Friday, August 12, 2016

வாதம்

வாதம்

வாதம் நோய்
1,வாதநோய் என்றால் என்ன?
2,வாதம் எத்தனை வகைப்படும் ?
3,வாதம் எதனால் உருவாகிறது  ?
4,வாதத்திற்க்கு உண்டான மருத்துவம் என்ன?

1,வாதநோய்:,
நமது உடலில் உருவாகும் வாயு தொல்லையே இதற்க்கு காரணம் ,மலசிக்கல் இருந்தாலே வாயு உற்ப்பத்தியாகி உடலில் சேருகின்றது, இதுவே நாளடவில் வாதநோயாக மாறுகின்றது,

2,வாதம் எத்தனை வகைப்படும் ,
வாதம் 84வகைப்படும்,1,மனிதர் களின் கால் பாதத்தில் உருவானால் அதற்க்கு குதி வாதம்,என்றும் கூறப்படும், 2.கனுக்காலில் வருவதால் இதற்க்கு கனுக்கால் வாதம் என்று கூறப்படும், 3,கால் கென்டையில் வருவதால் இதற்க்கு கென்டை வாதம் என்று கூறப்படும 4,முட்டியில் வருவதால் இதற்க்கு நரித்தலை வாதம் என்றும் கூறப்படும், 5,தொடையில் வருவதால் இதற்க்கு தொடை வாழை என்று கூறப்படும், 6,சாரையில் வருவதால் இதற்க்கு பக்க பிளவை என்றுகூறப்படும்,7,ஒரு கை ,கால் இழத்தால் இதற்க்கு பக்கவாதம் என்று கூறப்படும்,8,முகத்தில் வந்தால் இதற்க்கு முகவாதம் என்று கூறப்படும், 9,உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிளும் வந்தால் இதற்க்கு சர்வங்க வாதம் என்று கூறப்படும், இதுபோல் நமது உடலில் வாயு எங்கு தங்கி உபத்திரம் கொடுக்கின்றதோ அதற்¢கு அந்த இடத்தின் பெயரை சொல்வது வழக்கத்தில் உள்ளது,

3.வாதத்திற்கு உண்டான மருத்துவத்தை பார்ப்போம்
வாதநோய் உருவாக மூலக்காரனம் மலசிக்கலே அதை யாரும் மருக்கமுடியாது ,அதற்கு வருடம் இரண்டு முறை பேதி மருந்து சாப்பிடுகின்றவர்களுக்கு. Õவாதநோய் வருவதே இல்லை .
அப்படி வாதம் வந்த பிறகு முதலில் பேதி மருந்து ,கொசிகர் மெழுகு அல்லது அகத்தியர் மெழுகு ஏதேனும் ஒன்று இரன்டு பட்டானி அளவு சாப்பிட்டு மறுநாள் முதல் மற்ற மருந்துகளை சாப்பிடவும்.

