Showing posts with label வயிற்றுப்புண். Show all posts
Showing posts with label வயிற்றுப்புண். Show all posts

Sunday, July 17, 2016

வயிற்றுப்புண்

வயிற்றுப்புண்களை ஆற்றும் வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக்கீரை மோர்

தேவையானவை: துருவிய வெள்ளைப் பூசணி - 50 கிராம், வெந்தயக்கீரை - 50 கிராம், மோர் - 1 டம்ளர், இந்துப்பு - தேவையான அளவு.

செய்முறை: துருவிய வெள்ளைப் பூசணி மற்றும் வெந்தயக் கீரையைத் தண்ணீர் விடாமல் அரைத்து, மோருடன் கலந்து, இந்துப்பு போட்டு, வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

பலன்கள்: ‘வெள்ளைப் பூசணிக்காய், பாசிட்டிவ் எனர்ஜி தரக்கூடிய காய்’ என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சேர்க்கப்படும் மூன்று பொருட்களும் வயிற்றுப்புண்களைக் குணமாக்கும். அடிக்கடி வரும் ஏப்பம், சாப்பிட்டவுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் சரியாகும். வயிறு தொடர்பான புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறையும். வயிற்றில் சுரக்கும் அமிலம் (HCL) தொடர்பான பிரச்னைகள் சரியாகும். செரிமானம் சீராக நடைபெறும்