Sunday, July 5, 2015

பூண்டு / வெள்ளைப்பூண்டு / Garlic

வெள்ளைப்பூண்டு

வெள்ளை பூண்டின் அற்புதங்கள்
---------------------------------------------------
பூண்டு என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது 

இதயத்திற்கு சிறந்த உணவுப் பொருள் என்பதுவே.

இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களும் புதைந்து 

கிடக்கின்றன.

புற்றுநோயை தடுக்கும்

வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அல்லில் சல்பைடு என்னும் 

பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குறிப்பாக இரைப்பை புற்றுநோயை தடுப்பதாக பல்வேறு 

ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் 

கனிமங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் 

பக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கும், மொத்தத்தில் 

நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதய நோய்களை தடுக்கும்

மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்னைகளில் இருந்து பூண்டு 

பாதுகாக்கிறது.

இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் இரத்த குழாயில் அடைப்பு 

ஏற்படாமல் தடுக்கும்.

அதுமட்டுமின்றி கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் 

பூண்டுக்கு உண்டு.

தொண்டை பிரச்னைகளுக்கு குட்பை

பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள், தொண்டை 

பிரச்னைகளிலிருந்து விடுவிக்கிறது.

தொண்டை எரிச்சல்களை குணப்படுத்துவதுடன், சுவாச பாதை 

தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.

மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்னைகளுக்கும் தீர்வாக 

அமைகிறது.

பல்வலியை போக்கும்

பூண்டில் உள்ள பக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் 

பல்வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.

இருப்பினும் ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் 

++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாட்டி வைத்தியம்!
புற்று நோயைக்கூட வர விடாம தடுக்கற அருமருந்து பூண்டு. 

அஞ்சாறு பச்சைப் பூண்டு பல்லை ஒரு வாரம் தொடர்ந்து 

சாப்பிட்டாலே போதும்.. வயித்துல இருக்கற குடல் புழுக்கள் 

அழியும்! இதய நோய்க்காரங்களுக்கு பூண்டு ரொம்ப ரொம்ப 

நல்லதுங்கறது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே 

போல, கர்ப்பிணிப் பொண்ணுங்களும் கர்ப்பமான முதல் மூணு 

மாசம் 

தவிர்த்து, பிறகு தினமும் பூண்டு சாப்பிடணும். பூண்டை அப்படியே 

சாப்பிடப் பிடிக்காதவங்க அதை ரசம் வெச்சு சாப்பிடலாம்.
சரி... பூண்டு ரசம் செய்யறது எப்படி?
ஒரு முழு பூண்டைத் தோலுரிச்சு, தேவையான அளவு

புளித்தண்ணியில வேகப் போடுங்க. பிறகு அதை நல்லா மசிச்சு

விடுங்க. அப்புறம், காய்ஞ்ச மிளகாய் ஆறு, ஒரு டேபிள் ஸ்பூன்

தனியா, ஒரு டீஸ்பூன் மிளகு, சின்னத் துண்டு பெருங்காயம்.. இது

எல்லாத்தையும் நெய்யில வறுத்து, மிக்ஸியில கரகரப்பா பொடிச்சு,

வெந்துக்கிட்டிருக்கற ரசத்துல போடுங்க. தேவையான உப்பும்

போடணும்.
வெந்த துவரம்பருப்பை ஒரு கரண்டியளவு எடுத்து, அரை டம்ளர்

தண்ணியில கரைச்சு, ரசத்துல ஊத்தி, நுரைச்சு வந்ததும் இறக்கிட

வேண்டியதுதான். தேவைப்பட்டா, ஒரு தக்காளியை பொடியா

நறுக்கிப் போடலாம். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில ஒரு டீஸ்பூன்

கடுகு, சீரகம் தாளிச்சு, ரசத்துல கொட்டி, கைப்பிடியளவு

கொத்துமல்லித்தழையை பொடியா நறுக்கி, ரசத்துல சேர்த்தா

வாசனை எட்டூரைக் கூட்டும்

+++++++++++++++++++

மருத்துவப் பயன்கள்

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.