மூலிகை மருத்துவத்தை முதலில் சாப்பிடவும் 1,கடுக்காய், 
2.தான்றிக்காய் 3.நெல்லிக்காய் 4.வாய்விளங்கம் 5.நிலாவரை 6.தழுதாழை 7.முடக்கற்றான். 8,வாதமடக்கி போன்ற மருந்துகளை 100கிராம் அளவு வாங்கி கலந்து காலை,மாலை இருவேலையும் 1டீஸ்பூன்அளவு உணவுக்கு முன் வென்நீரில் சாப்பிட்டு வர வாயு தொல்லை அகலும் இது முற்றிலும் இயற்கை மருத்துவம் இதற்கு பத்தியம் இல்லை. தைலம். வெளிபூச்சுக்கு . மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் உள்ளுக்கு சாப்பிடுப& வை.வாத நோய் இருந்தாலே உடல் அசதி, மூட்டு வலி, முழங் கால் வலி என வருவதும் கை,கால் செயல்இழப்பு ஏற்ப்படுவதும் இயல்பு. அதற்காகவே தைலம் தயாரிகபட்டு தரப்படுகிறது.
தைலத்தில் செம்பரன்டை, முடவாட்டுகால், தழுதாழை, திருவாட்சி, திருநீற்றுபச்சிலை பெருமருந்துகொடி போன்ற அரிய வகை மூலிகைகளை கலந்து தயாரிக்கபடுவதால். இது சிறந்த வலி நிவாரணி. மேலும் இது ஒரு சர்வரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது. உடலில் முடக்கு வாதங்கள்¢¢ இருந்தாலும் இந்த தைலம் தடவி உருவி தேய்த்து வெண்ணீர் ஒத்தடம் குடுக்க விரைவில் குணமாகும்.
லேகியம் :
மூலிகை மருந்துகளில் குறிப்பிட்டுள்ள மூலிகைகளின் சாருடன் கருவம்பட்டை,அரசம்பட்டை, ஆலம்பட்டை போன்றவற்றின் சாருகளையும் சேர்த்து பல நாட்டு மருந்துகளையும் சேர்த்து லேகியம் தயாரிக்கபடுகிறது. லேகியம் செய்வது ஆதிகாலத்தில் இருந்து வழக்கத்தில். உள்ளது. தற்க்காலத்தில் எந்த மருத்துவரும் செய்வது இல்லை. நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.
வாதத்திற்கு உண்டான மற்ற மருந்துகள் :
மூட்டு வலி.முழங்கால் வலி,பக்கவாதம்,சர்வங்கவாதம் போன்ற அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்
1,சண்டமாருதசெந்தூரம் காலை,மாலை,இருவேலையும் உணவுக்கு முன்1 அரிசிஎடை & தேனில்5,நாள் 10வேளை சாப்பிடவும் பிறகு5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்தை தொடரவும.
2.பஞ்சபாஷண செந்தூரம் காலை,மாலை,இருவேளையும் உணவுக்குமுன் 1.அரிசி எடை தேனில் 5,நாள் ¢ 10வேளை சாப்பிடவும். தினசரி வெளிபூச்சு தைலம் தேய்த்து கொண்டு வெண்ணீரில் குளிக்கவும்.
பக்கவாத வர காரனம் :
உடலில் சக்கரை என்ற இனிப்பு நீரும்,இரத்தழுத்தமூம் கூடுதலா& கும் போது உப்பு நீர் சேர்ந்து நமது மூலைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்படும் போது பக்க வாதம் ,முகவாதம் போன்றவை உருவாகும், இதற்க்கு மேற்கன்ட மருந்துகளை குடுக்கும் போது கூடுதலாக சங்கிலை வேர்பட்டை கஷயம் கொடுத்து வர சால சிறந்தது ,சக்கரைக்கும்,இரத்த அழுத்தத்திற்கும், சேர்த்து மருந்து உட்கொள்ள மிக விரைவில் குணம் அடையும்,
3.காண்டீப மெழுகு பக்க வாதத்திற்க்கு சிறப்பு மருந்து,
காலை,வாளம் கலந்த மெழுகு பட்டானி அளவும் மாலையில் வாளம் கலக்காத மருந்தும் பட்டானி அளவு 7 நாள் சாப்பிட்டு வர அனைத்து வாதமும் குணமாகும்,
4.சர்வங்க வாதம் மும் ,வீரமெழுகு.
உடலில உள்ள அனைத்து மூட்டுகளிலும் வீக்கம் வரும் எந்த மருத்துவத்தாலும் இதை இந்த நோய் என்று கண்டுபிடிப்& &பது மிக கடினம் . அவதிபட நேரிடும் நடக்க முடியாமலும் அன்றாடம் நமது வேலையை நாமே செய்து கொள்ள முடியாத Êசுழ்நிலைக்கு தள்ள படுவார்கள்,என்பது மிகவும் வேதனை யான தகவல் அந்த நோய் உள்ளவர்கள், நல்ல தரமான சித்த மருத்தவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்துகளை சாப்பிட வேண்டும், அப்போது வீர மெழுகு ,காலை,மாலை இரு வேலையும் உணவுக்குமுன் பயிர் அளவு உட்கொள்ள சர்வங்க வாதம் குணமடையும்,
5.நந்தி மெழுகு,
Õவாதம் நீர் உடலில் வந்த பிறகு எந்த விதம் என்று கண்டு பிடிக்க முடியாத பட்சத்திலும் , அல்லது மேற்கண்ட மருந்துகளை உட் கொண்டு பூரன குணம் அடையாமலும் இருந்தாலும் கடைசியாக நந்தி மெழுகை காலை,மாலை,இரு வேலையும் பயிரளவு சாப்பிடவும்.
பத்திய முறைகள்:
சித்த மருந்துகள் சாப்பிடும் போது புளி,அசைவம், போகம்,போதை, போன்ற வற்றை தவிர்க்கவும் பிறகு தைலம் தேய்த்து குளிக்கவும்.

வெந்தயம்

வெந்தயத்தில் மருத்துவம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.

எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள வெந்தயத்தின் சிறப்புகளையும், வெந்தயத்தால் குணமாகும் நோய்களையும் பார்ப்போம்.

இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.

காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால்கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.

வாரம் ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே அண்டாது.

தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில்போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போதுதண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடிசெய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வரவயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும்வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.

வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து காபி பொடியுடன் கலந்துகாபி போட்டு் குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள்இருக்கும்.


வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் – பெருங்காயப் பொடியை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 3 முறை குடிக்க வயிற்றுப்போக்குகட்டுப்படுத்தப்படும்.


மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால், வெந்தயப் பொடியை சிறிய வெல்லகட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.


எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும், வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளையும் போக்கும்.


இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில், வெந்தயம்சேர்த்து அரைத்து சிறிது நேரம் ஊறிய பின் தோசையாக ஊற்றி சாப்பிட்டால், சுவை கூடுவதுடன்உடலுக்கும் ஏற்றதாக அமையும்.

மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால், நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது. பிரசவமான பெண்களுக்கு கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால்சுரக்கும்.


1. இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுல பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.

2. வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்து சாப்பிட்டு வர மதுமேகம்(சர்க்கரை நோய்) குறையும்.

3. வெந்தயம் 20 கிராம் எடுத்து 350 கிராம் பச்சரிசியுடன் சேர்த்து சமைச்சு சாப்பிட இரத்தம் ஊறும்.

4. கஞ்சியில் வெந்தயத்த சேர்த்துக் காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.

5. வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவச்சு நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க முடி உதிராம நல்லா வளரும்.

6. 5 கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் கடஞ்சு கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.

7. வெந்தயம், கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

8. வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் சமமா எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி சாப்பிட்டில் கலந்து சாப்பிட வயிற்றுவலி, பொருமல், ஈரலவீக்கம் குறையும்.

9. வெந்தயம், வாதுமைப் பருப்பு, கசகசா, உடைத்த கோதுமை, நெய், பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் வன்மையாவும், வலுவாவும் இருக்கும். இடுப்புவலி தீரும்.

10. வெந்தயத்த சீமை அத்திப்பழம் சேர்த்து அரைச்சு கட்டிகளுக்குப் பத்துபோட்டா கட்டி உடையும். படைகளுக்கும் பூசலாம்.

11. வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல பூச எரிச்சல் குறையும்.

பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பும் உப்பும் சேர்த்தரைத்து மோரில் கரைத்துக் கொடுக்க வயிற்றுப் போக்கு தீரும்.

ஐந்து கிராம் வெந்தயத்தை நன்கு வேகவைத்துக் கடைந்து சிறிது தேன் கலந்து கொடுத்து வரத் தாய்ப்பால் பெருகும்.

வெந்தியத்தை அரைத்துத் தீப்பட்ட இடங்களில் தடவ எரிச்சலி தணிந்து ஆறும்.

வெந்தியப்பொடியை ஒரு தேக்கரண்டியாக்க் காலை மாலை நீடித்துச் சாப்பிட்டு வர மதுமேகம் குணமாகும்.

வெந்தயத்துடன் சமன் சீமையத்திப் பழத்தைச் சேர்த்து அரைத்து நீரில் குழைத்துத் தணலில் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்துஉடையும்.

இரவு சிறிது வெந்தயத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊரவைத்து, அதிகாலை வெரும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடிக்க நீர்ழிவு நோய் சிறிது சிறிதாக வீரியம்குறையும்.

தொடர்ந்து வெந்தயத்தைச் சாப்பிட்டால் சுலபத்தில் கருதரிக்காது.
முடி உதிர்வதைத் தடுக்கவெந்தயத்தை சீயக்காயோடுசெர்த்து அரைத்துசிறிது ஊர வைத்துத் தலை முழுகினால் பலன் கிட்டும்.

முகத்தில் பரு வந்தால் வெந்தயத்தை நன்கு அரைத்து முகத்தில் அப்பினால் எரிச்சல் குறையும் பருவும் குணமடையும்.

வெந்தயக்கீரை.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு கலைந்து விடும். மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்றுஉப்பிசம் இருந்தாலும் தணிந்து விடும்.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு,ஒரு டம்ளர் அறவிற்குச் சுண்டக்காய்ச்சி, காலைமாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தாலகு உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதிகுணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம்தரும்.

வெந்தயக் கீரையை ஆய்ந்து வேரை நீக்கி, கழுவி ஒரு சட்டியுல் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். வெந்தயக்கீரைஇருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து இதில் கொட்டி, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்கரைசேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து,ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது.  வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு செர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது வாய்ங்குவேக்காடு வராது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.
வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சத்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதைப் சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறை, வாதம், சொறிசிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும்,, பசியைப்போக்கவும் பயன்படுகிறது.


செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்க

பிரிஸ்பன் : வெந்தயம் , ஆண் ஹார்மோன் உற்பத்தியை அதிகரிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது . வத்தக்குழம்பில் ஆரம்பித்து ஊறுகாய் , மிளகாய்பொடி , மசாலா பொடி என பல வகையான இந்திய உணவுகளிலும் பயன்படுவது வெந்தயம் . சித்த மருத்துவத்தில் பல்வேறு வகையான நோய்களுக்கும் இதுமருந்தாக பயன்படுத்தப்படுகிறது . உடல் சூடு , வயிற்று புண் , வாய்ப்புண் ஆகியவற்றை வெந்தயம் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது . சர்க்கரை நோய்பாதிப்பை குறைக்கும் மருந்தாக வெந்தய பவுடர் பயன்படுத்தப்படுகிறது .

