Monday, October 24, 2016

தலைமுடி, மயிர், குஞசம்

தலைமுடி வளர்ச்சிக்கு

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி?

தலைமுடி உதிர்வதைத் தடுக்கவும், தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் வெங்காயம் பெரிதும் உதவியாக இருக்கும். இதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் முக்கிய காரணம். இது ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும்.

ஆகவே உங்களுக்கு முடி அதிகமாக கொட்டினால், கண்ட எண்ணெயைப் பயன்படுத்தாமல் வெங்காயத்தைப் பயன்படுத்துங்கள். முக்கியமாக வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வது நிற்பதோடு, முடியின் வளர்ச்சியையும் காணலாம்.

சரி, இப்போது தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வெங்காயத்தைப் பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம். அதைப் படித்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

வெங்காய தண்ணீர்: ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு, அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். வெங்காயம் மென்மையானதும், நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு தலைமுடியை அலச வேண்டும். இதனால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தேங்காய் எண்ணெய்: சுத்தமான தேங்காய் எண்ணெய் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அத்தகைய தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, வெங்காய சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

ரம்: ஒரு சிறு பாத்திரத்தில் வெங்காய சாற்றினை ஊற்றி, மிதவான தீயில் சூடேற்றி, பின் அதில் 60 மி.லி ரம் உடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரும்.

தேன்: 1 கப் வெங்காய சாற்றில் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து அலச, மயிர்கால்களின் வலிமை அதிகரிப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலை முதலில் தலையில் தடவி, பின் 15 நிமிடம் கழித்து வெங்காய சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனாலும் தலைமுடி நன்கு வளரும்.

பீர்: பீர் மிகவும் பிரபலமான ஓர் மதுபானம். இந்த பீரும் தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும். அதற்கு தலைமுடியை பீர் கொண்டு அலசி, 8 மணிநேரம் கழித்து, வெங்காய சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர முடி உதிர்வது குறையும். இந்த முறையை அப்படியே கோடையில் தலைகீழாக செய்தால், அதாவது முதலில் வெங்காய சாற்றினைப் பயன்படுத்தி, பின் பீரால் தலைமுடியை அலச, இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

வெங்காய ஜூஸ்: தலைமுடியை நீரில் ஒருமுறை அலசி பின் வெங்காய சாற்றினைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனாலும், மயிர்கால்கள் வலிமைப் பெறும் மற்றும் நன்கு வளர்ச்சியடையும்⁠⁠⁠⁠

+++++++++++++++++++++++++++++
முடி வளர சித்த மருத்துவம்..!
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

No comments:

Post a Comment