விரதங்களும் பலன்களும்/விரதத்தின் போது பலகாரங்கள் சாப்பிடலாமா?
விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம். சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.
“ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.
ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்க மாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
விரதங்களும் பலன்களும்
விரதம், நோன்பை எல்லா மதத்தினரும் கடைபிடித்து வருகின்றனர். மன உறுதிக்கு துணையாக இருப்பது விரதம் தான். ஒவ்வொரு காலகட்ட விரதத்துக்கும் உரிய பலன்கள் கிடைக்கும்.
1. திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூர அன்பைப் பெறலாம்.
2. செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம்.
3. புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள. தீரும்.
4. வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம்.
5. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
6. சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.
7. ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.
ஆவணி மாதம் அஷ்டமியுடன் சேர்ந்து வரும் வெள்ளிக்கிழமை அன்று மகாலட்சுமி விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் கிட்டும். எனவே உங்கள் நிலைக்கு ஏற்ப விரதம் இருங்கள்.
விரதம் விளக்கம்
விரதம் என்பதை நம் முன்னோர் காலம் காலமாக பின்பற்றி வந்தது. விரதம் இருந்தால் நம் பிரச்சனைகள் தீரும் என்பது நம்பிக்கை.இந்து சாஸ்த்திரங்களில் விரதம்,விரதம் இருக்கும் முறைகள்மேலும் அதனால் கிடைக்கும் பலன்கள் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் இன்று விரதம் என்ற பெயரில் பல முறைகளை பின்பற்றுகின்றனர்.விரதம் இருந்தால் நம் மனம்,ஆன்மா,உடல் ஆகியவை சுத்தம் அடைகின்றன.விரதம் இருந்தால் மன அமைதி கிடைக்கும்.விரதம் இருக்க பல முறைகள் உள்ளன்.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்தி இருப்பது,நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது,அசைவ உணவுகளை மட்டும் தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது,நீர்,ஜூஸ்,பழங்கள்,மட்டும் அருந்தி விரதம் இருப்பது என பல முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது நிச்சயம்.
இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக இந்து சமுதாயத்தினரிடம் வாரம் ஒருமுறை விரதம் இருக்கும் வழக்கம் பண்டைய காலம் முதல் உள்ளது. கடவுளின் பெயரால், பல்வேறு விசேஷ தினங்களின் பெயரால் இந்த விரதம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்த விரதங்களுக்குப் பின்னால் மாபெரும் மருத்துவ பலன் உள்ளது தற்போது விஞ்ஞானிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாரம் ஒரு முறை விரதம் இருந்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வராது என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகின்றன. விரதம் இருப்பதன் காரணமாக உடலின் மெட்டபாலிசம் புதுப்பிக்கப்படுகிறது. உடலியக்கம் சீராகிறது, தனது பணிகளை புத்துணர்வுடன் உடல் உறுப்புகள் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரதம் இருக்கும் நாட்களில் உடலியக்கம் சீராவதாகவும், ரத்த ஓட்டம் சீராவதாகவும் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை விரதம் இருந்தால் மாரடைப்புக்கான சாத்தியத்தை தவிர்க்கலாம்.
++++++++++++++++++++++++++++
உறுப்புக்களின் #செயலை #தற்காலிகமாக #நிறுத்தினால் #நமக்கு #சக்தி #கிடைக்குமா #எப்படி ?..
* மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய்
காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம்
செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை
நானும் காணமாட்டேன் என தனது கண்களை
கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த
வைராகியமான முடிவு அவளின் சக்தியை
நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும்
சக்தியாக அமைந்துவிட்டது.
* பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம்
சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு
வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக
மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின்
அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை
குளித்துவிட்டு நிர்வாணமாக தன்முன் வர
சொல்லுகிறார்.
