Wednesday, March 4, 2015

நெல்லிக்காய்

தினமும் ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காயை சாப்பிடுவதால் 

பெறும் நன்மைகள் - இயற்கை மருத்துவம் 

நெல்லிக்காயின் மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லித் தான் 

தெரிய வேண்டுமென்பதில்லை. மேலும் நெல்லிக்காயை எந்த 

வடிவில் எடுத்தால், அது கொடுக்கும் நன்மைகளுக்கு மட்டும் 

அளவே இல்லை. அதில் பலருக்கும் நெல்லிக்காய் ஜூஸ், 

நெல்லிக்காய் பொடி பற்றி தெரியும். ஆனால் நெல்லிக்காய் 

பாக்கு குறித்து தெரியுமா?

ஆம், நெல்லிக்காய் பாக்கு என்பது வெயிலில் உலர்த்தியது. இந்த 

ஒரு துண்டு காய்ந்த நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் 

பாக்கை உட்கொண்டால், அதனால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு 

கிடைக்கும்.

கர்ப்ப கால குமட்டல் :-

கர்ப்ப காலத்தில் குமட்டல் ஏற்படுவது பொதுவானது தான். 

இத்தகைய குமட்டலில் இருந்து விடுபட ஒரு துண்டு உலர்ந்த 

நெல்லிக்காயை வாயில் போட்டு மெதுவான மென்று அதன் 

சாற்றினை விழுங்க, குமட்டல் குணமாகும்.

செரிமானம் :-


செரிமான பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுபவர்கள், 

கண்ட மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக ஒரு துண்டு 

உலர்ந்த நெல்லிக்காயை வாயில் போட்டு மென்று 

விழுங்கினால், செரிமான பிரச்சனைகள் விரைவில் தடுக்கப்படும்.

நெஞ்செரிச்சல் :-

அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உட்கொண்டால் 

நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி ஏற்படும். நீங்கள் 

அம்மாதிரியான பிரச்சனை கொண்டவராயின், உணவு 

உட்கொண்ட பின் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை 

உட்கொள்ளுங்கள். இதனால் செரிமானம் சீராக 

நடைபெறுவதோடு, செரிமான பிரச்சனையால் ஏற்படும் 

குமட்டல் அல்லது வாந்தியில் இருந்து நிவாரணம் தரும்.

வயிற்று வலி :-

நெல்லிக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் 

பாலிஃபீனால்கள் அதிகம் உள்ளது. இது வயிற்றில் உள்ள 

டாக்ஸின்களை வெளியேற்றி, வயிற்று வலியில் இருந்து 

உடனடி நிவாரணம் தரும்.

வாய் துர்நாற்றம் :-

உங்கள் வாய் கப்பு அடிக்குமா? அதைத் தடுக்க ஒரு துண்டு 

உலர்ந்த நெல்லிக்காய் துண்டை வாயில் போட்டு மெல்லுங்கள். 

இதனால் அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சிப் பொருள், 

பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்ச்சியுடனும், 

துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும்.

நோயெதிர்ப்பு சக்தி:-

 நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-

ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். அதிலும் 

தினமும் ஒரு துண்டு உலர்ந்த நெல்லிக்காயை உட்கொண்டு 

வந்தால், அடிக்கடி ஏற்படும் காய்ச்சல், சளி போன்றவற்றின் 

தாக்குதல்களில் இருந்து விடுபடலாம்.

நெல்லி பாக்கு தயாரிப்பது எப்படி?


 1/2 கப் நெல்லிக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 1/2 

டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, பின் அதனை ஒரு 

தட்டில் வைத்து, வெயிலில் வைத்து சில நாட்கள் உலர்த்தி, பின் 

காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்


+++++++++++++++++++++++++++++++++++++++


நோய் எதிர்ப்பு சக்தி தரும் வெல்ல பாகு நெல்லிக்காய்
ஒரு கிலோ நெல்லிக்காயை சுத்தமா கழுவி, இட்லி தட்டுகளில் துணி போட்டு, அதுல பரத்தி வைங்க. வேக வைக்க தேவையான தண்ணீருடன், இரண்டு கரண்டி பாலையும், இட்லி பானையில் ஊத்தி அடுப்புல ஏத்தணும்.