உடல் பருமனையும், ரத்தத்தில் எள்ள கொழுப்பையும் குறைக்கும்.
இதய அடைப்பை நீக்கும்
இரத்த அழுத்தம் வராமல் காக்கும்.
இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பூண்டு விளங்குகிறது.
நாள்பட்ட சளித்தொல்லையை நீக்கும். தொண்டை சதையை நீக்கும்.
மலோ¢யா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
தாய்ப்பால் சுரக்கும்
மாதவிலக்குக் கோளாறுகளை சா¢ செய்கிறது .
சளித்தொல்லை நீங்க:
1. வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து மஞ்சள் தூள் கலந்து சாப்பிடவும்.
2. பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம்.
3. மிளகாய் வத்தல் தேங்காய்த் துருவல் இரண்டையும் ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்த பின் அவற்றுடன் தோலூ¢க்காத பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து பொடி செய்து இட்லி தோசைக்குச் சாப்பிடலாம்.
காது அடைப்பு, வலி நீங்க:
நல்லெண்ணெயில் ஒரு துண்டு வெள்ளைப்பூண்டு போட்டுக் காய்ச்சி பொறுக்கக் கூடிய அளவு சூட்டில் இரண்டு சொட்டுக் காதில் விட வேண்டும்.
குறிப்பு: பூண்டு உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தக் கூடியது. அதிகளவில் பயன்படுத்தினால் நீர்க்கடுப்பு, நீர் எ¡¢ச்சல் உண்டாகும். தினமும் இரண்டு பல் துண்டு பூண்டு சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். 


பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு.

ரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க.. பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

ரத்தத்தை சன்னமாக்குதல் பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்

ரத்த கொதிப்பை குறைக்கும் ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்

தயத்தை பாதுகாக்கும் நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.


Garlic – Composition and Extraordinary Health Benefits

health benefits of garlic
health benefits of garlic – source

What is in Garlic?

Apart from the fact that it adds an excellent taste to dishes, it also contains vitamins, amino acids and allinase enzymes. It’s an excellent source of calcium, selenium, phosphorus, Vitamin B1, Vitamin B6, Vitamin c, manganese and copper. It is also a herb and is widely used as a medicine, mainly in curing heart & blood related diseases as well as cancers of colon, breast, prostate, lung, bladder, stomach and rectal.
choppedgarlic
Chopped Form of Garlic
You May Also Check : How To Get Rid Of Body Odor?

Why should we eat raw garlic?

You may consume one or two cloves of raw garlic daily by peeling off its skin and crushing it.
Doctors encourage us to consume it finely chopped or crushed. Have you ever wondered why? We will unveil the secret. It actually contains a substance namely Alliicin, which is what that makes garlic an incredible medicine. When it is crushed or cut into pieces, the enzyme alliinase is released. It is also advisable that you leave the pieces for 5-10 minutes before consuming it.

You May Also Check: Home Remedies for Cough

Advantages of eating garlic

Antioxidants : It removes the oxidants, thereby removing stress and keep us healthy. High levels of oxidants leads to many unwanted disorders like oxidated stress and neurogenerative stress.
Cholesterol : Research shows that the level of LDL cholesterol and triglycerides goes down by 9-12 % by consumption of raw form on a daily basis.
Sulphur : It is a source of sulphur, which is very important for our health and wellbeing.
Antibiotic : This is a wonderful natural antibiotic. Its power lies in the fact that it eliminates harmful bacteria but retains the healthy one.
Skin infections : It’s used to treat ringworm or athlete’s foot.
Dilutes blood : By diluting blood, many diseases are prevented such as heart diseases, blood clots, heart attacks and strokes.
Immune System : It’s antiviral in nature. It treats infections and is very useful in combating common cold.
Blood Pressure : It’s consumption lowers blood pressure.
Blood sugar : It increases the production of insulin thereby controlling blood sugar.
Arthritis : It prevents degenerative arthritis (osteoarthritis).
Relieves toothache : Crushed form when applied on teeth relieves toothache.
Hyperthyroid : It contains high amount of iodine which is a natural medicine for hyperthyroid.
Cancer : It helps in preventing various types of cancers like the cancers of colon, breast, prostate, lung, bladder, stomach and rectal.
Sexual Health: It helps in enhancing the libido prowess of both men and women. It can do wonders by increasing stamina(specially men).

Some fun facts about garlic that you are not aware of!

fun facts about garlic
  • Did you know that Chicago was named after it ? Yes you read that right. Its name was derived from Chicagaoua which is the Indian name for wild garlic.
  • It was also given to slaves who used to build pyramids as it was a storehouse of strength and endurance.
  • It attracts leeches and is one of the oldest cultivated crops of the world.
  • Fear of garlic is alliumphobia.
  • For making cocktails from vodka, it is used as an ingredient.
  • Its top commercial producers are China, South Korea, Spain, India and United States.

