முக்கியமான கூட்டத்தில் இருக்கும் போதோ, கணினியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ, முக்கியமான மின்னஞ்சலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போதோ, மனதிற்கு பிடித்தமான நிகழ்வுகளில் கலந்து கொண்டிருக்கும் போதோ சிறுநீர் கழிப்பது இயலாது.
உதாரணமாக சூழ்நிலை சாதகமாக இல்லாமலிருப்பது, பொது கழிப்பிடங்களைப் பயன்படுத்தத் தயங்குவது, கழிப்பிடத்திற்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியிருப்பது, சுகாதாரமற்ற கழிப்பிடமாக இருப்பது போன்றவற்றைக் கூறலாம்.
சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றியவுடன் கழித்து விடல் வேண்டும். முக்கிய வேலை இருப்பின் சிறிது தள்ளிப் போடலாம். வலி ஏற்படுமளவிற்கு ஒரு போதும் தாமதிக்கக் கூடாது.
சிறுநீரைத் தாங்கிக் கொள்ளும் நேர அளவு ஆளுக்கு ஆள் மாறுபடும்.
பொதுவாக 3 மணி யிலிருந்து 6 மணி நேரத்திற்குள் தாங்கும் அளவு நீடிக்கும். அதாவது ஒரு நாளில் 6 முதல் 10 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு.
சிறுநீர் உற்பத்தி அளவு, சுற்றுப்புற வெப்ப நிலை, வியர்வை அளவு, வேலையின் அளவு, உட்கொள்ளும் நீரின் அளவு, சிறுநீர்ப்பையின் கொள்ளளவு, சிறுநீர்ப்பையின் தாங்கும் திறன் (Bladder capacity, Sensitivity) போன்றவற்றை பொருத்து சிறுநீர் கழிக்கும் நேர இடைவெளி மாறுபடும். .
சிறுநீரினை நீண்ட நேரம் தடுத்து வைப்பதால் என்னென்ன துன்பங்களுண்டாகும்?
சிறுநீரைத் தடுப்பதால் நீர்க்கட்டு (நாளடைவில் நீர் எளிதில் கழியாத நிலை – Urinary retention) ஏற்படும். அது சாதாரணமாக புண், கட்டிகள், சீழ் கோர்த்த வீக்கம் போன்ற எதுவானாலும் ஏற்படலாம். உடலில் உள்ள மூட்டுக்களில் (Joints) வலி உண்டாகும். இனப்பெருக்க உறுப்புகளில் வலியும் வீக்கமும் ஏற்படும். .
சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்பட்டதும் கழிக்காததால் ஏற்படும் துன்பங்கள் :
1. இயல்பான உடல் இயங்கியலில் உருவாகும் நச்சுக்கள் சிறுநீரகத்தால் (Kidney) உறிஞ்சப்பட்டு சிறுநீர் வழியே வெளியேறும். சிறுநீரினை அடக்குவதால் அதில் உள்ள நச்சுக்கள் சிறுநீர்ப்பையைத் தாக்கும் பின்பு சிறுநீர் பாதையையும், சிறுநீரகத்தையும் தாக்கும். .
2. சிறுநீர் நீண்ட நேரம் சிருநீர்ப்பையிலேயே (Bladder) தங்கியிருப்பதால் நுண்கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகமுண்டு. சிறுநீர்ப்பாதை வழியே உட் செல்லும் ஒரு நுண் கிருமி (பாக்டீரியா) சிறிது நேரத்தில் பல்கிப் பெருகி பல இலக்கங்களாக (இலட்சங்கள்) மாறிவிடும். அதற்கான சூழல் (Breeding ground) சிறுநீர்ப்பையில் உள்ளது. இவ்வாறு பல மடங்கு பெருகிய நுண் கிருமிகள் அழற்சியினை (Inflammation) ஏற்படுத்தும். .
3. சிறுநீர்ப்பாதை, சிறுநீர்ப்பையில் ஏற்பட்ட அழற்சி பின்பு படிப்படியாக மேலேறி சிறுநீரகத்தையும் பாதிப்பிற்க்குள்ளாக்கும். இதனால் சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் ஏற்படல், குளிருடன் காய்ச்சல் அடிவயிற்றில் வலி ஏற்படும். .