பால் கலந்த தண்ணி சூடானதும், நெல்லிக்காய் பரப்புன இட்லி தட்டுகளை வைத்து, பானையை மூடி அவிச்சு எடுங்க.அரைக்கிலோ வெல்லம் அல்லது கருப்பட்டியை தூளாக்கி (அரைக்கிலோ வெல்லம்னா சுமாரா ஒரு உருண்டை.
இது இனிப்பு குறைவா சேர்க்கிறவங்களுக்கு. இனிப்பு அதிகம் வேணும்னா ஒரு கிலோ வெல்லம் போடலாம்.) தேவையான தண்ணீர் ஊற்றி கரைத்து, அழுக்கு போக வடிகட்டி அடுப்புல வைச்சு பாகு காச்சுங்க.
ரொம்ப காய்ச்சணும்னு இல்ல. பிசுபிசுன்னு வந்தவுடன்
இறக்கிடலாம். இதுல வெந்த நெல்லிக்காயைப் போட்டு, ஃபிரிட்ஜுல வச்சுடுங்க. ஊற ஊற, தினமும் ஒன்னு எடுத்து சாப்பிடுங்க.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இரும்புச் சத்து, இன்னும் பல சத்துக்கள் கிடைக்கும் நெல்லிக்காய் எல்லாம் தீர்ந்தப்பிறகு, மீதமிருக்கிற நீர்ப்பாகை, ஜூஸ் மாதிரி குடிச்சிருங்க.
நெல்லிக்காயின் சத்துகள் அதில் இறங்கியிருப்பதால் அதை வேஸ்ட் பண்ண வேண்டாமே.

+++++++++++++++++++++

கண்நோய்களை விரட்டும் நெல்லிக்காய்


தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானது தான் நெல்லிமரம் என்று கூறப்படுகிறது. இத்தனை உபயோகமுள்ள ஒரு மரத்தை தெய்வீக மரம் என்று சொல்லலாம். நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது. 

தமிழகத்தில் வளரும் நெல்லிக்காய் சிறியளவில் கொஞ்சம் துவர்ப்பும், புளிப்பும் அதிகம் கொண்டதாக இருக்கும். வட நாட்டில் வளரும் நெல்லி பெரிதாக இருக்கும். பல மருத்துவக் குணங்கள் இருப்பதாலேயே நெல்லியை அனைவரும் உயர்வாகப்புகழ்கிறார்கள். நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள். 

தண்ணீர் இனிப்பாக மாறிவிடும். பெரியளவில் உள்ள நெல்லிக்காய் ஊறுகாய் செய்யவும், சிறியதை ஆயுர்வேத மருந்துகள், லேகியம் முதலியவை செய்ய பயன்படுத்துகிறார்கள். தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால், அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்றுநோய்கள் அண்டாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும். ஒரு ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.
 
உடல் சதை பலப்படும். நெல்லிச்சாறுடன் பாகற்காய்சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும். ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல் பழப்பொடி, ஒரு ஸ்பூன் பாவற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது. உலர்ந்த நெல்லிக்காயையும், சிறிது வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டால் முடக்கு வியாதி குணமாகிவிடும். நல்ல சுத்தமான தண்ணீரில் இரண்டு நெல்லிக்காய்களைப் போட்டு ஊற வைத்து அந்தத் தண்ணீரை எடுத்து கண்களை அகல விரித்து கழுவவும்.

கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான் 
பயன்படுத்துகிறார்கள்.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது. 

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.
--------------------------------------------------------------
ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!
ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,
தேவையான பொருட்கள்:
ஒரு கிலோ நெல்லிக்காய், 
1.25 கிலோ வெல்லம், 
சுக்கு 25 கிராம்,
ஏலக்காய் 10 கிராம்.
செய்முறை:
நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். மருத்துவ பயன்கள்: வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
'ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்!

ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம், 

தேவையான பொருட்கள்: 

ஒரு கிலோ நெல்லிக்காய், 1.25 கிலோ 
வெல்லம், சுக்கு 25 கிராம், 
ஏலக்காய் 10 கிராம். 