வெந்தயத்தின் மருத்துவகுணங்கள் , ஆண் ஹார்மோன் உற்பத்தியில் வெந்தயத்தின் பங்கு தொடர்பாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் உள்ளமருத்துவ ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது . நல்ல உடல்நலத்துடன் இருக்கும் 25&52 வயதினர் 60 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர் .தினமும் 2 வேளை என ஒன்றரை மாதத்துக்கு அவர்களுக்கு வெந்தய சாறு கொடுக்கப்பட்டது . அவர்களது ஹார்மோன் அளவு , செக்ஸ் ஆர்வத்தில் ஏற்படும்மாற்றங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன . இன்னொரு குரூப்புக்கு டம்மி சாறு கொடுக்கப்பட்டது .

வெந்தய சாறு கொடுத்தவர்களின் ஹார்மோன் அளவு 28 சதவீதம் உயர்ந்துள்ளது . வெந்தயத்தில் உள்ள சபோனின் பொருள் , ஹார்மோன் உற்பத்தியைஅதிகரிக்கிறது . உணவில் போதுமான அளவு வெந்தயம் சேர்த்துக் கொண்டால் செக்ஸ் வாழ்க்கை முழு மகிழ்ச்சியுடன் இருக்கும் என்கிறது ஆய்வு

தூதுவளை



தூதுவளை_காயகல்பம்மூலிகை
-------------------------------------------------------

காயகற்பம் = காயம்+கற்பம் .
காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலைநோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.
 நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்துநீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்.

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில்இதுவும் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள்உண்டு. இந்தியா முழுவதும்தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடியாகும்.சிறு முட்கள் நிறைந்து காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் அனைத்தும்மருத்துவப் பயன் கொண்டது.

தூதுவே ளையையுணத் தொக்கினிற் றொக்கிய
வேதையா நொயெலா மெய்யைவிட் டகலுமே

(சித்தர் - தேரையர் காண்டம்)

தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.

தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும்.

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள் சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.

தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு காலை, மாலை எனஇருவேளையும் தேனில் கலந்து கற்ப முறையாக பத்தியம் கொண்டு ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்குநோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும். தாதுவைபலப்படுத்தும்.

தூதுவளையை நன்கு அரைத்து அடை போல் செய்து சாப்பிட்டு வந்தால் தலையில் உள்ள கபம் குறையும். இந்திரியம் அதிகமாகி ஆண்மையைக் கூட்டும்.

காது மந்தம், இருமல், நமைச்சல் பெருவயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்தாகும்.

மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நீர், போன்றவற்றிற்கு தூதுவளை கீரை சிறந்த மருந்து.

தூதுவளை காயை சமைத்தோ, அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் கற்பமுறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் ஆண்மையைப் பெருக்கி உடலுக்கு வலு கொடுக்கும்.

தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால்மார்புச்சளி, இருமல், முக்குற்றங்கள் நீங்கும். பாம்பின் விஷத்தைமுறிக்கும். நாளுக்கு இருமுறை மலத்தை வெளி யேற்றும்.

தூதுவளைக் கீரை, வேர், காய், இவற்றை வற்றல், ஊறுகாய் செய்து நாற்பதுநாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்ணெரிச்சல் கண் நோய்கள் நீங்கும்.

தூதுவளை இலையை குடிநீர் செய்து அருந்தி வந்தால் இருமல், இரைப்பு நோய் அணுகாது.

இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தலாம்.இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும்.

இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது.

தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.

தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.

தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.

தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.

தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.

புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.

உளுந்து Black Gram

இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக உளுந்து எனப்பட்டாலும், தோல் அகற்றப்படாத உளுந்து, கறுப்பு உளுந்து எனப்படுகிறது. நீள்உருளை வடிவத்தில், பளபளப்பாக இருக்கும் இது தனி நறுமணம் அற்றது. அதேநேரம் மண் வாசம் அதிகமாகவே இருக்கும். இந்தியாவில் அதிகம் பயிரிடப்படும் - அதிகம் பயன்படுத்தப்படும் பயறு வகை இதுவே. பஞ்சாபி உணவு வகையிலும் இது மிகவும் பிரபலம்.

இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும்போது கறுப்பு உளுந்தைப் பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், உளுந்துத் தோலில்தான் Leuconostoc mesenteroides என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இட்லி மாவு நன்கு புளிப்பதற்கு இதுவே காரணம். அதேபோல், உளுந்துத் தோலில் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவில் உள்ளன. இட்லி, தோசை வெள்ளையாக இருக்க வேண்டுமென நினைத்து, உளுந்துத் தோலில் உள்ள ஊட்டச்சத்தை இழக்க வேண்டாமே.

பயன்பாடு

கறுப்பு உளுந்து முழுதாகவோ, இரண்டாக உடைக்கப்பட்டோ அரைக்கப்பட்டு இட்லி, தோசை மாவில் பயன்படுத்தப்படுகிறது. இட்லி சிறந்த உணவு என்ற பெயரைப் பெறுவதற்கு, மாவில் சேர்க்கப்படும் உளுந்தும் மிக முக்கிய காரணமாகிறது. வடஇந்தியாவில் தால் மக்கானிக்கு இதுவே அடிப்படை. வெங்காயம், பூண்டுடன் சேர்த்து உளுந்து வறுக்கப்பட்டு நொறுவையாகச் சாப்பிடப்படுவதும் உண்டு. அதேபோல, பச்சை உளுந்தை மாவாக்கித் தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், உடல் வலிமை பெறும்.