4. சிறுநீர் கழிக்காமல் நீண்டநேரமிருப்பதால் சிறுநீர்ப்பை விரிவடைந்து பலமிழக்கும். இதனால் சிறுநீர்ப்பையின் செயல்பாடு மாறுபடும். உட்புறம் தசைத் தொய்வு ஏற்படும் (Diverticulum). .
5. சிறுநீர்ப்பை மாறுபாட்டினால் (Structural and Functional) சிறுநீர் சிறிது சேர்ந்தாலும் சிறுநீர் கழிக்கும் போதும் அடி வயிற்றில் வலி ஏற்படும் (Painful bladder syndrome) இதன் தொடர்ச்சியாக சிறுநீரினைக் கட்டுப்படுத்தும் திறனும் குறையும். .
6. சிறுநீர்க் கல் உருவாக அதிக வாய்ப்புகள் எற்படும். .
7. தொடர்ச்சியாக சிறுநீரினை அடக்கி வைத்திருப்பதால் மனக்குவிப்புத் திறன் (Concentration power) குறையும். .
8. சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேகரமானாலும் சிறுநீரை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படலாம். (Urinary retention – difficult to urinate) .
9. சிறிது அளவு சிறுநீரினைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
இந்த நிலை ஏற்பட்டால் அதனை ஒரு எளிய பயிற்சியின் மூலம் சரிசெய்ய வேண்டும். சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது சிறிது நிறுத்தி நிறுத்தி கழிக்க வேண்டும். அப்போது ஆசன வாய்க்கும் (Anus) சிறுநீர் கழிக்கும் பகுதிக்கும் (Urethral orifice) இடையே உள்ள தசை சுருங்கி விரியும். இந்த பயிற்சியைத் தொடர்ச்சியாகச் செய்தால் அந்தத் தசை வலுப்படும். பின்பு சாதாரணமாக அமர்ந்திருக்கும் போதே அந்தத் தசையை சுருக்கி விரிக்கும் பயிற்சியினைச் செய்ய முடியும். இதற்கு Kegel exercise அல்லது Pubo coccegeal muscle exercise என்று பெயர். இதனால் சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டிற்குள் வரும். இந்த பயிற்சியில் பல நன்மைகள் நமக்குக் கிடைக்கும்.
எனவே சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டவுடன் அதிக நேரம் தாமதிக்காமல் கழித்து விடுவதே பல நோய்கள் வருவதைத் தடுத்துவிடும்.
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் ! இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை. இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை. மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை. மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர். அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார். எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார், தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார். இஞ்சி ஒத்தடம்: ============= இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன். 1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும். 2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும். 3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும். 4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு, துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும். 5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும். 6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும். 7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும். 8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும். 9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும். பாதத்தின் நான்காம் விரல்: நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும். உணவு முறை ============ சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும். சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது. பொட்டாசியம், பாஸ்பரஸ்: ======================= உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும். புரதங்கள் (ப்ரோடீன்): ================= புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும். நீர்: == நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க. சேர்த்து கொள்ள வேண்டியவை ஒமம்: ===== ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும். புளி: ==== புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஞ்சள்: ======= மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது. காய்கறிகள்: ========== காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர். பழங்கள்: ======= ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ் தவிர்க்க வேண்டியவை *********** காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள் இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ... http://www.youtube.com/watch?v=ymsg0kS-0pQ
++++++++++++++++++++++++++++++++++++
சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்
உணவுகள்.....
சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், அதை
எதிர்த்து போராடவும், அதிலிருந்து விரைவில் குணமடையவும்
சில உணவுகளை சாப்பிட்டாலே போதும்.
இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த
உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய
பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட…
இனி, சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும்
உணவுகள் குறித்து காணலாம்....
சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை
உணவுப்
பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு.
கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது
என்பது குறிப்பிடத்தக்கது.
இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை
தோற்று நோயை எதிர்த்து போராட முடியும்.
இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ்
பாதுகாப்பு தரவல்லது.
காரட்
காரட் தினமும் சாப்பிட வேண்டிய காய்கறி வகை ஆகும்.
காரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துகள் தங்கம் போன்றது என்று
கூறுவார்கள்.
