Saturday, May 14, 2016

ஆகாஷ் முத்திரை

The five Tattvas (elements)
Aakaash Mudra cures Sinus plus:
ஆகாஷ் முத்திரை
(உயர்ந்த நல்ல எண்ணங்களை வெளிப்படுத்தும் அருமையான முத்திரை)நமது பெருவிரல் நுனியும் நடு விரல் நுனியும் தொடும்படியும்,மற்ற விரல்கள் நேராக நீட்டியும் வைத்துக்கொள்ளவேண்டும்.இந்த முத்திரையை தினமும் அதிக பட்சம் 45 நிமிடங்களும், குறைந்த பட்சம் 15  நிமிடங்களாவது செய்வது நல்ல பலனைத் தரும். இந்த முத்திரைப் பயிற்சி எந்த நேரத்திலும் செய்யலாம். இந்த முத்திரை பயிற்சி காலை/மாலை 2 மணி முதல் 6 மணிக்குள் எந்த நேரத்தில் செய்தாலும் அதிக பலன் தரும்.
இந்த முத்திரை பயிற்சி உடல் உறுப்புகளின் வெற்றிடத்தை அதிகப்படுத்தி நன்றாக இயங்கச்செய்கிறது. அதாவது நமது மண்டையோடு (கபாலம்), மூக்கின் பின்புறம், சைனஸ் பாதை, காது, வாய், தொண்டை மற்றும் வயிறு பாகங்களில் வெற்றிடம் உள்ளது. தேவையான வெற்றிடம் இருப்பதால் அது நன்றாக இயங்குகிறது. அந்த இடத்தில் அதிகமாக தண்ணீரோ அல்லது காற்றோ அடைத்துக்கொண்டால் அந்த உறுப்புகள் இயங்குவதில் பிரச்சனையும் நோயும் வருகிறது. இந்த முத்திரை பயிற்சி தேவையான வெற்றிடத்தை ஏற்படுத்தி நன்றாக இயங்கவைக்கிறது. இந்த முத்திரை நல்ல எண்ணங்களை மனதில் உருவாக்குகின்றது.
இந்த முத்திரையை உட்கார்ந்து கொண்டு செய்யவேண்டும். நடந்து கொண்டு செய்யக்கூடாது.
ஆகாஷ் முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்:
1.மனதில் தீய எண்ணங்கள், கெட்ட உணர்ச்சிகள் ஏற்படுவதை கட்டுப்படுத்துகிறது.
2.மனதில் தேவையில்லாமல் ஏற்படும் பயம் கோபம் இவைகளை குறைத்து மனதில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தி மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொடுக்கிறது.
3.இந்த முத்திரை பயிற்சியில் தியானம் செய்தால் மன ஒருமைப்பாட்டுடன் தியானம் முழுமையாக செயல்படும்.4.உயர்ந்த எண்ணங்களை வெளிப்படுத்தும்.
5.இந்த முத்திரை பயிற்சி தொடர்ந்து செய்தால் பொது நிலைப்புலன் உணர்வுக்கு அப்பாற்பட்ட முன்னோக்கு தெரியும் சக்தி (ESP- EXTRA SENSORY PERCEPTION) கிடைக்கும்.
6.உடலில் உள்ள தேவையற்ற கெட்ட சக்திகள் (TOXIN) வியர்வை, சிறுநீர், மலம் வழியாக வெளியேறும்.7.உடலும் உறுப்புகளும் கனமாக இருப்பது போன்ற நிலைகளை போக்கும்.8.சைனஸ் தொந்தரவுகளை குணப்படுத்தும்.
9.தலைவலி மற்றும் காது வலிகளை குணப்படுத்தும்.10.நெஞ்சு கனமாக இருப்பது போன்ற உணர்வுகளை நீக்கும்.11.நெஞ்சு படபடப்பை குறைக்கும்.
12.உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
13.அதிகமாக சாப்பிட்டதால் ஏற்படும் தொந்தரவுகளை போக்கும்.
14.கால்சியம் சத்து அதிகரித்து எலும்புகள் வலுப்பெறும்.15.இந்த முத்திரை பயிற்சியால் உடல் உள் உறுப்புகள் அனைத்தும் நன்றாக இயங்குகின்றது.
நமது உடல்பஞ்சபூதங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவதுகாற்று, நெருப்பு, நீர், பூமி, ஆகாயம்என்பன. இந்த பஞ்சபூத சக்திகள் நமது உடலில் சமநிலையில் இல்லாமல் இருந்தால் நாம் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நோயால் அவதிப்படுகிறோம். இந்த பஞ்சபூத சக்திகளை முத்திரைப் பயிற்சியின் மூலம் சமநிலைப்படுத்தலாம்.

