சூரியனுக்கு ஜே! By - நியாண்டர் செல்வன்
மனித உடலுக்குத் தேவையான மூலப்பொருள், வைட்டமின் டி. வைட்டமின் டி மட்டும் ஒரு மருந்தாக இருந்திருந்தால் அதைக் கண்டுபிடித்தவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கும் என விஞ்ஞானிகள் கூறுவதுண்டு. ஆனால் தற்போது வைட்டமின் டி என்பதை வைட்டமின் என்ற நிலையையும் தாண்டி அது உடல்நலனுக்கு இன்றியமையாத ஒரு ஹார்மோன் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அத்தகைய வைட்டமின் டி-யின் சிறப்பியல்புகளை இந்த வாரம் பார்க்கலாம்.
வைட்டமின் டி என பொதுவாகச் சொல்லப்பட்டாலும் அதில் இரு வகைகள் உண்டு. ஒன்று தாவரங்களில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி2. இன்னொன்று சூரியன் மூலம் நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி3. காளான் போன்ற சிலவகைச் செடிகளில் பாசி படிவதால் டி2 வைட்டமின் உண்டாகிறது. டி2 வைட்டமினால் நமக்கு பெரிதாகப் பலன் கிடையாது. ஆனால் டி3 என்பது நமக்கு மிக முக்கியமான மூலப்பொருளாகும். (இக்கட்டுரையில் இனிமேல் வைட்டமின் டி என வருகிற இடங்களில், அது வைட்டமின் டி3-யையே குறிக்கும்.)
சர்க்கரை வியாதி, வைட்டமின் டி குறைபாட்டால் வருவது என இப்போது கண்டறிந்துள்ளார்கள். வைட்டமின் டி நம் உடலில் சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் ‘சர்க்கரை வியாதி என்பது வைட்டமின் டி குறைபாடே என்று சொல்கிற அளவுக்கு சர்க்கரை மேலாண்மைக்கு (Glucose regulation. அதாவது ரத்தத்தில் சர்க்கரை அளவுகள் குறையாமலும், அதிகரிக்காமலும் ஒரே அளவில் இருக்கும்படி ரத்தச் சர்க்கரை அளவுகளைப் பராமரிப்பது) வைட்டமின் டி முக்கியமானது’ என்கிறார்கள். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை மேலாண்மை செய்ய இன்சுலின் அவசியம். அந்த இன்சுலின் நம் கணையத்தில் உற்பத்தி ஆகிறது. கணையத்தில் உள்ள பீட்டா செல்களே இன்சுலினை உற்பத்தி செய்கின்றன. ஆனால் அந்த பீட்டா செல்களை இயக்கும் சக்தி வைட்டமின் டி-யிடம் உள்ளது. வைட்டமின் டி தட்டுப்பாடு ஏற்படும்போது கணையத்தில் இன்சுலின் குறைவாக சுரக்கிறது. இதனால் சர்க்கரை வியாதி வருகிறது.
டைப் 1 சர்க்கரை வியாதி ஏன் வருகிறது, எதற்கு வருகிறது என புரியாமல் விஞ்ஞானிகள் திகைக்கிறார்கள். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அதை மதியம் வெயிலில் காண்பித்தால் அக்குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை வியாதி வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல பிள்ளையின் தாய்க்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு டைப் 1 சர்க்கரை வியாதி ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து ஃபின்லாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஃபின்லாந்து மிகவும் குளிரான நாடு. சூரியன் அடிக்கடி எட்டிப்பார்க்காத தேசம். அங்கேதான் உலகிலேயே அதிக அளவிலான டைப் 1 சர்க்கரை வியாதி நோயாளிகள் உள்ளார்கள். 1960-ல் ஃபின்லாந்து குழந்தைகளுக்குத் தினம் 2000 யூனிட் அளவு வைட்டமின் டி கொடுக்கப் பரிந்துரை செய்யப்பட்டது. 30 வருடங்கள் கழித்து இது மறுஆய்வு செய்யப்பட்டது. டைப் 1 சர்க்கரை வியாதி வந்த குழந்தைகளின் தாய்மார்கள் பலரும் அரசின் பரிந்துரைப்படி தம் குழந்தைகளுக்கு வைட்டமின் டி கொடுத்திருக்கவில்லை என்பது தெரியவந்தது. வைட்டமின் டி கொடுக்கப்பட்ட குழந்தைகளிடையே டைப் 1 சர்க்கரை வியாதியின் விகிதம் மிகக் குறைவாகவே இருந்தது. அதனால் இப்போது சர்க்கரை வியாதி, உணவால் வரும் வியாதி என்பதைத் தாண்டி ஊட்டச்சத்து குறைபாட்டால் வரும் வியாதி என்கிற நோக்கில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. நம் மக்களிடம் வைட்டமின் டி அளவுகள் போதுமான அளவு இருந்திருந்தால் சர்க்கரை வியாதி இந்த அளவுக்குப் பரவலாகி மக்களைப் பாதித்திருக்காது.