காரட் உங்கள் உடல்நலத்தை அதிகரிக்கும் திறன் கொண்டது.
மற்றும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராடும் குணம்
கொண்டது.
இலவங்கப்பட்டை
இலவங்கப் பட்டை பண்டைய காலம் முதல் நாம் உணவில்
சேர்த்து வரும் மருத்துவ நன்மை கொண்ட உணவுப் பொருள்
ஆகும்.
பண்டைய காலத்து மக்கள் இதை பாக்டீரியாக்களை எதிர்த்து
போராட இலவங்கப் பட்டையை உணவில் பயன்படுத்தினர்.
சிறுநீர் பாதை தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும்
திறன் கொண்டது இலவங்கப் பட்டை
தயிர்
தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப்
பொருளாகும்.
இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும்
தன்மைக் கொண்டதாகும்.
இது மீண்டும் சிறுநீர் பாதை தொற்று ஏற்படுத்தும் கிருமிகளை
வராமல் தடுக்க உதவும்.
முள்ளங்கி
மண்ணில் விளையும் காய்கறியில் சிறந்ததொரு உணவுப்
பொருள் முள்ளங்கி.
அதிகம் சாப்பிட்டால் வாயு பிரச்சனை ஏற்படும் என்று
கூறுவார்கள்.
ஆயினும் இது, பல வகைகளில் சிறுநீர் பாதை தொற்று
ஏற்படாமல் இருக்கவும், அந்த தோற்று கிருமிகளையும் அழிக்க
பயன்படுகிறது.
தண்ணீர்
+++++++++++++++++++++++++++++++++
சிறுநீரக கோளாறு – ஏன் ஏற்படுகிறது ? -
எப்படி தடுப்பது ? – கிட்னி ஹெல்த் டிப்ஸ் -
சிறுநீரக கோளாறு
நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு தூங்குகின்றவரா, அப்படியானால் உங்களுக்கு சிறுநீரக செயலிழப்பு(KIDNEY FAILURE), மூட்டுக்களில் வலி (RHEUMATOID ARTHRITIS) (கழுத்து, முழங்கை, முன்கை மணிக்கட்டு, கீழ்முதுகு வலி, முதுகுத் தண்டுவட எலும்பில் வலி,முழங்கால் மூட்டு வலி,கணுக்கால் எலும்பில் வலி,குதிங்கால் வலி ), சிறு நீரகக் கல், இவை எல்லாம் உண்டாக வாய்ப்புள்ளது. இதை வாத நோய்கள் என்பார்கள்.
பழந்தமிழர் வாழ்வியலின்படி , ஒரு பெரியவர் சன்னலை மூடித் தூங்கினால் காற்று தீட்டுப்பட்டுவிடும் என்று கூறினார். நான் அப்போது இது என்ன கூத்து காற்றுக்கும் தீட்டா என்று எண்ணினேன்.அதை விளக்கிக் கூறவும் கேட்டேன்.அவரால் விளக்க முடியவில்லை.ஆனால் அக்கு பஞ்சர் விஞ்ஞானம் இதற்கு விளக்கம் அளித்தது.
அக்கு பஞ்சரில் சிறுநீரகத்தை இரண்டாவது நுரையீரல் என்பார்கள்.ஒரு நீங்கள் 10அடிக்கு 10 அடி அறைக் கதவை பூட்டிக் கொண்டு, சன்னல்களையும் பூட்டிக் கொண்டு ஒருவர் மட்டுமே தூங்கினாலே 3அல்லது 31/2 மணி நேரத்திற்குள்ளாக அறைக்குள்ளே உள்ள காற்றில் உள்ள பிராண வாயுவின், (ஆக்ஸிஜன்,OXYGEN,02) அளவு குறைந்துவிடும். இதையே அந்தப் பெரியவர் தீட்டு என்கிறார்.
பொதுவாக காற்றில் பிராண வாயுவின் அளவு 21% இருக்கும்.ஆனால் பூட்டிய அறையில் ஒருவர் தூங்கும்போது மூச்சின் அளவு அதிகரிக்கும் வேகத்தாலும்(முன்பே சரநூலில் கூறியிருக்கிறேன் சாதாரணமாக உட்கார்ந்திருக்கும் போது 15 மூச்சும்,தூங்கும்போது 64 மூச்சும்) அறையில் உள்ள காற்றில் பிராண வாயுவின் அளவு குறைந்து 10% சதவிகிதத்துக்கும் கீழே வந்துவிடும்.