  • ++++++++++++++++++++++++++
1. A Great Aid for Athlete's Foot 
Being a potent, natural antifungal, garlic is ideal for treating fungal infections like irritating and itchy athlete's foot. Just add a couple of crushed garlic cloves to warm water in a foot bath and soak the affected area for 30 minutes.  
2. Helps in Preventing Gas 
While for some, garlic causes uncomfortable stomach-distending gas, due to its high sulfur content, for others it can reportedly ease it. In order to maintain intestinal health though, you would need to consume it on a regular basis. Garlic can kill harmful intestinal bacteria, promoting the growth of beneficial flora, making digestion smoother.  
3. Combats Hair Loss 
Before resorting to a more drastic measure, if you are going bald, give garlic a shot. It is believed that massaging the scalp with garlic oil stimulates hair growth. 
Garlic

4. Apply it to Breakouts of Acne 
Though it will make your skin smell, the antibacterial properties of garlic will help lessen the appearance of acne, including those deep acne cysts that can otherwise be difficult to treat. Just slice open a clove of raw, fresh garlic and apply it to breakouts. 
5. Aids in Weight Loss 
Though you cannot count on garlic to help you lose a lot of weight, research shows that garlic has potential for aiding weight loss. Compounds found in garlic send signals of satiety to your brain, which will actually help you to feel full faster. It also boosts metabolic function, enabling you to burn more calories.  
6. Use it as a Natural Pesticide 
An all-natural garlic pesticide spray can be used to ward off pests like whiteflies, aphids, cabbage loppers and squash bugs. All you need to do is mince three garlic cloves and let them sit in two tablespoons of mineral oil for 24 hours. Then, strain out the garlic and add the oil, along with a teaspoon of liquid dish soap, to a pint of water in a spray bottle and spray on infested plants. 
7. Use it to Repel Mosquitoes 
You need not use DEET and other potentially toxic chemicals to ward off mosquitoes, garlic can work wonders. To prepare a mosquito spray, let a few minced cloves of garlic infuse in an ounce of mineral oil for 24 hours. Strain and mix the garlic scented oil with two cups of water and one teaspoon of freshly squeezed lemon juice. If necessary, strain again and pour into a spray bottle.   

8. Use it as a Natural Adhesive to Repair Glass 
Though it may not work on major jobs, garlic juice can be used to fill in hairline cracks in glass and hold them together. Simply crush a clove of garlic and rub its sticky, viscous juice in the cracks and wipe away the excess.  
9. Kills Bacteria that Causes Ear Infections 
This common folk remedy has been used for centuries. Simply crush a clove of garlic and place it in a teaspoon of hot olive oil for five minutes. Strain, allow to cool and drip a few drops at a time into your ear canal. Alternatively, you can purchase garlic oil from natural health food stores.  
10. Helps Remove Splinters 
Splinters are painful to remove and may at times dig a little too deep into the skin to pull out, but this odd trick can really work. Place a thin slice over the splinter, keeping it on with a bandage. The garlic should help the splinter work its way out of the skin within hours.  
11. Use it to Relieve Psoriasis 
Garlic's anti-inflammatory properties could ease or even prevent persistent tightness and itching of psoriasis. Active compounds in garlic interact with arachidonic acid, an omega fatty acid in the skin linked to psoriasis. You may also rub garlic oil on the affected areas once or twice per day.  


12. Use it as a Cough Syrup 
Garlic can be used as a cough syrup to ease inflammation in the throat and clear up excess mucus. Add raw, minced garlic in hot water, straining it after five minutes and drinking the liquid as tea. To make it more palatable, add ginger and honey. 
13. Garlic makes for a Fantastic Road De-icer 
Come winter, many  towns de-ice their roads. Ankeny, Iowa smelled awfully savory in 2008 when winter transportation crews spread garlic salt on the streets in advance of snowstorms. The salt, donated by a local spice producer, was apparently deemed unfit for human consumption. 
14. Kills Intestinal Parasites 
Many alternative health practitioners advise using raw garlic to expel intestinal parasites. Consumed in quantities of about three cloves per day may help clear nasty organisms out of the digestive tract. It is recommended as part of a cleansing diet that also includes raw honey, lemon juice, pumpkin seeds, carrots and beets. 