சரி, வைட்டமின் டி-யை எப்படி எடுத்துக்கொள்வது? ஒன்றும் செய்யவேண்டாம். வீட்டை வெளியே வந்து சூரிய வெளிச்சம் படும்படி நின்றால் போதும்!
நம் தோல் சூரிய ஒளியைக் கொண்டு டி3 வைட்டமினைத் தயாரிக்கிறது. ஆனால் மருந்து, மாத்திரையில் கிடைக்கும் வைட்டமின் டி3-க்கும் நம் உடல் உற்பத்தி செய்யும் டி3-க்கும் இடையே வேறுபாடு உள்ளது. டி3 என்பது கொழுப்பில் கரையும் வைட்டமின். ஆக டி3 மாத்திரை எடுத்தால் அதனுடன் நிறைவுற்ற கொழுப்பும் சேர்த்து எடுத்தால்தான் அது உடலில் சேரும். ஆனால் சூரிய ஒளியால் கிடைக்கும் டி3-க்கு இந்தச் சிக்கல் எல்லாம் இல்லை. உடல் நேரடியாக அதை ஹார்மோனாகவே தயாரிக்கிறது. அதனால் மருத்துவர்கள் ‘சூரிய ஒளி ஹார்மோன் (Sunlight harmone)’ என அழைக்கிறார்கள். தைராய்டு ஹார்மோன், டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் போல டி3 ஹார்மோனும் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் மிக அவசியமான ஒன்றாகும். சூரிய ஒளியால் கிடைக்கும் டி3 நம் உடலில் சேர நிறைவுற்ற கொழுப்பு எல்லாம் அவசியமில்லை.
இருவகை வைட்டமின்கள் உணவில் உண்டு. ஒன்று நீரில் கரையும் வைட்டமின்கள், இன்னொன்று கொழுப்பில் கரையும் வைட்டமின்கள். பி வைட்டமின்கள் பலவும் நீரில் கரைபவை என்பதால் அவை அளவு மீறினால் சிறுநீரில் வெளியே வந்துவிடும். ஆனால் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்றவை அளவு மீறினால் அவற்றை வெளியேற்றும் சக்தி உடலுக்கு இல்லை. காரணம் அவை சிறுநீரில் வெளியேறாது. சூரிய ஒளியால் கிடைக்கும் டி3-யில் இந்தப் பிரச்சனை எதுவும் இல்லை. நம் உடலுக்குப் போதுமான அளவு டி3 கிடைத்தவுடன் உடல் தானாக டி3 உற்பத்தி செய்வதை நிறுத்திவிடும்.
