Sunday, July 3, 2016

காய் காய்கறி

காய்கறிகளின் மருத்துவக் குணங்கள்:

வாழைப்பூ:
இரத்தச் சோகையை வராமல் தடுத்து உடலுக்கு தெம்பையும்
புத்துணர்வையும் தரவல்லது.
இதில் இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன.

வாழைத்தண்டு:
இரத்தத்தை சுத்தப்படுத்தும். இரத்தத்தில் உள்ள தேவையற்ற அசுத்த நீரை பிரித்தெடுக்கும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை சீராக்கி சிறுநீரக கல் அடைப்பை தடுக்கும்.
இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது.


வாழைக்காய்:
குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. மலச்சிக்கல் தீர்க்கும்.
இரும்புச்சத்து,பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும்


பாகற்காய்:
நன்கு பசியைத் தூண்டும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

சேப்பங்கிழங்கு:
எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது.

பீட்ரூட்:
மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன.

வெண்டைக்காய்:
நன்கு பசியை உண்டாக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூளை வளர்ச்சியைத் தூண்டும்.
போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன.

கோவைக்காய்:
வயிற்றுப்புண், வாய்ப்புண், மூல நோயின் தாக்குதல் போன்றவற்றை நீக்கும்.
வைட்டமின்ஏ, கால்சியம், போலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்தள்ளன.


முருங்கைக் காய்:
மாதவிலக்கின்போது உண்டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். விந்து உற்பத்தியைப் பெருக்கும்.
வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. பெண்களுக்கு


சுண்டைக்காய்:
 வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்
புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது. .

சுரைக்காய்:
உடல் சோர்வை நீக்கி, உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
புரதம்,கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, நிறைந்துள்ளது.

குடைமிளகாய்:
அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியை தூண்டும்.
வைட்டமின் ஏ, பி,சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கணிசமாக உள்ளது.

சௌசௌ:
எலும்பு, பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.
கால்சியம், வைட்டமின் சி, சத்துக்கள் உள்ளன.

அவரைக்காய்:
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து
தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது.

புரதம்,நார்ச்சத்து மிகுந்துள்ளது.

காரட்:
உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

கொத்தவரங்காய்::
நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

கத்தரி பிஞ்சு:
செரிமான சக்தியை தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்
கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. 

No comments:

Post a Comment