நமது ஐந்து விரல்களும் பஞ்சபூத சக்திகளை குறிக்கிறது. பெருவிரல் நெருப்பின் சக்தியாகவும், ஆள்காட்டி விரல் காற்றின் சக்தியாகவும், நடுவிரல் ஆகாசத்தின் சக்தியாகவும், மோதிரவிரல் பூமியின் சக்தியாகவும், சிறுவிரல் நீரின் சக்தியாகவும் செயல்படுகிறது. பெருவிரல் நெருப்பு சக்தியுடன் மற்ற விரல்கள் தொடர்பு கொள்ளும்போது அதற்குரிய பஞ்சபூத சக்திகள் சமநிலைப்படுகிறது. அதனால் அதற்குரிய நோய்கள் குணமடைகின்றது. முத்திரைப் பயிற்சி செய்யும்போது உடலில் மின் காந்த சக்தி ஊடுருவி நோய்கள் குணமடைகிறது. உடலின் பிராண சக்தி அதிகரித்து நோய் இல்லாமல் வாழ வழிவகை செய்கிறது.

இருமல் / கக்குவான் / ஜலதோஷம்

இருமலுக்கு இயற்கை வைத்தியத்தில் தீர்வுகள்
* கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.
1q
* வெங்காயம் 150 கிராம், சர்க்கரை 150 கிராம் எடுத்து வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும். பிறகு அதை மெல்லிய துணியில் வடிகட்டவும். இந்த வெங்காயச் சாற்றில் சர்க்கரையைச் சேர்த்து பாகுபதமாகக் காய்ச்சி இறக்கவும். இந்த வெங்காயப் பாகை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி உட்கொண்டால் எப்பேர்ப்பட்ட இருமலும் சரியாகும்.
* தொடர்ச்சியான இருமல்:
இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.
* சிற்றிருமல்:
நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.
* இரைப்பு இருமலுக்கு:
இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.
* கோழை இருமல்:
நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.
* வறட்டு இருமல்:
வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.
* உடல் சூட்டினால் இருமல்:
உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.
* எந்த வகையான இருமலுக்கும்:
பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.
* கக்குவான் இருமலுக்கு:
கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
* ஜலதோஷம் காரணமாக இருமல்:
ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும். கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

Tuesday, May 10, 2016

முடக்கற்றான்

Image result for முடக்கற்றான் கீரைImage result for முடக்கற்றான் கீரை

முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான்

முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான் ( Cardiospermum halicacabum )

"சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங் கண்மலமும் - சாலக்
கடக்கத்தானோடிவிடுங் காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி"
- சித்தர் பாடல்-

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

முடக்கற்றான் கொடிவகையைச் சேர்ந்தது. இது இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது.குளிர்ந்த ஈரச்சத்துள்ள இடத்தில்தான் முடக்கற்றான் பயிராகும்.தோட்டங்கள், வீட்டு வேலி இவைகளிலுள்ள பெரிய செடிகளின்மேல் படர்ந்து வளரும். உஷ்ண பிரதேசங்களில் முடக்கற்றான் கொடியைப் பார்க்கமுடியாது. வளமான இடங்களில் இந்தக் கொடிசற்று பெரிய இலைகளுடன் செழிப்பாகப் படரும். இந்தக் கொடியின்தண்டும் இலைக் காம்பும் மெல்லியதாகவே இருக்கும். இது ஏறுகொடியாக சுமார் 3.5 மீ. அளவு படரும்.

இதன் தண்டு, இலை, காம்பு எல்லாம் நல்ல பச்சை நிறமாகவே இருக்கும். இதன் பூ வெண்நிறமாக இருக்கும். இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும். காயைப் பறித்துத் தோலை உறித்தால் உள்ளே மிளகளவு, பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப்பிறைபோல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும்.

இதன் காய் முற்றிய பின் பழுப்பு நிரமாக மாறிக் காய்து விடும். இதை மற்ற கீரைகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடலாம்.இதை தனியாக மருந்தாகவும் பயன் படுத்தலாம்.

இதன் இலையில் அடங்கியுள்ள சத்துக்கள்:

ஈரப்பதம்-83.3, புரதச்சத்து-4.7, கொழுப்புச் சத்து 0.6, மாவு சத்து 9.1, தாது சத்து 2.3, சக்தி-6 கலோரி முதலியவை உள்ளது. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப் படுகிறது.

முடக்கு+அறுத்தான் = முடக்கறுத்தான் / முடக்கற்றான். இது மூட்டுக்களை முடக்கி வைக்கும்மூட்டு வாத நோயை அகற்றுவதால் முடக்கற்றான் எனப்பெயர் பெற்றது.