அப்போது நுரையீரலால் இரத்தத்தில் பிராண வாயுவின் அளவை சரியாக வைக்க முடியாத போது,உடலில் உயிர் காப்பாற்றப்பட பிராண வாயுவின் தேவை அதிகரிக்க அதிகரிக்க,சிறுநீரகம் அந்த அத்தியாவசியமான வேலையை செய்ய முற்படுகிறது. அது நம் உடலில் தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்து உடலுக்கு கொடுக்கும் வேலையை செய்கிறது.(தண்ணீரில் இரு பங்கு ஆக்ஸிஜனும் ஒரு பங்கு ஹைட்ரஜனும் உள்ளது,இது போக நீரில் ஆக்ஸிஜனும் கரைந்து உள்ளது).எனவேதான் சிறுநீரகம் இரண்டாவது நுரையீரல் என்றழைக்கப்படுகிறது.
சிறுநீரகம் மேற்கண்ட வேலையை செய்ய ஆரம்பித்தவுடன் அதுவரை அது செய்து கொண்டிருக்கும் வேலையான இரத்தத்தை வடிகட்டி சுத்தப்படுத்தும் வேலை நிறுத்தப்படுகிறது.நம் உடலில் உள்ள தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தவுடன் அந்த கழிவு நீர் வெளியேற நமக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு தூண்டப்படுகிறது.மீண்டும் புதிய ஆக்ஸிஜன் நிறைந்த தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தாகமும் தூண்டப்படுகிறது.இதனாலேயே சிறுநீரகம் அதீதமான வேலைப் பழுவுடன் தள்ளாடுகிறது.
இதனால் சிறுநீரகத்தில் அழுக்குகள், தேங்குவதோடு, இரத்தத்தில் யூரிக் அமிலம் முதலான அழுக்குகள் அதிகரிக்கின்றது,மூட்டுகளில் மூட்டுகளில் யூரிக் அமிலம் படிவங்களாக படிகின்றன.
விளைவு யூரிக் அமிலம் படிவுகளாக சிறுநீரகத்தில் படிந்து கற்களாக மாறுகிறது.இரத்தத்தில் யூரிக் அமிலத்தால் இரத்தம் அழுக்கடைந்து இரத்தத்தின் தடிமம் அதிகரித்து இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் அதிக வேலைப் பழுவுக்கு ஆளாகிறது.
மூட்டுகள் யூரிக் அமிலப் படிவங்களால் அரிக்கப்படுகின்றன. இதனால் மூட்டுக்களில் வலி உண்டாகின்றது. இதனாலேயே A/C அறையில் தூங்கும் போது அதிக தண்ணீர் தாகம் எடுக்கிறது. மூட்டுக்களில் வலி வருகி
இவ்வளவு பிரச்சினைகளையும் உண்டாக்கும் காற்றோட்டமில்லாத அறையில் தூங்காதீர்கள். ++++++++++++++++++++++++++++++++
"சிறுநீரகங்கள் வேலை செய்யவில்லை.ரொம்பவும் சிரமம். ஸ்பெஷலிஸ்டுகளிடம் போய் மருந்து சாப்பிட்டு ஏகப்பட்டது செலவழித்தாயிற்று"-(ஒரு நபர்) பெரியவா எதிரே வந்து நின்று ஒரு குரல் அழுதார்.பொதுவாக இம்மாதிரி நிலைமைகளில் கருணை பொங்கப் பேசும் பெரியவா,அப்போது கடுமையாகச் சாடினார்கள்.
"எல்லாரும் தப்பு-அதர்மம் பண்ணிவிட்டு, கஷ்டம் வந்தபிறகு இங்கே வருகிறா. தான் தப்பு செய்ததைப் புரிஞ்சுக்கிறதில்லே. நான் என்ன செய்யட்டும்?"
ஏன் இந்தக் கோபம்?- என்று யாருக்கும் புரியவில்லை.பின் பெரியவா சொன்னார்கள்.;"தர்ம கார்யத்துக்குன்னு இவரோட மூதாதையர்கள் டிரஸ்ட் வெச்சிருக்கா. நன்றாக விளைகிற நிலம்.தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்யணும்,இவர். அந்த சொத்தையே விற்று சாப்பிட்டுட்டார்.
