கறிவேப்பிலைக் குழம்பு (பிரசவக் குழம்பு)
தேவையானவை:
கறிவேப்பிலை – கைப்பிடி அளவு, கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு
10, காய்ந்த மிளகாய் – 2, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு –
ஒரு டீஸ்பூன், புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கடுகு – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – 100 மில்லி, உப்பு – தேவையான
அளவு.
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு… மிளகு, கடலைப்பருப்பு, சீரகம்,
துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை
வறுத்துக் கொள்ளவும். கறிவேப்பிலையை தனியாக வதக்கவும். பிறகு,
எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, புளி சேர்த்து மிக்ஸியில் அரைத்து,
உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் கலந்து கொள்ளவும். மீதமிருக்கும்
எண்ணெயை கடாயில் விட்டு… கடுகு தாளித்து, அரைத்து
வைத்திருக்கும்
கலவையைப் போட்டுக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இது பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கும் பத்தியக் குழம்பு.
சூடான சாதத்தில் நெய் விட்டு, இந்தக் குழம்பு போட்டுச் சாப்பிடலாம்.
மற்றவர்களும் சாப்பிடலாம்
----------------------------------------------------------------------------
கறிவேப்பிலையை இனி தூக்கி எறியாதீங்க!
உணவில் கறிவேப்பிலையை பார்த்தலே ஏதோ ஆகாத பொருளைக்
காண்பதுபோல தூக்கி எறிந்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்போம்.
ஆனால் கறிவேப்பிலை புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறன்
கொண்டது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் பற்றி சாந்திநிகேதன்
விஸ்வபாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தாவில் உள்ள இந்தியன்
இன்ஸ்டிடுயூட் ஆப் கெமிகல் பயாலஜி, மற்றும் வாஷிங்டனில் உள்ள
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து
ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்களின் ஆய்வில் பல்வேறு அதிசயத்தக்க உண்மைகள்
கண்டுபிடிக்கப்பட்டன. கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட்,
ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம்,
அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும்
வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால்
இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும்
தருகிறது. இதன் காரணமாக புரஸ்ட்டேட் புற்றுநோய் ஏற்படுவது
தடுக்கப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதேபோல் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கறிவேப்பிலை
குறித்து ஆய்வு மேற்கொண்டனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய
நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள்
தெரிவித்துள்ளனர். இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக
இயங்குகிறது என்றும் கூறும் ஆய்வாளர்கள் கறிவேப்பிலைக்கு
புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று
கண்டறிந்துள்ளனர்.
கடுகு, கறிவேப்பிலை தாளிப்பு
உணவு சமைக்கும் போது இறுதியில் கறிவேப்பிலையையும், கடுகையும்
சேர்த்து தாளிக்கின்றோம். அப்பொழுதுதான் சமையல்
முழுமையடைகிறது. இதனால் என்ன நன்மை கிடைக்கிறது என்பது
பற்றி திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக் கழகத்தில் மருத்துவ
குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது
திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ்
உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும்
பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள
புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள்
வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை
மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக
குறையும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளர். இத்தனை நன்மை
கொண்ட கறிவேப்பிலையை இனி தூக்கி எறிய மாட்டீர்கள்தானே?

=================================
நீரிழிவு நோயாளிகள் காலையில் 10கறிவேப்பிலையையும், மாலையில் 10இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரையின்
அளவுகுறையும்.
நரை முடி உள்ளவர்கள் உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக
நரை முடி உள்ளவர்கள் உணவிலும், தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக
சாப்பிட்டு வந்தால் நரை முடி மறையும்.அதே போல் கறிவேப்பிலையை எண்ணெயில் போட்டு காய்ச்சி
ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில்
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம்செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில்
சர்க்கரையின் அளவை சீராகவைத்திருக்கும்.
வெறும் வயிற்றில் தினமும் 3 மாதங்களுக்கு கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட்டு வந்தால்
சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்துவிடும்.
அத்துடன் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும்.
சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும், வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்களும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளன.
சுண்ணாம்புச் சத்தும் இரும்புச் சத்தும், வைட்டமின் ஏ, பி, பி2, சி போன்ற உயிர்சத்துக்களும் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளன.
கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து
நன்குஅரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதியஉணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு
வந்தால் மன உளைச்சல்,மனஇறுக்கம், மன அழுத்தம்
குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும்உடலை
புத்துணர்வு பெறச் செய்து ஞாபக சக்தியையும் தூண்டும்.
ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால்எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும்.
அதே போல் கருவேப்பில்லை சாற்றை சிவப்பரிசியில் ஊற்றி கஞ்சி குடித்தால் உடலின் கொழுப்புச் சத்து குறையும்.