வைட்டமின் டி3, சுண்ணாம்புச்சத்து (calcium) மேலாண்மை மற்றும் ரத்த சர்க்கரை மேலாண்மையில் பெரும்பங்கு வகிக்கிறது. சுண்ணாம்புச்சத்து இருந்தால் எலும்புகள் வலுப்பெறும் என முன்பு நம்பினார்கள். ஆனால் டி3 குறைபாடு இருந்தால் அதன்பின் நீங்கள் லிட்டர் லிட்டராக பால் குடித்தாலும் அதனால் பலன் கிடைக்காது. பாலில் உள்ள சுண்ணாம்புச்சத்து முழுக்க எலும்புகள், பற்களில் சென்று சேராமல் கிட்னி, இதயம் என படிந்துவிடுவதால் எலும்புகள் பலமிழந்து எலும்பு புரை (Osteoporosis), கிட்னி கற்கள் போன்ற சிக்கல்கள் ஏற்படும்.
ஒருவருக்கு மாரடைப்பு வரும் அபாயம் வருகிறதா என்பதை எப்படி அறிவது? சுண்ணாம்புச்சத்து ஸ்கேன் (Calcium scan) எடுத்தால் போதும். இதயநரம்பு சுவர்களில் சுண்ணாம்பு படிந்திருந்தால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால் எலும்பு புரை அமைப்பு (Osteoporosis society), ‘எலும்பு புரை வராமல் இருக்க பால் குடியுங்கள்’ என்று இப்போது வலியுறுத்துவதில்லை. வைட்டமின் டி-யின் அவசியத்தையே வலியுறுத்தி வருகிறது. வைட்டமின் டி இருந்தால் குறைந்த அளவு கால்ஷியம் எடுத்தாலும் நம் எலும்புகள் பலமாக இருக்கும் என்று அறிவுறுத்துகிறது.
ஆதிமனிதன் பாலை குடித்ததே கிடையாது. அவனுடைய எலும்புகள் எப்படி உறுதியாக இருந்தன? நமக்கு ஏன் இல்லை? அன்றாடம் வெயிலில் அலைந்து திரிந்து வேட்டையாடியதால் ஏராளமான அளவிலான வைட்டமின் டி-யை ஆதிமனிதன் பெற்றான். அதனாலேயே அவனுடைய எலும்புகள் உறுதியாக இருந்தன.
ஜெர்மனியில் நிகழ்ந்த ஆய்வு ஒன்றில் டி3 வைட்டமினால் எடை குறையுமா என பரிசோதித்தார்கள். ஆனால் எதிர்பாராவிதமாக டி3 வைட்டமின் எடுத்துக்கொண்ட ஆண்களுக்கு ஆண்மைத்தன்மையை அதிகரிக்கும் டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோனும் கணிசமாக அதிகரிப்பது தெரிய வந்தது. ஆக ஆண்மைக் குறைபாடு, டெஸ்டெஸ்ட்ரோன் ஹார்மோன் குறைவாக சுரப்பது போன்ற பாதிப்புகளைக் கொண்டவர்களும் வைட்டமின் டியை எடுக்கவேண்டும் என இப்போது பரிந்துரைக்கப்படுகிறது. வைட்டமின் டி அளவுகள் குறைவாக இருக்கும் பெண்களுக்குப் பெண்தன்மையை அளிக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் தட்டுப்பாடும் காணப்படுகிறது. இதனால் பிகாஸ் (Polycystic ovaries syndrome) போன்ற வியாதிகள் அவர்களுக்கு வருகின்றன என்பதும் கண்டறியபட்டுள்ளது.
மனிதன், அடிப்படையில் சூரியனை நம்பி வாழும் ஓர் உயிரினம். சூரிய கதிர்களில் புற ஊதா கதிர் ஏ (UV A), புற ஊதா கதிர் பி (UV B) என இருவகை புற ஊதா கதிர்கள் உண்டு. இதில் உச்சிவெயில் அடிக்கும் நேரத்தில் கிடைக்கும் புற ஊதா பி கதிரே நமக்கு டி3-யை அளிக்கும் சக்தி கொண்டது. பொதுவாக இந்தியாவில் காலை 10 முதல் மதியம் 3 வரை புற ஊதா கதிரின் பி வகை நமக்குக் கிடைக்கும். ஆக வைட்டமின் டி-யை வெயிலின் மூலம் பெற தோதான நேரம் காலை 10 முதல் 3 மணி வரை ஆகும். ஆனால் உச்சிவெயிலை நெருங்க, நெருங்க வைட்டமின் டி-யின் அளவும் அதிகமாகக் கிடைக்கும். எனவே காலை 11 முதல் மதியம் 1 மணிவரை உள்ள நேரமே வைட்டமின் டி பெற உகந்த நேரம்.