குழந்தை பிரசவிக்கும் நேரத்தில் ஒரு சில பெண்கள் ரொம்ப கஷ்டப் படுவார்கள் இவர்கள் வேதனையைக் குறைத்து, சுகமாகசுலபமாக பிரசவிக்கச் செய்ய இந்த முடக்கற்றான் நன்கு பயன்படுகிறது.

சுகப்பிரசவம் ஆக:

முடக்கற்றான் இலையைத் தேவையான அளவுகொண்டு வந்து அதைக் காரமில்லாத அம்மியில் வைத்து மை போல்அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது. மருத்துவமனை அருகிலில்லாத கிராமங்களில் உள்ள மருத்துவம் பார்க்கும் பெண்களும், பாட்டி மார்களும் இந்த முறையையே கையாண்டு வருகின்றனர். இது கை கண்ட முறையாகும்.

மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக:

மூன்று நாட்களுக்கு ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

முடக்கற்றான் இரசம் தயாரிக்கும் முறை:

ஒரு கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.

பாரிச வாய்வு குணமாக -: கைப்பிடியளவு முடக்கற்றான் இலையைக்கொண்டு வந்து நைத்து ஒரு சட்டியில் போட்டு இதே அளவு வேலிப்பருத்தி இலையையும், சூரத்து ஆவரையிலையையும் இத்துடன் சேர்த்துஇரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக வடிகட்டிக் காலைவேளையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்குக் கொடுத்து வந்தால்பாரிச வாய்வு குணமாகும். தேவையானால் மூன்று நாட்கள் இடைவெளிவிட்டு, மறுபடி 3 நாளாக மூன்று முறை கொடுத்து வந்தால், பாரிசவாய்வு பூரணமாகக் குணமாகும்.

சுக பேதிக்கு :

ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை ஒருசட்டியில் போட்டு, வெள்ளைப் பூண்டு பற்களில் ஐந்து நைத்துஇதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சிய கஷாயத்தை வடிகட்டி விடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம். இரவு தேவையான பதார்த்தம் சாப்பிடலாம்.

முடக்கற்றான் இலைகளை எண்ணெயில் இட்டுக் காச்சி மூட்டு வலிகளுக்குப் பூசினால் நீங்கும். இதன் இலையை இடித்துப் பிழிந்துஎடுத்த சாற்றினை இரண்டு துளிகள் காதில் விட்டு வர காது வலி,காதில் இருந்து சீழ் வடிவது முதலியவை நீங்கும்.

முடக்கற்றான் இலையையும், வேரையும் குடி நீரிட்டு மூன்று வேளையாக அறுபது மில்லி வீதம் தொடர்ந்து அருந்திவர நாள்பட்டஇருமல் குணமாகும்.

சில பெண்களுக்கு மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்படாது. இவர்கள் முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் இலையை உலர்த்தி எடுத்த பொடியுடன், சித்திரமூல வேர் பட்டை, கரிய போளம் இவைகளையும் பொடி செய்துகுறிப் பிட்ட அளவு மூன்று நாள் அருந்தி வர மாதவிலக்கு ஒழுங்காக வரும்.

முடக்கற்றான் கொடி மல மிளக்கி செய்கை உடையது. இதன் கொடியைமுறைப்படி குடிநீரிட்டு அத்துடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துஅருந்த மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் வேரை உலர்த்தி பின்னர் முறைப் படி குடி நீர் அருந்திவர நாள் பட்ட மூல நோய் குணமாகும்

அரிவாள் மனை பூண்டு


வெட்டுக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதும், மூட்டுவலியை போக்க கூடியதும், நரம்புகளை பலப்படுத்தும் தன்மை உடையதும், சிறுநீரக கற்களை கரைக்கவல்லதும், நெறிக்கட்டு, யானைக்கால் வீக்கத்தை போக்க கூடியதும், ஆண் மலட்டு தன்மையை சரிசெய்ய கூடியதுமான அரிவாள்மனை பூண்டுவின் நன்மைகள் குறித்து இன்று நாம் பார்ப்போம். சாலையோரங்களில் கிடைக்க கூடிய அரிவாள்மனை பூண்டுக்கு வட்ட திருப்பி, மலைதாங்கி என்ற பெயர்கள் உண்டு. மஞ்சள் நிற பூக்களை உடைய இதன் இலைகள் அரிவாளை போன்று இருக்கும். காயத்தை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது. குறிப்பாக, அரிவாளால் ஏற்படும் காயங்களை விரைவில் ஆற்றும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட அரிவாள் மனை பூண்டு உள், வெளிப்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. வெட்டுக்காயம் ஏற்பட்டால், அரிவாள்மனை இலையை பசையாக அரைத்து காயத்தில் தடவினால் ரத்தபோக்கு நிற்கும். வடு தெரியாத வகையில், காயம் சீக்கிரம் ஆறும். அரிவாள்மனை பூண்டு இலைகள் மற்றும் வேர்கள் மருத்துவ குணம் மிகுந்தது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது.