சிறுநீரகக் கோளாறு என்று சொல்லிக்கொண்டு வந்தவருக்கு நெஞ்சில் உறைத்தது."இனிமேல் தண்ணீர்ப் பந்தல் வைத்து தர்மம் செய்கிறேன்" என்று உறுதிமொழி அளித்தார்.
பெரியவா மனம் இளகி, "வசம்பு தெரியுமா? நாட்டு மருந்துக் கடையிலே கிடைக்கும். அதை அறைத்து அடிவயத்திலே தடவிண்டு வா..." என்றார்கள்.
பத்து பன்னிரண்டு நாள்கள் சென்றபின் அதே நபர் தரிசனத்துக்கு வந்தார். பெரியவாள் கேட்பதற்கு முன்னதாகவே, "இப்போ டிரபிள் ஏதும் இல்லை" என்றார்.
நம் உடம்பின் சிறுநீரகங்கள் மிக அற்புதமான இயற்கையின் படைப்பு. கிட்ட்த்தட்ட 10லட்சம் நெஃப்ரான்களை(பில்டர்கள் உள்ள அமைப்பு) உள்ளடக்கிய அந்த உறுப்பினுள் ஒரு நாளைக்கு 50,000மிலி தண்ணீரை உள்செல்கிறது. 1500 மிலி தண்ணீரைச் சிறுநீராக தினசரி வெளியேற்றுகிறது.
கூடவே தேவைக்கு அதிகமான உப்புக்கள், உடலுக்குள் வந்துவிட்ட நச்சுக்கள், தேவைக்கு மீந்துவிட்ட மருந்துக் கூறுகள் எல்லாவற்றையும் தினசரி வெளித்தள்ளும் அதன் பணி மகத்தானது.
கழிவு வெளியேற்றுவது மட்டுமல்ல, விட்டமின் ’டி’ தயாரிப்பு, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு ’எரித்ரோபாய்டின்’ உற்பத்தி செய்வது, இரத்த அழுத்தத்தைக் கூடாது காக்க, ’ரெனின்’ சுரப்பைத் தருவது என இதன் பணிகள் இன்னும் ஏராளம். மொத்தத்தில், இதயத்திற்கு அடுத்து ஓயாது உழைக்கும் உறுப்பு சிறுநீரகம் எனலாம்..
தற்போது சர்க்கரை நோயின் ஆதிக்கம் அதிகரித்து வருவது குறித்து அடிக்கடி செய்திகள் படித்து வருகிறோம். அதில் தொடரும் இன்னொரு ஆபத்து, நாட்பட்ட சிறுநீரக நோய்கள்.
நீரிழிவு நோயை எப்போதும் கட்டுப்பாடில் வைத்திருக்கத் தவறும் பட்சத்தில் பின்னாட்களில் அது சிறுநீரகத்தைப் பாதிக்கும் வாய்ப்பு மிக அதிகம்.
சர்க்கரை அல்லாது, இன்னும் பல காரணங்களால் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு நோய்கள் ஏற்படக் கூடும். அடிக்கடி வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளுதல், எந்த மருந்தெனினும் மருத்துவர் பரிந்துரையின்றி சுய வைத்தியம் செய்து கொள்ளுதலில் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புகள் அதிகம்.
பாரம்பரியமாக குடும்பத்தில் இத்தொல்லை இருப்பினும் நாம் கவனமாக இருப்பதும் அவசியம். மற்ற எந்த நோய்க்கும் இல்லாதபடி, சிறுநீரக நோய்க்கு உணவில் மிகுந்த கவனம் தேவை. கட்டுப்பாடுகளும் கொஞ்சம் அதிகம். இதில் கவனம் தவறுவதும் அலட்சியமாக இருப்பதும் சிறுநீரக முழுச்செயலிழப்பையும், உயிருக்கே ஆபத்தையும் கொடுத்துவிடும்.
