முடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome
சித்தர்கள் கண்டறிந்த மகத்துவம் மிக்க காயகற்ப மூலிகை களில் ஒன்றுதான் முடவாட்டுக்கால் ஆகும்.இம்மூலிகையில் கிழங்கு பகுதியில் மட்டுமே அபூர்வ மருத்துவ குணம் அடங்கியுள்ளது.
இம்மூலிகை கிழங்கு மலைப்பகுதியில் உள்ள பாறைகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.இது கொல்லிமலை, மற்றும் சதுரகிரி மலையில் கிடைக்கின்றது.
இம்மூலிகை கிழங்கு செம்மறி ஆட்டின் கால்களைப் போன்ற தோற்றத்துடன் இரண்டடி நீளம் வரை வளரும்.
முடவாட்டுக்கால் என்பதன் விளக்கம் :
முடவன் - ஆட்டும் - கால் என்பதாகும்.அதாவது மூட்டுவாதம் வந்து முடங்கிப் போனவர்களுக்கு இக் கிழங்கு மூலமாக லேகியமாக மருந்து அல்லது கசாயம் [ சூப் ] செய்து கொடுத்தால் மூட்டுவலி,முடக்கு வாதம் [ Arthritis ] நீங்கி குணமடைவார்கள்.
சிறு வயது குழந்தைகளுக்கு வரும் வாதநோய் களுக்கு முடவாட்டுக் கால் கிழங்கை கொதிக்கும் நீரில் போட்டு வைத்து இளம் சூட்டில் உடலில் ஊற்றி தினம் குளித்து வர இரண்டு,மூன்று மாதத்தில் வாத நோய்கள் குணமாகும்.
முடவாட்டுக்கால் [மூலிகை] சூப் செய்முறை :
முடவாட்டுக்கால் கிழங்கு - 50 - கிராம்
மிளகு - 20 - No
சீரகம் - 1/4- டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
தக்காளி - 1
அனைத்தையும் ஒன்றிரண்டாய் இடித்து அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து 300 மிலி அளவு கொதித்து வற்றியவுடன் வடிகட்டி சிறிது உப்பு,சிறிது வெண்ணெய் சேர்த்து இளம் சூட்டில் குடிக்கவும்.சுவையாக இருக்கும்.
இது போல் தினமும் செய்து குடித்துவர மூட்டு வலி, முடக்கு வாத நோய்கள் விரைவில் குணமாகும்.
2006 ம் வருடத்தில் தோன்றிய சிக்குன் குனியா என்னும் மூட்டுவாத காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பலர் முடவாட்டுக்கால் [சூப்] கசாயத்தினால் எளிதில் குணமடைந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.
+++++++++++++++++++++++++++++++++++
அனுதினம் ரசம் ஆரோக்யம் வசம். ரசம் என்னும் சூப்பர் திரவம் பற்றி ஒரு அலசல். சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும்.
இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான். புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம்
பெற்றுவிடும். பல நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக்
குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது. அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. ரசத்தில்
சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. நரம்புகள்
சாந்தமடைவதால் நோய்கள்
குணமாகின்றன. அபார்ஷன்
ஆகாமல் தவிர்த்துவிடுகிறது.
புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச்
செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத்
தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து
நிற்கிறது. ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள்,
கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்துகிறது. இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக்கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது. தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி,
குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி
வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. தசைவலியும்,
மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல்
தடுக்கிறது. ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம். உணவு மருந்தாகக் குணப்படுத்தும். எனவே,
ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
முடவாட்டு கிழங்கு தேவைக்கு அழைக்க
ReplyDelete9994050807
7373732760