வைட்டமின் டி-யை வெயிலின் மூலம் பெற தோல் நேரடியாக சூரிய வெளிச்சத்தில் காண்பிக்கப்பட வேண்டும். முழு உடலையும் மறைக்கும்படி ஆடை அணிவது, ஜன்னல் கண்ணாடிக்குப் பின் அமர்ந்து கண்ணாடி மூலம் வரும் சூரிய ஒளியைப் பெறுவது போன்றவற்றால் நமக்கு வைட்டமின் டி கிடைக்காது. வெயில் நேரடியாக தோலின் மேல் படவேண்டும். பொதுவாக இந்தியாவில், ஆண்கள் பெர்முடா, தொப்பி அணிந்து சட்டையின்றி 20 முதல் 30 நிமிடங்கள் உச்சி வெயிலில் நின்றால் அவர்களுக்கு ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் யூனிட் வரை வைட்டமின் டி கிடைக்கும். பெண்கள் அதிக அளவில் தோலை வெயிலில் காட்டுவது சாத்தியமில்லை என்பதாலும் முகம் கருத்துவிடும் என அஞ்சுவதாலும் அவர்கள் நிழலில் அமர்ந்துகொண்டு கை அல்லது காலை மட்டும் சூரிய ஒளியில் முடிந்த அளவு காண்பிக்கலாம். அன்றாடம் இப்படிச் செய்வதன் மூலம் குறைந்தபட்ச தேவையான (வைட்டமின் டி) 600 யூனிட்டைத் தாராளமாகப் பெறமுடியும்.
வைட்டமின் டி தட்டுப்பாடு வெயில் இல்லாத மேலைநாடுகளில்தான் இருக்கும் எனக் கருதவேண்டாம். வெயில் அதிகமாக இருக்கும் இந்தியாவில்தான் 80% மக்கள் வைட்டமின் டி தட்டுப்பாட்டால் அவதியுறுகிறார்கள்!
இந்தியாவில் வெயில் அதிகம் அடித்தால் மட்டும் போதுமா? உச்சி வெயில் அடிக்கும்போது அதைப் பெற மக்கள் முயற்சி எடுக்கவேண்டுமே! வெயிலை முழுவதுமாகத் தவிர்த்து வீடு, அலுவலகத்துக்குள்ளேயே இருந்தால் எப்படி வைட்டமின் டி கிடைக்கும்? மதிய வேளையில் வெளியே சென்றாலும் வெயில் மேலே படாமல் இருக்க குடை பிடிப்பது, நிழலில் நடப்பது என்றுதானே நம் மக்கள் செய்கிறார்கள்! இதனால் வெயில் நேரடியாக நம் உடலில் படும் வாய்ப்புகள் குறைகின்றன. வெயிலில் நின்று பணிபுரியும் தொழிலாளர்கள், வெயிலில் விளையாடும் குழந்தைகள் போன்றோருக்கு ஏராளமான வைட்டமின் டி கிடைக்கும். அதேசமயம் ஏ.சி. அலுவலகங்களில் பணிபுரிபவர்களுக்கு வைட்டமின் டி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.