* துரியோதனன் குளிக்க செல்லுகையில் ஸ்ரீ
கிருஷ்ணர் எதிர்ப்பட்டு, ”என்னப்பா இந்த
சமயத்தில் குளிக்கபோகிறாயா?” என
கேட்கிறார். தனது தாயின் நோக்கத்தை
கூறுகிறான் துரியோதனன். ஸ்ரீ கிருஷ்ணர்
புன்னகைத்துவிட்டு நீ வளர்ந்த மனிதன்
தாயின் முன் நிர்வாணமாக நிற்கலாமா என
கேட்கிறார். குளித்தபின் வாழை இலையை
இடுப்பில் தொடை வரை அணிந்து
காந்தாரியின் முன் செல்லுகிறான்
துரியோதனன். கண்களை திறந்து தனது
சக்தியை வழங்கிய காந்தரிக்கு தன்மகன்
இடுப்பு பகுதியில் ஆடையுடன் இருப்பதை
கண்டு கலங்கினாள். ஸ்ரீ கிருஷ்ணரின் மாய
விளையாட்டை புரிந்துகொண்டாள்.
* பாரத போரின் இறுதியில் பீமனுக்கும்,
துரியோதனனுக்கும் கடும் மோதல் ஏற்படும்
பொழுது எந்த உறுப்பில் தாக்கினாலும்
இறக்காமல் இருந்த துரியோதனன் கடைசியில்
தொடைப்பகுதியில் தாக்கியதும் இறந்தான்.
காரணம் காந்தாரி வழங்கிய சக்தி
தொடைபகுதியில் இல்லை. பீமன் உடல்
வலிமையில் சிறந்தவன் அவனால் காந்தாரியின்
கண் மூலம் பெற்ற ஆற்றலை ஒன்றும் செய்ய
முடியவில்லை என்பதே விரத பலனை நமக்கு
உணர்த்தும்.
* விரதம் இருக்கும் பொழுது மட்டுமே நம்
உடலில் இருக்கும் சக்தியையும் நாம் தினமும்
வீணாக்கும் சக்தியின் அளவையும்
புரிந்துகொள்ள முடியும். விரதம் இருத்தலில்
உணர்வு உறுப்புக்களில் முக்கியத்துவம்
பெருவது வாய் எனும் உறுப்பு. பிற உணர்வு
உறுப்புக்கள் ஒரு செயலை மட்டுமே
செய்யும். ஆனால் வாய் மட்டும் இரு செயலை
செய்யும். சுவைத்தல் மட்டும் பேசுதல் என
இரு செயல்களை தவிர்ப்பதை அனேக
விரதங்களின் அடிப்படையாக இருக்கிறது.
* ஆன்மீகம் என்றும் உள்ளும் புறமும்
தூய்மைப்படுத்தும் கருவியாகவே இருக்கிறது.
நாம் பயன்படுத்தும் சம்பிரதாயங்கள்
சடங்குகளுக்கு பின்புலத்தில் இருக்கும்
காரணம் தெரியாமல் பயன்படுத்துவதால்
நாளடைவில் அதன் மேல் ஒரு சலிப்பு
ஏற்படுகிறது. பக்தியுடனோ அல்லது
ஈடுபாட்டுடனோ செய்யாத ஆன்மீக
காரியங்கள் பலன்கொடுக்காது. ஒருவர் தான்
செய்யும் ஆன்மீக காரியங்களின் தாத்பரியம்
தெரிந்தால் தான் அதில் முழுமனதுடன்
செய்யமுடியும். மேலும் அடுத்த
சந்ததியினருக்கு எடுத்துசொல்ல முடியும்.
* நமது கலாச்சாரத்தில் சைவம், வைணவம்
மற்றும் சாக்தம் என ஏனைய சித்தாத்தங்கள்
இருந்தாலும், அனைத்து முறையிலும் சில
சம்பிரதாயங்கள் ஒன்றாவே இருக்கிறது.