சிலருக்கு உணவு உண்ணும்போது அதில் அதீத சுவை
இருந்தாலும் கூட அதைஅவர் நாவினால் உணர முடியாது.
இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி,சிறிதளவு பச்சை
மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து
சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் நாவிற்கு சுவையை உணரும்தன்மை கிடைக்கும்.
மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின்
சாறு கொடுத்தால்போதை உடனே குறையும்
----------------------------------------------------------------------
கருவேப்பில்லை
கொசுறாய்க் கிடைப்பதால் கறிவேப்பிலைக்குக் கொஞ்சம் மதிப்புக் குறைவுதான். வெறும் மணமூட்டியாக இருந்து, இலையோடு சேர்ந்து வெளியேறும் பொருளாக இதனை, இத்தனை காலம் பார்த்திருந்த பலருக்கும், கறிவேப்பிலை வேம்பை போன்ற மாபெரும் மருத்துவ மூலிகை அது என்பது தெரியாது. உச்சி முதல் பாதம் வரை அனைத்தையும் அணைத்துக் காக்கும் அற்புதமருந்து... கறிவேப்பிலை.
முடி உதிர்தலைத் தடுக்க
தலைமுடி கொட்டுவதைத் தவிர்க்க, கறிவேப்பிலைப் பொடியை தினமும் சோற்றில் கலந்து சாப்பிடவேண்டும்.கறிவேப்பிலையை நிழலில் உலர்த்திப் பொடித்தால், அதுதான் கறிவேப்பிலைப் பொடி. கரிசாலை, நெல்லி, கீழாநெல்லி, அவுரி இவற்றுடன் சமபங்கு கறிவேப்பிலைச் சாறு எடுத்துச் சேர்த்து, தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, தலைமுடித் தைலமாகப் பயன்படுத்தலாம்.
கண்கள் என்றால் நமக்கு ஞாபகம் வருவது கேரட் மட்டும்தான். ஆனால், கறிவேப்பிலையும் பார்வையைத் துலங்க வைக்கும், பீட்டா கரோட்டின் நிறைந்தது. பப்பாளி, பொன்னாங்கண்ணி, தினை அரிசி போன்றவையும் கண்களைப் பாதுகாப்பவையே.
ஆன்டிஆக்ஸிடன்ட்
தோல் சுருக்கம், உடல் சோர்வு, மூட்டு தேய்தல், நரை என வயோதிகம் வாசல் கதவைத் தட்டும் அத்தனைக்கும் இன்று ஆபத்பாந்தவனாய் இருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தாம். முன்பு, மருந்துச்சீட்டில் கொசுறாக வைட்டமின் மாத்திரை இருப்பது போல, இப்போது, எந்த வியாதி எனப் போனாலும், மருத்துவர் எழுதித்தரும் சீட்டில், கடைசியாய் குத்தவைத்திருப்பது ஆன்டிஆக்ஸிடன்ட் மாத்திரைகளே. அதுவும் கொசுறாக இல்லை, கூடுதல் விலையில். ஆனால், காய்கறிக்கடையில் இலவசமாகவே பல நேரங்களில் கொடுக்கப்படும் கறிவேப்பிலையில் அதிகபட்ச ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோயை எதிர்க்கும் திறன் உடையவையும்கூட. ஆரம்பக்கட்ட ஆய்வுகளில், புற்றுநோய்க் கட்டியின் வேகமான வளர்ச்சியைக் குறைப்பதிலும் புற்றுக்கட்டி உருவாவதைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை பயன்அளிப்பதை நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. அதற்காக புற்றுநோய்க்குக் கறிவேப்பிலை சட்னி மருந்து என அர்த்தம் இல்லை. அவ்வப்போது கறிவேப்பிலையைத் துவையலாக, பொடியாக, குழம்பாக உணவில் சேர்த்துவந்தால், சாதாரண செல்கள் திடீர் எனப் புரண்டு புற்றாய் மாற எத்தனிப்பதைத் தடுக்கும் என்பதுதான் பொருள்.
மேற்கத்திய விஞ்ஞானம் இதைச் சொல்வதற்கு முன்னர், நம் தமிழ்ச் சித்தர்கள் கறிவேப்பிலையின் பயனைப் பல வருடங்களுக்கு முன்னதாகவே பாடியுள்ளனர். அஜீரணம், பசியின்மை, பித்த நோய்கள், பேதி எனப் பல நோய்களுக்குக் கறிவேப்பிலையைச் சாப்பிடச் சொன்னவர்கள் நம் மருத்துவர்கள். இந்த அஜீரணம், பசியின்மை, பேதி முதலியவைதான் குடல் புற்று நோயின் ஆரம்பகாலக் குறிகுணங்கள்.