அரிவாள்மனை பூண்டு காய்ச்சலை தணிக்க கூடிய தன்மை கொண்டது. மூட்டு வலி இல்லாமல் செய்யும். ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உடையது. இதன் வேரை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் தேனீர் தயாரிக்கலாம். அரிவாள்மனை பூண்டு வேரை எடுத்துக்கொண்டு அதை தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். அதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர் வடிக்கட்டி எடுத்து காய்ச்சிய பால் சேர்க்கவும். இந்த தேனீரை குடிப்பதன் மூலம் நரம்புகள் பலப்படும்.அரிவாள்மனை பூண்டில் பல்வேறு நன்மைகள் உள்ளன. பித்தப்பை கற்கள், சிறுநீரக கற்களை கரைக்க கூடியது. சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. இதனால் தேவையற்ற நச்சுக்கள் வெளியாகிறது. சிறுநீரகத்துக்கு பலம் தரக்கூடியது. நரம்பு மண்டலங்களுக்கு பலத்தை கொடுக்கவல்லது. ஆண் மலட்டு தன்மையை போக்கும்.

அரிவாள்மனை பூண்டு இலையை பயன்படுத்தி சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம், நெறிக்கட்டு, யானைக்கால் வியாதிக்கு  மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
இதற்கு அரிவாள் மனை பூண்டு இலை, விளக்கெண்ணெய் எடுத்துக்கொள்ளவும். இலையை பசையாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து தைல பதத்தில் காய்ச்ச வேண்டும். இதை பயன்படுத்துவதன் மூலம் விதை வீக்கம், யானைக்கால் வீக்கம், நெறிக்கட்டு சரியாகும். இதை உள்ளுக்குள் எடுத்துக் கொண்டால் வயிற்று பூச்சிகள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். அரிவாள் மூக்கு பச்சிலை, அரிவாள்மனை என்ற பெயர்களை கொண்ட இந்த அரிவாள்மனை பூண்டை சாப்பிட்டால் காய்ச்சல் சரியாகும். வயிற்று பூச்சிகளைவெளியேற்றும். வெளிப்பூச்சாக பயன்படுத்துவதன் மூலம் வெட்டுக்காயங்கள் குணமாகும். இதை தேனீராக்கி குடிப்பதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.  ஆண் மலட்டுதன்மைக்கு அற்புத மருந்தாகும்.

Sunday, May 8, 2016

நல்லெண்ணெய்


நல்லெண்ணெய் என்று பரவலாக வழங்கப்படுவது,  எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும். உண்மையில் எண்ணெய் என்பது எள், நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல் (எள் + நெய் = எண்ணெய்) ஆகும். இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும் எனினும், எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணை என்ற சொல் பயன்பாட்டுக்கு வந்தது. இது பொதுவாக சமையலுக்குப் பயன்படுகிறது. இதை தென்னிந்தியாவில் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மற்றும் சீனர்கள், கொரியர்கள் மற்றும் சப்பானியர்கள் தங்கள் சமையலில் நல்லெண்ணெய்யை உபயோகிக்கின்றனர்.
நல்லெண்ணெய் இந்திய மருத்துவ முறைகளில் பல பயன்பாடுகளைப் பெற்றுள்ளது. இது எதிர் ஆக்சிகரணியாக செயல்பட்டுஇரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. இது பிடித்துவிடல், உருவுதல் போன்ற ஆயுர்வேத மருத்துவ முறைகளில் அதிகமாகப் பயன்படுகிறது


நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான மருத்துவ 
வழி !!!
நல்லெண்ணெய்யைக் கொண்டு சமையல்
செய்தால் உடலுக்கு மிகவும்
நல்லது என்பது எல்லோருக்கும் தெரிந்த
விஷயம். அத்தகைய
நல்லெண்ணெய்யை வாயில்
ஊற்றி கொப்பளிப்பதன் மூலம்
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள
முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இத்தகைய நல்லெண்ணெய்யில் வாயைக்
கொப்பளிப்பது ´ஆயில் புல்லிங்´
என்று கூறப்படுகிறது. இதனால் உடலில் உள்ள
நோய்களும் குணமாகின்றன. இத்தகைய ஆயில்
புல்லிங்கை விடியற்காலையில் எழுந்ததும்
வெறும் வயிற்றில், பல் துலக்கியதும்
சுத்தமான
நல்லெண்ணெயை இரண்டு தேக்கரண்டி (10
மில்லி லிட்டர்) வாயில் விட்டு, அதனை வாய்
முழுவதும் பற்களின் இடைவெளிகளுக்கிட
ையே ஊடுருவிச்
செல்லுமாறு நன்கு கொப்பளிக்க வேண்டும்.
இப்படி 15 முதல்20 நிமிடங்கள்
வரை தொடர்ந்து கொப்பளிக்கவும். முதலில்
வாய் முழுவதும்
வழு வழுவென்று எண்ணெய்யின்
தன்மை இருக்கும். பின்னர் நீரினால் வாயையும்,
பற்களையும் நன்கு கழுவ வேண்டும். பிறகு 2
முதல் 3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மேலும்
இதனை நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம்.
மூன்று முறையும் வெறும் வயிற்றில் செய்ய
வேண்டும்.
ஆயில் புல்லிங் எதற்கெல்லாம் நல்லது?
மூட்டு வலி, முழங்கால் வலி, இருமல் மற்றும்
சளி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள்,
கண் காது மூக்கு சம்பந்தமான நோய்கள்,
வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல், மூலம்,
களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா,
வாயுத்தொல்லை, ஒவ்வாமை (அலர்ஜி),
போன்ற நோய்களை உடனடியாக
குணப்படுத்துகிறது.
மேலும் தலைவலி என்பது கடுமையான
தொந்தரவினை தரக்கூடியது. அதிலும்
ஒற்றைத் தலைவலியானது கடுமையான
விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தினமும்
தவறாமல் ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவ
ர்களை இந்த நோய்கள் தாக்குவதில்லை.
நம் உடலில் ஏற்படக்கூடிய இரத்த அழுத்தம்,
இதய நோய், பார்க்கின்சன் நோய்கள், கல்லீரல்,
நுரையீரல் நோய், புற்று நோய், பக்கவாதம்,
நரம்பு சம்பந்தமான நோய்களையும்
கட்டுப்படுத்துவதாக மருத்துவர்களில்
ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

ஆரோக்கிய இதயம்
நல்லெண்ணெயில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.


நீரிழிவு
நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++
நலம் தரும் நல்லெண்ணெய்
vilakku amanushyam
ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடைய நல்லெண்ணெயின் மகத்துவம் பார்போம்;
எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய் சிவப்புத் தன்மை கொண்டது.
நல்லெண்ணெயை மட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளுவது நம் முன்னோரின் வழக்கம். உதாரணமாக, கிராமப்புறங்களில் பால் தரும் பசு மாடுகளுக்கு எள் புண்ணாக்கு சிறிதளவும், அதனுடன் தேங்காய், கடலை புண்ணாக்கு ஆகியவையும் சேர்த்து கொடுப்பார்கள்.
பசு மாட்டிற்கு எள் புண்ணாக்கு உட்கொள்ள கொடுத்து வந்தால், அதன் இரத்தத்தில் உள்ள கொழுப்பானது திரிக்கப்பட்டு பால் வழியே வந்து விடும். பால் கொழுப்புச் சத்து நிறைந்து தரமானதாக இருக்கும்.
பல பயன்களை தரும் நல்லெண்ணெய் தீபத்தை கோவில்களில் ஏற்றுவதும் சிறப்புமிக்கது. நல்லெண்ணெய் கொண்டு ஏற்றப்பட்ட தீபம் எரியும்போது அதன் எண்ணெய் பசை ஆவி நிலையில் கருவறையின் சுவர்களில் உள்ள கல்லின் மீது படியும். அதனுடன், கற்பூரம் எரிந்த சுடரும் படிந்து கொள்ளும். இவை கல்லில் குணத்துடன் சேர்த்து, இறைவனை வழிபட கருவறைக்குள் செல்லும் அனைவருக்கும் ஆரோக்கியத்தை தருகின்றது.
இதற்கு உதாரணமாக ஒரு வழக்கத்தை கூறலாம். நல்லெண்ணெயில் கற்பூரச்சுடரை கலந்து நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்வது பழைய பழக்க வழக்கங்களில் ஒன்று. இது ஆரோக்கியம் தருவதுடன் நல்ல சிந்தனையையும் தூண்டும்.
எள்ளும், எண்ணெயும் எரிந்து வரும் புகையின் மணம், அதன் ஆவி – இந்த உலகில் மட்டுமல்ல; பிரபஞ்சத்தின் ஊடே மனிதன் கொண்டுள்ள தொடர்பை நீட்டிக்க வல்லது என்பதும் ஆச்சரியமான உண்மை தான்.
கோவிலிலும் இல்லங்களிலும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு சகல சௌபாக்கியங்களும் பெறுங்கள்.