அத்தகைய சம்பிரதாயங்களில் முக்கியமானது
விரதம் இருத்தல் என்பதாகும்.
* விரதம் இருப்பது என்றவுடன் உண்ணாமல்
இருப்பது என்று மட்டுமே நினைத்துவிடுகிற
ோம். ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் தனது
அவயங்களை செயல்படாமல் வைப்பது விரதம்
இருத்தல் என விளக்கலாம்.
* பஞ்சபூதங்களின் வடிவமான நமது
ஐந்துவிதமான உணர்வு உறுப்புக்களை
செயல்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில்
அபரீதமான சக்தி நமக்குள் சுரக்கும். ப்ராணா
என அழைக்கப்படும் இந்த சக்தியை கொண்டு
நமது ஆன்மீக வாழ்க்கையில் எளிதில்
மேம்படலாம்.
* உணர்வு உறுப்புக்கள் ஒவ்வொன்றும்
பஞ்சபூதத்தின் அடிப்படையாக இருப்பது
பஞ்சபூதம் குறிக்கும் உறுப்புகள் என்ன என
காண்போம்.
கண் - நெருப்பு
வாய் - நீர்
காது - ஆகாயம்
மூக்கு - காற்று
தொடு உணர்வு - மண்
* நமது உணர்வு உறுப்புக்களின் செயலை ஒரு
நோக்கத்துடன் தற்காலிகமாக நிறுத்தும்
பொழுது அது விரதம் என கூறலாம். நம் உடல்
சக்தி அதிகமாக உணர்வு உறுப்புக்கள் மூலம்
வீணக்கப்படுகிறது. நாம் அந்த உணர்வு
உறுப்புக்களை செயல்பட்டாமல் இருக்கச்
செய்தால் அதில் வீணாகும் சக்தி நம்முள்ளே
சேமிக்கப்பட்டு ஆன்மீக ஆற்றலா மாற்றம்
அடையும்.
* காது மற்றும் மூக்கு பகுதிகளின்
செயல்பாட்டில் ஆகாயமும் மண்ணும்
இருக்கிறது. ஆகாயம் மற்றும் மண்ணின்
தொடர்பில்லாமல் நம்மால் ஒரு கணமும்
வாழமுடியாது. அதை போலவே இந்த இரு
அவயங்களின் செயல்களை நாம்மால்
செயற்கையாக நிறுத்த முடியாது.
* உறுப்புக்களின் செயலை தற்காலிகமாக
நிறுத்தினால் நமக்கு சக்தி கிடைக்குமா
எப்படி?
* சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி, பிரதோஷம் ஆகிய
திதிகளும், திங்கள் (சோம வாரம்), வியாழன்
(குருவாரம்) கிழமைகளில் விரதமும் நமக்கு
நன்மையை ஏற்படுத்தும். அன்றைய
கோள்களின் நிலை நமது உடலின் சக்தியை
மேலும் வலுசேர்க்கும்.
* சாப்பிடாமல் விரதம் இருக்கும் முறையை
உண்ணாவிரதம் என்றழைத்தோம், தற்சமயம்
உண்ணாவிரதம் இருத்தல் என்பது ஏதோ
அரசியல் செயலாக மாறிவிட்டது. ஒரு
குறிப்பிட்ட நோகத்திற்காக வைராக்கியத்துடன்
உணவு சாப்பிடாமல் இருக்கும் தன்மையை
இவ்விரதம் சுட்டிகாட்டுகிறது. மஹாத்மா
காந்தி வெள்ளையருக்கு எதிர்ப்பு காட்ட நமது
சம்பிரதாயத்தை ஒரு ஆயுதமாக்
பயன்படுத்தினார். தற்சமயம் அது
அரசியலாகிவிட்டது.
* நாமும் ஒரு வாழ்க்கையில் மேன்மை அடைய
ஒரு லட்சியம் மற்றும் வைராக்கியத்துடன்
மாதம் இரு நாளிலோ அல்லது வாரம் ஒரு
நாளோ விரதம் இருப்போம் ஆனால் அவை
கைகூடும் என்பது சான்றோர்களின் வாழ்க்கை
மூலம் அறியலாம.