சிறு நீரகத்தை ஆரம்பம் முதல் நோயின்றி பாதுகாப்பதுதான் மிக முக்கியம். நமக்கு எந்த நோய் இருக்கிறதோ இல்லையோ, சிறுநீரகத்திற்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய எந்த விஷயத்திற்கும் இடம் கொடுக்கக் கூடாது. தினசரி மூன்று முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது மிக அவசியம். பலரும் பணி அவசரத்தில் தவறவிடுவது இதனைத்தான்.
அடுத்து உணவில், சிறுநீரை நன்கு வெளியேற்ற உதவிடும் வாழைத் தண்டு, வாழைப்பூ, முள்ளங்கி, பார்லி, வெள்ளரி போன்ற காய்கறிகளைத் தவறாது வாரம் மூன்று, நான்கு நாட்களேனும் சாப்பிடுவது மிக அவசியம். நாற்பதுகளைத் தொடும்போதே அதிக உப்பு தவிர்ப்பது மிக அவசியம் ஆகிவிடுகிறது. அதிக உப்பு சிறுநீரகத்தின் பணிக்கு சிரமம் கொடுக்கும் ஒன்று. இனியாவது தயிர்சாதத்திற்கு ஊறுகாய் இல்லைனா எப்படி? என அடம் பிடிக்காதீர்.
சரி, ஏதோ மருத்துவ காரணத்தில் லேசான சிறுநீரக செயலிழப்பு தெரிய ஆரம்பித்து விடுகிறது என்றால், பதட்டப்பட வேண்டாம். எந்த அளவிற்கு உணவுக் கட்டுப்பாடு உங்களுக்கு உள்ளதோ அந்த அளவில் நோயினை தள்ளிப்போட கண்டிப்பாக முடியும். இன்றளவில் சிறுநீரகச் செயலிழப்பு நோயை முழுமையாகக் குணப்படுத்த எந்த மருத்துவத் துறையிலும் மருந்துகள் இல்லை. முடிந்தவரை நோயின் தீவிரநிலையை தள்ளிப்போடத் தான் முடிகிறது. ஆதலால், உணவுத் தேர்வு மிக மிக முக்கியமானது.
உணவில் நீர், புரதம், சோடியம் மற்றும் பொட்டாசியம் உப்புக்கள், இரும்புச்சத்து இவற்றைச் சீர்படுத்துவது சிறுநீரக நோய்களில் ரொம்ப முக்கியமானது. எந்த அளவிற்கு சிறுநீர் வெளியேறுகிறதோ அதைப் பொறுத்து நீர் அருந்தும் அளவை உங்கள் மருத்துவர் நிர்ணயிப்பார். அதனை அப்படியே பின்பற்றுவது மிக முக்கியம். இரத்தத்தில், மற்றும் வெளியேறும் சிறுநீரில் உள்ள உப்பைப் பொறுத்தே உள்ளே சேர்க்கும் உப்பின் அளவும் இருந்திட வேண்டும்.
புரத உணவைப் பொறுத்த மட்டில் காய்கறிப் புரதம் சிறந்தது. சிக்கனில் கிடைக்கும் புரதத்தை காட்டிலும் பாசிப்பயறின் புரதம் சிறுநீரக நோயினருக்கு ஏற்றது. ஏனெனில், சிக்கனில் புரதத்துடன் உப்புக்களும் கூடுதல் அளவில் உள் வந்துவிடும். பயறுப்புரதத்தில் அந்த பயம் இல்லை. சிறுநீரக நோயினருக்கு இரத்த்த்தில் மெல்ல மெல்ல பொட்டாசியம் சேரும் வாய்ப்பு வந்து விடுவதால், அது இதயத்தை அதன் துடிப்பின் ரிதத்தை மாற்றிடவும், திடீர் இதய செயலிழப்பை ஏற்படுத்தும் அபாயமும் உண்டு. சோடியமும் பொட்டாசியமும் குறைந்த அளவில் உள்ள பழங்களையே எடுக்க வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்கனியை தவிர்ப்பது நல்லது. இவை நிறைய பொட்டசியச் சத்து உடையன. பைனாப்பிள், பப்பாளி, கொய்யா முதலிய பழங்கள் குறைந்த அளவிலான பொட்டாசியச்சத்து உடையன. கேரட், காலிஃப்ளவர், பீட்ரூட், நூல்கோல், பருப்புக் கீரை இவை சோடியம் அதிகம் உள்ளவை. இதனையும் உணவில் தவிர்க்க வேண்டும்.