பச்சை பயிறு


தேவையானவை:
பாசிப்பயறு – ஓர் ஆழாக்கு,
கடலைப் பருப்பு, முழு கோதுமை, நெய் – தலா கால் ஆழாக்கு, 
வெல்லம் – அரை ஆழாக்கு,
ஏலத்தூள் – ஒரு சிட்டிகை, 
சுக்குத் தூள் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை:
பருப்பு, கோதுமையைத் தனித்தனியே வறுத்து நன்றாகப் பொடிக்கவும்.
வெல்லத்தில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு முறை வடிகட்டி, பிறகு மீண்டும் கொதிக்கவைத்து, கெட்டிப்பாகு வைக்கவும். மாவு, ஏலத்தூள், சுக்குத் தூள் இவற்றை நன்றாகக் கலந்துகொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பாகை ஊற்றிக் கலந்து சிறுசிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
மருத்துவப் பலன்கள்:
குழந்தைகளுக்கு, அதி அற்புதமான புரொட்டீன் சப்ளிமென்ட். குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச் சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்னைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.

++++++++++++±+
பச்சை பயிறு சாப்பிடுங்க...
பருப்பு வகைகளை அடிக்கடி உண்ணும் போது ஏராளமான சத்துக்கள் உடலுக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக பருப்புக்களில் ஒன்றான பச்சை பயிறு மற்றும் பாசிப் பருப்பை தவறாமல் வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், அதில் நிறைந்துள்ள சத்துக்களால் பல நன்மைகளை பெறலாம்.
பச்சை பயிறு உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவதோடு, சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் பச்சை பயறு உதவுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வாருங்கள்.
சத்துக்கள் நிறைந்தது
பச்சை பயற்றில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டினால் அவஸ்தைப்பட்டால், அன்றாட உணவில் பச்சை பயறை சேர்த்து வாருங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைத்து, இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய்
பச்சை பயறு சரும புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் வெளியில் அதிகம் சுற்றுவோர், உணவில் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்து வந்தால், சரும புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
எடையைக் குறைக்கும்
உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும், பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும்.
உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு பௌல் பச்சை பயறை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு ஒரு நாளைக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையும் கட்டுப்பாட்டுடன் இருக்கும்

Friday, July 3, 2015

கீரை 03


















எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன்   

கிடைக்கும்...??


கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு

சம்பந்தமான சகல வியாதிகளும்

குணமாகும். பசியைத் தூண்டும்.


அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை

போக்கும். தாய்ப்பால் பெருகும்.


வள்ளாரை - நினைவாற்றலை

அதிகமாகும். யானைக்கால் நோய்

குணமாகும்.


அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும்.


முளைக்கீரை - பல் சம்பந்தமான

வியாதிகளை குணமாக்கும்.


பொன்னாங்கன்னி - இரத்தம்

விருத்தியாகும்.


தர்ப்பைப் புல்: - இரத்தம் சுத்தமாகும்.

கஷாயம் வைத்து பருகவும்.


தூதுவளை:- மூச்சு வாங்குதல்

குணமாகும்.


முருங்கை கீரை: பொரியல் செய்து

நெய்விட்டு 48 நாட்கள் சாப்பிட தாது

விருத்தியாகும்.


சிறுகீரை: நீர்கோவை குணமாகும்.


வெந்தியக்கீரை- : இருமல் குணமாகும்


புதினா கீரை:- மசக்கை மயக்கம், வாந்தி


குணமாகும்.







முடக்கற்றான் கீரை

பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு
அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது
முடக்கற்றான் சூப்:
தேவையான பொருட்கள்:
முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதார‌ண‌த் தோசைமாவுடன் (ஒரு பெரிய‌ கிண்ண‌ம் அள‌வு) க‌ல‌ந்து, தோசை சுட்டால், க‌ச‌ப்பு சிறிதும் தெரியாது.
நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம்
வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு,
வாதம்,மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.
ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ்
கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர்
விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம்
வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம்
தயாரிக்க வேண்டும்.
மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால்
ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம்
சாதம்மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி
வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு,
பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்
இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள். இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள்தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல; கழுத்தை நெறிக்கும்பிரச்சினைகளும் காணாமல் போகும்.
பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.
குடற்புண் குணமாக...
பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க...
பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.
அபார நினைவாற்றல் பெற...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.
வெள்ளைப்படுதல் குணமாக...
பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.
கண் நோய்கள் விலக...
பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள்,பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.
மேனியழகு உண்டாக...
100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்புஇரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும்பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.
முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...
முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.
உஷ்ணம் தீர...
பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.
நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...
இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல்தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன். கவனமாய் குறிப்பெடுத்து, கருமையானகூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.
தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்
முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும். பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையைமட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும். தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும். அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச்சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.
இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தைவடிகட்டி பத்திரப்படுத்தவும்.
இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும். குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும். வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும். மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல்மறைந்து விடும்.
இளநரை நீங்க...
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.
நூறாண்டு வாழ...
பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது. பொன்னாங்கண்ணியைத்தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும். பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில்வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும். பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்