** நமது உடலின் சக்தியை அதிகமாக
செலவிடும் உணர்வு உறுப்பு கண். கண்களை
காட்டிலும் அதிகமாக் சக்தியை செலவு
செய்யும் உறுப்பு ஜீரண உறுப்புகள்.
உண்ணாமல் இருந்தால் மயங்கி
விழுந்துவிடுவோம் என்ற தவறான எண்ணம்
பலருக்கு உண்டு. உண்மையின் சராசரி மனிதன்
உண்ணாமல் குறைந்தபட்சம் அறுபது முதல்
தொன்னூறு நாள் வாழமுடியும். உங்கள்
உடல்வாகுக்கு ஏற்ப மருத்துவரை
கலந்துகொண்டு உண்ணா நோன்பு இருங்கள்.
உலக மதங்கள் எத்தனையோ இருந்தாலும்
அதில் ஓர் அடிப்படை ஒற்றுமை உண்டு.
அதற்கு சிறந்த உதாரணம் விரதம் எனும்
தன்மை. உலகின் அனேக மதங்களில் விரதம்
ஒரு புனித சடங்காக கொண்டாடப்படுகிறது.
* விரதம் இருக்கும் பொழுது ஏற்படும்
முக்கியமான பயன் மனது தனது செயலை
மிகவும் குறைவாக செய்து தன்னில்
அடங்கிவிடும். மனமற்ற தூய நிலையில்
ஆன்மீக முன்னேற்றம் விரைவாக நடக்கும்.
பால், பழங்களை உண்டு விரதம் இருத்தல் ஒரு
வகை. நீர் கூட குடிக்காமல் விரதம் இருப்பது
மற்றொரு வகை. நமது உடலின் தன்மை
வாழ்க்கை சூழல் பொருத்து விரதம் இருக்க
வேண்டும்.
* சந்திராம்ச விரதம் என ஒரு வகை விரதம்
உண்டு. சந்திரனின் பிறைக்கு ஏற்க சாப்பிடும்
விரதம் சந்திராம்ச விரதம். பெளர்ணமி அன்று
முழுமைகாக சாப்பிட ஆரம்பித்து படிப்படியாக
குறைப்பார்கள். அமாவாசை அன்று ஒன்றும்
சாப்பிடாமல் இருப்பார்கள். அமாவாசைக்கு
அடுத்தநாள் ஒரு கவளம் என படிப்படியாக
உணவை கூட்டுவார்கள். சந்திராம்ச விரதத்தை
பொருத்தவாரை மாதம் முழுவதும் விரத
தினங்கள்தான்.
** யார் எல்லாம் உண்ணா விரதம் இருக்க
கூடாது?
• சஷ்டியப்த பூர்த்தி முடித்த முதியவர்கள்
• வியாதியினால் மருந்து உண்பவர்கள்
• கர்ப்பிணிகள்
• பிரம்மச்சாரிகள்
• சன்யாசிகள்
* இவர்களை தவிர பிறர் உண்ணா நோன்பு
இருக்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம். மேலும்
சன்யாசிகளுக்கு என்று தனி விரதங்களும்
பிரம்மச்சாரிகளுக்கு தனி விரதமும்
சாஸ்திரத்தில் உண்டு.
* மெளனவிரதம் இருப்பது வாய் எனும்
உறுப்பின் மற்றொரு விரதமாகும்.