வைட்டமின் டி-யின் முக்கியத்துவம் ஆய்வின் மூலம் தெரியவந்ததும் மேலை நாடுகள் ‘பாலில் வைட்டமின் டி சேர்க்கவேண்டும்’ என்று அறிவித்தன. பால் நிறுவனங்களும் ‘வைட்டமின் டி தானே வேண்டும். இந்தா பிடி’ என விலை குறைவான வைட்டமின் டி-யைப் பாலில் கலந்துவிட்டார்கள். அதாவது வைட்டமின் டி2! டி3-யில் கிடைக்கும் எந்த நன்மையும் டி2-வில் கிடையாது. கடைகளில் வைட்டமின் டி என்று விற்கப்படும் மாத்திரைகளில் பெரும்பங்கு வைட்டமின் டி2 தான் இருக்கும். இது தெரியாமல் வைட்டமின் டி என்றெண்ணி, பணம் செலவழித்து ஏமாறுகிறார்கள். கடைகளில் வைட்டமின் டி மாத்திரை வாங்கினால் வைட்டமின் டி3 உள்ளதா என விசாரித்து வாங்குங்கள். ஆனால், மாத்திரை மூலமாக நீங்கள் வைட்டமின் டி-யை அடையத் தேவையேயில்லை. மாத்திரையினால் கிடைக்கும் வைட்டமின் டி-க்குப் பதிலாக சில நிமிடங்கள் உச்சி வெயிலில் நில்லுங்கள். அது போதும்.
சூரிய வெளிச்சம் தோலில் பட்டால் தோல் புற்றுநோய் வரும் என்றும் சிலர் அஞ்சுகிறார்கள். இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது?
சொன்னால் வேடிக்கையாக இருக்கும். தோல் புற்றுநோய் வருவதற்குச் சூரியன் காரணமே அல்ல. 20-ம் நூற்றாண்டில் மக்களை சூரியனிடம் இருந்து காப்பாற்ற பல நிறுவனங்கள் தோன்றின. இவர்களின் சன்ஸ்க்ரீன் லோஷனைத் (Sunscreen lotion) தடவிக்கொண்டு வெயிலில் நடந்தால் தோல் புற்றுநோய் வராது எனவும் நேரடி வெயில் தோலில் பட்டால் தோல் புற்றுநோய் வரும் என்றும் விளம்பரம் செய்தார்கள். சுமார் 400 கோடி ஆண்டுகளாக உயிர்களை எல்லாம் தோற்றுவித்து, உணவளித்து, காத்துவரும் சூரியனைக் கண்டு மிரள்வது நியாயமா?
தோல் புற்றுநோய் தொடர்புடைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால் அவை எல்லாமே வேறு ஒரு கதை சொல்கின்றன. சூரியனுக்குப் பயந்து வெளியே தலைகாட்டாமல் இருப்பவர்களுக்குத்தான் தோல் புற்றுநோய் பாதிப்பு பெருமளவில் ஏற்படுகிறது. பலருக்கும் தோல் புற்றுநோய் ஏற்படும் பகுதிகள் எல்லாமே சூரிய வெளிச்சம் படாத பகுதிகளாகவே இருக்கும். உடலுக்கு க்ரீம்களைப் பயன்படுத்துபவர்கள், சூரிய வெளிச்சம் படாமல் இருப்பவர்கள் போன்றவர்களையே தோல் புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. சூரியன் அதிக அளவில் எட்டிப்பார்க்காத பனிநாடுகளில்தான் தோல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. வருடம் முழுக்க வெயில் கிடைக்கும் நாடுகளில் தோல் புற்றுநோய் விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியம் என்றே கூறமுடியும்.
நாள்முழுக்க சூரியவெளிச்சத்தில் உலவும் எந்த ஒரு மிருகத்துக்கும் தோல் புற்றுநோய் வருவதில்லை. வடதுருவம் முதல் தென் துருவம் வரை மனிதர்கள், விலங்குகள், பயிர்கள், மரங்கள் என அனைத்துக்கும் உயிர் அளித்து காக்கும் சக்தி, சூரியன். சூரிய வெளிச்சம் நமக்கு வைட்டமின் டி-யை மட்டும் அளிக்கவில்லை. வைரஸ் மற்றும் கிருமிகளை விரட்டி அடிக்கும் ஆற்றல் கொண்டது சூரியன். சூரிய வெளிச்சமே உடலில் சிர்கேடியன் கடிகாரத்தை (பகல், இரவு காலத்தை உணரும் சக்தியே சிர்கேடியன் கடிகாரம் எனப்படுகிறது. சிர்கேடியன் கடிகாரத்தினால்தான் நாம் வழக்கமான நேரத்தில் உணவு உண்பதும், நேரத்தில் தூங்கி விழிப்பதும் சாத்தியமாகிறது.) முறைப்படுத்தி பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நம்மிடையே தூண்டுகிறது.