காய்கறி, கீரைகளை நிறைய நீர்விட்டும் நன்கு வேகவைத்தும், பின் அந்த நீரை வடித்து விட்டு சாப்பிட வேண்டும். இம்முறையில் சமைப்பது உப்புக்கள் அதிகஅளவில் உணவில் தங்காமல் பார்த்துக் கொள்ளும்.
பொங்கல் சமயத்தில் வாசக்காலில் சாங்கியத்திற்கு கட்டுவோமே, வெண்ணிற பூக்களாலான அந்த சிறுகண்பீளை, வயலோரங்களில் களைச்செடியாய் வளர்ந்து நிற்கும் நீர்முள்ளி செடி, காய்ந்த வரப்புகளில் நடக்கும் போது காலில் குத்தும் நெருஞ்சிமுள், பூனை மீசை எனும் செடி இவற்றை சரியாக அடையாளம் தெரிந்து தேர்ந்தெடுத்து, தேநீராக்கி காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது சிறுநீரக நோயாளிகட்கு ஒரு functional food ஆகப் பயன்தரும்.. மருத்துவத்தைப் பொறுத்தவரை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்துகளையுமே சாப்பிடுவது சரியல்ல.
சரியான உடற்பயிற்சி, யோகா மற்றும் பிராணாயாமம், மருத்துவரின் அறிவுரைப்படி சரியான சிகிச்சை, தேர்ந்தெடுத்த சரியான உணவு இவை மட்டுமே சிறுநீரக நோயைக் கட்டுப்பாடில் வைத்திருக்க உதவும். தேவையெல்லாம், அலட்சியமில்லாத, அக்கறையும் கூடுதல் மெனக்கிடலும் தான்.
சிறு நீரக செயலிழப்பு : (RENAL FAILURE)
சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?
இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிநீரகங்கள் அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இனங்கள் எவை?விசேஷமானவை இரண்டு வகை.
#. சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு - இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
#. நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு - இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு யாருக்கு வரக்கூடும்?
சிறு பராயம் முதல் முதிர் வயது வரை எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு.
சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் என்ன?
பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரகச் செயலிழப்பை நீர் எப்படி அடையாளம் காண்பீர்?
சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்திலே நோயாளியிடத்தில் குறிப்பாகக் கொள்ளக்கூடிய எதுவித அறிகுறிகளும் இராது. சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தம் சிறுநீர் ஆகியவற்றை பரிசோதித்தே திட்டமாக அறியமுடியும். சிறுநீரகச் செயலிழப்பில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.
#.கடுமையான பசியின்மை, பிரட்டு, சத்தி, விக்கல், வாந்தி. #.மூச்சு விடுவதில் கஸ்டம் #.முகம் கால், வயிற்றுப் பகுதியில் வீக்கம். #.சிறுநீர் குறைவாகக் கழித்தல், (சடுதியான சிறுநீரகச் செயலுழப்பு) அல்லது கூடுதலான சிறுநீர் கழித்தல் (நாள் கடந்த சிறுநீரக செயலிழப்பில்) #.இரத்தச் சோகை (Anaemia) (நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு)
சிறுநீரக செயலிழப்பபை நீர் எப்படி உறுதிப்படுத்துவீர்?
யூரியா (Blood urea) சீரம் கிறியற்றினின் (Serum creatinine) என்பவற்றைப் பரிசோதித்து சிறுநீரக செயலிழப்பை உறுதிப்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பில் யூரியாவும், சீரம் கிறியற்றினினும் கூடுகின்றன. 24 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக சிறுநீரைச் சேர்த்து அதிலே கிறியற்ரினி்ன் கிளியறன்ஸ்(Creatinine clearance) பரிசோதனையை நடத்தினால், அது சிறுநீரகச் செயலிழப்பு என்பதை வைத்தியர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள உதவும். சிறுநீரகச் செயலிழப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இப்பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாக இருப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள , அல்றா சவுண்ட் ஸ்கான் (Ultra sound scan) னும் வைத்தியருக்கு உதவுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் எவை?