மெளவிரதத்தால் நமது உடல் மற்றும் மனது
தூய்மை ஆகிறது. மெளனவிரதம் அனைவரும்
இருக்க தகுந்த ஒரு விரதம். இதில் யாருக்கும்
தடையில்லை. உலகின் சிறந்த மொழி
மெளனம். தக்ஷ்ணாமூர்த்தி உலகுக்கு அளித்த
வேதம். மெளனமாக இருப்பதால் நம்மில்
இருக்கும் சக்தியை மிகவும் துல்லியமாக
அறியலாம். மெளனவிரதம் இருந்துவந்தால்
உங்கள் உள்ளுணர்வு மிகவும்
கூர்மையானதாக மாறி உங்களை
விழிப்புணர்வாளர்களாக மாற்றும்.
* மெளனவிரதம் இருக்கும் பொழுது சிலர்
காகிதத்தில் எழுதி காட்டுவார்கள். மனதை
ஒருநிலைப்படுத்தும் நோக்கில் இருக்கும்
விரதத்திற்கு இது எதிரான செயல்.
மெளனவிரதம் இருக்கும் காலத்தில் உங்களை
ஒரு ஜடப்பொருளாக பாவித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் உடல் செயல்படலாம் ஆனால் சைகை
மூலமோ, எழுத்து மூலமோ பேசாதீர்கள்.
அப்பொழுது தான் மெளனவிரதத்தின் பயனை
முழுமையாக உணரமுடியும்
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர்
உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி
மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள்
நமக்கு நன்மை செய்கின்றன.
விரதம் என்பது மனம் அலையாமல் இருக்க,
கண்ட கூத்துக்கள் ஆடாதிருக்க,
ஆவேசப்படாதிருக்க, அசூயையோ ஆத்திரமோ
ஏற்படாதிருக்க செய்யும் விஷயம். இவை
ஏற்படின் விரதம் முடிந்து போனதாகவே
அர்த்தம். ஆவேசப்படுகிற மனதை, அலைகிற
மனதை அடக்கி நிறுத்தவே விரதம் என்கிற
வைராக்கியம்..
அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான்
என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது
கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய
ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள்
ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி,
ஞானத்தை தேடி புறப்படுகிறது.வ
றுமையால்உணவு இல்லை, சூழ்நிலை
காரணமாக உணவில்லை என்ற நிலை வரும்
போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம்
கண்முன் பாலும், பழமும், இனிப்பும்,
சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும்
குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி
பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான
விரதம்.இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பா
டு பற்றி டாக்டர்களே நமக்கு
அறிவுறுத்துகிறார்கள்.
நமது வயிறு 15 நாட்களுக்கு
ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும்.
அதனால் தான் அமாவாசை, பவுர்ணமி,
வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை
வகுத்தார்கள். விரதமிருப்பதால் வயிறு
சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை
சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது.
ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம்
முன்னோர் வகுத்தனர்
+++++++++++++++++++++++++++++++
விரதம் இருப்பதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!!
நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும். நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.
இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வரும் விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இன்று நம்மில் பலர் இதை கேலியும் கிண்டலும் செய்து வருகிறோம். இதனால் என்ன பயன் என்று நக்கல் அடித்து வருகிறோம்.
விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது. நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது.
1 உடல்நிலை மாற்றம்.
விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
2 நோய் எதிர்ப்பு.
உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
3 உடல் எடை குறைவு.
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில் உதவும்.
4 மன நிலை மேன்மையடையும்.
நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபக திறன் அதிகரிக்கிறது, ஒருமுகத்தோடு வேளைகளில் ஈடுப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்ணவு இடைவேளை தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
5 உணவு இடைவேளை.
தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.
6 வாரம் ஒருமுறை.
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது.
7 மூக்கு முட்ட உண்பது தவறு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.
8 விரதம் இருக்க வேண்டிய முறை.
விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
9 புத்துணர்ச்சி.
வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பதே நல்லது. அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.