Wednesday, July 1, 2015

Growing Old

Growing Old Is Not For Sissies

By: Dr Kevin Stone on Jul 01, 2015 
Healthy old people die from falling. They trip, break their hip and then have a mortality rate of up to 58% in the first year. [1] These days, there are lots of devices and apps to monitor elderly and frail people and help them if they fall, but by then it is too late.

As we age, we develop three major physical weaknesses: Weak muscles, weak bones and poor balance. [2] Since we all want to live well until the day we die, how do we solve these three problems?

Weak muscles are mostly from disuse and low natural testosterone. [3] Often the advice people are given for their aches and pains is go home and rest, further weakening all the structures. Exercise programs designed to build muscle should be part of everyone’s day. An entire field of elderly sports and fitness training would do wonders for our aging population. Progressive, competitive, creative fitness programs that focus on muscle building work for the elderly but are rarely encouraged. We need CrossFit to become AgeFit.

Bone responds to stress. More stress stimulates the body to make stronger bones. Lack of stress on the bones leads to mineral loss and weakening. [4] Increasing stress by resistance exercises, such as weight lifting, is proven to be the most effective bone building activity at all ages. Elderly weight lifting gyms and programs should be the norm. Wheelchair bound elderly people can learn from wheelchair bound young people to exercise their upper body and trunk muscles. As our patients say, “getting old is not for sissies.” It takes courage, determination, coaching and education to build bone, and it is worth it.

Balance. If you live near the water and can swim, the number one new best exercise for balance is stand-up paddling. It can be done at any age. By widening the board to the width of a door anyone can stand on one. The constant balancing and gentle paddling strengthen the trunk and core muscles while working on the small muscles of the feet and the neuro-sensory or proprioceptive feedback system improves balance more than any other activity. Indoor balancing activities by standing on one leg on a pillow or small balance trampoline can work too but aren’t as much fun. Balance training diminishes falling episodes. And falls kill.
So don’t live like today is the last day of your life, live like you will live forever. If you want to grow old happily, train your body for the sport of aging and play on.


References 
1. The 1-Year Mortality of Patients Treated in a Hip Fracture Program for Elders Scott Schnell, MD,1 Susan M. Friedman, MD, MPH,1 Daniel A. Mendelson, MS, MD,1 Karilee W. Bingham, MS, RN, FNP,1 and Stephen L. Kates, MD1
2. Demontiero, O., Vidal, C., & Duque, G. (2011). Aging and bone loss: new insights for the clinician. Therapeutic advances in musculoskeletal disease, 1759720X11430858.
2. Evans, W. J., & Lexell, J. (1995). Human aging, muscle mass, and fiber type composition. The Journals of Gerontology Series A: Biological Sciences and Medical Sciences50(Special Issue), 11-16.
2. Konrad, H. R., Girardi, M., & Helfert, R. (1999). Balance and aging. The Laryngoscope109(9), 1454-1460.
3. Allan, C. A., Strauss, B. J. G., Burger, H. G., Forbes, E. A., & McLachlan, R. I. (2008). Testosterone therapy prevents gain in visceral adipose tissue and loss of skeletal muscle in nonobese aging men. The Journal of Clinical Endocrinology & Metabolism93(1), 139-146.
4. Ishijima, M., Rittling, S. R., Yamashita, T., Tsuji, K., Kurosawa, H., Nifuji, A., ... & Noda, M. (2001). Enhancement of osteoclastic bone resorption and suppression of osteoblastic bone formation in response to reduced mechanical stress do not occur in the absence of osteopontin. The Journal of experimental medicine193(3), 399-404.
4. Terai, K., Takano‐Yamamoto, T., Ohba, Y., Hiura, K., Sugimoto, M., Sato, M., ... & Nomura, S. (1999). Role of osteopontin in bone remodeling caused by mechanical stress. Journal of Bone and Mineral Research14(6), 839-849.
4. Hughes-Fulford, M. (2004). Signal transduction and mechanical stress. Science Signaling2004(249), re12