Friday, May 6, 2016

இலுப்பை மரம்

'ஒரு தெய்வம் தந்த பூவே!'

'பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு..’
-இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை.
இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு.
எண்ணெய், மருத்துவ உபயோகம், தின்பண்டம் என பல வழிகளில் பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்த ஒரே மரம்... இலுப்பைதான். நிழல், காற்று, பூ, பழம், விதை என இன்னும் பல அற்புதங்களை அள்ளித் தந்து, அவர்களை நோய் நொடி இல்லாமல் வளமாக வாழ வைத்துக் கொண்டிருந்த பெருமைமிக்க இலுப்பை மரங்கள், இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன என்பதுதான் வேதனையான விஷயம். ஊர் ஊருக்கு இலுப்பைத் தோப்புகள் இருந்த காலம் போய், பல கிராமங்களில் ஒரேயரு இலுப்பை மரத்தைக் கூட பார்ப்பது அரிதாக இருக்கிறது. 'இலுப்பை மரமா... அது எப்படி இருக்கும்?' என்று இன்றைய தலைமுறை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி அழிவின் விளிம்பில் உள்ள இலுப்பை மரங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாபட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை, விஜயன், அய்யாக்கண்ணு உள்ளிட்ட பெரியவர்கள் சிலர்.
இந்த ஊரிலுள்ள சிவன் கோயில், மாரியம்மன் கோயில், அய்யனார் கோயில்... ஆகியவற்றுக்குச் சொந்தமான இடத்தில் இலுப்பை மரங்களைப் பாதுகாத்து வருகிறார்கள். புதிதாக நடவு செய்தும் வருகிறார்கள். அதனால் இந்த கிராமம் 'இலுப்பைத் தோப்பு’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான இலுப்பை மரங்கள் ஏறத்தாழ 150 ஆண்டுகளைக் கடந்தவை என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. காலத்தை வென்று கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 அடி உயரத்தில் 12 அடி சுற்றளவு வரையுள்ளவையாக இருக்கின்றன.
இவ்வூரைச் சேர்ந்த 95 வயதைக் கடந்த முதியவர் ரெங்கசாமி சேனாதிபதி, இலுப்பையுடன் கலந்து தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
''சின்னப் புள்ளையா இருந்தப்ப இங்க நூத்துக்கணக்கான இலுப்பை மரங்கள் இருக்கும். பூவெடுக்குற சமயத்துல ஊரே இலுப்பைப் பூ வாசனையில் கமகமக்கும். சாயங்கால நேரத்துல ஏகாந்தமா இருக்கும். அந்தக் காத்தை சுவாசிச்சாலே நோய், நொடி அண்டாது.
வெளவால் தின்னு போடுற இலுப்பைக் கொட்டைகளை நாங்க பொறுக்கிட்டுப் போய் வெயில்ல காயவெச்சு உடைச்சு பருப்பெடுப்போம். அதை செக்குல கொடுத்து ஆட்டி எண்ணெய் எடுத்து கோயில், வீடுனு விளக்கேத்துறதுக்கு பயன்படுத்துவோம். இந்த எண்ணெயில வர்ற புகையை சுவாசிச்சா... உடம்புக்கு நல்லது.
ஒரு மரத்துல வருஷத்துக்கு 50 கிலோவுக்கு மேல பருப்பு கிடைக்கும். ஒரு கிலோ பருப்பை செக்குல கொடுத்து ஆட்டுனா... 300 மில்லி எண்ணெய் கிடைக்கும். இலுப்பைப் புண்ணாக்கு, இலை ரெண்டுமே நிலத்துக்கு உரமாவும் பயன்படும். சுமார் 30 வருஷத்துக்கு முன்ன வரை, இதையெல்லாம் பயன்படுத்திதான் மண்ணை வளமாக்கி, செழிப்பா விவசாயம் செய்தோம்'' என்று நினைவலைகளில் நீந்தினார்.
இதே கிராமத்தைச் சேர்ந்த மூலிகை மருத்துவர் கதிரேசன், ''இலுப்பை ஒரு மூலிகை மரம். அதுல நிறைய நோய்களுக்கான மருந்து இருக்கு. முன்ன இலுப்பை எண்ணெயைத்தான் சமையலுக்குப் பயன்படுத்துவாங்க. அதுல செய்யுற பலகாரங்களும்., சாப்பாடும் அவ்வளவு ருசியா இருக்கும். சர்க்கரை வியாதி, மலச்சிக்கல், இடுப்புவலி, மூட்டுவலி, வாயுக் கோளாறு... மாதிரியான எல்லா பிரச்னைகளுக்கும் இலுப்பை எண்ணெய்தான் மருந்து. புண்ணைக்கூட இந்த எண்ணெய் ஆத்திடும். ஆடு, மாடுகளுக்குக்கூட புண் வந்தா, இதைத்தான் தடவுவாங்க.
வெளிர் மஞ்சள் நிறத்துல இருக்குற இலுப்பைப் பூ கூட அற்புதமான மருந்து. இதை மூணு நாள் காய வெச்சு, நரம்பை நீக்கி, மண் சட்டியில வறுத்து சாப்பிட்டா... தோல் சம்பந்தபட்ட வியாதி, விரைவாத நோய் எல்லாம் குணமாயிடும். இலுப்பைப் பூ, கருப்பட்டி, சீரகம், மிளகையெல்லாம் போட்டு இடிச்சு, உருண்டையாக்கி, குழந்தைகளுக்கு கொடுத்தா... கணை நோய் நீங்கிடும். இதய நோய், பாம்புக்கடி, அசதி, ஆண்மைக் குறைவு, வாந்தி, பித்தம், காய்ச்சல்னு பல நோய்களுக்கு இலுப்பைப் பூவுல மருந்து தயாரிக்கறாங்க.
