Showing posts with label குழந்தை நலம். Show all posts
Showing posts with label குழந்தை நலம். Show all posts

Thursday, July 14, 2016

குழந்தை நலம்

உரை மருந்து தெரியுமா
பிறந்த குழந்தைக்கு முதல் சில மாதங்கள் தொற்று நோய்கள் அதிகம் ஏற்படும். குறிப்பாக வயிற்றுப் போக்கு, சுவாச நோய், சளி, இருமல், வயிற்றுப்புழு போன்றவையால் கைக்குழந்தை பாதிக்கப்படும்பது, இதைத் தடுத்து குழந்தைகளைப் பாதுகாப்பதில் முதன்மை மருந்தாக இருப்பது உரை மருந்துதான். நோய் எதிர்ப்பு ஆற்றல் மிக்க இந்த மருந்து குழந்தையின் ஜீரணத்தை சீராக்கும். சுவாச நோய்கள் ஏற்படாமல் தடுத்து, குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் வளரச் செய்யும்.
எப்படி தயாரிப்பது…..
சுட்ட வசம்பு 6 கிராம்
அதிமதுரம் 4 கிராம்
சுக்கு 4 கிராம்
பூண்டு 10 கிராம்
மாசிக்காய் – 2 கிராம்
கடுக்காய் தோல் – 2 கிராம்
திப்பிலி – 2 கிராம்
பெருங்காயம் – 2 கிராம்
அக்கரகாரம் – 1 கிராம்
ஜாதிக்காய் – 1 கிராம்
இவை அனைத்தையும் பொடியாக்கி வெந்நீர் விட்டு அரைத்து குச்சி போல் உருட்டி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு அதை தண்ணீரில் நனைத்து உரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சிறிது காரமாக இருப்பதால் தேனில் கலந்து குழந்தையின் நாக்கில் தடவலாம்