குழந்தையை சாப்பிடவைக்க
சரியாய் சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு, கறிவேப்பிலை இலையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து, உடன் சிறிது கல்உப்பு, சீரகம், சுக்கு ஆகியன சமபங்கு சேர்த்து, சுடுசோறில் சாப்பிடவைக்க, பசியின்மை போகும், என்றது சித்த மருத்துவம். அன்னப்பொடி, அய்ங்காய்ப்பொடி செய்து வைத்துக்கொள்வது போல, இந்தக் கறிவேப்பிலைப் பொடியை செய்துவைத்துக்கொண்டு, சோற்றின் முதல் உருண்டையில் இப்பொடியை போட்டுப் பிசைந்து, சாப்பிட வைப்பது சீரணத்தைத் தூண்டி, பசியூட்டும்.
அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை 42 சதவிகிதமும் ரத்த கொலஸ்ட்ராலை 30 சதவிகிதமும் குறைக்கிறது எனச் சொல்கிறார்கள்.
நல்ல கொழுப்பு அதிகரிக்க
பொதுவாய் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ராலான HDL (HIGH DENSITY LIPO PROTIEN) –ஐ சாதாரணமாக மருந்தால் உயர்த்துவது கடினம். நடைப்பயிற்சிதான் இதற்கு நல்ல வழி. ஆனால், கறிவேப்பிலை நல்ல கொலஸ்ட்ராலை உயர்த்த உதவும் என்பதை இன்றைய நவீன ஆய்வாளர்கள் உறுதிப்
படுத்தியுள்ளனர். சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே கறிவேப்பிலையை தினம் சாப்பிட்டுவந்தால் இவ்விரு நோய்களுக்கும் செயல்படு உணவாக (functional food) ஆக இந்த மூலிகை இருக்கும்
படுத்தியுள்ளனர். சர்க்கரை, கொலஸ்ட்ராலுக்கு என்ன மருந்து சாப்பிட்டாலும் கூடவே கறிவேப்பிலையை தினம் சாப்பிட்டுவந்தால் இவ்விரு நோய்களுக்கும் செயல்படு உணவாக (functional food) ஆக இந்த மூலிகை இருக்கும்
கறிவேப்பிலை மணமூட்டி மட்டுமல்ல, நலமூட்டியும்கூட.
-----------------------------------------------------------------------------------
கருவேப்பிலையை ' காய்கறிக்கெல்லாம் தாய்ப்பிள்ளை ' என்கிறது நம்மூர் நாட்டுப்பாடல். ' கருவேம்பு' , ' கருவேப்பிலை' என்கிறது தமிழ் பேரகராதி.' உலுவாவிகச் செடி' என்று சித்த வைத்திய அகராதியும், ' கரிய நிம்பம்' என்று தைல வருக்கச் சருக்கமும் கருவேப்பிலையை குறிப்பிடுகின்றன. மலையாளத்தில் ' கறிவேப்பு' , கன்னடத்தில் ' கறிபீவு' , தெலுங்கில் ' கறிபாகு' , வடமொழியில் ' காலசாகம்' என ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் இந்த உணவாக மருந்திலை அறிமுகப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கருவேப்பிலை இல்லாத காய்கறிக்கடை இருப்பதில்லை. பெட்டிக்கடைகளின் சில்லறை காய்கறி விற்பனைகளிலும் கருவேப்பிலை அவசியம் இடம்பிடிக்கிறது. தமிழகத்து அத்தனை மார்க்கெட்டுகளுக்கும் மூடை மூடையாக லாரிகளில் கருவேப்பிலைகள் வந்திறங்குகிறது. அசைவம், சைவம் என அத்தனை சமையலிலும் கருவேப்பிலை இருப்பதால், மொத்த மக்களும் இந்த இலையை வாங்கிப்போக மறப்பதில்லை.
சிறு அளவுகளில் இனிப்பு, துவர்ப்புச் சுவையில் வாசமிகு நாட்டுக்குலையும், விரிந்த இலைகளாக குறைந்த வாசனையில் கூடுதல் கசப்புடன் காட்டுக்குலை எனும் மலைக்குலையும் என இருவேறு நிலைகளில் இந்த கருவேப்பிலை மொத்த வியாபாரிகளுக்கு வந்து, சில்லறை வியாபாரிகளைச் சேர்கிறது. இதில் நாட்டுக்குலை வீட்டுச் சமையலுக்கும், காட்டுக்குலை மருந்திற்கும் போகிறது. கருவேப்பிலையில் இலை, ஈர்க்கு, பட்டை, வேர் என அத்தனையும் பயனாகிறது.உணவை மணக்க வைக்கிற மகத்தான கருவேப்பிலை, உடல் நலத்தை நிலைக்கச் செய்கிறது. தாளிப்பில் குழம்பைச் சேர்கிற கருவேப்பிலையை உண்ணும் தட்டிலிருந்து எடுத்து ஒதுக்கிப்போடுகிறோம். மோரைப் பருகிவிட்டு முதலில் வெளியில் துப்புவது கருவேப்பிலையைத்தான். ஒவ்வொரு உணவோடும் இந்த உயிர்ச்சத்து மிக்க கறிவேப்பிலையை கலந்துண்பது ஆரோக்கியம்.
