphate. Its composition make it special and useful. We will not discuss too much of chemistry here, so we shall move on to our topic i.e. health and beauty benefits of honey, which will be provided with the help of an infographic. 

Amazing Beauty Benefits of Honey

1 to 12 Beauty benefits of honey with the help of an infographic.
Amazing Benefits of Honey [Infographic]
Infographic from www.leonsbeautytipsandsecrets.com
Use the embed code below to share this Infographic on your site:
13. Skin Care:
(a) Skin care with Milk and Honey: Daily consumption of milk and honey help in creating smooth, beautiful skin. You can also take bath. For the bath, add one cup of milk and half a cup of honey. You can also use rose, jasmine and lavender oil with it.
[In History: Cleopatra bathed in milk and honey to keep her youth and beauty.]
(b) It can effectively cure dermatitis and other skin disorders. It can treat damaged skin and regenerate new skin cells.
(c) It can be used as a sunscreen to protect your skin.

Health Benefits of Honey

 14. Natural Sweetener : 
Bee’s honey is man’s oldest sweetener. We’re pretty sure that you have read that before. If you haven’t then you should now! It is a good substitute for sugar. It is a healthier sweetener compared to normal white sugar, since it has about 69% glucose and fructose.
 15. Blood Sugar Regulation:
It has an exact combination of glucose and fructose which helps our body regulate blood sugar levels.
16. It Has No Growth Of Bacteria (No Expiration Date):
There is no expiration date for honey. Archaeologists found 2000 year old jars of honey in Egyptian tombs and they still tasted delicious! Bacteria cannot grow in honey because of low water activity of 0.6.
17. Fights Bad Breath:
Yes, honey can actually fight bad breath. Small amount of cinnamon and a teaspoon of honey can help you fight chronic bad breath problem.
18. Boosts Energy :
Honey is a natural source of carbohydrates which can be easily converted into glucose since it is very easy for the body to digest this pure, natural substance. It has about 64 calories per tablespoon. It can work as an energy booster immediately after a workout since it is rapidly absorbed by the body.
19. Beneficial for cough and sore throat:
Due to its antibacterial properties, it is very helpful to cure cough and sore throat.
20. Helps you to sleep better:
Honey has sleep-inducing properties. A glass of milk with a spoonful of honey can help you get better sleep. Studies have shown that  it facilitates action of tryptophan in milk, which help people to sleep.
21. Improves immunity:
Honey helps to stimulate antibody production and hence boost the immune system. It also prevents recurrence of infections.
22. Treats mouth ulcers:
It can be used to treat mouth ulcers.
23. Reduce ulcers and other gastrointestinal disorders:
Recent research shows that treatment using honey may cure disorders such as ulcers and bacterial gastroenteritis.
24. Helps to treat wounds and burns:
Honey helps to treat wounds and burns because of its anti-inflammatory property. It can fasten the healing process. It also prevents infections because of anti-bacterial properties.
25. Promotes digestion:
Honey stimulates the growth of friendly bacteria in the intestine which aids in digestion.
26. Anti-cancer properties:
Recent studies show that honey has anti-cancer properties. Soon or later it will be used as a supplement in cancer therapy.
27. Prevent heart disease:
Honey has flavonoids and antioxidants which can help reduce the risk of some cancers and heart disease.
28. Balance the body elements:
Honey is an ancient medicine in Ayurveda. It has been used by Indians for 4000 years or more and is considered to affect all the body’s primitive elements positively.
29. Helps to Lose Weight:
Consume honey with warm water, it helps in digesting the fat stored in your body. Similarly, honey and lemon juice and honey with cinnamon can also help in reducing weight.
30. Helps to Fight Obesity :
It helps accelerate metabolism, which in turn helps the body burn more fat.
31. Improve Athletic Performance:
Carbohydrates in honey supply the body with energy, which can boost endurance and reduce muscle fatigue. Honey has exact amount glucose and fructose in form of carbohydrates. The glucose is absorbedquickly by the body and gives an immediate energy boost, because the fructose is absorbed more slowly, thus providing sustained energy. This combo also helps to regulate blood sugar levels.
32. Source of Vitamins and Minerals:
It has a variety of vitamins and minerals. Commonly, Honey has vitamins B1B2, C, B6B5 and B3, Calcium and Iron. The measure may vary according to the qualities of the nectar and pollen. Copper, iodine, and zinc also exist in honey in small quantities.
33. It has Antioxidants:
Honey is loaded with natural antioxidants, which helps to increase our body immunity. It also eases headaches.
34. Probiotic:
Some varieties of honey have large amounts of friendly bacteria. This includes up to 6 species of lactobacilliand 4 species ofbifidobacteria. These ultimately helps in good digestive health.
35. Honey is a “Yogavahi” (Increase power of other ingredients):
According to Ayurveda “Yogavahi  is a drug or a drug vehicle which has special affinity to carry and topotentiate the actions of the main drug to which it is additionally mixed. It helps and accelerates the bioavailability of the original drug. The yogavahiagents have certain special biophysical properties viz.vyavayi, vikasisara cala and soksma etc.”
(a)Honey and Cinnamon can help cure multiple diseases
Read More about benefits of honey and cinnamon here : http://www.peashealth.com/top-25-health-benefits-of-honey-and-cinnamon/
(b) Mixing apple cider vinegar with honey enhances the healing power of apple cider vinegar. – D.C.JARVIS, M.D, Folk Medicine (1958)
(c) Skin care with Milk and Honey: discussed on 13th point
(d) Increase digestion : try tea with honey and lemon.
(e) Consume honey with warm water, it helps in digesting the fat stored in your body.
36. Reduce Hay fever:
Local Honey can reduce your hay fever symptoms.
“The local honey has very tiny amounts of the pollen found in your area. These tiny amounts of pollen are not enough to trigger the allergic reaction when you ingest the local honey, but they do help your body to build up a tolerance to the pollen.”
37. Reduce harmful effects of Alcohol:
It reduce the toxic effects of hangover. Since the fructose in honey helps the body break down alcohol into harmless by-products. Also  its powerful antioxidant properties can neutralize the harmful effects of alcohol.

Some More Benefits of Honey

38. Honey can help reduce the itch and irritation of mosquito bites.
39. Honey is also anti-fungal hence it can help cure infections like athlete’s foot and jock itch.
40. Honey helps relieve morning sickness.
41. Regular consumption of honey will increase calcium absorption and haemoglobin count helping to fight Anemia.
42Honey also helps lower total cholesterol while increasing HDL (good) cholesterol.
43. It can be used to treat respiratory tract infections.
44. Honey acts as a sedative and is very useful in bed wetting disorders.
45. Stops hiccups.
46. According to University of Amsterdam raw honey is effective in countering chronic sinusitis.
47. According to ayurveda honey is helpful in curing many diseases and disorders. Other than listed above the list is as follows.
a. Weak eyesight
b. Curing impotence and premature ejaculation
c. Urinary tract disorders
d. Bronchial asthma
e. Worm infestations
f. Diarrhea
g. Nausea

2 comments:

  1. Honey gives us more benefits. the another one is weight loose honey is best homemade remedies for weight loose.you should try it.see our site FACE AND BODY Tips.

    ReplyDelete
  2. hi nice blog today i am sharing with you latest and best Top 10 Tom And Jerry HD Images

    ReplyDelete