ஊட்டச்சத்து

இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருப்பதால் வேனிற் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும்.

# முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு நல்லது.

# நிறைந்த இது, பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.

# உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றுகிறது.

# செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவுகிறது.

# கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே, உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உணவில் உளுந்தை அதிகம் சேர்த்துவந்தால், ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

தெரியுமா?

இந்தியாவின் பல பகுதிகளில் உளுந்துத் தட்டை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் வலி நீக்கும் வெள்ளை உளுந்து

வெள்ளை உளுந்துதான் தற்காலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இட்லி, தோசை, வடை போன்றவை வெள்ளையாக இருக்க வேண்டுமென்று உணவகங்கள் நினைத்த காரணத்தால், வெள்ளை உளுந்து பிரபலமாகி இருக்கலாம்.

பயன்பாடு

அரிசியோடு சேர்த்து மாவாக அரைக்கப்பட்டு இட்லி தோசைக்கும், தனியாக அரைக்கப்பட்டு வடைக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் மங்கள நிகழ்வுகளில் ’உளுத்தஞ்சோறு’ நெடுங்காலமாக இடம்பெற்றுவருவதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஊட்டச்சத்து



# வெள்ளை உளுந்தில் கறுப்பு உளுந்தைவிடச் சற்றே ஊட்டச்சத்து குறைவு. இதில் கார்போஹைட்ரேட்டும் புரதமும் இருக்கின்றன.

# இது தரும் சக்தியும் கொழுப்பும் ஆரோக்கியமான மனித உடல் வளர்ச்சியைத் தூண்டும்.

# உளுந்தங்களி பெண்களுக்கு உகந்தது. மாதவிடாயைச் சீராக்குவது மட்டுமில்லாமல் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இடுப்பு வலி, உடல் வலியை நீக்கும்.

# தாய்ப்பால் பெருக்க உளுந்து பயன்படும். ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு, உளுந்து மாவைக் கொடுக்கலாம். மலத்தை வெளித் தள்ளவும் உதவுகிறது.

# தோல் நீக்கப்பட்ட உளுந்து, பாலுணர்வைத் தூண்டக்கூடியதாகக் கருதப்படுகிறது.

இதை அதிகமாகச் சாப்பிடுவது வாயுவை ஏற்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் இதில் ஆக்சாலிக் அமிலம் இருப்பதால், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

பண்டைய பெயர்: மாடம், மாஷம்

தாவரவியல் பெயர்: Vigna mungo

ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram

ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha#

# மெலிந்த உடலைப் பருக்கச் செய்ய உளுத்தங் கஞ்சி சிறந்த உணவு.

# சிறுநீர் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.

# தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சித்தர் அகத்தியர்.

# உளுந்து மூலம் செய்யப்படும் உளுந்துத் தைலம், சித்த மருத்துவத்தில் வாத நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது. வலிமை இழந்த தசைக்கு வலுவூட்ட உளுந்துத் தைலம் உதவுகிறது. தொக்கண முறைகளில் அதிக அளவில் உளுந்துத் தைலம் பயன்படுத்தப்படுகிறது.

# முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.


# எலும்பு முறிவிற்கு தண்ணீரில் ஊற வைத்து, காய வைத்து,அரைத்த கறுப்பு உளுந்து மாவு முட்டை வெண்கரு இட்டு குழைத்து துணி சுற்றி கட்டுதல் சித்த மருத்துவ வழிமுறை

+++++++++++++++++
உரலில் இடக்கையால் மாவைத் தள்ள, வலக்கை ஆட்டுக்கல்லை சுழற்றிக்கொண்டிருந்தது. ஆம், அப்படி பக்குவமாக மாவாட்டிக்கொண்டிருந்தது உமையாள் பாட்டிதான்! 

“என்ன பாட்டி… கரண்ட் இல்லையா இல்ல, கிரைண்டர் ரிப்பேரா?” பாட்டியிடம் கேட்டுக்கொண்டே அருகிலிருந்த மரப்பலகை இருக்கையை பாட்டியின் அருகில் போட்டு அமர்ந்தேன். 


“வாப்பா… வா! நீ வந்தது நல்லதா போச்சு. மாவ கொஞ்சம் வெளியில போகாம அப்படியே தள்ளிவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்யேன், கொஞ்சம் புண்ணியமா போகும்!” என்னிடம் உதவி கோரினாள் உமையாள் பாட்டி. “சரி பாட்டி… நானும் இட்லி சாப்பிடணுமில்ல, அதனால நான் ஹெல்ப் பண்றேன்.” 