இலுப்பை இலை, பட்டையை வெந்நீரில் போட்டு குளிச்சாலும், தோல் நோய்கள் ஓடிடும். இலுப்பைப் பிண்ணாக்கைத் தலையில தேய்ச்சுக் குளிச்சா பேன், பொடுகெல்லாம் காணாம போயிடும். முடி கொட்டுறது நின்னுடும். இதை, சர்வரோக நிவாரணினே சொல்லலாம்'' என்று இலுப்பை புகழ் பாடினார்.
மர மீட்புக்குழுவைச் சேர்ந்த அண்ணாமலை, ''முன்ன கோயில் நிலங்கள்லதான் இலுப்பை மரங்கள் அதிகமா இருக்கும். அதனால அதை வெட்டுனா... தெய்வக் குத்தமாயிடும்னு பயம் இருந்துச்சு. அதனால, மரங்கள் பாதுகாப்பா இருந்துச்சு. காலப்போக்குல கோயில் நிலத்தையெல்லாம் ஆளாளுக்கு ஆக்கிரமிச்சுட்டாங்க. அதோட, அரசாங்கமும் பலவிதமான பயன்பாட்டுக்கு கோயில் நிலத்தைப் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டதால, அதுல இருந்த மரங்களையெல்லாம் வெட்டுனதுல இலுப்பை அழிஞ்சு போச்சு. மிச்சமிருக்குற மரங்களையாவது பாதுகாக்கணும்றதுக்காக 'இலுப்பை மரங்களை வெட்டக் கூடாது’னு ஊர்ல முடிவெடுத்திருக்கோம்.
வெளவால் மாதிரியான ஜீவன்கள் சாப்பிட்டு போடற கொட்டைகள் மூலமாவும் மரங்கள் முளைக்கத் தொடங்கியிருக்கு. ஊராட்சி மன்றத் தலைவர் அப்பாங்கத்தோட முயற்சியால கோயில், பள்ளிக்கூடம், கல்யாண மண்டபம்னு பல இடங்கள்ல இலுப்பைக் கன்னுங்கள நடவு பண்ணி, வளர்த்துக்கிட்டு இருக்கோம். ஆர்வத்தோடு வர்றவங்களுக்கு விதைகளை இலவசமா கொடுக்க தயாரா இருக்கோம்'' என்றார் ஆவல் பொங்க.
சிவனும் இலுப்பையும் !
'சித்திரையில் மழை பெய்தால்... சிவனுக்கு ஆகாது!’ என்றொரு பழமொழி உண்டு. அதாவது, 'இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால்தான் சிவபெருமானுக்கு மனம் குளிரும்’ என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில்தான் இலுப்பை மரத்தில் பூக்கள் பூக்கும். அந்த சமயத்தில் மழை பெய்தால், பூக்கள் உதிர்ந்து விதைகள் உருவாகாமல் போய் விடும். சிவபெருமானுக்கு தீபம் ஏற்றுவதற்கான இலுப்பை எண்ணெய்க்குத் தட்டுப்பாடு வந்துவிடும் என்பதால்தான் இப்படியரு பழமொழி.
இன்றும் ஆம்பலாபட்டு கிராமத்தில் உள்ள சிவன் கோயிலில் இலுப்பை எண்ணெயில்தான் தீபம் ஏற்றப்படுகிறது. அதைப் பற்றி பேசிய கோயில் பூசாரி முருகையன், 'இந்த எண்ணெயில தீபம் ஏத்தினா, ரொம்ப நேரத்துக்கு நின்னு விளக்கு எரியும். இப்போ ஒரு லிட்டர் இலுப்பை எண்ணெய் 180 ரூபாய் வரை விலை போகுது'' என்றார்.
கோயிலுக்கும் இலுப்பைக்கும் உள்ள தொடர்பு எண்ணெயோடு நின்று விடவில்லை.... கோயிலின் கதவுகள், தூண்கள், உத்தரம், தேர் என்று பல்வேறு உபயோகங்களுக்கும் இலுப்பைதான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதைப் பற்றி தேர்கள் செய்வதில் ஈடுபட்டிருக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவநேசன் கூறும்பொழுது, ''தேக்கு போலவே இதுவும் வலிமையான மரம். பால்சத்து நிறைந்த இந்த மரத்தை கரையான் அரிக்காது. அப்படியே அரித்தாலும், கடைசியில் மண்ணாக மிஞ்சும் துகள்கள் மீது தண்ணீர் தெளித்தால், அதில்கூட பால் சத்து தங்கியிருக்கும். இதுதான் இலுப்பையின் அதிசய குணம்.
சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் இலுப்பை மரத்தால் செய்யப்பட்ட தேர்கள்கூட, இன்றளவும் தமிழகக் கோயில்களில் திடமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக சோழமண்டலத்தில் இருக்கும் கோயில்களுக்கு இந்த மரத்தை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பகுதியில இலுப்பை மரங்கள் நிறைய இருந்ததுதான் காரணம்.
தேரில் உள்ள சிம்மாசனம், தேவாசனம், நடவாசனம், உருதலம், பூதப்பார் உள்ளிட்ட பெரும்பாலான பாகங்களை இன்றைக்கும் இலுப்பையில்தான் செய்கிறோம். சுமார் 60 வருடங்களை கடந்த மரங்களைத்தான் இதற்குப் பயன்படுத்துகிறோம். அதுபோன்ற மரங்களில்தான் முழுமையாக வைரம் பாய்ந்திருக்கும். ஒரு கன அடி இலுப்பை மரம் 900 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. படகு செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். உப்புத் தண்ணீரிலும் இது தாக்குப் பிடிக்கும் என்பதுதான் காரணம்'' என்று இலுப்பை பற்றி புகழ்ந்தார்.
தஞ்சை பெரியக் கோயிலில் அமைந்திருக்கும் அம்மன் சந்நிதியின் வாயிற் கதவுகள், இலுப்பை மரத்தால் செய்யப்பட்டவை... இன்றைக்கும்  பொலிவோடு திகழ்கின்றன. இவை உருவாக்கப்பட்டு சுமார் 400  வருடங்கள் இருக்கலாம் என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்