10 குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதமும் இருக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இறைவனை ஜோதியாக வணங்கி, போற்றி யுள்ளனர் தமிழர்கள். இவ்வழிபாட்டை, சங்ககால இலக்கியங்கள், 'கார்த்திகை விளக்கீடு' என்று குறிப்பிட்டுள்ளன. விளக்கு வழிபாடு செய்த நிகழ்வுகள், அகநானூறு மற்றும் நற்றிணை போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளன. கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாகவும் ஒரு கருத்து உண்டு.
கார்த்திகை தீபத்தன்று மட்டுமல்ல, எல்லா நாட்களிலுமே விளக்கேற்றுவது தமிழர் மரபு. தினமும், காலை, மாலை விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். சூரியோதயத்திற்கு முன், பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை, 4:30 - 6:00 மணி) விளக்கேற்றினால், பெரும் புண்ணியம் உண்டாகும்; முன்வினைப் பாவம் விலகும்.
மாலையில் தீபமேற்றினால், திருமணம் மற்றும் கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். பொதுவாக மாலை, 6:00 மணிக்கு தான் நாம் விளக்கேற்றுகிறோம். இதற்கு பதில், மாலை, 4:30 - 6:00 மணிக்கு இடையே உள்ள பிரதோஷ வேளையில் விளக்கேற்றினால், சிவபெருமானும், நரசிம்மரும் நமக்கு அருளுவர். காரணம், அவர்களை வணங்க ஏற்ற நேரம் இவை!
கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தர் பாடியுள்ளார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்... என்று அவர் பாடுவதில் இருந்து, இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
தீபஜோதி என்பது அக்னி தத்துவம்; அக்னியின் சொரூபமாக, ஈசனின் நெற்றிக் கண் அமைந்துள்ளது. அதில் எழுவது சாதாரண தீ அல்ல; அது, அநியாயக்காரர்களைக் கொல்லும்; மற்றவர்களுக்கு ஞான ஜோதியாய் தெரியும்.
ஆசையைத் தூண்டும் மன்மதனை, சிவபெருமான் எரித்தது ஞானத்தீயால் தான்! ஆசைகள் அதிகரிக்க அதிகரிக்க, பிறவிகளும் அதிகரிக்கும். அந்த ஆசைத்தீ அடங்க, சிவனின் நெற்றிக்கண்ணை நாம் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் பிறப்பற்ற நிலையை அடைந்து, நித்ய ஆனந்தத்தை அடையலாம்.
திருக்கார்த்திகை திருநாளில், திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மலை தீபம், சிவாம்சம் கொண்டதே! யாராலும் அணுக முடியாத ஞான மலை அண்ணாமலை. தேவர்களாலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருள் சிவன். அவர், பூலோக மக்கள் மீது கொண்ட கருணையால், தன்னை எளிமைப்படுத்தி, அருள்புரிவதற்காக நெருப்பு வடிவில் காட்சி தருகிறார்.
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டபோது, அவரது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அவை சரவணப் பொய்கையில் சிறுகுழந்தையாக உருவெடுத்தன. அதுபோல, பெருஞ்சுடரான அண்ணாமலை தீபமே, நம் வீட்டு சிறு அகல் விளக்குகளில் குட்டிக் குழந்தை முருகனாக ஒளி வீசுகிறது.
வாசலில் கார்த்திகை தீபம் ஏற்றும்போது குறைந்த பட்சம் ஆறு தீபங்களை ஏற்ற வேண்டும்.
விளக்கு இல்லாவிட்டால், குடியிருக்கும் வீடு இருண்டு விடுவதைப் போல, மனம் என்னும் வீட்டில் ஒளி இல்லாவிட்டால், அநியாயங்களே வெளிப்படும்.
கணவர் மற்றும் பிள்ளைகள் தீய பழக்கங்களில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் திருந்தி, நற்குணங்கள் பெற, பெண்கள் கார்த்திகை விரதம் இருப்பர்.
ஐஐ தொடங்கி, ஓர் ஆண்டு, மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கார்த்திகை திருநாளன்று தீபமேற்றி, பிரகாசமான வாழ்வைப் பெறுவோம்.