கையை வாஷ் செய்துவிட்டு பாட்டிக்கு ஒத்தாசை செய்தேன். “இது இட்லி மாவு இல்ல, உளுந்த வடைக்கான மாவு” பாட்டி சொல்லி சிரித்தாள். “என்ன விசேஷம் பாட்டி! வடைகிடையெல்லாம் அமர்க்களப்படுது…?!”


 “விசேஷமெல்லாம் ஒன்னுமில்ல, நான் அடிக்கடி உளுந்தங் களி கிண்டி சாப்பிடுவேன். இன்னிக்கு வடை மேல ஆச வந்திடுச்சு! இந்த உளுந்த நம்ம உணவுல சேத்துக்கறது அவசியமானது, அதான்! ” பாட்டி பேசிக்கொண்டே மாவின் பதம் பார்த்துக்கொண்டாள். “ஓ உளுந்து அவ்வளவு முக்கியமானதா?!” 


“பின்ன… உளுந்த அவ்வளவு சாதாரணமா நெனச்சிடாத! நரம்பு மண்டலம் வலிமை பெறுவதற்கும் உடல் குளிச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திய அதிகரிக்கவும் உளுந்து நல்ல ஒரு உணவு. அதுமட்டுமில்லாம, பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கவும் பெண்களின் இடுப்பு வலிமை பெறவும் பக்கபலமா இருக்கு இந்த உளுந்து. 


அதோட, குழந்தை பெற்ற பெண்ணுக்கு பால் சுரப்பை அதிகமாக்குது. தினமும் நாம உளுந்த உணவுல சேத்தா மலச்சிக்கல், வயிறு உப்புசம் மாதிரியான பிரச்சனயெல்லாம் தீரும். அப்புறம்… இரத்தத்துல கொலஸ்ட்ரால் அளவ குறைச்சு இதயத்த பலப்படுத்துது இந்த உளுந்து.” 


“ஓ பாட்டி… பாட்டி…! நிறுத்துங்க மாவு நல்ல பதத்துக்கு வந்திருச்சு, எடுத்து சட்டியில அள்ளுங்க! “ஆங்… சொல்ல மறந்துட்டேன்பா! உளுந்த வடை, உளுந்தங் கஞ்சி சாப்பிட்டு வந்தா உன்ன மாதிரி இளைத்த உடலெல்லாம் பயில்வான் மாதிரி ஆயிடலாம்!” 


பாட்டி கேலிப்பார்வை பார்த்தபடியே மாவினை சட்டியில் அள்ளினாள். நான் வடையை ருசிக்கும் ஆர்வத்தில் பாட்டியின் வடைக்காக காத்திருந்தேன்! 


குறிப்புகள்: 

உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும். 

4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும். 


வாத நோய் மற்றும் முடக்கு நோய்க்கு உளுந்து தைலம் (External use) உதவும். (உளுந்து தைலம் ஈஷா ஆரோக்யாவில் கிடைக்கும்)


Friday, August 5, 2016

மலர்களின் மருத்துவ குணங்கள்

மலர்களின் மருத்துவ குணங்கள்:

முருங்கைப்பூ: பித்தம் நீக்கும். வாந்தி குணமாகும். கண்கள் குளிர்ச்சி அடையும். காம உணர்வுவை அதிகமாக்கும்.
செந்தாழம்பூ: தலைவலி தீரும். கபம், ஜலதோசம், வாத நோய் ஆகியவை அகலும். உடலுக்கு அழகு அளிக்கும்.
செவ்வகந்திப்பூ: உடற்சுடு, மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற நோய்களை குணமாக்கும்.
அகத்திப்பூ: பீடி,சிகரெட், சுருட்டு, உக்கா போன்றவற்றை பிடிப்பதால் ஏற்படுகின்ற விச சூட்டையும், பித்தத்தையும், வெயிலினால் உண்டாகும் சூட்டையும் நீக்கும்.
வாகைப்பூ: கசப்பு சுவையுடைய இப்பூ, சூட்டை நீக்கும்.
இலுப்பைப்பூ: நல்ல சுவையுடைய இப்பூவினால் பாம்பு விஷம், வாத நோய் குணமாகும்.
புளியம்பூ: மலையை சார்ந்த காட்டில் முளைக்கும் இப்பூவினால் பித்த நோய், சுவையின்மை வாந்தி ஆகியவை தீரும்.
மாதுளம்பூ: அனல் பித்தம், ஏப்பம், வாந்தி, இரத்த மூலம் ஆகிய நோய் நீங்கும்.இரத்தம் மிகுதியாகும்.உடலுக்கு ஊட்டம் அளிக்கும்.
வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.
பனம்பூ: பல் நோய், சிறுகட்டு, வாத குன்மம், நாட்பட்ட சுரம் ஆகியவை தீரும்.
முள்முருக்கம்பூ: சூதக கட்டு (மாத விலக்கு தடை) நீங்கும்.
வாழைப்பூ: சீதபேதி, இரத்தமூலம், பால்வினை நோய், வெள்ளைப்பாடு, இருமல், உடற்சூடு, கைகால் எரிச்சல் ஆகியவை குணமாகும். விந்து விருத்தியாகும்.
தென்னம்பூ: பால்வினை நோய்,வெள்ளை ஒழுக்கு, உடலில் உள் கொதிப்பு, இரத்த போக்கு, விஷக்கடி நோய்கள் நீங்கும்.
குருக்கத்திப்பூ: கசப்பும், இனிப்பும் சுவையுள்ள இப்பூவினால், தலைநோய், தாகம், கபம், புண், பித்தம், பல்வகை விஷக்கடி ஆகியவை குணமாகும்
மல்லிகை பூ: இல்லறதில் ஆர்வமுண்டாக்கும். கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். உடலுக்கு சூட்டை அளிக்கும்.அதிகப் பால்சுரப்பால் அவதியுரும் பெண்கள் இப்பூவை மார்பில் மூன்று நாட்கள் கட்டி வந்தால் பால்சுரப்பு குறையும்.
பன்னீர் பூ: வாந்தி, நாக்கில் சுவையின்மை, விந்துவிரையம், தண்ணீர் தாகம், உடற்சூடு ஆகியவை தீரும்.
மந்தார்ப்பூ: உடல் கொதிப்பு நீங்கும். கண்கள் குளிச்சியடையும்.உடலும் குளிச்சியடையும்.
மகிழம்பூ: இதனை முகர வாந்தி நிற்கும்.உடலிலுள்ள அனல் நீங்கும். புணர்ச்சியின் மீது ஆசையுண்டாகும்.
புன்னைப்பூ: கரப்பான்,சொறி,சிறங்கு, பால்வினைநோய் ஆகியவை நீங்கும். ஆனால், பித்த மயக்கம் ஏற்படும்.
பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.
பச்சைக் குங்குமப்பூ: மூக்கடைப்பு ஜலதோஷம், காது நோய், கப-பித்த நோய்கள் நீங்கும்
சண்பகப்பூ: வாத பித்த நோய், எலும்பு காய்ச்சல், பால்வினை நோய், விந்துவிரையம் ஆகியவை தீரும். வாசனை மனமகிழ்ச்சியினை உண்டாக்கும்.இந்தப் பூக்களை நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி, நீங்கும்
கொன்றைப்பூ: சர்க்கரை நோய், குடல்வலி, மலப்புழுக்கள் யாவும் ஒழியும்.
காட்டாத்திப்பூ: சீதபேதி, இரத்த பேதி,பால்வினை நோய் குணமாகும். செடியின் மலர் வகை.
தும்பைப்பூ; தாகம்,கண் நோய்கள், ஜன்னி பாத சுரம் யாவும் தீரும்.
கருஞ்செம்பைப்பூ: கபநோய்,மூக்கடைப்பு, தலைவலி,வாத நோய் போன்றவைகள் குணமாகும்.
செம்பருத்தி பூ: வெட்டைச் சூடு நீங்கத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுத்தம் செய்யப்பட்ட பூவைச் சாப்பிட்டு வரலாம். உடலின் உஷ்ணத்தைத் தக்கும். இதயத்தைபலப்படுத்தும்.
களாப்பூ: கண்களைத் தாக்கும் கரும்படலம், வெண்படலம்,ரத்தப் படலம்,சதைபடலம் போன்ற கண் நோய்களை அகற்றும்.
அலா஢ப்பூ: பித்தம்,உடற்சூடு,சொறிசிரங்கு, புண் இரத்தம், தலையில் நமைச்சல் ஆகியவை நீங்கும்.
அகத்திப்பூ: எலும்புகளையும் பற்களையும் வளரச் செய்யும், சுண்ணாம்புச் சத்து அகத்திப்பூவில் அதிகம் இருக்கிறது. ஜீரண சக்திகும் மலச்சிக்கலை நீக்கவும் உதவும்.இம்மலரை தாரளமாகச் சமைத்துச் சாப்பிடலாம்.
அல்லிப் பூ: நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம்.
இலுப்பைப் பூ: ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்று சொல்லப்படுவது இனிப்புத் தன்மையாலேயே! இலுப்பைப் பூவைச் சர்க்கரையுடன் சேர்த்து அரைத்துக் காய்ச்சிய பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிகள் குறையும். உடல் களைப்புத் தீரும் இருமல் குறையும்.விரை வீக்கத்திற்கும் இந்த மலரை வதக்கி ஒத்திடம் கொடுக்கலாம்.
கண்டங்கத்திரிப் பூ: மூல நோய்க்கு இந்தப் பூ கைகண்ட மருந்து.வாதுமை நெய்யில்கண்டங் கத்திரிப் பூக்களைப் போட்டுக் காய்ச்சி மூலம் உள்ள இடத்தில் தடவி வர, மூல நோய் குணமாகும்.
குங்குமப் பூ: பலவிதமான நோய்களைப் போக்குவதில் குங்குமப் பூ தன்னிகரற்று திகழ்கிறது.தலைவலி கண் நோய் காதுநோய் சுரம் ஆகிய நோய்களை இந்தப் பூ குணப்படுத்தும்.கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம்.பசும் பாலிலும் காய்ச்சி பருகலாம்.குடல் புண்களுக்கு இது உதவும்.சிகப்பான குழந்தை பிறக்கும் என்பது மட்டும் உண்மையில்லை.
சம்பங்கிப் பூ: காய்ச்சிய பசும்பாலில் இந்தப் பூவைப் போட்டு சாப்பிட்டு வந்தால் உடல் திடகாத்திரம் பெறும்.
சூரிய காந்திப் பூ: இந்தப் பூவிலுள்ள விதைகளியிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பலம் அளிப்பதுடன் நோய்களுக்கு நன்மையளிக்கும்.
தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.
வெள்ளை தாமரைப் பூ. ஈரலில் ஏற்படும் சூடு, ஒவ்வாத மருந்தின் துன்பம், உடலில் உண்டாகிற எரிச்சல் யாவும் தீரும்.
தாமரை பூ. இதயத்திற்க்கு பலமளிக்கும்.உடல் வெப்பத்தை நீக்கித் தாது எரிச்சலை தவிர்த்து இரத்த நாளத்தையும் சீர்செய்கிறது.
நொச்சிப் பூ. இதனை அரைத்துத் தடவி வந்தால் சிரங்குகள் குணமாகும்.
முருங்கைப் பூ. காய்ச்சியப் பாலில் இப் பூவைப் போட்டு தினம் சாப்பிட்டு வந்தால் தாதுப் பலம் ஏற்படும்.
வாழைப் பூ. இதில் சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துப் பருகி வந்தால் பெண்களை வருத்தும் மாதவலி நீங்கும்.
வேப்பம் பூ. இது சிறந்த கிருமி நாசின் வயிற்றுப் பூச்சிக்களை ஒழிக்கும். அடிக்கடி வரும் ஏப்பத்தை நிறுத்தும். வயிறு சுத்தமாகவும், பித்தம் போக்கவும் தொண்டைப் புண் ஆறவும் காது இரணம் நீங்கவும் இப் பூ கைக்கண்ட மருந்து.
வெங்காயப் பூ. இதைச் சமைத்துச் சாப்பிட்டால் வயிற்று வலி நீங்கும்.
தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.