செய்முறை: 

நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம். மருத்துவ பயன்கள்: வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.

thanks: Pettagam'

Tuesday, March 3, 2015

மாமரம்

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் மாமரம்…
மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மனிதர்களுக்கு பயன்படுகிறது. சில வகை உணவுகளைக் கொடுத்தும், சிலவகை மருந்தாகவும், சில வகை இருப்பிடங்களை உருவாக்கவும், என இவற்றின் பயன்பாடுகளை அளவிட முடியாது.
நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு மரத்தின் மருத்துவப் பயன்கள் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் மாமரத்தைப் பற்றியும், அதன் மருத்துவக் குணங்கள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
கனிகளில் ராஜ கனியாக மாங்கனியைக் குறிப்பிடுகின்றனர். அதுபோல் முக்கனியில் முதல் கனியும் மாங்கனிதான்.
மாமரம் சைவ சமயத்தில் ஒரு சில சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியா தான். குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும்.
மாமரத்தை, ஆமிரம், எகின், சிஞ்சம், சூதம், குதிரை, மாழை, மாந்தி என பல பெயர்களில் சித்தர்கள் அழைக்கின்றனர். மா, பெருமர வகையைச் சார்ந்தது. இதில் பல வகைகள் உள்ளன.
இந்துக்கள் பண்டிகை, வீட்டு விசேஷங்கள், திருவிழாக்களின் போது மாவிலையை தோரணமாகக் கோர்த்து வாசலில் கட்டுவார்கள். இது மங்கள பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மா இலை ஒரு கிருமி நாசினியாகும். வீட்டிற்கு வருபவர்களுக்கு ஏதேனும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு. இதனால் தான் நம் முன்னோர்கள் மாவிலைத் தோரணங்களைக் கட்டி வந்தனர்.
கோமியத்தை வீட்டில் தெளிக்கும் போது மா விலையை பயன்படுத்துவதை நம் கிராமங்களில் இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள்.
இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.
நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
மாவின் கொழுந்து இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூ
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால், வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பு போன்றவை நீங்கும்.
மாம்பிஞ்சு
இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.
மாங்காய்
மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.
மாம்பழம்
கோடைக்காலத்தில் அதிகம் விளையும் மாங்கனி மிகுந்த சுவை கொண்டது.
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை ஆற்றும்.
மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
வேத சத்திய மாக விளம்புவோந்
தாது விர்த்திருக்குந் தம்பன மாங்கனி
போதம் மர்த்தனம் புன்காயி னால்வடு
வாத பித்த கபங்களை மாற்றுமே
(அகத்தியர் குணவாகடம்)
மாம்பழம் அதிக வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது. இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.
மாங்கொட்டை
பேசுமே சீதப் பெருக்குஞ்சோ ரிக்கடுப்பும்
வீசுமோ மூலமுறு வெங்கொதிப்பு – மாசுடைய
பூங்கொட்டை யைத்தள்ளிப் போட்டுக் கனியில்வந்த
மாங்கொட்டையைக் காணில் வாது
-அகத்தியர் குணவாகடம்
மாங்கொட்டை பருப்பை எடுத்து காயவைத்து பொடித்து கஷாயம் செய்து மாதவிலக்குக் காலத்தில் அருந்தினால், அதிக உதிரப்போக்கு கட்டுப்படும். வெள்ளைப்படுதல் குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் நீங்கி, வயிற்றுப்புண் ஆறும். வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு குணமாகும்.
மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.
மாம்பட்டையைக் குடிநீர் செய்து அருந்தினால் சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏதும் அணுகாது.
மா வேர்பட்டை வயிற்றுப்புண், குருதிக்கழிச்சல் போன்றவற்றை நீக்கும்.
மாம்பிசின்
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.
அளவில்லாப் பயன்களை அள்ளித்தரும் மாமரத்தை நாமும் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்

Monday, March 2, 2015

பம்பளிமாஸ் பழம்

பம்பளிமாஸ் பழம் 
இரத்த சோகையைப் போக்கும் பம்பளிமாஸ் பழம்
சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். 

சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையேசிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். 

இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. பழங்கள் யாவும் உடலுக்கு நேரடியாக சத்துக்களை அளிக்க வல்லவை. உடலுக்குத் தேவையான புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள் அனைத்தும் பழங்களில் நிறைந்துள்ளன. பழங்கள் உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். 

தினமும் ஒரு பழமோ அல்லது பழக்கலவையோ சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் மற்றும் சுளைகள் பெரியதாக இருக்கும்.  பித்த அதிகரிப்பை சரி செய்யும் தன்மை பழங்களுக்கும், கீரைகளுக்கும் உண்டு. இதில் பம்பளிமாஸ் பழம் பித்த அதிகரிப்பை வெகு விரைவில் குறைக்கும். 