ஆனால், பலரும் சூரியனை நம்பாமல் பன்னாட்டு மருந்து நிறுவனங்களை நம்பி சன்ஸ்கிரீன் லோஷனை உடலில் பூசிக்கொள்வது அதிகரித்து வருகிறது. சூரியனால் நமக்கு எக்கெடுதலும் கிடையாது. அதே சமயம் அவசியமில்லாமல் மிக அதிக நேரமும் சூரிய வெளிச்சத்தில் நின்று மயக்கத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. வைட்டமின் டி-யைப் பெற தினமும் மதிய வேளையில் சூரிய ஒளி மேலே படும்படி நில்லுங்கள். மாலையில் வெயில் அடங்கியபிறகு இளவெயிலில் விளையாடுங்கள். காலைநேர இளவெயிலில் நடைப்பயிற்சி செய்யுங்கள். இதைச் செய்தாலே எந்தச் சிக்கலும் வராதே! சன்ஸ்கிரீன் லோஷனும் அவசியப்படாதே!
முழுமையான ரத்தப் பரிசோதனை செய்து வைட்டமின் டி-யின் அளவு பற்றி தெரிந்துகொள்ளுங்கள். வைட்டமின் டி-யில் தட்டுப்பாடு இருப்பது கண்டறியப்பட்டால் வெயிலில் நின்று வைட்டமின் டி-யை அடைய முயற்சி செய்வதே சிறப்பானது. வெயிலில் நிற்கமுடியாத சூழல் என்றால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வைட்டமின் டி3 ஊசிகளை எடுத்துக்கொள்ளவேண்டும். மாத்திரை வடிவில் எடுப்பதை விடவும் ஊசி வடிவில் வைட்டமின் டி3-யை எடுப்பதே சிறந்தது.
வைட்டமின் டி3-யை சூரிய ஒளியால் மட்டுமே பெறமுடியுமா?
சூரிய ஒளி தவிர்த்து சில மேலை நாடுகளில் பாலில் வைட்டமின் டி3 செயற்கையாக சேர்க்கப்படுகிறது. இது தவிர மத்தி மீன், நெத்திலி மீன் போன்றவற்றில் வைட்டமின் டி3 உண்டு. ஒரு முட்டையில் தலா 20 யூனிட் எனும் அளவு வைட்டமின் டி3 இருக்கும். இயற்கையாக புல் மேய்ந்து, சூரிய ஒளி உடலில் படும்வண்ணம் வெளியே வயல்களில் மேயும் பன்றியின் கொழுப்பில் ஏராளமான வைட்டமின் டி உண்டு. ஒரு ஸ்பூன் அளவு பன்றிக்கொழுப்பில் ஐநூறு யூனிட் அளவு வைட்டமின் டி3 கிடைக்கும். கடைகளில் விற்கும் மீன் எண்ணெயில் வைட்டமின் டி3 கிடைக்கும். ஒரு தேக்கரண்டி மீன் எண்ணெயில் 1400 யூனிட் அளவு வைட்டமின் டி3 உண்டு. ஆக தினமும் முட்டை, மத்தி மீன், நெத்திலி மீன் போன்றவற்றை உண்பதும் மீன் எண்ணெயை உட்கொள்வதும் ஓரளவு வைட்டமின் டி கிடைக்க உதவும்.
வைட்டமின் டி-யை உணவின் மூலம் பெற முயல்வது சிக்கலானது. முட்டையில் அதிக அளவு வைட்டமின் டி இல்லை. அதேபோல பலராலும் தினமும் மீனை உண்ண முடியாது அல்லவா! இயற்கை அளித்த கொடையான சூரியனை விட்டுவிட்டு நாம் ஏன் பணம் செலவு செய்து வைட்டமின் டி-யைப் பெறவேண்டும்

No comments:
Post a Comment