Thursday, August 4, 2016

இஞ்சி


இஞ்சி – சமையலறை மருத்துவர்

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
++++++++++++++++++++++++++++++
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.

அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.

எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,

தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.

மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.

இஞ்சி ஒத்தடம்:
=============

இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.

1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.

2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.

3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.

4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.

5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.

6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.

7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.

8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.

9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்

Monday, August 1, 2016

மனமும் உடலும்

🌹 #மனமும் #உடலும் 🌹

🌴நம் உடலானது  உயிரை தக்க வைத்துக் கொள்வதற்காக 24 மணிநேரமும் போராடுகின்றது.

🌴நாம் எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும் நம் உடல் நமக்காக வேலை செய்து கொண்டே இருக்கும்.

🌴என்ன உணவுக்கு என்ன இரசாயனம் சுரக்க வேண்டும். எதை கொழுப்பாக மாற்ற வேண்டும். எதை இரத்தத்தில் இருந்து பிரிக்க வேண்டும் போன்ற பல தகவல்கள் ஒவ்வொரு செல்களிலும் உள்ளது.

🌴நாம் உடலை பற்றி என்ன யோசித்தாலும் அதை உடனே நம் உடல் செயல்படுத்த ஆரம்பித்துவிடும்.

🌴உதாரணமாக நீங்கள் படுத்துக்கொண்டு, ஓடுவதாக கற்பனை செய்தால் உடனே உடல் அதை உண்மை என நம்பி அதற்கு தேவையான அனைத்து தசைகளையும் இயக்க ஆரம்பித்துவிடும்.

🌴ஆம் உடலை மனதால் ஏமாற்றிவிடலாம். நீங்கள் நம்ப முடியாத ஒரு விடயத்தை இங்கே கூற போகிறேன்.

🌴நீங்கள் தினமும் ஒரு அரைமணி நேரம் படுத்துக்கொண்டு, வெறும் கற்பனையால் யோகாசனம் செய்வதாக நினைத்தாலே போதும். நீங்கள் யோகா செய்தால் என்ன பலனோ அதே பலன் இதிலும் கிடைத்துவிடும்.

🌴ஆம் சூரிய நமஸ்காரம் ஒவ்வொன்றாக செய்வதாக மனதில் ஆழ்ந்து நினைத்துவந்தாலே போதும்.

🌴மனதிற்குள் புக முடிந்தால் உடலுக்குள்ளும் புக முடியும்✋🏼

💥💥