அத்திப்பழம்

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்ட
கும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது.

அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.

2. மலச்சிக்கலைநீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம்மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டுவந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ்மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும்,மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். 
இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும்இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன.

இதை சீமைஅத்திப்பழம் என்று கூறுவார்கள
சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

அரை கிராம்காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டுவந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீதுபூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்

நமது உடலின் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் , வலிமையையும் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பது நமது இரத்தம் . இரத்தத்தில் உள்ள எதிர்ப்பு சக்தியே நமக்கு வரும் நோய்களை தீர்மானிக்கிறது .இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவு குறையும் போது ரத்த சோகை அதாவது நமது செயலாற்றல்
குறைதல் ,சோர்வு ,ஒரு மாதிரி மந்தமான நிலை இவையெல்லாம் ஏற்படும்.இது அதிகப்படின் வேறு பலவிதமான நோய்களுக்கு இட்டு செல்லும் . அத்திபழம் இதற்கு மிகச்சிறந்த தீர்வு .

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன .

ஆனால் அதன் பயன் தான் யாவரும் அறிந்தாரில்லை .அபூர்வமாக நடை பெறும் நிகழ்வை ''அத்தி பூத்தாற்போல் ''என சொல்வது தமிழர் வழக்கு . அது போன்றே மிகவும் ஆச்சரியகரமான மாறுதல்களை நிகழ்த்தக்கூடியது தேனில் ஊற வைத்த அத்திப்பழம் .

ஒரு வார கால இடைவெளியில் அத்திபழம் உண்பதற்கு முன் அத்திபழம் உண்ட பின் என இரத்தபரிசோதனையில் ஹீமோ குளோபின் அளவில் மாற்றம் காட்ட கூடியது . தினம் இரண்டு அத்திபழம் உண்பது நல்லது .பதப்படுத்தபட்டவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் .நாமே மரத்தில் இருந்து பழுத்து விழுந்ததை எடுத்து சுத்தபடுத்தி (பூச்சிகள் அதிகம் இருக்கும் ) சர்க்கரை அல்லது தேன் சேர்த்து சாப்பிடலாம்.

ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டை உடனடியாக சரிசெய்யகூடியது.