இப்பழம் கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவது நல்லது. கண் பார்வைக் கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்துக் குறைவதால் மாலைக் கண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இக்குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். 

ஈரல் பாதிப்புகளால்தான் காமாலை நோய் உருவாகின்றது. இந்த காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இப்பழம் கிடைக்கும் காலத்தில் அதிகம் வாங்கி சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படாமல் தடுக்கலாம். கோடைக்காலத்தின் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகு விரைவில் வெப்பமடையும். 

இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குறைபாடு நீங்கும். வயிற்றுப் போக்கு சிலருக்கு அடிக்கடி ஏற்படும். 

இதற்குக் காரணம் தெரியாமல் அடிக்கடி மருத்துவரை நாடுவார்கள். எந்த வகையான மருந்துகள் சாப்பிட்டாலும் இவர்களின் சீதளப் போக்கு அப்படியே இருக்கும். இதற்குக் காரணம் இவர்களின் சீதள தேகம்தான். இவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் போக்கு ஏற்படுவது குறையும். வருடத்தில் சில மாதங்களே கிடைக்கும் பம்பளிமாஸ் பழத்தை வாங்கி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.

சோற்றுக் கற்றாழை



இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.

+++++++++++++++++++++++++++++++++
கற்றாழைப் பச்சடி
தேவையானவை:
கற்றாழை 1 மடல் (பெரியது)
அச்சு வெல்லம் 2
காய்ந்த மிளகாய் 2
கடுகு, உளுந்து அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் சிறிதளவு

செய்முறை:
கற்றாழையைத் தோல் சீவி, தண்ணீரில் நன்றாக அலசி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அச்சு வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி வைக்கவும். வாணலியில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, நறுக்கி வைத்துள்ள கற்றாழைத் துண்டுகளைச் சேர்க்கவும். வெந்ததும் வெல்லக் கரைசலைச் சேர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்துக் கொட்டவும். சுண்டக் காய்ச்சி இறக்கவும். இது உடலுக்கு வலுவூட்டி, இளமையைத் தக்கவைக்கும் உணவு.
கற்றாழைப் பச்சடியை பிரெட், சப்பாத்தி இவற்றுடன் ஜாம் போன்று சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஃபிரிட்ஜில் வைத்து இரண்டு மூன்று நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.
நன்றி: திருமதி. ராஜபுஷ்பா
----------------------------------------------------------------------------------------


புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை 
மருந்து ...!!
புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் 
ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து 
பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு 
இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு 
உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை 
கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் 
இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் 
அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி 
விடும்.


எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, 
அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், 
உயிரையே காவு வாங்கி விட்டது.
அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் 
முன்னே நான் பார்த்ததில்லை.
அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு 

எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் 

நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr 


ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக 
பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து 
குணமடைந்துள்ளனர்.www.facebook.com/puradsifm
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் 
சோற்று கற்றாழை ஆகும் .
**சோற்று கற்றாழை 400 கிராம்
**சுத்தமான தேன் 500 கிராம்
**whisky (or) brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
------------------------
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி 
கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான 
துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும்
அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக 


கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் 
whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க 
வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.
மருந்தை உட்கொள்ளும் விதம்
----------------------------------------------
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 
நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை 
பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து 
வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண 
வேண்டும்.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு
நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். 
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் 
கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும்.
மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத 
இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது
----------------------------
சோற்றுக் கற்றாழையில் ஒரு சுவர்க்கம்.....

சோற்றுக்கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை என்பது அனைவருக்கும் தெரியும்.

அதை உண்ணக்கூட முடியும் என்பது கொஞ்சம் பேருக்கு மட்டுமே தெரியும்.

ஆனால் அதை உலகில் இருந்து உணவுப் பஞ்சத்தை நிரந்தரமாக இல்லாமல் செய்யும் மனிதனின் முக்கிய உணவாகப் பயன்படுத்தலாம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

ஆம்! சோற்றுக் கற்றாழையை மருத்துவப் பொருளாக மட்டுமல்ல முதல்தரமான உணவுப் பொருளாகவும் பயன்படுத்த முடியும் என்பதை எனது சொந்த ஆய்வாலும் அனுபவத்தாலும் கண்டறிந்திருக்கிறேன்.