உணவு மாற்றம் – உணவிலே புரதச்சத்து, பொட்டாசியம், உப்பு நீர் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவது சாதாரண வழக்கம். புரதச்சத்து அடங்கியுள்ள இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை நாள் வீதம் ஒரு அளவிற்குக் குறைக்க வேண்டும். இளநீர் பழவகைகள், பொரித்த உருழைக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் இருப்பதால் இவை தவிர்க்கப்பட வேண்டும். கூடுதலான இரத்த அமுக்கம், உடல் வீக்கம், மூச்சு விடக் கஸ்டம் இவை இருந்தால் உப்பு குறைக்கப்பட வேண்டும். பாவிக்க கூடிய தண்ணீரின் அளவை உமது வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
#. மருந்துச் சிகிச்சை(Drug therapy) - நோயாளியின் சிறுநீர் செயலிழப்பு நிலையைப் பொறுத்து பல வித மருந்துகள் தேவைப்படும் #. பின்வருவனவற்றில் அடங்கும்
1) உடலின் வீக்கத்தைக்குறைக்க – டையூறற்ரிக்ஸ் (Diuretics) (உ+ம்வ்றுஸெமைட் (frusemide) 2) இரத்த அமுக்கத்தைக் குறைக்க – அன்றிஹைபரென்சிவ்ஸ் (Antihypertensives) (உ+ம்: மீதைல்டோபா methyilopa) 3) வாந்தி சத்தியைக் குறைக்க –அன்ரிஎமெற்றிக்ஸ் (Antiemetics) உ+ம் மெற்ரோகுளோபிறமைட் (Metoclopramide) 4) இரத்தக் குறைவுக்கு –இரத்தம் ஏற்றல், எரித்திரோபொயிற்ரின், இது விலை கூடிய மருந்து. 5) சிறுநீர்த் தொற்றைப் பராமரிக்க—அன்றிபையொற்றிக் (உ+ம் :அமொக்சிலின்)
#. டயலைஸிஸ் - சிறுநீரகச் செயலிழப்பில் மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் யூரியா, பொட்டாசியம் எனும் உப்புக்கள் ஆபத்தான நிலைக்கு கூடிவிடும். இந்நிலையில் நோயாளி மரிக்கவும் கூடும். உடலிலுள்ள அழுக்குகளாகிய யூரியா, பொட்டாசியம் என்பவற்றை வெளியேற்றும் முறையே டையலைசிஸ் எனப்படுகிறது. டையலைசிஸ் பற்றிய தலையங்கம் வேறோர் துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. சிறுநீரக மாற்றுச் சிகிச்சைஎதுவித மாற்றமும் எற்படாத நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு திரும்பத் திரும்ப டையலைசிஸ் சிகிச்சை அளித்தல் , ஆபத்தானதும் செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோயாளருக்கு சிறுநீரகம் மாற்றம் செய்வது நல்லது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சுகதேகி ஒருவரின் (இருப்பவரோ,இறந்தவரோ) சிறுநீரகம் நோயாளிக்கு மாற்றப்படுகிறது. சிறுநீரக மாற்று பற்றிய தலையங்கம் வேறொரு பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியுமா?
ஆம். ஒரு அளவிற்கு. இந்நோய் வர காரணமாக இருக்கும் பாம்புக்கடியை தவிர்ப்பதும். நீரிழிவிற்கு நேரத்தோடு சிகிச்சை பெறுவதும், கூடிய இரத்த அமுக்கம் வராது தடுப்பதும், சிறுநீரக அழர்ச்சி ஏற்படாது பார்ப்பதும், புரஸ்ரேட் பிரச்சினையை தவிர்ப்பதும், சிறுநீரக தொற்று ஏற்படாது பார்ப்பதும் இந்நோயை தடுக்கக் கூடிய வழிகளாகும் .அனேக நோயாளிகள் போதிய பராமரிப்பபை பெறுவதில்லை. வைத்தியரின் உதவியையும் இடைநிறுத்தி விடுகின்றனர். சிறுநீரில் காணப்படும் அசாதாரண நிலை குறித்து (உ+ம்:அல்பியுமின், செங்கலங்கள் க சிந்தித்து நோயை இனம் கண்டு அதை குணப்படுத்த நடவடிக்ககை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு முதிர்ச்சியடைததாய் இருந்தால் அதை தடுப்பது முடியாத காரியமாகும்.