கருவேப்பிலை நமக்குள் நல்ல ருசியுணர்வுடன் பசி, செரிமாணம் நிறைக்கிறது. கறிவேப்பிலையை ஜீரண உறுப்பின் நண்பன் என்கிறார்கள். தலைமுடி வளர்ச்சி உள்ளிட்ட அநேக மருத்துவ மேன்மைகள் இந்த இலைக்குள் மறைந்து கிடக்கிறது. இது வயிற்று வாயுவை பிரித்து மலவாயுக் கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். கருவேப்பிலையுடன் சுட்ட புளி, வறுத்த உப்பு, மிளகாய் சேர்த்தரைத்த துவையல் சாப்பிட குடல் பலம் பெறும். பித்தத்தை தணித்து உடல் சூட்டை அகற்றும், குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்று உழைவு, நாட்பட்ட காய்ச்சல் நீக்கும், பித்த மிகுதியால் வந்த பைத்தியத்தையே இந்த கருவேப்பிலை போக்கும் வலிமை கொண்டிருக்கிறது என ' சித்தா வாசுட' நூல் தெரிவிக்கிறது. இலை, பட்டை, வேரில் செய்த கசாயத்தை குடித்தால் பித்தமும், வாந்தியும் போகுமாம். நிழலில் உலர்த்திய, கருவேப்பிலையுடன், மிளகு, உப்பு, சீரகம், சுக்கு சேர்த்து பொடியாக்கி, சோற்றுடன் நெய் கலந்து சாப்பிட மலக்கட்டு முதல் பேதி, கழிச்சல் வரை அத்தனை வயிற்று உபாதைகளும் சரியாகும் என்கிறது நாட்டு வைத்தியம்.
இன்னும், குடல் கிருமிகள் அழிக்கும் திறன் பெற்றுள்ள இந்த இலைக்கு, கண்பார்வையை தெளிவடையச் செய்யும் வல்லமையும் இருக்கிறது. தலைமுடி நரைக்காது காத்து, நரைத்த முடிகளையும் கருமையாக்கி மயிர்க்கால்களை வலுவூட்டும் அதிசயச் சக்தி கருவேப்பிலைக்குள் இருக்கிறது. கை,கால் நடுக்கங்கள் நீக்கி, இளமையை உடலுக்குள் நிரப்பும் ரகசியத்தையும் இது தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் சுகம் தரும் என்கின்றனர். இன்னும் கூடுதலாக, இதயநோயைத் தடுப்பதுடன், புற்று நோய் செல்களைக் கட்டுப்படுத்தும் திறனும் இந்த இலைக்கு இருக்கிறது.
கருவேப்பிலையில் 63சதவீத நீர், 6 சதவீத புரதம், ஒரு சதவீத கொழுப்பு, 4 சதவீத தாது உப்பு, 6.4 சதவீத நார்ச்சத்து, 18.7ச தவீத மாவுச்சத்து என அநேக திறன்கள் உள்ளன. நூறுகிராம் கருவேப்பிலையில் 830 மி கிராம் சுண்ணாம்புச்சத்தும், 221 மிகி, மக்னீசியம், 132 மிகி, இரும்பு, 0.21 மிகி, தாமிரம், 81 மிகி, கந்தகம், 198 மிகி, குளோரின் சத்துகளும் உள்ளன. இதுதவிர இந்த இலைகளில் வைட்டமின்ஏ அதிகளவில் இருக்கிறது.மருந்துப் பொடியாக, உணவு எண்ணெய்யாக இன்னும் பல அவதாரங்களில் முகம் காட்டும் இந்த கருவேப்பிலை இயற்கை நமக்களித்த அற்புதப் பரிசு. -

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?
கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்!!!...
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
கொழுப்புக்கள் கரையும்:
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
இரத்த சோகை:
இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
இதய நோய்:
கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
செரிமானம் :
நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
முடி வளர்ச்சி :
கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
சளித் தேக்கம்:
சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.
கல்லீரல் பாதிப்பு:
நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.
மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.
குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்.
No comments:
Post a Comment