அதற்கு நாம் செய்யவேண்டிய முதல்வேலை அதில் அடங்கியுள்ள மருத்துவத் தன்மை உள்ள ஆனால் வாடையுடன் கசப்புச் சுவை கொண்ட வழுவழுப்பான திரவ பாகத்தை முழுமையாக அப்புறப் படுத்துவதே!

அத்துடன் முட்களையும் தோலையும் அப்புறப் படுத்தி சுத்தமான ஜெல்லியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.

அந்த பளிங்குபோன்ற ஜெல்லியை அடிப்படையான பொருளாக வைத்து எண்ணற்ற சுவையான பண்டங்களை இயற்கை முறையிலும் சமைத்தும்
 இனிப்பாகவும் காரமாகவும் நமக்கு வேண்டும் சுவைகளில் தயாரிக்கலாம்.

உணவாகவும் தின்பண்டமாகவும் தயாரிக்கலாம்.

எப்பேர்ப்பட்ட கொடும் பஞ்சத்திலும் வறட்சியிலும் காய்ந்து கருகிப்போகாமல் வாழ்ந்து நமக்கு உணவாகப் பயன்படக்கூடிய இதை பயனற்ற நிலங்களிலும் வேலிகளிலும் பயிர் செய்துவிட்டால் அது உலகம் உள்ளவரை அழியாது எந்தப் பராமரிப்பும் இல்லாமல் நிரந்தரமாகப் பயன் கொடுக்கும்!

அதனால் உலகில் ஒரு மனிதன்கூட உணவின்றி உயிர்விடத் தேவையே இருக்காது.

ஏதேனும் ஒரு உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் முன்வந்தால் இதை வர்த்தக ரீதியில் வகை வகையான உணவுப் பொருட்களாகத் தயாரித்து மலிவாக விற்பனை செய்து உலகளாவிய மகத்தான வெற்றியை அடைய முடியும்!

முதலில் ஜெல்லியைப் பிரித்தெடுத்துக் கசப்பை நீக்கும்  எளிமையான முறையைப் பார்ப்போம்!.....

இது சோற்றுக் கற்றாழை .......




வெட்டப்பட்ட சோற்றுக் கற்றாழை மடல்கள்.....



அது முள் நீக்கப்பட்டு கீற்றுக்களாக்கப்பட்ட  நிலையில்.....



சிறு சிறு கீற்றுக்களாக்குதல்.....




மேல்தோல் நீக்கப்படுதல்......






குழாய்த் தண்ணீரில் நன்றாகப் பலமுறை கழுவுதல்.....ஒவ்வொரு முறையும் கழுவிய நீரை வடித்துவிட வேண்டும். 





நீளமான துண்டுகளைச் சிறு துண்டுகள் ஆக்குதல்.....






அதை மேலும் ஒரு முறை கழுவி நீரை வடித்துவிட்டு அதையும் வடிகட்டியால் வடிகட்டுதல்....







கசப்புச் சுவை கொஞ்சமும் இல்லாத சோற்றுக் கற்றாழை ஜெல்லி தயார்!....



Sunday, March 1, 2015

ராகம் கேட்டால் நோய்கள் குணமாகும்

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள்


குணமாகும் .....!


ஆகிர் பரவி - அஜீரணத்தையும், ஹைபர்


டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும்,


மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .

பைரவி - முட்டி மற்றும் முழங்கால் வலி .

சந்திரகௌன்ஸ் - பசியின்மை .

தர்பாரி கானடா - தலைவலி .

தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல்,

குடற்கற்கள் .

குஜரிகோடி - இருமல், சளி .

குணகளி - மலச்சிக்கல், தலைவலி, மூலம் .

ஜோன்புரி - வாயுக்கோளாறு, பேதி,

மலச்சிக்கல் .

ஜெய் ஜெய் வந்தி - பேதி, தலைவலி,

மூட்டுவலி .

( த்வஜாவந்தி )

மால்கௌன்ஸ் - குடல் வாயு .

பூர்விகல்யாணி - இரத்தசோகை, டென்ஷன்,

குடல் எரிச்சல் .

பூர்ய தனஸ்ரீ - இரத்தசோகை .

சோஹானி - தலைவலி.

வசந்த பஹார் - குடற்கற்கள் .

யெமன் கல்யாணி - மூட்டுவலி.